நேற்றைய மேட்சில் டாஸ் வென்று இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தவுடன் எனக்கு 1996 ஆம் வருடம் கல்கத்தாவில் நடந்த அரை இறுதிப் போட்டிதான் நினைவுக்கு வந்தது. அதில் இந்தியா டாஸ் வென்று அவர்களை பேட் செய்ய அழைத்தது. அந்த உலகக் கோப்பையில் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஜெயசூர்யா மற்றும் கலுவிதரனா இருவரும் முதல் இரண்டு ஓவர்களிலேயே ஆட்டம் இழக்க , இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் அரவிந்த டி சில்வா அற்புதமாக ஆடி 251 ரன்கள் சேர்க்க உதவினார்.
அதன்பின் அந்த ஸ்கோரை சேஸ் பண்ணத் துவங்கிய இந்தியா , சச்சின் ஆடிய வரை சமாளித்தது. அவர் அவுட் ஆகியவுடன் மளமளவென்று விக்கெட்களை இழக்கத்துவங்கி , பின் ரசிகர்களின் கோபத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு ஸ்ரீலங்கா வென்றதாக அறிவிக்கப்பட்டது.
நேற்று அவர்கள் டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்தனர். இந்த உலகக் கோப்பையில் தரங்கா, தில்ஷன் இணை நன்றாகவே ஆடியுள்ளனர். ஆனால் நேற்று அவர்களால் தங்கள் இயல்பான ஆட்டத்தை ஆட இயலவில்லை. விரைவிலேயே இருவரும் அவுட் ஆனார்கள். பின் அப்பொழுது டி சில்வா ஆடியவாறு ஜெயவர்தனே ஆடத் துவங்கினார். கடைசி கட்டத்தில் நமது பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கும் வள்ளல்கள் ஆனார்கள்.
275 என்றக் கடினமான இலக்குடன் ஆடத் துவங்கிய இந்திய அணி, விரைவில் சேவாகையும், சச்சினையும் இழந்தது. அந்த சமயத்தில் பெரும்பாலானோர் மனதில் 1996 ம்,2003 ம் எட்டிப் பார்த்திருக்கும். ஆனால் , கம்பீர் ஒரு முனையில் கம்பீரமாக ஆட, மறுமுனையில் முதலில் கொஹ்லி பின் , கேப்டன் கூல் தோனி இருவரும் கைக் குடுக்க இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 1996 ஆம் வருட அரை இறுதிப் போட்டியில் தோற்றதற்கு சரியான பதிலடி நேற்றுத் தரப்பட்டுள்ளது.
மேட்ச் முழுவதும் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை வீரர்கள் வெற்றிப் பெற்றவுடன் வெளிப்படுத்தினர். எப்பொழுதும் கூலாக இருக்கும் தோனியும் சிறிது உணர்ச்சிவசப்பட்டார். பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணிலும் நேற்று ஒரு துளி கண்ணீராவது வந்திருக்கும் அந்தத் தருணத்தில்.
அன்புடன் எல்கே
2 comments:
இந்தியாவின் வெற்றி எதிர்பார்த்தது தான்,எதிர்பார்ப்பை நிறைவு செய்த இந்திய அணிக்கு பாராட்டுக்கள்.நல்ல பகிர்வு.பதிவுலகில் எங்கும் கொண்டாட்டம்,வெற்றிக்களிப்பு தான்..சந்தோஷமாக இருக்கு.
நான் கால்பந்து ரசிகன். கிரிக்கட் இந்தியா விளையாடினால் மட்டுமே பார்ப்பேன். ஆனாலும் இந்த முறை இந்தியாவின் ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகனாகி விட்டேன்.
Post a Comment