Saturday, February 26, 2011

இந்தியா vs இங்கிலாந்து

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் மூடிக்கிடந்த ஆடுகளத்தில் இன்று முதல் களம் இறங்குகிறோம் நாங்கள். உங்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் 

உலகக் கோப்பை ஆரம்பித்து ஒரு வாரம் ஆகப் போகிறது. முதல் வாரப் போட்டிகளில் பெரிதாக அதிர்ச்சி தரும் வகையில் எந்த போட்டிகளும் அமையவில்லை. நெதர்லாந்து அணி மட்டும் இங்கிலாந்தை தோற்கடிக்கும் நிலைக்கு சென்றாலும் அனுபவம் இல்லாதக் காரணத்தால் வெற்றிப் பெற இயலாமல் போனது.  நேற்றையப் போட்டியிலும் அயர்லாந்து அணி வங்காளதேசத்தை குறைந்த ரன்களுக்குள் சுருட்டினாலும் , வெற்றிப் பெற இயலவில்லை. மற்றப் படி அனைத்துப் போட்டிகளும் எதிர்பார்த்தவாறே அமைந்தன.


இன்றைக்கு இரண்டாவது வாரம் ஆரம்பிக்கிறது. இன்றையப் போட்டியில் இலங்கை பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. நாளை இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பெங்களுருவில் நடக்க உள்ளது. 

நேற்றையப் பயிற்சியின் பொழுது சேவாகிற்கு அடிபட்டது இந்தியாவிற்கு பின்னடைவே. ஆனால் அவர் நாளைய ஆட்டத்தில் ஆடுவார் என்றுக் கூறப் படுகிறது. நாளை மதியம்தான் அவர் ஆடுவாரா இல்லையா என்ற விவரம் தெரிய வரும். அவர் ஆடாவிட்டால் அவருக்கு பதில் ரெய்னா ஆட வாய்ப்புகள் உள்ளது. அதே போன்று இந்தியா இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன் ஆடவும் வாய்ப்புகள் அதிகம். இங்கிலாந்து பொதுவாக லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறியுள்ளதாலும், இதே பெங்களுருவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் நன்றாக பந்து வீசியதாலும் இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக சாவ்லா ஆட வாய்ப்பு உள்ளது .

இந்திய அணியின் பலம் பேட்டிங் . எனவே டாஸ் ஜெயித்தால் முதலுள் பேட் சேது முன்னூறு ரன்களுக்கு மேலே அடிக்க முயற்சி செய்வார்கள். . பந்த்வீசை பொறுத்தவரை ஜாஹீர்க்ஹான்,ஹர்பஜனையே நம்பி உள்ளது. துவக்க ஆட்டத்தில்  நன்றாக பந்து வீசியதால் முனாப் படேல் ஆட வாய்ப்புகள் உள்ளது.

இங்கிலாந்து அணியில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் ஆன பீட்டர்சன்,ட்ராட்,பெல் மீதே அனைவரின் கவனமும் உள்ளது. ஆனால் அணித்தலைவர் ஸ்ட்ராஸ் மற்றும் கோளின்க்வுட் இருவரும் இந்திய ஆடுகளங்களில் முக்கியமான வீரர்கள். ஸ்ட்ராஸ் அதிரடி ஆட்டக்காரர் இல்லை. ஆனால் களத்தில் நிலைத்துவிட்டால் அவரை அவுட் செய்வதுக் கடினம். அதே போன்றுதான் காளிங்க்வுட்டும் . அவரது பந்துவீசும் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு உள்ளது,.


இங்கிலாந்தின் பந்து வீச்சில் சுழற்பந்துவீச்சாளர் ச்வானை இந்தியா கவனமுடன் ஆடவேண்டும். இன்றைய சுழற்பந்துவீச்சாளர்களில் மிக அருமையாக பந்துவீசுபவர்  என்றுப் பேசப்படுபவர் அவர். அதேபோல் பிராட் ,ஆண்டர்சன் போன்றோரும் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்களே. ஆண்டர்சன் பாலை ஸ்விங் செய்வதில் கில்லாடி. எனவே , இந்தியா டாஸ் ஜெயித்தால் முதலில் ஆடுவதுதான் சரியாக இருக்கும். மாலை நேரத்தில், பால் ஸ்விங் ஆக வாய்ப்புகள் உள்ளது. 

கிட்டத்தட்ட சமபலத்தில் இருந்தாலும், பேட்டிங்கில் இந்தியா அதிகபலத்துடன் இருப்பதால் இந்தியா வெற்றிப் பெற வாய்ப்புகள் அதிகம்.




அன்புடன் எல்கே 


10 comments:

Unknown said...

//இந்தியா வெற்றிப் பெற வாய்ப்புகள் அதிகம்.// அது தானே நாம் எதிர்பார்ப்பும்

Naufal MQ said...

ஆஹா!! நீண்ட இடைவெளிக்குப்பின் இத்தளத்தில் ஆட்டம். கலக்குங்க நண்பரே!! :))

எல் கே said...

இனி ஆடுகளத்தில் சூடு பறக்கும்

அகமது சுபைர் said...

களத்தில இறங்கியாச்சு.... ஆரம்பம் அமர்க்களம்...

Anonymous said...

i don't think india will win today. let see tody night.

அகமது சுபைர் said...

அனானி,

ஏன் சொல்றீங்கன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்...

எல் கே said...

அனானி

என்னக் காரணம் >?>? கொஞ்சம் சொல்லுங்களேன்

அன்புடன் நான் said...

இந்தியா வெற்றி பெறும் என்பது என் நம்பிக்கை.... ஆனா சதனையளவில் வெற்றி பெறவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

SURVEJ said...

adukalam! nalla irukku.... parpom.... match going to start another 25 mins insha ALLAH.... INDIA chakde

Anonymous said...

Why I told? Still you didn't get it?
Problems in India side
1) Strong batting line made big confidence for India but the bowling and fielding isn’t good?
2)yesterday match India’s score was big( it got from 1st batting without pressure) but when England start to bat they had big told and lack of batsman’s( only 6of them are best but India had 7 batsmen and bowling both are equal) but they made it to tie because they fought well at beginning to end.
3) The only Indian player change the match its zaheer not others
4) If India makes a good bowling line in future sure they can go to final
5) India is a good team but they have to change the idea(only batting isn’t help to win all should be equal show the real win.