Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Thursday, March 22, 2012

வாழ்வில் தொடர் தோல்வி அடைந்தோருக்கு சச்சின் ஒரு பூஸ்ட்...:-)



சச்சின் ஒரு சகாப்தம்

99 முறை பெற்ற வெற்றியை கூட 100வது வெற்றியின் மூலம் தான் தக்க வைத்த்துக் கொள்ள முடிகிறது..! இந்த வாழ்க்கை ஓட்டத்தில் நம் வேகம் குறைந்தால் ஒரு பய மதிக்க மாட்டான், என்பதற்கு இதை விட என்ன சாட்சி வேண்டும்..? சச்சின் சாதிச்சிட்டேப்பா...:-)

சச்சின் நூறாவது நூறு அடித்த மறு நொடி , என் முகப்புத்தக சுவற்றில் நான் எழுதியது ஸ்டேடஸ் இது.

ஒவ்வொரு சாதனையாளனுக்கு பின்னும், சொல்ல முடியாத எத்தனையோ வேதனைகள், சோதனைகள், அவமானங்கள், விம்மிக்கொண்டிருக்கும்..சச்சின் படைத்த சாதனையும் அப்படித்தான்...இன்று உலகமே அவரை ஒரு சாதனையாளராக கொண்டாடிக் கொண்டிருந்தாலும் அவர் வாழ்வின் ஆரம்ப நாட்களோ மிகவும் சோதனை நிறைந்தது.

· 1988 - பத்தாவது தேர்வில் தோல்வி.

· 1989 – இந்திய அணியில் இடம் பெற்று ஆடிய முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் 0 ரன்கள்.

.இப்படித்தான் சச்சினின் ஆரம்ப நாட்கள் இருந்தன. 1989 ஆண்டு அணியில் இடம் பெற்றிருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் அவர் முதல் சத்த்தை அடித்தது 1994-ல் தான். ஒரு சதத்தை எட்ட அவர் ஆறு வருடங்கள் போராட வேண்டியிருந்தது.

தொடர் தோல்விகள் அவரை பதப்படுத்தியதே ஒழிய பயம் கொள்ளச் செய்யவில்லை. அதன் பின் படிப்படியாக மின்ன ஆரம்பித்தார்...கிரிக்கெட் உலகின் மொத்த பார்வையும் அவர் மீது திரும்பியது.

நான் ஆடுகளத்திற்குள் நுழையும் போது, நான் தான் முக்கியமானவன் என்று எண்ணிக் கொள்வேன். என் கையில் தான் இந்த ஆட்டம் இருக்கிறது. அணியை தூக்கி நிறுத்த வேண்டியது என் கடமை. என்று என்னை நானே தயார் செய்து கொள்வேன்...

என் நினைவில் நிற்கும் சச்சினின் ஒரு பேட்டி இது.. இதை சொன்ன போது சச்சின், இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் படி பெரிய ஆள் ஒன்றும் இல்லை... ஆனால் அந்த நம்பிக்கை நாளாக நாளாக உண்மையானதென்னவோ மறுக்க முடியாத உண்மை.

சச்சினின் சாதனைகளை பட்டியலிட்டு சென்றால், இந்த கட்டுரை 100 பகுதிகளைத் தாண்டிப் போகும். உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒர் இந்தியனாக தனக்கென்று ஒர் இடத்தை தக்க வைத்துக் கொள்வதே பெரும் சாதனை என்ற நிலையில், அந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து, தலைக்கனமில்லாத ஒரு சிறந்த வீரர் சச்சின் என்றால் மிகையில்லை.

சச்சின் வெற்றியாளராக மிளிர்ந்த வேளை கூட, ஊடகங்கள் அவரை விட வில்லை. அவரை இட்டுக்கட்டி எழுதி, ஒரு கேவலமான விளம்ப்ரங்களைத் தேடிக் கொண்டது. அதில் ஒன்று, அவர் சதம் அடித்தால், இந்திய அணி தோற்று விடும் என்ற அறிவியல் உண்மை. ஆனால் உண்மை அப்படி இல்லை.

ஒரு நாள் போட்டிகளில் ச்ச்சின் அடித்த 49 சதங்கள் நிறைந்த போட்டிகளில் இந்திய அணி 34 முறை வெற்றிகளையும், 13 முறை தோல்விகளையும், இரண்டு டிராக்களையும் பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 70% போட்டிகளில் இந்தியா மகத்தான வெற்றியை பெற்றது என்பதே, புள்ளி விபரம்.

இது போன்று டெஸ்ட் தொடர்களில் இதுவரை, சச்சின் அடித்த 51 சதங்கள் நிறைந்த போட்டிகளில் இந்திய அணி, 20 வெற்றிகள், 11 தோல்விகள் மற்றும் 20 டிராக்களையும் பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 78% போட்டிகளில் இந்தியா தோல்வியை தவிர்த்துள்ளது.

இதையே சச்சின் சதமடித்தால் இந்தியாவிற்கு தோல்வி தான் என்று ஊடகப் பகுத்தறிவாளர்கள்(!!?) பரப்பி வருவது...உண்மைக்குப் புறம்பானது.என்பதை எத்தனை பேர் அறிவர்..?

அதிலும் 100வது சதத்தை அடிக்க, அவருக்கு ஊடகங்கள் கொடுத்த நெருக்கடி கொஞ்சம் நஞ்சமில்லை...சச்சின் அவ்வளவு தான்..அவரால் இந்த சாதனையை நிகழ்த்த இயலாது...இப்படி அவரை மனதளவில் பாதிக்க முயன்றோர் ஏராளம்..கடைசியில் அது நிகழ்ந்து விட்டது.

நான் கிரிக்கெட் கடவுள் அல்ல, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கடந்த 22 ஆண்டுகளை கடந்த பிறகும், கிரிக்கெட் கடவுள் என்னை கடந்த ஒராண்டாக சோதித்து வந்ததாக கருதுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்த சாதனையை எண்ணி பல முறை மனம் வெறுத்திருக்கிறேன். ஆனால் அதனால் சோர்ந்து போனதில்லை.

அது போன்ற சாதனைகளை கடப்பது அவ்வளவு எளிதல்ல. சாதனைகளை கடப்பவர்களுக்கு மட்டுமே அதன் கஷ்டம் எப்படிப்பட்டது என்பது தெரியும். நான் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் ஆடவில்லை. சாதாரணமாக ஆடும் போது சாதனைகளையும், மைல்கல்களையும் கடக்க முடிகிறது. எத்தனை சதங்கள் அடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அணியின் நலனே முக்கியம்.

இளைஞர்கள் கனவுகளை துரத்த வேண்டும். கனவு நிச்சயம் நிறைவேறும். எனது கனவு 22 வருடங்களுக்கு பிறகு உலககோப்பையை வென்றபோதுதான் நிறைவேறியது.

தன் நூறாவது சதத்திற்கு பிறகு சச்சின் கொடுத்த பேட்டி இது.

பங்களாதேசத்திற்கு எதிராக சச்சின் நூறு ரன்களைத் தொட்டு விட்டு, வானத்தை நோக்கிப் பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டார்...அந்த மூச்சிக் காற்றில் அவரைப்பற்றிய அவதூறுகள் பொசுங்கிப் போயிருக்கும்...

என்றாளும் சாதனையாளர்களுக்கு ஒரு போதும் ஓய்வில்லை என்ற வகையில் ஒரு நாள் போட்டிகளில் அவரின் 50வது சதத்தை எதிர் நோக்கி இருக்கும் அவர் ரசிகர்களும், ஊடங்கங்களும்...:-)

Sunday, December 25, 2011

புதிய எதிரிகள்

9-மார்ச் '98... முதன் முதலாக நான் கிரிக்கெட் மைதானம் சென்று சர்வதேச போட்டி ஒன்றை பார்த்தது அன்றுதான். அது ஆஸ்திரேலியா இந்தியா வந்திருந்த போது சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி. மார்க் டெய்லர் தலைமையில் மெக்ராத் இல்லாத அணி இந்தியா வந்தது. ஷேன் வார்னே மற்றும் சச்சின் உச்சத்தில் இருந்த காலம். இருவைரையும் மையப் படுத்தியே அத்தொடர் பேசப்பட்டது. அடுத்த பத்தாண்டுக்கான புதிய cricket-rivalry-க்கு வித்திட்டதும் அத்தொடர்தான் என்பதும் என் எண்ணம்.

நான் சென்றிருந்த அன்று (நான்காவது நாள்) சித்துவும், சச்சினும் ஷேன் வார்னேக்கு இந்தியா ஆடுகளங்கள் பற்றி படம் வரைந்து பாகம் குறித்து விளக்கினார்கள். ஷேன் வார்னே ஒவ்வொரு ஓவரும் வீசிவிட்டு பவுண்டரி பக்கம் ஃபீல்டிங் செய்ய வரும்போதெல்லாம் சத்தம் போட்டு நாங்கள் கேலி செய்வோம். அதற்கு அவர் சிரித்து கொண்டே நமது ஊர் முறைப்படி சிறிது குனிந்து கயெடுத்து கும்பிட்டு காட்டுவார். எங்களுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்த்த ஒரு ஆஸி தம்பதிகள் கடைசியில்(வேறு வழியில்லாமல்) எங்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். இப்படியும் சொல்லலாம்... அதாவது அன்றைய சச்சின் மற்றும் சித்துவின் ஆட்டம் ஆஸ்திரேலியர்களுக்கு கும்பிடவும் குத்தாட்டம் போடவும் கற்று கொடுத்ததென்று. மொத்தத்தில் அன்று முதன் முதலாக மைதானத்தில் கிரிக்கெட் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். அந்த போட்டியில் சச்சின் நூறு மற்றும் சித்து & அசார் ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் அசாரின் அற்புத சதத்தால் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது.

அது.... இந்தியா- பாக் ஆட்டங்கள் அரசியல் சிக்கல்காளால் மங்கி போயிருந்த காலம். ஆஸி-இங்கிலாந்து போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மிகுந்த ஆளுமையாலும் இங்கிலாந்து அணியின் வீழ்ச்சியாலும் சோர்வுற்றிருந்த காலம். cricket-rivalry குறைந்திருந்த காலம். அப்படிபட்ட நேரத்தில் தான் வார்னே-சச்சின் tag-உடன் இந்த புதிய ரைவல்ரி தொடங்கியது.



இந்த புதிய பகைமை வளர உதவியது அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடந்த தலைமை மாற்றங்கள் தான் . Aggressive ஆளுமை கொண்ட இருவர் இரு அணிகளுக்கும் தலைவர்களாயினர். கங்குலியும் ஸ்டீவ் வாக்கும் கேப்டானாயினர். இருவருமே எனக்கு பிடித்த வீரர்கள். இருவரின் வீம்பு கலந்த வெறித்தனம் இரு அணிகளுக்குள்ளேயும் கிரிக்கெட் - பகைமையை பெட்ரோல் ஊற்றி வளர்த்தது. இந்திய-பாக், ஆஷஸ் போட்டிகளை விட மிகவும் விறுவிறுப்பாக இரு அணிகளும் மோதும் போட்டிகள் இருந்தன. ஒரு பக்க ஆட்டங்களாகவோ/தொடராகவோ இல்லாமல் மாறி மாறி இரு அணிகளும் வெற்றி பெற்றன.

இந்தியாவின் கடந்த மூன்று ஆஸ்திரேலியா சுற்றுப்பயண தொடர்களில், முன்னெப்போதுமில்லாத அளவில் இந்தியாவின் ஆட்டங்கள் முன்னேறி இருந்தது. அதுபோல ஆஸ்திரேலியாவும் முப்பது வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் தொடரை வென்றது(Final frontier).

இந்த கால கட்டங்களில், நடந்த காண்ட்ரோவர்சிகளுக்கும் பஞ்சமில்லை. கங்குலி-வாக் டாஸ் பிரச்சனை, பக்னரின் சொதப்பல் தீர்ப்புகள், பாஜி-சைமண்ட்ஸ் வசவுகள்... எல்லாம் சுவராஷ்யங்களை கூட்டின.

இந்த தொடரையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்து காதிருக்கிறேன். தொடரை வெல்ல  முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பு இந்தியாவுக்கு   இருப்பதாக தெரிகிறது. கண்டவர்களும் எளிதில் ஆஸ்திரேலியாவை வென்று வருகிறார்கள். ஆனால்... எதிரிக்கேற்ப ஆடுவதுதான் இந்தியாவின் தனித்தன்மையே. பலமில்லாத ஆஸ்திரேலிவுடன் இவர்களும் அவர்கள் நிலைக்கு இறங்கி வந்து சொதப்பிவிட்டால்???  அடிபட்டு வெறியுடன் தனது ஆளுமையை மீட்டெடுக்க ஒரு கிழட்டு ஆஸி சிங்கம் வேட்டைக்கு காத்திருக்கிறது.

பார்க்கலாம்... ஆஸ்திரேலியா தனது பலத்தை மீண்டும் பெற்று ஒரு புதிய அத்தியாத்தை தொடங்குமா? ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் தொடர் வெற்றியை இந்தியா பெறுமா?

Saturday, August 20, 2011

இந்தியாவின் கனவு டெஸ்ட் அணி

மக்கா... எல்லாரும் நல்லா இருக்கீங்களா??

ரொம்ப நாள் ஆச்சு.. ஏதாச்சும் நாரதர் கலகம் பண்ணி.

இப்ப எனக்குப் பிடிச்ச இந்திய டெஸ்டின் கனவு அணியைச் சொல்லப் போறேன்.

இதுல ஒவ்வொருத்தர் ஆட்டமும் பெஸ்ட்னு சொல்ல முடியாட்டியும் அவங்க இருந்தா இன்னைக்கு இங்கிலாந்தில் போராடும் மக்களுக்கு உதவியா இருந்திருக்கும்.

என்னோட கனவு அணி:

சுனில் கவாஸ்கர் & வீரேந்தர் சேவக் - ஓபனிங்

சேவக் அக்ரசன் ஆப்போசிட் டீமுக்கு எப்பவும் பயம் தரும். கவாஸ்கரை நம்பி பெட் கட்டலாம்... இந்த பாலை அடிக்க மாட்டாருன்னு.. அந்த ஸ்டபிலிட்டி நம்ம ஓபனிங் காம்பினேசன்ல யாரும் இன்னும் தரல. ஒரே மேட்ச்ல கம்பீர் அந்த எபிலிட்டிய காட்டினார். நியூசிலாந்து மேட்ச்... அது மாதிரி இன்னும் இன்னொரு பெர்ஃபார்மன்ஸ் தரல...

ராகுல் ட்ராவிட் - ஒன் டவுன்

மனுசன் ராட்சசன்... க்ரைண்டிங் த ஆப்போசிசன்னு சொன்னா அண்ணன் தான்.

விவிஎஸ் லக்‌ஷ்மண் - செகண்ட் டவுன்

இந்த ஆளையும் ட்ராவிட்டையும் நம்பி அடுத்து இறங்க வேண்டிய ஆள் ரெஸ்ட் ரூம்ல தூங்கலாம்.. ஆனா விவிஎஸ் லக்‌ஷ்மனுக்கு முக்கியமான பிரச்சினை, ஹி நீட்ஸ் ப்ரஷ்ஷர்..

குண்டப்பா விஸ்வநாத் - அடுத்த டவுன்

அருமையான ப்ளேயர்... அழகா, எலிகண்டா ஸ்ட்ரோக் ஆடுவார்.

திலிப் வெங்சர்க்கார் (அ) மொஹிந்தர் அமர்நாத்

சூப்பரான ப்ளேயர். கன்சிஸ்டண்டா ஆடுவார்

கபில்தேவ் (கேப்டன்) - அருமையான ஆல்ரவுண்டர் என்பதே இந்த பொசிசனுக்கு போதும். கேப்டன் பதவி கொடுத்ததுக்கு முக்கிய காரணம் மனுசன் ஒன்னுக்கும் ஒதவாத டீமையே வேர்ல்டு கப் வரை கொண்டு போனவர்.

கிர்மானி - விக்கட் கீப்பர் - யாராவது இதை அப்போஸ் பண்ணீங்கன்னு வச்சுக்கங்க... கொன்னுட்டேன் உங்களை..

ஜாகிர்கான் & கும்ப்ளே - ரெண்டு விக்கட் டேக்கிங் மீடியம் ஃபாஸ்ட் பவுலர்ஸ் :)))

ஹர்பஜனைப் பவுலரா போடலாம்னா பயமா இருக்கு...

பிஷன் சிங் பேடி - இவரை கடைசி ஆளா போடலாம். 266 விக்கட் எடுத்திருக்காப்புல...

ட்வெல்த் மேனா வேணும்னா சச்சினை சேர்த்துக்கலாம்.

Wednesday, August 10, 2011

இந்தியாவின் எழுச்சி

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் இரண்டு டெஸ்ட்டுகளை இழந்திருக்கிறது. 10ம் தேதி நடந்த மூன்றாம் டெஸ்ட்டில் இந்தியா இங்கிலாந்தை 1 இன்னிங்க்ஸ் மற்றும் 245 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சரித்திரம் படைத்தது.

இந்தியாவின் எழுச்சிக்கான மூல காரணமாக வீரேந்தர் சேவாக்கும் கவுதம் கம்பீரும் அமைந்தனர். முதலில் பேட் செய்த இங்கிலாந்து, அமித் மிஸ்ரா மற்றும் ப்ரவீன் குமாரின் சிறப்பான பந்துவீச்சால் 80 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 630 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் சேவாக் 323 ரன்களும், கம்பீர் 227 ரன்களும், டிராவிட்டின் 56 ரன்களும் அடக்கம். சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் பேட் செய்யவே இல்லை.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து தனது அனைத்து விக்கட்டுகளையும் 305 ரன்களுக்கு இழந்தது.

இந்தியாவின் இந்த வெற்றியை இந்தியா சுதந்திர தினத்துக்கு சமர்ப்பிப்பதாக அணியின் கேப்டன் தோனி கூறினார்.

ஆட்டநாயகனாக சேவாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அணிகள் மோதும் அடுத்த ஆட்டம் ஆகஸ்ட் 18 லண்டனில் நடப்பதாக இருக்கிறது. ஆனால் இந்திய அணியின் இந்த அபார வெற்றி ஆங்கிலேயர்களைக் கொதிப்படைய வைத்துள்ளதால் லண்டனில் மாபெரும் கலவரம் நடப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள - உடான்ஸ் டிவியைப் பாருங்கள்.

Sunday, April 3, 2011

தோனி, நீ தெய்வ மச்சானடா!!!



* நேற்றைய ஆட்டத்தை பற்றிய விமர்சனங்கள் எல்லாம் ஒன்றும் சொல்லும் நிலையில் இல்லை மனம். மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கிறது.


* நான் கிரிக்கெட் பார்க்க துவங்கியது 87 உ.கோப்பை முதல்.... அன்று அரை-இறுதியில் அசாருத்தீன் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தவுடன் இந்தியா கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது முதல்... இந்த உ.கோப்பைக்கான எனது ஏக்கமும் தொடங்குகியது. ஒவ்வொரு உ.கோப்பைக்கும் அணியின் பலம் பலவீனம் பற்றியெல்லாம் கவலையில்லாமல் குருட்டுத்தனமாக நம்பினேன்.


* 96 உ. கோப்பை அரை இறுதி கல்லுரி விடுதியில் 200 நண்பர்களுடன் தாரை தப்பட்டை சூழ ஆட்டத்தை காண ஆரம்பித்த நான்... இந்தியாவின் 5 விக்கெட விழுந்தவுடன் தோல்வியை தாங்க இயலாமலும், ஏமாற்றத்தாலும் வீரர்களின் மேல் ஒரு வெறியான கோபத்தில் அறைக்குச் சென்று அங்கு ஒட்டியிருந்த சச்சின், அசாருத்தீன் மற்றும் மைக் டைசன்(பாவமரியாதவன்) கிழித்து நொறுக்கி .. ஒரு போர்வைக்குள் அழுகையுடன் முடங்கி போனேன். கல்கத்தாவே கலவரமானது, காம்ப்ளி அழுதது எதுவுமே நான் பார்க்கவில்லை.


* இப்படி ஒவ்வொரு முறையும் வாய்ப்பு நழுவும் போதும் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.


* இப்படி எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. வென்ற போது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவில்லை எனலாம். என்னுடைய கல்லூரி விடுதி நாட்களும் நண்பர்களும் கண் முன் வந்து போயினர். அவர்களுடன் இந்த கணத்தை கொண்டாட முடியவில்லையே.


* போட்டி முடிந்து வீரர்கள் பலர் ஆனந்த கண்ணீர் வடித்தாலும் மனம் நெகிழ்ததே தவிர கண்ணீர் வரவில்லை. ஆனால், காலையில் காரில் அலுவலகம் வரும்போது 'சிறப்பு செய்தி தொகுப்பு (இன்றைக்கு நேற்றைய வெற்றி குறித்து மலையாள பண்பலையில் )' கேட்ட போது உடல் சிலிர்த்து கண்களில் கண்ணீரே வந்து விட்டது. என்னையும் அறியாமல் ஒரு வெறியில் "yessssssssss" என்று கீரிட்டு கத்தியே விட்டேன்.


* நான் ஏற்கனவே இங்கு சொன்னது போல யுவராஜ் ஜொலிக்கும் தொடர்கள் எப்போதும்(பெரும்பாலும்) இந்தியாவுக்கு சாதகமாகவே முடியும். அதுபோலவே உ.கொப்பையிலும் நடந்து விட்டது. சச்சின் மற்றும் அனைத்து வீரர்களும் (யாரப்பா அது ஸ்ரீசாந்துமான்னு கேக்குறது?) பங்களிப்பு செய்திருந்தாலும்.... தோனி, நீ தெய்வ மச்சானடா!!!

1996-2011


நேற்றைய மேட்சில் டாஸ் வென்று இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தவுடன் எனக்கு  1996 ஆம் வருடம் கல்கத்தாவில் நடந்த அரை இறுதிப் போட்டிதான் நினைவுக்கு வந்தது. அதில் இந்தியா டாஸ் வென்று  அவர்களை பேட் செய்ய அழைத்தது. அந்த உலகக் கோப்பையில் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஜெயசூர்யா மற்றும் கலுவிதரனா இருவரும் முதல் இரண்டு ஓவர்களிலேயே ஆட்டம் இழக்க , இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் அரவிந்த டி சில்வா அற்புதமாக ஆடி 251 ரன்கள் சேர்க்க உதவினார். 

அதன்பின் அந்த ஸ்கோரை சேஸ் பண்ணத் துவங்கிய இந்தியா , சச்சின் ஆடிய வரை சமாளித்தது. அவர் அவுட் ஆகியவுடன் மளமளவென்று விக்கெட்களை இழக்கத்துவங்கி , பின் ரசிகர்களின் கோபத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு ஸ்ரீலங்கா வென்றதாக அறிவிக்கப்பட்டது. 


நேற்று அவர்கள் டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்தனர். இந்த உலகக் கோப்பையில் தரங்கா, தில்ஷன் இணை நன்றாகவே ஆடியுள்ளனர். ஆனால் நேற்று அவர்களால்  தங்கள் இயல்பான ஆட்டத்தை ஆட இயலவில்லை. விரைவிலேயே இருவரும் அவுட் ஆனார்கள். பின் அப்பொழுது டி சில்வா ஆடியவாறு ஜெயவர்தனே ஆடத் துவங்கினார். கடைசி கட்டத்தில் நமது பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கும் வள்ளல்கள் ஆனார்கள். 


275 என்றக் கடினமான இலக்குடன் ஆடத் துவங்கிய இந்திய அணி, விரைவில் சேவாகையும், சச்சினையும் இழந்தது. அந்த சமயத்தில் பெரும்பாலானோர் மனதில் 1996 ம்,2003 ம் எட்டிப் பார்த்திருக்கும். ஆனால் , கம்பீர் ஒரு முனையில் கம்பீரமாக ஆட, மறுமுனையில் முதலில் கொஹ்லி பின் , கேப்டன் கூல் தோனி இருவரும் கைக் குடுக்க இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 1996 ஆம் வருட அரை இறுதிப் போட்டியில் தோற்றதற்கு சரியான பதிலடி நேற்றுத் தரப்பட்டுள்ளது.


மேட்ச்  முழுவதும் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை வீரர்கள் வெற்றிப் பெற்றவுடன் வெளிப்படுத்தினர். எப்பொழுதும் கூலாக இருக்கும் தோனியும் சிறிது உணர்ச்சிவசப்பட்டார். பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணிலும் நேற்று ஒரு துளி கண்ணீராவது வந்திருக்கும் அந்தத் தருணத்தில். 

அன்புடன் எல்கே

Thursday, March 31, 2011

தோனி ஒரு மந்திரவாதி...

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது தான் ஃபைனல். இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் டென்ஷன், டென்ஷன், டென்ஷன்......மிலிட்டரி, போலீஸ் என்று மொகாலியே ஆடிப்போகிறது...மேட்ச் பிக்ஸிங் ஆகுமா...? இந்தியா வெற்றி பெறுமா..? கனவு பிட்ச் மும்பைக்குள் பாதுகாப்பு வளையத்துடன் பாகிஸ்தான் காலடி எடுத்து வைத்து விடுமா? எண்ணிலடங்கா கேள்விகள்..


அணி அறிவிக்கப்படுகிறது...இந்தியர் ரசிகர்கள் மத்தியில் ஒரே சலசலப்பு...அட ஏன் அஸ்வின் இல்லை? என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலிக்கிறது...ஆனால் பிட்ச் சுழல் பந்திற்கு சாதகமில்லை என்று காரணம் கூறப்படுகிறது.மேட்ச் ஆரம்பிக்கிறது..இந்தியா முதல் பேட்டிங், சுழல்பந்து வீச்சாளர் அஜ்மல் வருகிறார்...அதுவரை ஆடிவந்த நமது பேட்ஸ்மேன்கள் திணற ஆரம்பிக்கிறார்கள்...ரசிகர்கள் கொதித்துப் போகிறார்கள்...அடப்பாவமே..இப்படி ஒரு பிட்சில் விளையாட அஸ்வினை எடுக்காமல், சென்ற ஆட்டத்தில் ரன்களை அள்ளிக் கொடுத்த நெஹ்ராவை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்களே...? என்று டென்சன் ஆகிறார்கள்....



முதல் பேட்டிங் முடிகிறது...இந்தியா 260 ரன்கள்...பாகிஸ்தானை ஜெயிக்க, இதெல்லாம் பத்தாதடா..? என்று ரசிகர்கள் வடிவேலு பாணியில் கூறுகிறார்கள்...


நண்பர் பாஸ்ட் பவுலர் நவ்பல், தொலைபேசியில் அழைக்கிறார்...கிரிக்கெட் பற்றிய விசயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அஸ்வினை எடுத்திருக்க வேண்டும், என்ன செய்வது...பிட்ச் மாறிவிட்ட்து...என்றாளும் தோனி ஒரு மெஜிசியன்...எதாவது ஒரு கணக்குப் போட்டு கடைசியில் நமது மூஞ்சில் கரியை பூசி விடுவான்...:-) என்றார்...


இரண்டாவது இன்னிங்ஸ் தொடர்கிறது...நண்பர்கள் ஒன்று சேர்ந்து, அல்நாதாவில் ஒரு நண்பர் வீட்டில், நோன்புக் கஞ்சி, வடை, சமோசா என்று ஒரு வித்தியாசமான சிற்றுண்டியுடன்.. மேட்ச் பார்க்கிறோம்...இந்தியா பந்து வீச்சில் சாதிக்கிறது...அனைத்து பவுலர்களும் சொல்லி வைத்தாற்ப் போல் தலா 2 விக்கெட்களை வீழ்த்துகிறார்கள்...தோனி மீது குறை சொல்லி வந்த அனைவரும் வாயடைத்துப் போகிறார்கள்.....


பாஸ்ட் பவுலர் சொன்னது போல தோனி ஒரு மந்திரவாதி தான்...:-) சில நேரங்களில் அவர் என்ன செயதாலும் அது அணிக்கு சாதகமாகி விடுகிறது...அது ஃபைனலிலும் தொடருமா...?

நேற்றைய ஆட்டத்தில் என்னைக் கவர்ந்தவை...


  • எந்த பிட்ச் ஆனாலும் தன் சொந்த பிட்ச் போல் விளையாடும் சேவாக்கின் அதிரடி ஆட்டம்.

  • யார் என்ன சொன்னாலும், அனைத்து இளம் வீர்ர்களையும் தண்ணி வாங்கச் செய்யும் டெண்டுல்கரின் ஆட்டம்.

  • தன் பொறுப்புணர்ந்து நிதானமாக ஆடிய ரைனா.

  • 5 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தானின் ரியாஸ்.

  • இந்திய பவுலர்களின் ஆட்டம்..

  • நெஹ்ராவின் நேர்மை... ( அப்ரிடி கேட்ச் விவகாரத்தில்)

  • ரிஸ்க் எடுப்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று ஆடிய மிஸ்பாவின் ஆட்டம்.

  • பிரசண்டேஷன் செருமனியில்...அஃப்ரிடியின் உருக்கமானப் பேச்சு...

எப்படியோ இந்தியா ஃபைனலுக்கு வந்து விட்டது...இந்தியா....மும்பை...சச்சின்...


இந்தியாவிற்கு அனைத்துமே சாதகம் தான்...இந்தியா சாதிக்குமா..?

நன்றி மிஸ்பா

 இந்தியா வெற்றி பெற்றதுக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு நன்றி சொல்லணும். அதுவும் குறிப்பா பெரிய அண்ணன் மிஸ்பாவுக்கு. அவர்தான் டெண்டுல்கர் குடுத்த முதல் கேட்சை மிஸ் பண்ணி கணக்கை துவங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து ஒரு மூணு கேட்ச் மிஸ் பண்ணாங்க. 

அப்புறம் பேட்டிங் பண்றப்ப ரொம்ப நேரம்  எதோ டெஸ்ட் மேட்ச்ல ஆடற மாதிரியே ஆடிக்கிட்டு இருந்தான். இவன் ரொம்ப ஸ்லோவா ஆடினதுல கூட விளையாடற வீரர்கள் அடித்து ஆட வேண்டிய கட்டாயம் ஆகிடுச்சி. அவர் விளையாடிய முதல் 42 பந்துகளில் வெறும் 17 ரன்கள் மட்டுமே அவர் அடித்தார். அப்புறம் பவர் ப்ளேல அத சரி பண்ற மாதிரி ஆடியதுக் கைக்குடுக்கலை. ரொம்ப லேட் பண்ணிட்டாங்க அடிச்சு ஆட. 


நேத்து அணியை அறிவிச்சப்ப பொதுவா மொஹாலி பிட்ச் ஸ்பின்னருக்கு உதவாது என்பதால் அச்வின்னை தேர்வு செய்யவில்லை. ஆனால் எல்லோரும் நினைச்சதுக்கு மாறா பிட்ச் ஸ்பின்னருக்கு உதவியது. கடைசியா தன் தப்பை ஒத்துகிட்டார் தோனி. இதுதான் அவர்கிட்ட பிடிச்ச விஷயம். எதோ நேத்து இந்தியாவுக்கு நல்ல நேரம். படேல், நெஹ்ரா ரெண்டு பேருமே ஒழுங்கா பந்து வீசினாங்க . 

சனிக்கிழமை இறுதிப்போட்டி மும்பையில், சச்சினின் ஊரில். தனது நூறாவது சதத்தை அங்கே அடிப்பாரா அவர் ?

அன்புடன் எல்கே 

Sunday, March 27, 2011

இலங்கை - இங்கிலாந்து அலசல்

போட்டி நடத்துங்கடான்னா சும்மா டைம் பாஸ் வெளாட்டு விளையாடினாங்க ஸ்ரீலங்கா பசங்க...

ஸ்ரீலங்கா ஆளுங்க கைல கிடைக்கிற கேட்செல்லாம் விடுறதை இப்பத்தான் பாக்குறேன்.

இந்தியா கூட 330 ரன்னை டை பண்ண டீமை இப்படியாயா வெளுப்பீங்க?? இந்தியாவோட பேட்டிங்கும் பல்லிளிக்குது. விக்கெட்டே விழாம இப்புடி ஆடினா, அடுத்த செமி ஃபைனல் என்னாகுமோ நியூஸிலாந்துக்குன்னு பயமா இருக்கு.

நாங்க இம்புட்டு தூரம் வந்ததே பெரிசுன்னு ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் சொல்லி இருக்கார். ஆமா... இங்கிலாந்துலேர்ந்து இந்தியா ரொம்ப தூரம் தான்.

முதல்ல பேட் பண்றவங்க தான் ஜெயிப்பாங்கன்னு சொன்ன பசங்களை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கணும்னு கை பரபரக்குது. என்னவோ போங்கடான்னு போகவும் முடியல..

இன்னும் 63 பால் மீதி இருக்கு. 10 விக்கட் மிச்சம் இருக்கு. அப்படின்னா 350 ரன் கூட அசால்ட்டா ஜெயிப்போம்டான்னு இலங்கை சவால் விடுறா மாதிரி இருக்கு.

இதெல்லாம் பார்த்தா......

நம்ம பசங்க எப்ப என்ன செய்வாங்கன்னே தெரியாது. ப்யூஸ் சாவ்லாவையும் ஆசிஷ் நெஹ்ராவையும் டீம்ல சேர்த்து, அஷ்வினை உக்கார வச்சாலும் நாம் ஆச்சர்யப்பட முடியாது. ஏன்னா நம்ம கேப்டன் தான் விஞ்ஞானியாச்சே...

வெளையாட மாட்டாரு... ஆனா ஆராய்ச்சி பண்ணுவாரு.

எனக்கென்னமோ இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில இந்தியா ஜெயிக்கிறதுக்கு சில பேரை மட்டும் நம்பி இருக்கோமோன்னு தோணுது. டீமா ஆடினா ஜெயிக்கலாம். இங்கிலாந்து இலங்கை மேட்ச் மாதிரி... இல்லன்னா பொட்டியைக் கட்டிட்டு கிளம்பிடலாம்.

ஐபிஎல் வேற வருதுல்ல...

Thursday, March 24, 2011

ஆடுகளத்தில் அனல் பறக்குமா இன்று?

முதல் காலிறுதி என்னமோ ஒரு பயிற்சி ஆட்டம் மாதிரி ஆகிப்போச்சு. இன்னிக்கு ஆட்டமாச்சும் அப்படி ஆகாம தீயா இருந்தா சரிதான். மே.இ கிரிக்கெட்டின் கேள்விக்குறியான எதிர்காலம் தொடர்வதில் மிகுந்த மன வருத்தமே. யாராச்சும் இதுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும். :(

சரி... இன்னிக்கு போட்டி பத்தி பேசலாம். எனக்கு பிடிச்ச ரெண்டு அணியும் ஆடுகளத்தில் இறங்குது இன்னிக்கு. ஆஸ்திரேலியா முன்னாடி மாதிரி இல்லாததால், ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கே தன்னம்பிக்கை குறைவாகத்தான் இருக்கு. இல்லன்னா இப்படி வாயை பொத்திகிட்டு சும்மா இருக்க மாட்டானுங்க. இந்நேரம் சவடால்கள் பல விடப்பட்டிருக்கும். அடக்கி வாசிப்பது ஆஸ்திரேலியத்தனம் இல்லை. :)

ஆஸ்திரேலியாவின் பலவீனமாக நான் நினைப்பது பாண்டிங்கோட ஃபார்ம் மற்றும் சுழல் பந்து சுழியில் சிக்குவது. இது ஒன்னுக்கொன்னு தொடர்புடையாதலால் கொஞ்சம் சிக்கல்தான். இருந்தாலும் இவர்களின் வெறித்தனமான ஆட்டத்தால் எதையும் சாதிப்பார்கள்.

இந்தியாவின் பலவீனம் பேட்டிங் கடைசியில் சொதப்புவதும், பந்துவீச்சு தொடக்கத்தில் சொதப்புவதும். இந்தியாவின் வெற்றியை சேவாக் கொஹ்லி மற்றும் யுவராஜின் ஆட்டங்கள் முடிவு செய்யும். யுவராஜ் ஜொலித்த தொடர்கள் இந்தியாவிற்கு சாதகமா இருந்துள்ளது ஒரு ப்ளஸ்.

இந்த இரு அணிகளிமுள்ள சில ஆட்டக்காரர்களுக்கு சில வகைகளில் 'இறுதி' ஆட்டமாக இருக்க வாய்ப்புள்ளது. பாண்டிங்கிற்கு அணித்தலைவராக இறுதி ஆட்டமாக அமையலாம். அவருக்கும் சச்சினுக்கும் (ஜாகிருக்கும்) இறுதி உலகக்கோப்பை ஆட்டமாக அமையலாம். தோனிக்கு அணித்தலைவராக இறுதி ஆட்டமாக அமையலாம்.

ஆஸ்திரேலியா தோற்று வெளியேறினால் பெரியளவில் அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்படும். இந்தியா தோற்று வெளியேறினால்??..... இதுலாம் நமக்கு புதுசா?? நாமும் நமது ஸ்டார்கள் ஐ.பி.எல்-ல் அடிச்சு நொறுக்குவதை காண ஆயத்தமாகிவிடுவோம்.

ஆக மொத்தம் ஆடுகளத்தில் இன்னிக்கு அனல் பறக்கும் என எதிர் பார்க்கலாம்.

Sunday, March 20, 2011

இந்தியா - மேற்கிந்திய தீவுகள்

இந்த ஆட்டத்தைப் பற்றி எல்லோருக்கும் சில அபிப்ராயங்கள் பேதங்கள் இருக்கக் கூடும். ஆனால் இன்றைய ஆட்டம் இந்திய அணியின் அடுத்த ஆட்டங்களின் ஸ்ட்ராடஜியை முடிவு செய்யும் என்பதில் யாருக்கும் வேறு சந்தேகங்கள் இருக்காது.

இன்றைய போட்டியில் தோற்றால் இந்தியா ஸ்ரீலங்காவை காலிறுதியில் சந்திக்கும். இன்றைய போட்டியில் வென்றால் ஆஸ்திரேலியாவை சந்திக்கும்.

அப்படியானால், இந்தியாவின் இந்த போட்டி நமது அரையிறுதி வாய்ப்பினை அசைத்துப் பார்க்கவே போகிறது.

உளவியல் ரீதியாக இந்தப் போட்டியில் தோற்றால் இந்தியாவிற்கு வென்றாக வேண்டுமென்ற உத்வேகம் இல்லாமல் போய்விடும் (killer instinct).

இந்தியா எல்லாப் போட்டிகளும் வெல்லும் என்றே எண்ணிக்கொண்டிருக்கிறோம். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது எல்லா நேரத்திலும் நடக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லலாம்.

தென்னாப்பிரிக்காவுடன் நாம் தோற்றவுடன் எனக்கு முதலில் தோன்றியது 2003 உலகக் கோப்பை தான். அப்போது லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றோம். ஆனால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டோம். இப்போது சவுத் ஆப்ரிக்காவுடன் தோற்றிருக்கிறோம். இறுதியில் அவர்களை எதிர்கொள்ளலாம். அப்போது பான்டிங் போல் இப்போது ஸ்மித். எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் எப்போதும் உள்ளது.

நம்பிக்கை தானே சார் வாழ்க்கை....

Tuesday, March 1, 2011

சச்சினும் இந்தியாவும் - எழுச்சியின் வரலாறு

எனக்கு சச்சினைப் பிடிக்காது. ஆனா சில சமயங்கள்ல சச்சின் இல்லாத இந்திய அணியை நினைச்சுப் பார்க்கவே முடியாது. இன்னைக்கு சச்சினைப் பத்தின ஒரு ஆர்ட்டிகிள் பார்த்தேன். அப்படியே வாயடைச்சுப் போயிட்டேன். உண்மைலேயே சச்சின் நமக்கெல்லாம் கிடைச்ச கிஃப்ட்.

நாம தான் சரியா உபயோகிக்கல...

பாகிஸ்தான் டெஸ்ட்ல முதுகுல பெல்ட் கட்டிக்கிட்டு கடைசி 14 ரன் எடுக்க முடியாம அவுட்டான போது பாகிஸ்தான் நாடே அழுதிருக்க சான்ஸ் இருக்கு. சச்சினோட கமிட்மெண்டுக்கு எனது சல்யூட்.

இப்ப நாம ஆர்ட்டிகிளுக்கு வருவோம். இந்த ஆர்ட்டிகிள் வந்திருக்கிற இடம் த டைம்ஸ் ஆஃப் இந்தியா. ஆர்ட்டிகிளின் தலைப்பு

சச்சினும் இந்தியாவும் : இரண்டு பெரும் எழுச்சியின் வரலாறு

http://timesofindia.indiatimes.com/articleshow/7598432.cms

மனஸ் குப்தா எழுதிய அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வரியும் உண்மையை அப்படியே எடுத்துரைக்கிறது. அவ்வப்போது சச்சினை அதிகம் புகழவும் செய்கிறது :-)

1990களில் தான் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு பெரும் மாற்றத்தை சந்தித்தது. அப்போது தான் மன்மோகன் சிங்கும், சச்சினும் தங்களின் பயணத்தை ஆரம்பித்தனர். - Quote

இவர்களின் முயற்சி இந்தியாவிற்கு உலக அரங்கில் ஒரு முக்கிய இடம் பெற்றுத் தரும் என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. - Unquote

கவாஸ்கர் இந்தியாவை தோல்வியிலிருந்து மீட்கப் பார்த்தார் என்றால் சச்சின் வெற்றிக்காக உழைத்தார். ரிச்சர்ட்ஸின் அடிதடியும், கவாஸ்கரின் நுணுக்கமும், கபில்தேவின் இதயமும் கொண்டவர் லிட்டில் மாஸ்டர். வயதான பெண்மணிகள் பிரார்த்திக்கவும், வேலை செல்லும் ஆப்பீசர்கள் ஓபி அடிக்கவும், இளம் தலைமுறைக்கு உத்வேகமாகவும் அவதரித்தார் சச்சின் - Quote

ஷார்ஜாவின் மணற்புயல் போல் சச்சின் ஆடும் ஆட்டம்... சென்செக்ஸ் 10000 புள்ளிகள் உயர்வு. இந்தியாவின் அன்னிய செலவாணியும் சச்சினின் சென்ஞ்சுரிகளும் ஒரு சேர உயர ஆரம்பித்தன. ஒரு முறை ஸ்டீவ் வாக் சொன்னது, "நாங்கள் சச்சினிடம் தோற்றுவிட்டோம்". - Quote

இந்தியாவின் சாஃப்ட்வேர் கம்பெனிகள் தங்கள் முத்திரையை பதிக்க ஆரம்பித்த போது, இந்தியாவும் வெளி நாடுகளில் வெற்றிக் கனியைப் பறிக்கத் தொடங்கி இருந்தது.. அதன்பிறகு நடந்ததை உலகம் அறியும். - Quote

20 ஆண்டுகள் கடந்துவிட்டது. கீச்சுக் குரல் கொண்ட சிறுவன் தற்போது லெஜண்ட். உலகின் வேகமான வளரும் பொருளாதாரம் கொண்ட நாடுகளில் நாமும் ஒன்று. - Quote

சச்சினின் சாதனைகளில் இதுவரை கேட்டிராத சில:

  • 778 பௌலர்கள் சச்சினுக்கு பந்து வீசி இருக்கிறார்கள். அதில் 528 பேரால் சச்சினை அவுட்டாக்க இயலவில்லை. ஒரு முறை கூட.
  • இதுவரை 1145 மணி நேரம் சச்சின் பிட்சில் நின்றிருக்கிறார்.
  • இதுவரை 711 கிமீ ஓடி இருக்கிறார். (ரன் எடுக்க ஓடியவை மட்டும்)
 இந்தியாவின் சாதனைகளில் சில:

  • 1992ல் சென்செக்ஸ், ப்ரைவேட் ஏர்லைன்ஸ் எல்லாமும் ஆரம்பமானது.
  • ஐபிஎல் ஆரம்பம் 2008
  • உலகின் விலை குறைந்த கார் நானோ - 2010
என்னதான் சொன்னாலும், சச்சின் 100 போட்டா அந்த மேட்ச் இந்தியா தோத்திடும்னு தான் சொல்லப் போறேன் :)

நாய் வாலை............ :)

Monday, February 28, 2011

இந்தியாவுக்கு காத்திருக்கிறது ஆப்பு

விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னானாம் ஒருத்தன். அது சரி விடிய விடிய ராமாயணம் சொல்லி தூக்கத்த கெடுத்தவனுக்கு அந்தத் தண்டைனையக் கூட கொடுக்கலைன்னா ராமாயணம் கேட்டதுக்கு என்ன அர்த்தம்? ராமாயணம்னா ”காத்தடிக்குது காத்தடிக்குது” பாட்டுல பிரபுதேவா & co ஆடி காட்டுவாங்களே அத்த மாதிரி சும்ம அஞ்சு செகண்ட்ல சொல்லணும். இப்படி தினுசு தினுசா யோசிச்சு உதாரணம் கொடுத்தாலும் நேத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நடந்தது உச்சக் கட்ட கொடுமை. பத்து மணி நேரம் டிவிக்கு முன்னாடி உட்கார்ந்து எச்சில் பண்ணி கடிச்ச நகமெல்லாம் போக, மேட்ச் பாத்த எல்லாருக்கும் இன்னைக்கு மிஞ்சினது நல்லா சோப்புப் போட்டு கழுவின பின்னாடியும் எஞ்சியிருக்கும் விரல் வீச்சந்தான்.

”பவுலிங் கொஞ்சம் சொதப்பல். ஆனா சாகீர் இருக்கிறதனால கொஞ்சம் வலுவானதா இருக்கும்”, “எட்டு பேட்ஸ்மேன் இருக்கோம்ல ஹர்பஜனையும் சேர்த்து அதனால பேட்டிங்க்ல நாம வலுவான அணிதான். பேட்டிங்கை வச்சு ஜெயிச்சிரலாம்.”, “டெண்டுல்கர் எப்படியும் அடுத்த உலகக்கோப்பைக்கு இருக்கப் போறதில்ல. இந்த வருஷம் எப்படியும் வாங்கணும்னு விளையாடுவாரு. அதனால கண்டிப்பா ஜெயிச்சிருவோம்.”, “தோனிகிட்ட என்னமோ ஒண்ணு இருக்குய்யா, என்னத்தையாவது பண்ணி ஜெயிக்க வச்சிர்ராம்ல” இப்படியாக பட்டிதொட்டி எங்கும் ஒரே விதமான குரல்களைக் கேட்க முடிகிறது. 

எதிரணி எந்த அணியா இருந்தாலும் 300க்கு மேல அடிக்கும் வலுவான பேட்டிங் லயனப் இருக்கலாம். டெண்டுல்கர் அடிச்சு ஆடலாம், கோப்பையை ஜெயிக்கனுங்கிற கனவோட வழக்கத்திற்கு மாறாக அஞ்சு சிக்ஸர், அதுவும் சிறந்த ஸ்பின் பவுலர்னு சொல்ற ஸ்வான்னை அநாயசமாக விரட்டலாம். தோத்திட்டிருந்த மேட்ச்சை இந்தியா பக்கம் திருப்பினாண்டா சாகீர்னு இனி சாகீர் புகழ் எக்ஸ்ட்ரா டெஸிபலில் ஒலிக்கலாம். தோனி திடீர்னு லெக் ஸ்பின்னர் டீமுக்கு தேவைனு அவருக்கே உரித்தான அந்த குணகத்தை வெளிப்படுத்தலாம். எல்லாம் நினைத்தது போல நடந்தாலும் வெற்றி நினைத்தது போல கிடைக்காமல் போகலாம் என்பதற்கு நேத்து இந்திய அணிக்கு விழுந்த அடி ஒரு உதாரணம். இது ஒரு அபாய மணி. குறைகள் களையப்படாமல் இருந்தால் எதிர்பாராத சமயத்தில் களையமுடியாத சந்தர்பத்தில் நம்மை பாதிக்கும்னு சொல்வாங்க. நம்ம பவுலிங் தேராது, இவங்களை வச்சிட்டு உலகக்கோப்பை ஜெயிக்கிறது கஷ்டம்னு ஏற்கனவே பேசினாலும், இன்னைக்கு வரைக்கும் பெரிசா ஒரு மாறுதலும் வரலை. அதிலும் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு ஆட்டதுக்கு முன்னாடி ஃபிட்னஸ் இல்லாம போகுமா அல்லது ஒரு ஓவர் போட்ட பின்னாடி ஃபிட்னஸ் இல்லாம போகுமான்னு இன்னும் யாருக்கும் தெரியல. முதல்ல அறிவிச்ச பதினைஞ்சு பேர் கொண்ட அணியில இல்லாம இருந்த ஸ்ரீசாந்த்தான் உலகக் கோப்பைல இந்திய அணியின் முதல் ஓவரைப் போட வேண்டிய நிர்பந்தத்தில இந்திய அணி இருக்கு. முணாஃப் படேல் கோயில்ல கொடுக்கிற சக்கரைப் பொங்கல் மாதிரி! நமக்கு யோகம் இருந்தா முந்திரிப்பருப்பு வரும் இல்லைன்னா ஒழுங்கா பிசையாம கிடைக்கும் சோற்றுக்கட்டி.

எப்பேற்பட்ட எதிரணியா இருந்தாலும் எட்டிலிருந்து பத்து ஓவருக்கு மேல் ஒரு விக்கெட்டை எடுக்காமலிருந்தால் அது ஆபத்தானது. இது ஆட்டத் தொடக்கத்தில் நடந்தால் இன்னும் மோசமான விளைவுகளைத் தரும். அதற்கு நேற்றைய ஆட்டம் ஒரு உதாரணம். முதலில் ஸ்ட்ராஸ்-பீட்டர்சன் ஜோடியை பத்து ஓவருக்கு (9.3 ஓவர்) ஆட விட்டார்கள். பின்னர் ஸ்ட்ராஸ்-இயான் பெல் ஜோடியை 20 ஓவருக்கு மேல் (26 ஓவர்) ஆட விட்டார்கள். இதில் சத்தம் அதிகமா இருந்ததால் ஸ்ட்ராஸ் எட்ஜ் கேட்காமல் போனதென சப்பைக்கட்டு வேறு (http://www.rediff.com/cricket/report/world-cup-2011-strauss-edged-it-twice-but-indians-didnt-appeal/20110228.htm). இங்கிலாந்தை இந்தியாவுக்கு நிகரான அணியென நம்பாமல் இந்திய ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் நேற்றைய ஆட்டம் தொடங்கும் முன்பே ஷேன் வார்னே ட்வீட்டியது “Looking forward to the game between india and England today should be a cracker.. My prediction a tie!”. ஷேன் வார்னே சொன்ன அளவிற்கு நூறு சதவிகிதம் துல்லியமாக முடிவு தெரியாமல் போனாலும் இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு இப்படியொரு சவாலைத் தருமென்று யாரும் கணித்திருக்க மாட்டார்கள். இந்திய அணி பவுலிங்கில் ஜிம்பாப்வேவைவிட மோசமான நிலையிலிருக்கிறது. ஜிம்பாப்வே கூட உலகக்கோப்பையில் இதுவரையிலும் எதிரணியின் ஒரு விக்கெட்டை எடுக்க 26 ஓவர் எடுத்துக்கொண்டதில்லை.

பலவீனம் தெளிவாக கண் முன் தெரிகிறது. பவுலிங்க்கு சாகீரை மட்டுமே நம்பி இருக்கலாகாது. எவ்வளவு நல்ல பவுலராயிருந்தாலும் அவனாலும் ஒரளவிற்கு மட்டுமே அணியை காப்பாற்ற முடியும். 338 ரன் அடித்தாலும் பவுலிங் மோசமாகயிருந்தால் எதிரணி எளிதாக வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. இன்னும் உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுக்களில் நுழைந்து விட்டால் இந்த பவுலிங்கை நம்பி இந்தியா வெற்றி பெருமென்று கனவு கண்டுகொண்டிருக்க முடியாது. இரண்டே வழி. ஒன்று பவுலிங்கை கொஞ்சம் வலுவானதாக்குவது. அது இனிமேல் நடப்பது கொஞ்சம் கஷ்டம். ஒருவேளை ஆசிஷ் நெஹ்ரா முழு உடல் தகுதியுடன் வந்து ஒழுங்காக பந்து வீசி சாகீருக்கு தகுந்த இணையாக இருந்தால் நடக்கலாம். இரண்டாவது, டாஸ் ஜெயித்தால் பவுலிங்கை தேர்வு செய்து எதிரணி எவ்வளவு அடித்தாலும் நமது பலமான பேட்டிங்கைக் கொண்டு சேஸ் செய்வது. இல்லையென்றால் நாக் அவுட் சுற்றில் ஏதேனும் ஒரு எதிரணி வீரர் 150+ ஸ்கோர் அடித்து இந்தியாவை தோற்கடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

”Do onto others as they would do onto you; only do it first!”னு சொல்வாங்க. தோனிக்கு இவ்விஷயம் இந்நேரம் தெரிந்திருக்கலாம். அல்லது தோனி இந்நேரம் இப்படியும் யோசித்துக் கொண்டிருக்கலாம். எதற்கும் ஷேன் வார்னேவிடம் கோப்பையை இந்தியா வெல்லுமாவென ஆரூடம் கேட்டு வையுங்கள்.
 
எழுதியவர்: கோ.கணேஷ்

Sunday, October 5, 2008

வந்துட்டோம்ல!

"வந்துட்டோம்ல!"... அப்படின்னு நம்ம 'தாதா' அணிக்கு திரும்பியதை பத்தி சொல்லலைங்க. அவர் எப்போ அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார் மீண்டும் திரும்பி வந்தார்னு சொல்றதுக்கு? ஏந்தான் இந்த ஊடகப்பசங்க அவரை போட்டு படுத்துறாங்களோ தெரியல. விட்டா கும்ப்ளே விக்கெட் எடுக்காவிட்டால் கூட தூக்குடா கங்குலியைன்னு சொல்லுவாங்களோ என்னமோ தெரியல. இதெல்லாம் ரொம்ப டூ மச்சா இல்லை? தாதா அணிக்கு மீள்வரவு (டிச - 2006-ன்னு நினைக்கிறேன்) ஆனதிலிருந்து இந்தியாவின் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் அவர்தான் என இங்குள்ள தினசரி புள்ளிவிபரம் கொடுத்திருந்தது. ஆனா அதே தினசரி அந்த செய்தியின் தலைப்பாக வைத்திருந்தது என்ன தெரியுமா? 'கங்குலிக்கு இறுதி வாய்ப்பு'. ஐயோ கொடுமை! இது போல தலைப்பையெல்லாம் கங்குலியும் சரி நாமும் சரி கடந்த கொஞ்ச காலாம பாத்துக்கிட்டுத்தான் வருகிறோம். நமக்கொன்றும் புதிதல்ல.

அதற்காக, கடந்த இரு தொடர்களைப் போலல்லாமல் தாதாவும் சரி அவரோட பங்காளிங்களும் (அதாங்க மூத்த வீரர்கள்) சரி 'வாம்மா மின்னல்!' மாதிரி பிட்சுக்கு வந்துட்டு போகாம, நிலைச்சு நின்னு ஆடனும். குறிப்பா நம்ம டிராவிட். அவரது ஆட்டத்தின் வீழ்ச்சியே நமது அணியின் அண்மைய மோசமான தோல்விகளுக்கும் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டைமைக்கும் காரணம் என்பது எனது எண்ணம். அவரது ஆட்டத்தை சுற்றியே நமது அணியின் பேட்டிங் உள்ளது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

தேர்வு கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் நம்மூர்காரர் வந்ததுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வோம். பத்ரிநாத்தின் தேர்வும் ஸ்ரீகாந்தின் தலைமைப்பதவியும் ஒரு கோ-இன்ஸிடண்ட். அவரது தேர்வில் அரசியல் இல்லையென்றாலும், கிரிக்கெட்டில் அரசியலில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. நாம் பத்து பேர் சேர்ந்து ஒரு அணியோ அல்லது அமைப்போ அமைக்கும் போது, அதில் அரசியல் இருக்கும் போது இவ்வளவு வருமானம் (பி.சி.சி.ஐ-யின் இந்தாண்டு வருமானம் 1000 கோடியாம்) வரும் அமைப்பினுள் அரசியலில்லாமல் இருக்குமா. இதெல்லாம் சகஜமப்பா!

இதற்கிடையில், ஒருவர் மீன் பிடிக்க சென்றதால் தனது அணியில் இடத்தை இழந்துள்ளார். அதனால் இலாபம் இந்தியாவிற்கே. சைமண்ட்ஸிற்கு இந்திய ரசிகர்கள் நன்றி சொல்லிக்கொள்ளும் விதமாக நிறைய தூண்டிலும் வலையும் அனுப்பி வைச்சு, இந்திய தொடருக்கு முன் மீன் பிடிக்க போகச்சொல்லலாம். நிச்சயம் ஆஸி-க்கு அவரது இழப்பின் வலி தெரியவரும். இருந்தாலும், இது போல கடுமையான தண்டனைகளை மற்ற அணி நிர்வாகங்களும் கடைபிடிக்கலாம் என்பது எனதெண்ணம்.

இம்முறை ஆஸி அணி சற்று வலு குறைந்ததாகவே காணப்படுகிறது. இந்தியாவிற்க்கு இம்முறை வெல்ல வாய்ப்பு கூடுதலே.

இன்னமும், 'வந்துட்டோம்ல' தலைப்புக் காரணம் சொல்லல இல்ல... அதாவாது நான் கடைசியாய் பதிவிட்டது கடந்த இந்தோ-ஆஸி தொடர் முடிவில். அதன் பிறகு இப்பத்தான் முதல் பதிவு. நம்ம மூத்த மிடில்-ஆர்டர் வீரர்களின் ஃபார்ம் மாதிரி கொஞ்ச நீண்ண்ண்ட ஓய்வெடுத்து விட்டேன். நான் திரும்பி வந்தது போல அவர்களது ஃபார்மும் மீண்டு(ம்) வரட்டும்.

இனியாவது அடிக்கடி இங்கு சந்திக்கலாம்.... :)

Monday, January 21, 2008

அணித்தேர்வு சரியா?

அடப்பாவிங்களா!! கொஞ்ச நாளைக்கு கூட இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியா இருக்க விடமாட்டேங்குறாங்க இந்த தேர்வாளர்கள். மீண்டும் தொடங்கி விட்டது தேர்வாளர்களின் கூத்து.

Squad: Mahendra Singh Dhoni (capt & wk), Sachin Tendulkar, Yuvraj Singh, Virender Sehwag, Dinesh Karthik, Robin Uthappa, Gautam Gambhir, Suresh Raina, Rohit Sharma, Irfan Pathan, Praveen Kumar, RP Singh, Ishant Sharma, Sreesanth, Harbhajan Singh, Piyush Chawla

இதுதான் வரும் உலகக் கோப்பையை மனதில் கொண்டு தேர்வாளர்கள் அறிவித்திருக்கும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்.

முதலில், எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. கிரிக்கெட்டில் உலகக் கோப்பை மட்டுந்தான் Ultimate Acheivement-ஆ? அதை மட்டும் மனதில் வைத்து செயல்படுவது ஏன்?

கங்குலிக்கு பதிலாக இவர்கள் கொண்டு வந்திருக்கும் இந்த இளம் வீரர்கள் (Robin Uthappa, Gautam Gambhir, Suresh Raina, Rohit Sharma) - கங்குலி தனது இறுதி கால கட்டத்தில் தற்போது ஆடும் ஆட்டத்திற்கு சற்றேனும் ஈடு கொடுக்க முடியுமா? சிறந்த ஃபீல்டர்கள் என்பதற்காக இவர்கள் கங்குலிக்கு மேலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், யார் ஓட்டங்களை எடுப்பது?

நிச்சயம் இளம்வீரர்கள் அணியில் இடம் பெற வேண்டும்தான். அதற்காக, ஒரு மூத்த அனுபவமுள்ள வீரர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த கட்டத்தில் உள்ளபோது அவரை நீக்குவது எந்த வகையில் நியாயமாகும்? அது மட்டுமில்லாமல் இளையவர்களிடம் அணி ஒப்படைக்கும் விதம் இவ்விதம் அமைவது பாதகமாகவே அமையும். ஒட்டு மொத்தமாக இளைஞர்கள் மட்டும் ஆடும் போது, குறிப்பாக ஒருநாள் ஆட்டங்களில் புலிகளாக இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிராக, இவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

சரி, அதையும் விடுத்து இளையவர்களை தேர்ந்தெடுத்ததிலும் தேர்வாளர்கள் முறையாக நடந்து கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை.

கடந்த ஆண்டு ஆட்டங்களை பார்ப்போம்.

உத்தப்பா:- ஒருநாள் போட்டிகள் - 20 போட்டிகள், 529 ஓட்டங்கள், 29.94 ஆவரேஜ்... ரஞ்சியில் 5 போட்டிகள், 188 ஓட்டங்கள், 26.85 ஆவரேஜ்.

தினேஷ் கார்த்திக்:- ஒருநாள் போட்டிகள் - 16, 303, 26.09

ரோஹித் ஷர்மா:- ரஞ்சி - 5, 191, 27.28

இவர்கள் மூவரும் எந்த வகையில் கைஃப்-ஐ விட சிறந்தவர்கள்?

கைஃப் - 8, 687, 57.25.

திறம்பட உ.பி-யை வழிநடத்தி இரண்டாவது முறையாக ரஞ்சி இறுதி போட்டி வரை கொண்டு வந்தார். இவரல்லவா மேற்கண்ட மூவர்களுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவரை தொடர்ந்து புறக்கணித்து வருவது ஏன்? கங்குலி எப்படி பந்தாடப்படுகிறாரோ அதேதான் இவருக்கும் என்பது எனது கருத்து. கங்குலிக்காவது உள்ளும் புறமும் சிறிதளவாவது ஆதரவு உள்ளது. கைஃபுக்காக யார் தெருவில் இறங்கி போராடப்போகிறார்கள்.

இதிலிருந்த தெரிவது என்னவென்றால், திறமை, வயது இன்னபிற சல்லிகள் எல்லாம் இவர்கள்(தேர்வாளர்கள்) கட்டும் சப்பை கட்டே அன்றி வேறில்லை. ஒரு மீட்டர் ஏறினால் ஒரு மைல் சறுக்குகிறது. இது தான் இந்திய கிரிக்கெட்.

Wednesday, August 1, 2007

அட! பரவாயில்லையே!!

முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் நமது கைப்புள்ளைகளை கடுமையாக விமர்சித்து விட்டேன். அதற்கு அவர்கள் பதிலடி கொடுத்து விட்டார்கள். எப்படியோ இது போல வென்று அவர்களும் மகிழ்ந்து நம்மையும் மகிழ்வித்தால் சரிதான். (இப்படித்தான் இடையிடயே ஜெயிச்சு நம்மளயும் உசுப்பேத்தி விடுறாய்ங்க)

இந்த போட்டியின் வெற்றிக்கு காரணங்களாக நான் கருதுவது இரண்டு. முதலில் ஜஹிர் கானின் அற்புதமான பந்து வீச்சு. இரண்டாவது நான் கடந்த இடுகையில் விமர்சித்த அதே துவக்க இணை.

மேலும், இங்கிலாந்து அணியின் பலவீனமான பந்து வீச்சை நமது அணியின் முதல் ஆறு மட்டையாளர்களும் நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். இதை முதல் போட்டியிலேயே செய்திருக்க வேண்டும். சரி, இப்போவாவது புத்தி வந்ததே. இங்கிலாந்தை சொற்ப ஓட்டங்களுக்கு சுருட்டிய பின், நமது துவக்க ஆட்டக்காரர்கள் அமைத்து கொடுத்த அடித்தளத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டனர் பின்னால் வந்தவர்கள்.



இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகவும் அற்புதமாக பந்து வீசினார் ஜஹிர் கான். அவருக்கு கும்ப்ளே மட்டுமே சிறிதளவாவது துனை புரிந்தார். ஸ்ரீசாந்த் பந்து வீச்சும், தேவயில்லாத முறைப்புகளும் சின்னப்புள்ளத்தனமாகவே உள்ளது. காலம் அவரை பக்குவப்படுத்தட்டும். மீதமுள்ள டெஸ்ட்டை வென்றோ டிரா செய்தோ இத்தொடரை வென்றால் 20+ வருடங்களுக்கு பிறகு இந்தியா இங்கிலாந்தில் தொடர் வென்ற பெருமை(??)யை பெரும்.

இந்த தொடரிலும் ஸ்லெட்ஜிங் சூடு பிடித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது கார்த்திக் பேட்டிங் செய்த போது இங்கிலாந்து விக்கெட் கீப்பரிடமிருந்து கடும் சுடும் சொற்கள் வந்து விழுந்தன. அதை மறுமுனையிலிருந்து பார்த்துகொண்டிருந்த "தாதா" (கங்குலி) இங்கிலாந்து அணித்தலைவர் மைக்கேல் வானிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். நம்ம தாதா- தாதா தான். :) பின்னர் இரண்டாவது டெஸ்ட்டில் ஸ்ரீசாந்த் தேவையில்லாமல் முறைத்து பதில் முறைத்தல்களை வாங்கி கட்டிக்கொண்டார். அதற்குப் பின்னர் நடந்ததுதான் சுவராஸ்யம். ஜஹிர் கான் பேட்டிங் செய்ய வந்த போது ஆடுகளத்தில் ஒரு ஜெல்லி பீன்ஸ் (Jelly Beans) கிடந்துள்ளது. அதை ஆடுகளத்திலிருந்து நீக்கியுள்ளார் ஜஹிர் கான். அடுத்த பந்த சந்திக்கும் முன்பு மீண்டும் ஒரு ஜெல்லி பீன்ஸ் ஆடுகளத்திற்கு புதிதாக கிடந்துள்ளது. அதைப் பார்த்த ஜஹிர் கான் கடுப்பானார். நீங்களே பாருங்கள் மீதியை.



அந்த பிரச்சனைக்குரிய ஜெல்லி பீன்ஸ் இதுதான்:


இந்த நிகழ்ச்சி குறித்து ஜஹிர் கான்:

"When I was batting, there were some jelly beans on the crease, so I chucked one off the wicket," he said. "When I played the next ball there were again some jelly beans on the wicket. So obviously there was someone throwing it on the wicket, which I didn't like. So I just went up to them and said, 'Guys, what's this all about. I'm here to play cricket.' And they came at me. And I just sort of felt upset. And I just reacted."

Surprisingly Zaheer didn't go after Alastair Cook, fielding at short leg, but directed his ire at Pietersen at gully. "I didn't know where exactly it was coming from," he said. "Maybe I picked the wrong one [Pietersen] but I was just not bothered at that time. I just felt it was insulting. It was definitely from a fielder because if it was placed unknowingly, it shouldn't have come there again when I removed it."

Paul Collingwood preferred to get cheeky when asked about the incident - "I think he prefers the blue ones to the pink ones" - but Zaheer didn't think there was a comical side. It's been a series packed with such on-field action but Zaheer felt England were going one step too far. "We're here to play cricket, that's what we're looking forward to do whole series. I don't really want to go in detail. I'm here to play cricket and enjoy my cricket."



பழிவாங்கும் விதமாக பீட்டர்சன்னுக்கு ஸ்ரீசாந்த்:

Wednesday, July 25, 2007

தொடரும் கைப்புள்ளைகளின் வீரம்...

"என்னத்த சொல்றது?" அப்படின்னு நினைச்சு விடவும் முடியல. அதாங்க நம்ம கைப்புள்ளைகள் வாங்கி கட்டுவதை இன்று நிறுத்துவார்கள் நாளை நிறுத்துவார்கள் என்று நானும் பெருங்கனவுதான் காணுறேன். நிறுத்துவேனா என்கிறார்கள்.

வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் தடுமாறி இந்தியா தோற்பது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவை விட்டு இவர்கள் விமானம் புறப்படும் போதே மானம் ரோசம் தன்னம்பிக்கை எல்லாத்தையும் இந்தியாவிலேயே பத்திரமாக வைத்துவிட்டு செல்வார்கள். இது இன்றல்ல நேற்றல்ல காலம் காலமாக நடந்து வருவதுதான். அதிலும் இங்கிலாந்தில் நடக்கும் போட்டிகளென்றால் இன்னும் மோசம். இதுவரை இங்கிலாந்தில் நடந்துள்ள 46 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுந்தான் வென்றுள்ளோம். 23 தோல்விகள் மற்றும் 19 டிரா. இப்படிப்பட்ட ஒப்பற்ற வரலாற்றை கொண்டுள்ள நமது கைப்புள்ளகளிடம் கூடுதல் எதிர்பார்ப்பு கூடாததுதான்.

இருந்தாலும், இப்போதுள்ள இங்கிலாந்து அணியில் பந்துவீச்சு மிக பலவீனமான நிலையில் உள்ளது. வேகப்பந்து வேதளங்கள் Harmisson, Flintoff, Jones இல்லை. இறுதி நேரத்தில் காயம் காரணமாக Hoggord-ம் இல்லை. மேலும் சுழற்பந்து வீச்சாளர் Giles-ம் இல்லை. இதை விட வேறென்ன வேண்டும் இவர்களுக்கு? தற்போதுள்ள Anderson, Sidebottom (சூப்பர் பேரு!!), Tremlett மற்றும் Panesar இவர்களில் Anderson மட்டுமே சிறிது அனுபவமுள்ளவர். இவர்களை சமாளிக்க இந்த இந்திய அணியால் முடியும் என்றே நம்பியிருந்தேன்.

முதல் போட்டி கிரிக்கெட்டின் புனித தலத்தில். லார்ட்ஸில். இந்திய மும்மூர்த்திகளுக்கும் லட்சுமனன் மற்றும் கும்ப்ளேவிற்கு இதுவே இறுதி போட்டியாக அமையும் இந்த மைதானத்தில் என்றொரு சூழல். இதுவரை சச்சின் இங்கு ஒரு சதம் கூட அடித்ததில்லை (சுயநலத்திற்கு கூட இல்லை). அது அவருக்கு பெரும் ஏமாற்றமகாக் கூட இருந்திருக்க கூடும். எப்படியாவது இந்த மாதிரி பந்து வீச்சை சமாளித்து சதமடிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவரும் நமது அணியும் வழக்கம்போல் தங்கள் பாரம்பரியத்தை காப்பாற்றிவிட்டனர். முன்னனி வீரர்கள் அனைவரும் தடுமாறினார்கள். கேவலம்! பந்து வீச்சு முதல் நாள் ஆட்ட முதல்-பகுதி (Session) தவிர நன்றாகவே பந்து வீசினார்கள். இருந்தாலும் மட்டையாளர்கள் சொதப்பியதால் இந்த போட்டியில் எந்தவொரு சூழலிலும் இந்தியாவின் கை ஓங்கியிருக்கவில்லை.

பாவம் இங்கிலாந்து! எளிதாக பெற வேண்டிய இந்த வெற்றியை இடையிடையே மழையால் இழக்கப்பட்ட நேரங்களுடன் சேர்த்து இறுதி நேரத்திலும் வெளிச்சமின்மை காரணத்தால் இந்த போட்டியை டிரா என்று, கொஞ்சம் கூட அதுக்கு தகுதியில்லாத இந்தியாவுடன் பங்கு போட நேர்ந்தது. 'இந்த போட்டி டிரா ஆனதே தங்களுக்கு வெற்றியை போலுள்ளது' என்று டிராவிட் முதல் எல்லாரும் பெருமிதம் வேறு. வெளங்கும்!

சச்சினின் பொறுப்பற்ற ஆட்டத்தை கபில்தேவ் காட்டமாக தாக்கியுள்ளார்.
"Every time people hope big things from Sachin Tendulkar but often it is only disappointment that we are left with," Kapil told Aaj Tak, a Hindi news channel. "He is thought to be the backbone of the Indian team but many times he has not stood up to the occasion."

"Figures say that Sachin has not been able to perform under pressure," he said. "Sachin has big records to his name but until he wins matches for India in these conditions, people will raise fingers at him."


சச்சின் மட்டுமில்லை, மும்மூர்த்திகள் மூவரும் பொறுப்புணர்ந்து ஆடினாலே போதும். வெளிநாடு ஆடுகளங்களில் இந்தியா வெல்ல வேண்டுமெனில் டிராவிட்டின் பங்கு மிக இன்றியமையாதது. மேலும், எனக்கென்னவோ தற்போதுள்ள துவக்க ஆட்ட இணை சரியானதகவே தோன்றவில்லை. என்ன செய்வது? இந்திய கிரிக்கெட்டை அரசியலும், வணிகமும் மாறி மாறி ஆளும் வரை கிடைத்த (தேர்ந்தெடுக்கப்பட்ட அணியை) வைத்து நாமும் திருப்தி அடைந்துகொள்ள வேண்டிய நிலை. வென்றால் மகிழவும் தோற்றால் கிழிக்கவும் செய்ய வேண்டியது தான். எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் இந்த கைப்புள்ளைகள்!

Sunday, July 1, 2007

பூரிக்க வைத்த சச்சினின் ஆட்டம்

கேள்விக்குரிய தேர்வுமுறை, அணிக்குள் மலிந்து கிடக்கும் குடுமிப்பிடி சண்டைகள், மீண்டும் சுட்டிக்காட்டப்படும் தவறுகள் திருத்தப்படாமை இவையாவும் சேர்ந்து என்னை (இந்திய) கிரிக்கெட்டிலிருந்து தூரப்படுத்தியிருந்தது. கிரிக்கெட் பார்ப்பதும் அதைப்பற்றி நண்பர்கள் வட்டத்தில் கதைப்பதும் குறைந்திருந்தது. செய்திகளில் படிப்பதோடு சரி. ஒரு வித வெறுப்பே இதற்கு காரணம்.

இப்படியிருக்க, சென்ற வெள்ளிக்கிழமை மதிய உணவாக பிரியாணி மூக்குபிடிக்க சாப்பிட்டுவிட்டு கண் அயர்வதற்கு முன் ரிமோட்டை எடுத்து ஒரு ரவுண்ட் வரலானேன். அப்போது சன் நியூஸ் சேனலில் கிரிக்கெட் ஆடுகளத்தை காண்பித்து கொண்டு அருண்லாலும் கல்லினனும் பேசிக்கொண்டிருப்பதை காண்பித்துக் கொண்டிருந்தார்கள். 'Live' என்று வேறு கீழே. என்ன கொடுமை இது. சன் டிவியில் நேரடி கிரிக்கெட்டா. இந்திய கிரிக்கெட் நன்றாகத்தான் வளர்ந்துள்ளது(?) என நினைத்துக் கொண்டு பார்க்க தொடங்கினேன். இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்தது. மற்ற சேனல்களிலும் பார்க்கும்படியான் நிகழ்ச்சிகள் எதுவும் ஓடாததால் தொடர்ந்து பார்க்க முடிவெடுத்தேன்.

ஆட்டம் தொடங்கியபோது தான் தெரிந்தது தமிழில் வர்ணனை என்று. அது அடுத்த கொடுமை. இனிமையான தமிழ் வர்ணனைகள் போய் கொடுமையான முறையில் வர்ணித்துக்கொண்டிருந்தார்கள். யாரென்றே தெரியவில்லை. அப்துல் ஜப்பார் அய்யா, அன்னிக்கு ஐ மிஸ்டு யூ லாட். உடனே அடித்து பிடித்து டி.டி-யில் நேரடி ஒலி/ஒளிபரப்பு உண்டா என ரிமோட்டை விரட்டினேன். அப்பாடா! அங்கும் இருந்தது. நல்லவேளை பிழைத்தேன்.

சரி ஆட்டம் தொடங்கியது, இந்தியா முதலில் நன்றாகவே பந்து வீசினார்கள். இருந்தும் தெ.ஆப்பிரிக்கா ஒருவாறு சமாளித்து 220+ எடுத்தார்கள். ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது.

சரி நம்ம பசங்க எப்படி ஆடுகிறார்கள் என்று பார்க்க ஆர்வம் பிறந்தது. சச்சினும், கங்குலியும் களமிறங்கினார்கள். அப்புறம்தான் ஆரம்பித்தது அந்த இனிய அனுபவம். காண கோடிக்கண் வேண்டும். சச்சின் அன்று அற்புதமாக ஆடினார். எனக்கு தெரிய கடந்த 4/5 ஆண்டுகளில் சச்சின் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இல்லை. சில தருணங்களில் அவரை ஏன் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்கிறார்கள் என்பதை உணர்த்தினார். ஆண்ட்ரூ நெல் பந்தில் அவர் அடித்த 'ஸ்கொயர் கட்'கள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன. அன்று அவர் அத்தனை நேர்த்தியாக ஆடினார். 'க்ளாஸிக்' ஷாட்ஸ் என்று சொல்வார்களே அது அனைத்தையும் அவர் ஆடினார். ஹூக், அந்த ஃபேவரிட் கவர் ட்ரைவ் எல்லாமே அத்தனையும் அவர் நினைத்தது போல். ஆக்ரோஷமான ஆட்டமெல்லாம் இல்லை அது. நிதானமான, ஆனால் தெளிவான ஆட்டம். சச்சின் ரசிகனல்லாத எனக்கே அன்று பூரிப்பு தந்த ஆட்டம் அது. 106 பந்துகளில் 93 ஓட்டங்கள் (13 நான்குகள் 2 ஆறுகள்). நன்றி சச்சின். ஆனால், மீண்டும் இது போல ஆட்டத்தை தர 4/5 ஆண்டுகள் எடுத்து விடாதீர்கள். முக்கியமாக சேசிங்கில் சச்சின் இப்படி ஆடியது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சூப்பர் சச்சின்!

மறுமுனையில் எங்கள் 'தாதா' திணறி திணறி ஆடிக்கொண்டிருந்தார். சச்சினும் கங்குலியும் ஒருவொருக்கொருவர் புரிந்து கொண்டு ஆடினார்கள். பழைய பகைகள் மறைந்தது போல தோன்றியது.



அதில் வென்றார்கள் என்பதற்காக பூசல்களும் குழப்பங்களும் தீர்ந்துவிட்டது என்று பொருளில்லை என எல்லாருக்கும் தெரியும். இனி இதுபோல நேரம் கிடைக்கும்போது போட்டி காண நேரிட்டால் சச்சினிடமிருந்து இப்படிப்பட்ட ஆட்டம் காண கிடைத்தால் மகிழ்வேன்.

Monday, June 11, 2007

பயிற்சியாளர் தேர்வும் பல காட்சிகளும்

கிரேக் சாப்பல் இந்திய அணியிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து தொடங்கிய பயிற்சியாளருக்கான் தேடுதல் வேட்டை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இது ஒரு வேட்டையாக இல்லாமல் ஒரு ஓட்டையை அதிகவிலை கொடுத்து வாங்கிய வெளிநாட்டு மூலதனம் கொண்டு அடைத்திருப்பதாகவே உணர்கிறேன்.

வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமித்தல் நம்மூர் பயிற்சியாளர்களை நியமிப்பதை விட நல்லது என்றுதான் நினைத்திருந்தேன். தேவையில்லாத மண்டல பாகுபாடு இருக்காது. புதிய ஆட்ட நுனுக்கங்களை அறிமுகப்படுத்துவார்கள் என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். ஆனால், சாப்பல் விளையாடிய சில அழுகுனி ஆட்டங்கள் எரிச்சலைத்தான் தந்தது. அதற்காக எல்லா வெளிநாட்டு பயிற்சியாளர்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று எண்ணுவது தவறுதான். ஏன், அதற்கு முந்தைய ஜான் ரைட் நன்றாகத்தானே நடந்து கொண்டார். அணித்தலைவருடனும், கிரிக்கெட் வாரியத்துடனும் வளைந்து கொடுத்து நடந்து கொண்டார். அதனால், அப்போதய அணியில் விரிசல்களும், சலசலப்புகளும் வெகு குறைவாகவே இருந்தன. அணியின் வளர்ச்சியும் நிறைவாகவே இருந்தது. ஆனால், சாப்பலின் காலத்தில் அவ்வாறு நடக்கவே இல்லை. இதற்கு அவர் மட்டும் காரணமில்லை என்றாலும் அவரின் ஒரு சில அனுகுமுறைகள் அணியில் பெரிய விரிசலை உண்டாக்கியது என்னவோ உண்மைதானே? அதனால், வெளிநாடோ உள்நாடோ ஒரு தனிப்பட்டவரின் குணத்தை பொறுத்தே அவரின் பயிற்சிமுறை அமையும் என்பது எனது தற்போதைய எண்ணம்.

நமது கிரிக்கெட் வாரியம் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. உலகக் கோப்பையின் போது ஆட்டங்கள் (வங்கதேசத்திற்கான) முடிவடையாத நிலையில் டேவ் வாட்மோர் தமக்கு இந்திய அணிக்கு பயிற்சியளிக்க ஆர்வமுள்ளதாக வெளிப்படையாக கூறினார். பிறகு டாம் மூடியின் பெயரும் அடிபட்டது. ஆனால், டாம் மூடி பிறகு அதிலிருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. பிறகு வாட்மோர் பெயர் மட்டும் ஓங்கி ஒலித்தது. இந்திய அணி வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது கூட அங்கு சென்றிருந்த சரத் பவார் வாட்மோரை தனியாக சந்தித்து இது பற்றி பேசியிருக்கிறார். எனவே அவர்தான் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என உறுதியாக கூறப்பட்டது.

வாட்மோரின் திறமையில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. எப்படியோ இருந்த இலங்கை அணியை இன்று இந்த நிலைமைக்கு கொண்டுவந்ததில் முக்கியமானவர் அவர் என்றால் மிகையில்லை. பிறகு வங்கதேச அணியின் வளர்ச்சியிலும் அவரது பங்கை கூறலாம். ஆனால், எனக்கு வருவது ஒரேயொரு சந்தேகமே. வங்கதேச அணியினுடனான ஒப்பந்தம் அவருக்கு முடிவடையாத நிலையில் இந்தியாவிற்கு பயிற்சியளிக்க விருப்பம் அளித்ததன் நோக்கம்? இந்திய அணிக்கு தன்னால் முடிந்த வரை தொண்டாற்ற வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணமா? இத்தனை சிக்கலான(கிரிக்கெட் வாரிய அரசியல், ஒத்துழைக்காத ஊடகத் தொல்லை, பொது மக்களின் அளவுக்கு மிஞ்சிய எதிர்ப்பார்ப்பு) ஒரு கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிக்க அவரக்கு ஆர்வத்தை தூண்டியது எது? என்னுடைய கண்ணோட்டத்தில் அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்க இருக்கும் பெருந்தொகையின்(சம்பளம்) மீதுதான் நாட்டம் இருந்திருக்க வேண்டும். நல்லவேளை தவறான காரணத்தாலோ சரியான காரணத்தாலோ அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படவில்லை.

பின்னர், திடீரென்று இரண்டு பெயர்கள் அடிபட்டன. ஒன்று முன்னாள் தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ஃபோர்ட், மற்றொன்று அர்ஜூனா ரனதுங்க. திடிரென்று ரனதுங்க பெயரும் மங்கிப் போய், புதிய பெயர் அடிபட்டது. அது முன்னாள் இங்கிலாந்து சுழல் பந்து வீச்சாளர் ஜான் எம்புரி. இந்த பெயரை பரிந்துரைத்தவர் சுனில் கவாஸ்கர். இதே கவாஸ்கர் ஒரு காலத்தில் தனது கட்டுரையில், கபில் அணித்தலைவராக இருந்த நேரம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஜான் எம்புரி ஆடுகளத்தை சேதப்படுத்தி கையும் களவுமாக பிடிபட்டார் என எழுதினாராம். இப்போது அவர் கள்வன் என்று கூறியவரை அவரே பரிந்துரைக்கிறார். முன்னர் கூறிய கிரஹாம் ஃபோர்ட் ராகுல் டிராவிட்டின் பரிந்துரையாம். டிராவிட் ஆடிய கவுண்டி அணியின் (கெண்ட்) பயிற்சியாளாரக இருக்கிறார், டிராவிட் அவருடைய பயிற்சியில் அங்கு ஆடியிருக்கிறார். அதனால் நல்ல புரிந்து கொள்ளல் இருக்கும் என நினைத்து டிராவிட் நினைத்து தனது எண்ணத்தையும் நிறைவேற்றியுள்ளார். கிரஹாம் ஃபோர்டும் நியமிக்கப்பட்டுவிட்டார்.

அதாவது, ஒரு நிறுவனத்தில் வேலைக்கு ஆள் தேவைப்பட்டால், விண்ணப்பிப்பவர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைத்து தேர்வு செய்வதுதான் வழக்கம். ஆனால், இங்கு நடைபெற்றதோ ஒரு கேலிக் கூத்தாகவே இருக்கிறது. சிலர் தத்தமது தேவைகளுக்கு வளைந்து கொடுப்பார் என தெரியும் ஆட்களை மட்டுமே பரிந்துரைக்கிறார்கள். திடீர் திடீரென ஆட்கள் மாறுகிறார்கள். காட்சிகளும் மாறுகிறது.

என்னவோ போங்க, இதில் இயங்கிய யாருக்கும் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியிலோ வெற்றியிலோ அக்கரை ஒரு துளியும் இல்லை என்பது மட்டும் மீண்டும் தெளிவாகிறது. தங்களுக்குள் நடக்கும் ஈகோ போர் மட்டுமே முக்கியம் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

Monday, May 28, 2007

அதிசயம்! ஆனால் உண்மை!!

ஹாய்... ஹாய்... ஹாய்... எல்லாரையும் பவுன்ஸர்ல பாத்து ரொம்ப நாளாச்சுல்ல? என்ன செய்ய.. நமது அணியின் செயற்பாடுகளும், அணித் தேர்வுகளும் சரியாகும் வரை (இந்த ஜென்மத்துல நடக்குமானு தெரியல) இவனுங்கள கண்டுக்ககூடாதுன்னு ஒதுங்கியாச்சு.

இதுக்கிடையில், யாரும் எதிர்பாராதவாறு மூக்கின் மேல் விரல் வைக்கும்படி அதிசயமா பங்காளிகளை பிரிச்சு மேஞ்சுட்டு வந்துருக்காங்க. வங்கதேசத்தை இந்தியா வெல்லுமா? என்ற பெரிய கேள்விக்குறியுடன் கிளம்பி போனவர்கள் ஒரு போட்டியில் கூட தோற்காமல் திரும்பி வந்தால் வியப்பாயிராதா?

சே! என்ன பொழப்பு இது! மானங்கெட்ட பொழப்பு! ஒரு இளிச்சவாயன் கிடைச்சா மட்டும் ஒற்றுமையா சேர்ந்து கும்முறது!! இப்போ மட்டும் திசைக்கு ஒரு பக்கம் வடம் பிடிச்ச எல்லா சீனியர்களும் ஒன்னு சேர்ந்து கும்முறாய்ங்க. நம்ம மக்களும் ஆகா! என்ன பிரமாதமா ஆடுறாய்ங்க நம்ம பசங்கன்னு இவனுங்களுக்கு உள்ள நடந்த குடுமிபிடி ஆட்டம், கேவல தோல்விகள், தொடரும் அவலத்தனமான அணித்தேர்வு இதையெல்லாம் மறந்து கைதட்டி ரசிச்சு, இவனுங்களுக்கு காவடி தூக்க கிளம்பியாச்சு. என்னோட அலுவலகத்துல ரொம்ப சிலாகித்து பேசிக்கிறாய்ங்க சச்சின் மேன் ஆஃப் தெ சீரியஸ்னு. கொடுமைடா!! சச்சின் இந்த செஞ்சுரி அடிச்சதை பார்த்து இணையமே சிரிச்சுச்சு.

இதுல இன்னொரு கொடுமை என்னன்னா, அணியிலிருந்து தூக்கப்பட்ட கங்குலியும் சச்சினும் கலக்கிட்டாங்களாம். அதுனால இங்கிலாந்தும் செல்லும் அணியில் இருவரும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் இடம் பெறுவார்களாம்! கொடுமைடா!!

இவனுங்க அணிக்குள்ள அடிச்ச கூத்தெல்லாம் தேர்வாளர்கள் வாயால் வெளிவந்ததெல்லாம் இந்திய ரசிக கண்மணிகளுக்கு இந்நேரம் மறந்திருக்கும். மீண்டும் தங்களது ஹீரோக்களுக்கு பூஜிக்க தொடங்கியிருப்பார்கள். பங்களாதேஷை நாமளே பெரிய ஆளாக்கி, இப்போ பெரிய டீமை ஜெயிச்ச மாதிரி ஒரு தோற்றத்தை உண்டாக்குறதுல நம்ம ஆட்கள் கில்லாடிங்க.

இருக்கட்டும் இருக்கட்டும். இங்கிலாந்துக்கு போங்க மக்கா தெரியும்!!