Saturday, February 26, 2011

புலியின் பாய்ச்சல்

நேற்றைய பங்களாதேஷ் - அயர்லாந்து போட்டியினைப் பார்த்தவர்கள் இதயம் இடம் மாறித் துடித்திருக்கும். போன முறை உலகக் கோப்பையில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற பங்களாதேஷ் முதலில் ஆடி 205 ரன்கள் மாத்திரம் எடுத்ததும் மனம் மிக வருத்தமுற்றது.

மிர்பூர் கூட்டத்தில் கூட சோபிக்காமல் இவர்கள் எதற்கு உலகக் கோப்பை ஆடவேண்டும்? என்ற எண்ணம் உண்டாகி இருந்தது. என் பக்கத்தில் இருந்த பங்களாதேஷ் நண்பனிடம் உதார் விட்டுக்கொண்டிருந்தேன். நீங்க முதல்ல எங்க ஊரு க்ரிக்கெட் டீமை ஜெயிச்சிட்டு அப்புறமா உலகக் கோப்பைல ஆடுங்கடா என்றெல்லாம் வெட்டி பந்தா பேசிக் கொண்டிருந்தேன்.

என்ன மாயம் நடந்தது என்றே யோசிக்க இயலாத பொழுதில் பட்டென்று ஆட்டம் சூடுபிடித்தது. இந்த ஆட்டத்தில் அஷ்ரஃபுல்லின் இரண்டு விக்கட்கள் யாரும் எதிர்பாராதது.

என்ன வேலைக்காக டீமில் சேர்ந்தோமோ அதைச் செய்யாமல் இன்னொரு வேலையில் சிறப்பாக விளையாடிய அஷ்ரஃபுல்லை என்ன சொல்ல?? ஒரு ரன்னுக்கு அவுட் ஆகி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட அஷ்ரஃப், இரண்டு விக்கட்டுகளை எடுத்து தன் இருப்பை நிலைநிறுத்திக் கொண்டார்.

அயர்லாந்து கட்டாயம் ஜெயித்துவிடும் என்ற நிலையிலிருந்து தோல்வியுற்றதை நிச்சயம் நான் எண்ணிப்பார்க்கவில்லை.

எதற்கும் பயப்படாமல், வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு, இறுதிவரை போராடி வெற்றி பெற்ற பங்களாதேஷுக்கு வாழ்த்துகள்.

வெற்றிகள் தொடரட்டும்.

5 comments:

Unknown said...

ஆனாலும் அஷ்ரஃபுல் என்னவோ வேர்ல்ட் கப்பே வின் பண்ணிட்டா மாதிரி செலிப்ரேட் பண்ணினது சிப்பு சிப்பா இருந்துச்சி

Naufal MQ said...

என்ன இருந்தாலும் அஷ்ரஃபுல் போன்ற வீரர்கள் ஏழாவதாக பேட் செய்வது எனக்கு வருத்தமே. :(

அகமது சுபைர் said...

அஷ்ரஃபுல்லை ஆட்டத்தில் சேத்ததே எனக்கெல்லாம் வருத்தம் :)))

எல் கே said...

அவனை உலகக் கோப்பைக்கு கூட்டிகிட்டு வந்ததே தப்புன்னு சொல்றேன்

எல் கே said...

அயர்லாந்து பேட்டிங் அந்த அளவுக்கு இல்லை தினேஷ். பார்ப்போம்