Sunday, April 3, 2011

தோனி, நீ தெய்வ மச்சானடா!!!



* நேற்றைய ஆட்டத்தை பற்றிய விமர்சனங்கள் எல்லாம் ஒன்றும் சொல்லும் நிலையில் இல்லை மனம். மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கிறது.


* நான் கிரிக்கெட் பார்க்க துவங்கியது 87 உ.கோப்பை முதல்.... அன்று அரை-இறுதியில் அசாருத்தீன் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தவுடன் இந்தியா கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது முதல்... இந்த உ.கோப்பைக்கான எனது ஏக்கமும் தொடங்குகியது. ஒவ்வொரு உ.கோப்பைக்கும் அணியின் பலம் பலவீனம் பற்றியெல்லாம் கவலையில்லாமல் குருட்டுத்தனமாக நம்பினேன்.


* 96 உ. கோப்பை அரை இறுதி கல்லுரி விடுதியில் 200 நண்பர்களுடன் தாரை தப்பட்டை சூழ ஆட்டத்தை காண ஆரம்பித்த நான்... இந்தியாவின் 5 விக்கெட விழுந்தவுடன் தோல்வியை தாங்க இயலாமலும், ஏமாற்றத்தாலும் வீரர்களின் மேல் ஒரு வெறியான கோபத்தில் அறைக்குச் சென்று அங்கு ஒட்டியிருந்த சச்சின், அசாருத்தீன் மற்றும் மைக் டைசன்(பாவமரியாதவன்) கிழித்து நொறுக்கி .. ஒரு போர்வைக்குள் அழுகையுடன் முடங்கி போனேன். கல்கத்தாவே கலவரமானது, காம்ப்ளி அழுதது எதுவுமே நான் பார்க்கவில்லை.


* இப்படி ஒவ்வொரு முறையும் வாய்ப்பு நழுவும் போதும் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.


* இப்படி எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. வென்ற போது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவில்லை எனலாம். என்னுடைய கல்லூரி விடுதி நாட்களும் நண்பர்களும் கண் முன் வந்து போயினர். அவர்களுடன் இந்த கணத்தை கொண்டாட முடியவில்லையே.


* போட்டி முடிந்து வீரர்கள் பலர் ஆனந்த கண்ணீர் வடித்தாலும் மனம் நெகிழ்ததே தவிர கண்ணீர் வரவில்லை. ஆனால், காலையில் காரில் அலுவலகம் வரும்போது 'சிறப்பு செய்தி தொகுப்பு (இன்றைக்கு நேற்றைய வெற்றி குறித்து மலையாள பண்பலையில் )' கேட்ட போது உடல் சிலிர்த்து கண்களில் கண்ணீரே வந்து விட்டது. என்னையும் அறியாமல் ஒரு வெறியில் "yessssssssss" என்று கீரிட்டு கத்தியே விட்டேன்.


* நான் ஏற்கனவே இங்கு சொன்னது போல யுவராஜ் ஜொலிக்கும் தொடர்கள் எப்போதும்(பெரும்பாலும்) இந்தியாவுக்கு சாதகமாகவே முடியும். அதுபோலவே உ.கொப்பையிலும் நடந்து விட்டது. சச்சின் மற்றும் அனைத்து வீரர்களும் (யாரப்பா அது ஸ்ரீசாந்துமான்னு கேக்குறது?) பங்களிப்பு செய்திருந்தாலும்.... தோனி, நீ தெய்வ மச்சானடா!!!

6 comments:

குசும்பன் said...

நேற்று கோலி சச்சினை பற்றி சொன்னதும் கண் கலங்கி விட்டது!

மகிழ்ச்சி மகிழ்ச்சி இதை தவிர நேற்று வேறு எதுவும் தோனவில்லை...

manjoorraja said...

1983ல் உலக கோப்பை இறுதியாட்டத்தை மைசூரில் ஒரு எலக்டாரனிக் கடைக்கு வெளியே கூட்டமாக கூடி நின்று கருப்பு வெள்ளையில் பார்த்த போது இருந்த அதே மனநிலை. அப்பொழுது அதிக ரன் எடுத்தது ஸ்ரீகாந்த். கோப்பை வென்றதும் வீரர்கள் லார்ட் மைதான பலகணியில் நின்று ஆரவாரம் செய்தனர். அப்போது ஸ்ரீகாந்த் வாயில் சிகரெட்டுடன் இருந்ததையும் காட்டினார்கள்.

அன்று லாயிட் தோல்வியை தாங்க முடியாமல் மைதானத்திலேயே கவிழ்ந்து படுத்துவிட்டார்.


ஆனால் நேற்றைய வெற்றி கொண்டாட்டம் அதை காட்டிலும் சிறப்பாக இருந்தது (இந்தியாவில் நடப்பதனால் இருக்குமோ!)

Asiya Omar said...

எல்லோரையும் போல் நாங்களும் போட்டியை ரசித்து பார்த்தோம்,இந்தியா ஜெயித்தது ஒவ்வொரு இந்தியருக்கும் நிச்சயம் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்?!இந்தியா மட்டுமல்ல, உலகமே கொண்டாடினமாதிரி ஒரு ஃபீலிங்.உலகத்தில் பரந்து கிடக்கும் அனைத்து இந்தியரையும் ஒருமைப்படுத்திய நிகழ்ச்சியல்லவா?

இராஜராஜேஸ்வரி said...

மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...

A Simple Man said...

it was a perfect innings like the construction of a building.
Sehwag started with a dig (savakk uzhi :-)) but sachin expanded it a bit to change it from the graveyard to the foundation for the building) Kohli filled up that foundation ... Gambhir erected the pillars & cemented.. then Dhoni built it and finally yuvaraj finished the roofing. Hats off to INDIA

!? கோவை சாட்டை ?! said...

நன்று,