Wednesday, May 25, 2011

சென்னையில் கோடை மழை

உலகக் கோப்பை ஜெயிச்சதும், தொடர்ந்து ஐபிஎல் ஆரம்பிச்சதில எனக்கெல்லாம் உடன்பாடு இல்ல... அதும் இல்லாம சீரியல் மாதிரி மேட்ச நடந்துக்கிட்டே இருக்கவும் ரொம்ப போரடிச்சு மேட்ச் பாக்குறத விட்டுட்டேன்.

நேத்து முதல் இன்னிங்க்ஸ் கூட பார்க்கல... 176 ரன் அடிக்கணும் சென்னைன்னதும் சரிடாப்பா... அடுத்த மேட்ச் யாருகூட இருக்கும்னு கணக்கு போட்டிட்டு, கே டிவில படம் பார்த்திட்டு இருந்தேன்.

அப்பப்ப ஸ்கோர் மட்டும் பார்த்துட்டு இருக்கிறது...

ஹஸ்ஸி ரன் எடுக்காம அவுட். முரளி அவுட்சைட் த லைன் பிட்சான பால்ல எல்பின்னதும் மக்கா முடிஞ்சிடுச்சுடான்னு முடிவே பண்ணிட்டேன்.

அப்புறம் நம்ம அண்ணன் பத்ரிநாத் வந்ததும், ரவிசாஸ்திரி சொல்றாப்ல... மேன் ஃபார் ஆல் சீசன்னு... பத்ரி நல்லாத்தான் ஆடுறான்னாலும் அவன் சிக்ஸ் அடிக்க ட்ரை பண்ணா பால் இன்னர் சர்க்கிளைத் தாண்டி விழும். அத்தனை ஸ்ட்ரங்க்த் அவனுக்கு.... பரவாயில்லை... நேத்து நல்லா ஆடினான்.

அப்பப்ப ஃபோர் அடிச்சிட்டு இருந்தானுக... 7 ஓவருக்கு 28 ரன் ரெண்டு விக்கட்... அண்ணன் ஜாகிர் ஆடினதும், கெயில் ஆடுனதும் பார்த்தா எனக்கு கதி கலங்கிருச்சி...

அப்புறம் ரெய்னா அப்பப்ப காட்டின சிக்ஸரும், நார்மலான ஹைட்ல வந்த ஃபுல்டாஸ் பால்ல ரெய்னா அவுட்டாகி, அதை அம்பயர் நோ பால்னு சொன்னதும், இன்னைக்கு நாம ஜெயிச்சிடுவோம்ன்ற நம்பிக்கை தந்தது.

அப்புறம் பத்ரி அவுட்டானதும், தோனி அடிச்ச ஒரு சிக்ஸர், அப்புறம் மார்க்கல் ஆட்டம்லாம் நல்லா இருந்தது...

கடைசில ரெய்னான்னு ஒரு சின்னப் பையன் சிக்ஸ் அடிச்சு 50 போட்டுட்டு யாருகிட்டயோ பேட்டைக் காட்டி நான் யாருன்னு புரிஞ்சுக்கன்னு சொன்னான்... அனேகமா அது கோஹ்லியாத்தான் இருக்கணும்...

அசாதாரணமா ஜாகிரை, மிதுனையெல்லாம் துவைச்சு எடுத்து 177 ரன் எடுத்து பாலை வார்த்தானுக...

இனி சனிக்கிழமை தான் நமக்கு மேட்ச்... எவன் வரப் போறானோ...

சென்னைலயும் ரெய்னாவின் சிக்ஸர் மழை கோடை மழையா குளிர்ச்சி தரும்னு நம்பலாம்...

1 comment:

Anonymous said...

என்னய்யா இது இவ்வளவு மொக்கையா? எலக்கியவாதிங்கதான் படமே பார்க்காம விமர்சனம் எழுதி சாவடிப்பானுங்கன்னா இங்க மேட்ச் பார்க்காம மொக்கை விமர்சனம் பண்ணி... கொண்டேஏஏஏஏ போடுவேன்.படவா ராஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கல்