ஹாய்... ஹாய்... ஹாய்... எல்லாரையும் பவுன்ஸர்ல பாத்து ரொம்ப நாளாச்சுல்ல? என்ன செய்ய.. நமது அணியின் செயற்பாடுகளும், அணித் தேர்வுகளும் சரியாகும் வரை (இந்த ஜென்மத்துல நடக்குமானு தெரியல) இவனுங்கள கண்டுக்ககூடாதுன்னு ஒதுங்கியாச்சு.
இதுக்கிடையில், யாரும் எதிர்பாராதவாறு மூக்கின் மேல் விரல் வைக்கும்படி அதிசயமா பங்காளிகளை பிரிச்சு மேஞ்சுட்டு வந்துருக்காங்க. வங்கதேசத்தை இந்தியா வெல்லுமா? என்ற பெரிய கேள்விக்குறியுடன் கிளம்பி போனவர்கள் ஒரு போட்டியில் கூட தோற்காமல் திரும்பி வந்தால் வியப்பாயிராதா?
சே! என்ன பொழப்பு இது! மானங்கெட்ட பொழப்பு! ஒரு இளிச்சவாயன் கிடைச்சா மட்டும் ஒற்றுமையா சேர்ந்து கும்முறது!! இப்போ மட்டும் திசைக்கு ஒரு பக்கம் வடம் பிடிச்ச எல்லா சீனியர்களும் ஒன்னு சேர்ந்து கும்முறாய்ங்க. நம்ம மக்களும் ஆகா! என்ன பிரமாதமா ஆடுறாய்ங்க நம்ம பசங்கன்னு இவனுங்களுக்கு உள்ள நடந்த குடுமிபிடி ஆட்டம், கேவல தோல்விகள், தொடரும் அவலத்தனமான அணித்தேர்வு இதையெல்லாம் மறந்து கைதட்டி ரசிச்சு, இவனுங்களுக்கு காவடி தூக்க கிளம்பியாச்சு. என்னோட அலுவலகத்துல ரொம்ப சிலாகித்து பேசிக்கிறாய்ங்க சச்சின் மேன் ஆஃப் தெ சீரியஸ்னு. கொடுமைடா!! சச்சின் இந்த செஞ்சுரி அடிச்சதை பார்த்து இணையமே சிரிச்சுச்சு.
இதுல இன்னொரு கொடுமை என்னன்னா, அணியிலிருந்து தூக்கப்பட்ட கங்குலியும் சச்சினும் கலக்கிட்டாங்களாம். அதுனால இங்கிலாந்தும் செல்லும் அணியில் இருவரும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் இடம் பெறுவார்களாம்! கொடுமைடா!!
இவனுங்க அணிக்குள்ள அடிச்ச கூத்தெல்லாம் தேர்வாளர்கள் வாயால் வெளிவந்ததெல்லாம் இந்திய ரசிக கண்மணிகளுக்கு இந்நேரம் மறந்திருக்கும். மீண்டும் தங்களது ஹீரோக்களுக்கு பூஜிக்க தொடங்கியிருப்பார்கள். பங்களாதேஷை நாமளே பெரிய ஆளாக்கி, இப்போ பெரிய டீமை ஜெயிச்ச மாதிரி ஒரு தோற்றத்தை உண்டாக்குறதுல நம்ம ஆட்கள் கில்லாடிங்க.
இருக்கட்டும் இருக்கட்டும். இங்கிலாந்துக்கு போங்க மக்கா தெரியும்!!
4 comments:
//பங்களாதேஷை நாமளே பெரிய ஆளாக்கி, இப்போ பெரிய டீமை ஜெயிச்ச மாதிரி ஒரு தோற்றத்தை உண்டாக்குறதுல நம்ம ஆட்கள் கில்லாடிங்க. //
இதுல யாருக்கும் புரியாத irony என்னன்னா...
பங்களாதேஷிடம் உ.கோவில் தோற்றது ஏன்?
இப்போது நொங்கிஎடுப்பது ஏன்??
விடைகள்:
1). மேட்ச் ஃபிக்சிங்
2). 'இப்படியே விட்டா நல்லாருக்காது'
(கிரிக்கெட்டை ட்ரெம்ப் கார்டாக வைத்துள்ள 'வணிக உலக' கவலையால்!
ivanga ennaiku thirundhi naama ennaiku jeychu. hmmmm
2025 ulaga kopaila Sachin vilayadama irundha oruvela win pannalaam.
//பங்களாதேஷிடம் உ.கோவில் தோற்றது ஏன்?
இப்போது நொங்கிஎடுப்பது ஏன்??
விடைகள்:
1). மேட்ச் ஃபிக்சிங்
2). 'இப்படியே விட்டா நல்லாருக்காது'
(கிரிக்கெட்டை ட்ரெம்ப் கார்டாக வைத்துள்ள 'வணிக உலக' கவலையால்!//
இல்லைங்க, என்னால மேட்ச் ஃபிக்ஸிங் இருக்கும் என நினைக்க முடியல. கண்டிப்பா ஒற்றுமை இல்லாம சீர்குலைந்ததுதான் காரணமா இருக்கும்.
//2025 ulaga kopaila Sachin vilayadama irundha oruvela win pannalaam.//
2025-ல் சச்சின் கேப்டனாக வழிநடத்தப்போவதாக செய்தி அடிபடுகிறது. ;)
Post a Comment