Sunday, March 27, 2011

இலங்கை - இங்கிலாந்து அலசல்

போட்டி நடத்துங்கடான்னா சும்மா டைம் பாஸ் வெளாட்டு விளையாடினாங்க ஸ்ரீலங்கா பசங்க...

ஸ்ரீலங்கா ஆளுங்க கைல கிடைக்கிற கேட்செல்லாம் விடுறதை இப்பத்தான் பாக்குறேன்.

இந்தியா கூட 330 ரன்னை டை பண்ண டீமை இப்படியாயா வெளுப்பீங்க?? இந்தியாவோட பேட்டிங்கும் பல்லிளிக்குது. விக்கெட்டே விழாம இப்புடி ஆடினா, அடுத்த செமி ஃபைனல் என்னாகுமோ நியூஸிலாந்துக்குன்னு பயமா இருக்கு.

நாங்க இம்புட்டு தூரம் வந்ததே பெரிசுன்னு ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் சொல்லி இருக்கார். ஆமா... இங்கிலாந்துலேர்ந்து இந்தியா ரொம்ப தூரம் தான்.

முதல்ல பேட் பண்றவங்க தான் ஜெயிப்பாங்கன்னு சொன்ன பசங்களை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கணும்னு கை பரபரக்குது. என்னவோ போங்கடான்னு போகவும் முடியல..

இன்னும் 63 பால் மீதி இருக்கு. 10 விக்கட் மிச்சம் இருக்கு. அப்படின்னா 350 ரன் கூட அசால்ட்டா ஜெயிப்போம்டான்னு இலங்கை சவால் விடுறா மாதிரி இருக்கு.

இதெல்லாம் பார்த்தா......

நம்ம பசங்க எப்ப என்ன செய்வாங்கன்னே தெரியாது. ப்யூஸ் சாவ்லாவையும் ஆசிஷ் நெஹ்ராவையும் டீம்ல சேர்த்து, அஷ்வினை உக்கார வச்சாலும் நாம் ஆச்சர்யப்பட முடியாது. ஏன்னா நம்ம கேப்டன் தான் விஞ்ஞானியாச்சே...

வெளையாட மாட்டாரு... ஆனா ஆராய்ச்சி பண்ணுவாரு.

எனக்கென்னமோ இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில இந்தியா ஜெயிக்கிறதுக்கு சில பேரை மட்டும் நம்பி இருக்கோமோன்னு தோணுது. டீமா ஆடினா ஜெயிக்கலாம். இங்கிலாந்து இலங்கை மேட்ச் மாதிரி... இல்லன்னா பொட்டியைக் கட்டிட்டு கிளம்பிடலாம்.

ஐபிஎல் வேற வருதுல்ல...

4 comments:

Asiya Omar said...

இலங்கை இங்கிலாந்தை விடுங்க சகோ,ஆனால் நம்ம இந்தியா டீமிற்கு அந்த கடைசி 5 ஓவரில் நம்மை உட்கார விடாமல் டென்சனில் வைத்து ஜெயித்து காட்டும் உத்வேகம் யாருக்கும் வராது,எப்படியாவது வெற்றியை கொண்டு வந்திடுவாங்க.நம்புவோம்,நம்பிக்கை தானே விளையாட்டு.ஜெயிப்போம்.

சிவகுமாரன் said...

ஜெயிப்போம்ல .

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
சிவகுமாரன் said...
This comment has been removed by the author.