அடப்பாவிங்களா!! கொஞ்ச நாளைக்கு கூட இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியா இருக்க விடமாட்டேங்குறாங்க இந்த தேர்வாளர்கள். மீண்டும் தொடங்கி விட்டது தேர்வாளர்களின் கூத்து.
Squad: Mahendra Singh Dhoni (capt & wk), Sachin Tendulkar, Yuvraj Singh, Virender Sehwag, Dinesh Karthik, Robin Uthappa, Gautam Gambhir, Suresh Raina, Rohit Sharma, Irfan Pathan, Praveen Kumar, RP Singh, Ishant Sharma, Sreesanth, Harbhajan Singh, Piyush Chawla
இதுதான் வரும் உலகக் கோப்பையை மனதில் கொண்டு தேர்வாளர்கள் அறிவித்திருக்கும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்.
முதலில், எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. கிரிக்கெட்டில் உலகக் கோப்பை மட்டுந்தான் Ultimate Acheivement-ஆ? அதை மட்டும் மனதில் வைத்து செயல்படுவது ஏன்?
கங்குலிக்கு பதிலாக இவர்கள் கொண்டு வந்திருக்கும் இந்த இளம் வீரர்கள் (Robin Uthappa, Gautam Gambhir, Suresh Raina, Rohit Sharma) - கங்குலி தனது இறுதி கால கட்டத்தில் தற்போது ஆடும் ஆட்டத்திற்கு சற்றேனும் ஈடு கொடுக்க முடியுமா? சிறந்த ஃபீல்டர்கள் என்பதற்காக இவர்கள் கங்குலிக்கு மேலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், யார் ஓட்டங்களை எடுப்பது?
நிச்சயம் இளம்வீரர்கள் அணியில் இடம் பெற வேண்டும்தான். அதற்காக, ஒரு மூத்த அனுபவமுள்ள வீரர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த கட்டத்தில் உள்ளபோது அவரை நீக்குவது எந்த வகையில் நியாயமாகும்? அது மட்டுமில்லாமல் இளையவர்களிடம் அணி ஒப்படைக்கும் விதம் இவ்விதம் அமைவது பாதகமாகவே அமையும். ஒட்டு மொத்தமாக இளைஞர்கள் மட்டும் ஆடும் போது, குறிப்பாக ஒருநாள் ஆட்டங்களில் புலிகளாக இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிராக, இவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.
சரி, அதையும் விடுத்து இளையவர்களை தேர்ந்தெடுத்ததிலும் தேர்வாளர்கள் முறையாக நடந்து கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை.
கடந்த ஆண்டு ஆட்டங்களை பார்ப்போம்.
உத்தப்பா:- ஒருநாள் போட்டிகள் - 20 போட்டிகள், 529 ஓட்டங்கள், 29.94 ஆவரேஜ்... ரஞ்சியில் 5 போட்டிகள், 188 ஓட்டங்கள், 26.85 ஆவரேஜ்.
தினேஷ் கார்த்திக்:- ஒருநாள் போட்டிகள் - 16, 303, 26.09
ரோஹித் ஷர்மா:- ரஞ்சி - 5, 191, 27.28
இவர்கள் மூவரும் எந்த வகையில் கைஃப்-ஐ விட சிறந்தவர்கள்?
கைஃப் - 8, 687, 57.25.
திறம்பட உ.பி-யை வழிநடத்தி இரண்டாவது முறையாக ரஞ்சி இறுதி போட்டி வரை கொண்டு வந்தார். இவரல்லவா மேற்கண்ட மூவர்களுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவரை தொடர்ந்து புறக்கணித்து வருவது ஏன்? கங்குலி எப்படி பந்தாடப்படுகிறாரோ அதேதான் இவருக்கும் என்பது எனது கருத்து. கங்குலிக்காவது உள்ளும் புறமும் சிறிதளவாவது ஆதரவு உள்ளது. கைஃபுக்காக யார் தெருவில் இறங்கி போராடப்போகிறார்கள்.
இதிலிருந்த தெரிவது என்னவென்றால், திறமை, வயது இன்னபிற சல்லிகள் எல்லாம் இவர்கள்(தேர்வாளர்கள்) கட்டும் சப்பை கட்டே அன்றி வேறில்லை. ஒரு மீட்டர் ஏறினால் ஒரு மைல் சறுக்குகிறது. இது தான் இந்திய கிரிக்கெட்.
10 comments:
இன்னொரு கொசுறு செய்தி:
India’s top five ODI batsmen since January 2007 are Sachin Tendulkar (1,425 runs at 47.50), Yuvraj Singh (1,253 at 44.75), Ganguly (1,120 at 43.07), Dhoni (931 at 38.79) and Dravid (823 at 37.40).
//முதலில், எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. கிரிக்கெட்டில் உலகக் கோப்பை மட்டுந்தான் Ultimate Acheivement-ஆ? ///
இப்படிதான் உலககோப்பைக்கு தயார் செய்கிறோம் செய்கிறோம் என்று முதல் ரவுண்டிலேயே வெளியே வந்தோம்.
போன முறை கங்குலியை நீக்கியது சரி, இந்த முறை பெரும் தவறு நல்ல பார்மில் இருக்கும் ஒருவரை நீக்கி விட்டு சேவாக்கை எப்படி உள்ளே கொண்டு வரலாம்! திரும்ப தலைமை கங்குலிக்கு போய்விடும் என்கிற பயமா?
பாவம் கங்குலி என்று சொல்வதை தவிற வேறு என்ன செய்யமுடியும்?
அதுக்காக மேட்ச் பார்க்காமலா இருக்க போகிறோம்!!!
//அதுக்காக மேட்ச் பார்க்காமலா இருக்க போகிறோம்!!!//
அந்த தைரியம்தான் தேர்வாளர்களுக்கு. :)
//இப்படிதான் உலககோப்பைக்கு தயார் செய்கிறோம் செய்கிறோம் என்று முதல் ரவுண்டிலேயே வெளியே வந்தோம்.
//
கரெக்ட். ஆடும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமாக கருத வேண்டும். சும்மா, துவக்கத்தில் இந்த இளைஞர் அணி தோற்கத்தான் செய்யும், பின்னாளில் வலுப்பெறும் என்பதெல்லாம் பேத்தல்.
சரி சரி விடுங்க.. :)
என்ன நடக்குதுனு பார்போம் :)
Fast Bowler,
நல்ல பதிவு, புள்ளி விவரங்களை அள்ளி விட்டு, செலக்க்ஷன் கமிட்டியின் அறிவிலித்தனத்தை, சார்புத் தன்மையை அம்பலப்படுத்தியதற்கு பாராட்டுகள் !!!
பாவம், நம்ம கைஃபுக்கு போராடத் தான் யாருமே இல்ல, நல்லா ஆடியும் கூட :(
Form என்று பார்த்தால், உத்தப்பா out of form தான், பார்க்கலாம் !
எ.அ.பாலா
//மின்னுது மின்னல் said...
சரி சரி விடுங்க.. :)
என்ன நடக்குதுனு பார்போம் :)
//
ஏதோ நீங்க சொன்னதாலே விடுறேன்.
//Form என்று பார்த்தால், உத்தப்பா out of form தான், பார்க்கலாம் !//
அதானே. என்னதான் நடந்தாலும் நாம் என்ன கிரிக்கெட் பாக்குறத நிறுத்திடவா போறோம். :)
ஹாக்கியையும் இப்படித்தான் ஒருவழி பண்ணினார்கள்னு நினைக்கிறேன்.
// ஹாரி said...
ஹாக்கியையும் இப்படித்தான் ஒருவழி பண்ணினார்கள்னு நினைக்கிறேன்.
//
இருக்கலாம் நண்பரே. அந்த கால கட்டத்தில் நானெல்லாம் ட்ரவுசர் கூட போட்டிருக்கவில்லை. பெருசுகளிடம் தான் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
பணமிருக்கும் இடத்தில் இதெல்லாம் சகஜம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
ஜனவரி 26 to 29 வரை நடந்த துலிப் டிராபி போட்டியில் கைப் 160 ரன்கள் அடித்தார். அந்த அணியில் யாரும் அரைச்சதம் கூட அடிக்காத நிலையில். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!
:((
Post a Comment