Sunday, July 1, 2007

பூரிக்க வைத்த சச்சினின் ஆட்டம்

கேள்விக்குரிய தேர்வுமுறை, அணிக்குள் மலிந்து கிடக்கும் குடுமிப்பிடி சண்டைகள், மீண்டும் சுட்டிக்காட்டப்படும் தவறுகள் திருத்தப்படாமை இவையாவும் சேர்ந்து என்னை (இந்திய) கிரிக்கெட்டிலிருந்து தூரப்படுத்தியிருந்தது. கிரிக்கெட் பார்ப்பதும் அதைப்பற்றி நண்பர்கள் வட்டத்தில் கதைப்பதும் குறைந்திருந்தது. செய்திகளில் படிப்பதோடு சரி. ஒரு வித வெறுப்பே இதற்கு காரணம்.

இப்படியிருக்க, சென்ற வெள்ளிக்கிழமை மதிய உணவாக பிரியாணி மூக்குபிடிக்க சாப்பிட்டுவிட்டு கண் அயர்வதற்கு முன் ரிமோட்டை எடுத்து ஒரு ரவுண்ட் வரலானேன். அப்போது சன் நியூஸ் சேனலில் கிரிக்கெட் ஆடுகளத்தை காண்பித்து கொண்டு அருண்லாலும் கல்லினனும் பேசிக்கொண்டிருப்பதை காண்பித்துக் கொண்டிருந்தார்கள். 'Live' என்று வேறு கீழே. என்ன கொடுமை இது. சன் டிவியில் நேரடி கிரிக்கெட்டா. இந்திய கிரிக்கெட் நன்றாகத்தான் வளர்ந்துள்ளது(?) என நினைத்துக் கொண்டு பார்க்க தொடங்கினேன். இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்தது. மற்ற சேனல்களிலும் பார்க்கும்படியான் நிகழ்ச்சிகள் எதுவும் ஓடாததால் தொடர்ந்து பார்க்க முடிவெடுத்தேன்.

ஆட்டம் தொடங்கியபோது தான் தெரிந்தது தமிழில் வர்ணனை என்று. அது அடுத்த கொடுமை. இனிமையான தமிழ் வர்ணனைகள் போய் கொடுமையான முறையில் வர்ணித்துக்கொண்டிருந்தார்கள். யாரென்றே தெரியவில்லை. அப்துல் ஜப்பார் அய்யா, அன்னிக்கு ஐ மிஸ்டு யூ லாட். உடனே அடித்து பிடித்து டி.டி-யில் நேரடி ஒலி/ஒளிபரப்பு உண்டா என ரிமோட்டை விரட்டினேன். அப்பாடா! அங்கும் இருந்தது. நல்லவேளை பிழைத்தேன்.

சரி ஆட்டம் தொடங்கியது, இந்தியா முதலில் நன்றாகவே பந்து வீசினார்கள். இருந்தும் தெ.ஆப்பிரிக்கா ஒருவாறு சமாளித்து 220+ எடுத்தார்கள். ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது.

சரி நம்ம பசங்க எப்படி ஆடுகிறார்கள் என்று பார்க்க ஆர்வம் பிறந்தது. சச்சினும், கங்குலியும் களமிறங்கினார்கள். அப்புறம்தான் ஆரம்பித்தது அந்த இனிய அனுபவம். காண கோடிக்கண் வேண்டும். சச்சின் அன்று அற்புதமாக ஆடினார். எனக்கு தெரிய கடந்த 4/5 ஆண்டுகளில் சச்சின் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இல்லை. சில தருணங்களில் அவரை ஏன் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்கிறார்கள் என்பதை உணர்த்தினார். ஆண்ட்ரூ நெல் பந்தில் அவர் அடித்த 'ஸ்கொயர் கட்'கள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன. அன்று அவர் அத்தனை நேர்த்தியாக ஆடினார். 'க்ளாஸிக்' ஷாட்ஸ் என்று சொல்வார்களே அது அனைத்தையும் அவர் ஆடினார். ஹூக், அந்த ஃபேவரிட் கவர் ட்ரைவ் எல்லாமே அத்தனையும் அவர் நினைத்தது போல். ஆக்ரோஷமான ஆட்டமெல்லாம் இல்லை அது. நிதானமான, ஆனால் தெளிவான ஆட்டம். சச்சின் ரசிகனல்லாத எனக்கே அன்று பூரிப்பு தந்த ஆட்டம் அது. 106 பந்துகளில் 93 ஓட்டங்கள் (13 நான்குகள் 2 ஆறுகள்). நன்றி சச்சின். ஆனால், மீண்டும் இது போல ஆட்டத்தை தர 4/5 ஆண்டுகள் எடுத்து விடாதீர்கள். முக்கியமாக சேசிங்கில் சச்சின் இப்படி ஆடியது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சூப்பர் சச்சின்!

மறுமுனையில் எங்கள் 'தாதா' திணறி திணறி ஆடிக்கொண்டிருந்தார். சச்சினும் கங்குலியும் ஒருவொருக்கொருவர் புரிந்து கொண்டு ஆடினார்கள். பழைய பகைகள் மறைந்தது போல தோன்றியது.



அதில் வென்றார்கள் என்பதற்காக பூசல்களும் குழப்பங்களும் தீர்ந்துவிட்டது என்று பொருளில்லை என எல்லாருக்கும் தெரியும். இனி இதுபோல நேரம் கிடைக்கும்போது போட்டி காண நேரிட்டால் சச்சினிடமிருந்து இப்படிப்பட்ட ஆட்டம் காண கிடைத்தால் மகிழ்வேன்.

12 comments:

நாமக்கல் சிபி said...

ஒரு மேட்சுல ஜெயிச்சிடக் கூடாதே!

உடனே வந்துட்டீங்க!

Naufal MQ said...

அப்படியில்லை சிபி அண்ணாத்த, அன்னிக்கு இந்தியா ஜெயிச்சுதோ ஜெயிக்கலையோ ஒரு கிரிக்கெட் ரசிகனா சச்சினோட ஆட்டத்தை ரொம்ப ரசிச்சு பார்த்தேன். அதான் இங்க வந்து பதிஞ்சு வச்சேன். இந்தா மாதிரி ஒரு ஆட்டம் காண்பது ரொம்ப அபூர்வம். மத்தபடி நம்ம டீம் இப்போதைக்கு விளங்குறாப்புல இல்லை.

Naufal MQ said...

இங்கு கருத்தில் கொள்ளவேண்டியது, வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளம் மற்றும் தரமான வேகப்பந்து வீச்சு (பொல்லாக் இருந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்து இருக்கும்). இதையெல்லாம் சச்சின் சாதரணமாக ஆடினார் என்பது தான் இப்பதிவிட வித்தாக அமைந்தது.

Naufal MQ said...

திருத்தம் எழுதி அனுப்பிய அனானி நண்பா, நன்றி நன்றி நன்றி!

Anonymous said...

15000 ஓட்டங்கள் !!!

Avanthika said...

//அப்படியில்லை சிபி அண்ணாத்த, அன்னிக்கு இந்தியா ஜெயிச்சுதோ ஜெயிக்கலையோ ஒரு கிரிக்கெட் ரசிகனா சச்சினோட ஆட்டத்தை ரொம்ப ரசிச்சு பார்த்தேன்//

அண்ணா..சூப்பர்

//மத்தபடி நம்ம டீம் இப்போதைக்கு விளங்குறாப்புல இல்லை///

இது அத விட சூப்பர்

:-))))

நாகை சிவா said...

எங்கத்த நான் கூட அப்படி தான் நினைச்சேன், அந்த மேட்ச பாத்து, இன்னிக்கு வச்சாங்களே ஆப்பு.... முன்ன பின்ன பாஸ்ட் பவுலிங்கே ஆட தெரியாத மாதிரி ஆடினாங்க...

ஏதோ சவுத் ஆப்பிரிக்கா மட்டமா பீல்டிங்காள தப்பிச்சோம்...

நாகை சிவா said...

இருந்தாலும் சச்சின் மேன் ஆப் தி சீரியஸ் விருதை வலுக்கட்டாயமாக யுவராஜ்யையும் பங்கு எடுக்க வைத்தது அருமை.... இது தான் சீனியர் ஆட்டக்காரர்களுக்கு அழகு...

Naufal MQ said...

அவந்திகா,
இப்ப சந்தோஷமா? இருந்தாலும் இன்னும் பிரச்சனைகள் இன்னும் நிறைய இருக்கு.

Naufal MQ said...

நாகை சிவா,
நேற்றைய போட்டி நான் முழுதும் பார்க்கவில்லை. யுவராஜ் டிராவிட் ஆடும்போது தான் பார்க்க ஆரம்பித்தேன். எப்படியோ ஜெயிச்சுட்டாங்க.

இந்த வெற்றி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் என்பது உறுதி.

சீனு said...

//காண கோடிக்கண் வேண்டும். சச்சின் அன்று அற்புதமாக ஆடினார். எனக்கு தெரிய கடந்த 4/5 ஆண்டுகளில் சச்சின் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இல்லை.//

ஆமாங்க! நான் மிஸ் பன்னிட்டேன். ஒருவேளை, நான் மிஸ் பன்னினதால் தான் சச்சின் சூப்பரா ஆடினானோ என்னவோ!! ஹைலைட்ஸ் பார்த்தேன். அந்த ஷாட்ஸ்களை பார்க்கும் பொழுது பழைய சச்சினை பார்ப்பது போல் இருந்தது. அடித்ததில் ஒரு ஸ்ட்ரைட் ட்ரைவ் சூப்பர். ஆனானும் 100% பழைய சச்சின் இல்லை. பரவாயில்லை. மீண்டும் தலைவர் ஆட ஆரம்பித்திருப்பது சந்தோஷமான விஷயம். கூடவே கங்குலியும்!!!!!

//ஹூக், அந்த ஃபேவரிட் கவர் ட்ரைவ் எல்லாமே அத்தனையும் அவர் நினைத்தது போல். //

ஆனால், எனக்கென்னவோ இந்த ஹூக் ஷாட்டில் பந்து பேட்டின் மத்தியில் படவில்லை என்றே தோன்றியது. Perfect shot தான். ஆனால் most perfect இல்லை.

//சச்சினும் கங்குலியும் ஒருவொருக்கொருவர் புரிந்து கொண்டு ஆடினார்கள். பழைய பகைகள் மறைந்தது போல தோன்றியது.//

சீச்சீ. பகையெல்லாம் இருக்காது. மனஸ்தாபம்?

Naufal MQ said...

//ஆனானும் 100% பழைய சச்சின் இல்லை.//

அது இனிமே வருமா தல? ஏதோ இந்த மாதிரி ஆடுனாலே போதுமே. என்ன சொல்றீங்க.

//Perfect shot தான். ஆனால் most perfect இல்லை.//

கரெக்டா சொன்னீங்க.

//சீச்சீ. பகையெல்லாம் இருக்காது. மனஸ்தாபம்? //
என்னமோ போங்க. ஒத்துமையா இருந்தா சரிதான். (ரெண்டு பேரும் சேர்ந்து டிராவிட்டை கவுக்க திட்டம் போடுறாங்களோ? ;))