Thursday, February 8, 2007

மீண்டும் மேட்ச் ஃபிக்ஸிங்கா?

ஏன்டா நல்லாத்தானடா இருந்தீங்க. எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு. ஏன் இதெல்லாம் திடீர்னு.

என்னடா இவன் காலையிலேயே பொலம்புறானேனு பாக்குறீங்களா. பின்ன என்னங்க. காலையில ரேடியோல செய்தி கேட்கும் போது தான் சொன்னானுங்க. கேட்டவுடனே அய்யய்யோ திரும்பவும் கெளம்பிட்டாய்ங்களானு தூக்கி வாரி போட்டுச்சுங்க.

மேட்டர் இதுதாங்க. அதாவது கொஞ்ச நாள் முன்னாடி வெ.இ அணி இந்தியா வந்து வாங்கி கட்டிக்கிட்டு போச்சுல்ல. அப்போ, நாக்பூர்ல ஜனவரி 21ந்தேதி நடந்த மேட்ச் தொடர்பா தொலைபேசியில வெ.இ வீரர் சாமுவேலும் (Samuales) சூதாட்ட தரகர் முகேஷ் கொச்சாரும் பேசியிருக்காங்க. இதை நாக்பூர் காவல்துறை பதிவு செய்திருக்காங்க. இந்த மேட்டர் இப்ப வெளியில வந்துருச்சு.

இது தொடர்பா நாக்பூர் காவல்துறை உயர் அதிகாரி சொல்லும்போது, சாமுவேல் தனது அணியின் பேட்டிங் லைன்-அப் பற்றியும் பவுலிங் லைன் -அப் பற்றியும் தரகரிடம் தெரிவித்ததாக கூறினார். பைசா பரிமாற்றம் பற்றி அவுங்க எதுவும் பேசிக்கல என்றும் சொல்லியிருக்காரு அந்த அதிகாரி.
என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுனு தெரியாம நாமலும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துடக்கூடாதுல்ல. அதுனால கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்னவெல்லாம் வெளிவருது. ஆனால், ஒன்னுங்க தன் ஆடும் அணியை எவன் பணத்துக்காக காட்டிகொடுத்தாலும் அவனை நிக்க வச்சு சுடனும். அதான் என்னோட பாலிஸி.

=================================================

Latest Update:

Marlon Samuels, the West Indies allrounder, was quoted in The Times of India as admitting to knowing Mukesh Kochar, the Indian bookie, but insisting: "I don't think he's a bookie. I usually talk about cricket but don't give out any such information." The Nagpur police have claimed that Samuels passed on match-related information to Kochar ahead of the one-day match in that city on January 21.

"I don't do such things man," Samuels was quoted as saying. "I have not done anything wrong. The West Indies Cricketers' Association will take up the matter if necessary." The report said Samuels laughed when told the Nagpur police had recorded his conversations with Kochar.

6 comments:

மணிகண்டன் said...

இதே விஷயத்தை பத்தி நானும் ஒரு பதிவு போட்டிருந்தேனே, பார்த்தீங்களா?

Anonymous said...

எங்களுக்கு நாமமா?

Naufal MQ said...

தோ. இப்ப போய் பாக்குறேன்.

Naufal MQ said...

//கிரிக்கெட் ரசிகன் said...
எங்களுக்கு நாமமா?
//
இல்லயா பின்ன.

Sridhar Narayanan said...

ஐயையோ... அதுக்குள்ள Match Fixing-னு தட்டி விட்டிர்றாதீங்க... உண்மையில சொல்லப்போனா Match Fixing பண்றது ரொம்ப கஷ்டம் மற்றும் மாட்டிக்கிட்டா கேவலம். பேசாம மேட்ச் ஜெயிச்சு விளம்பரங்கள்-ல நல்லா காசு அள்ளலாம்.

ஸாமுவேல் பிட்ச் ரிப்போர்ட் மற்றும் Bowling order பத்தி சொல்லியிருக்கார்-னு சந்தேகப் படறாங்க அவ்வளவுதான். ஷேன் வார்ன், மார்க் வாக் போன்றவர்கள் முன்னர் செய்ததாக பைன் போட்டார்கள்.

தற்போதைய ICC Code of Conduct படி இதுவும் தவறுதான். ஆனால் இது மேட்ச் பிக்ஸிங்கில் வர்றாது என்றுதான் நினைக்கின்றேன்.

எந்த விளையாட்டிலும் பந்தயத்தை (betting) தவிர்க்க முடியாது. இந்த மாதிரியான தகவல் பரிமாற்றங்கள் மறைந்தும் மறையாமலும் நடந்து கொண்டுதான் இருக்க்கும் பந்தங்களில்.

Self-Discipline-தான் இதற்கு ஒரே தீர்வு.

Naufal MQ said...

//ஐயையோ... அதுக்குள்ள Match Fixing-னு தட்டி விட்டிர்றாதீங்க... உண்மையில சொல்லப்போனா Match Fixing பண்றது ரொம்ப கஷ்டம் மற்றும் மாட்டிக்கிட்டா கேவலம். பேசாம மேட்ச் ஜெயிச்சு விளம்பரங்கள்-ல நல்லா காசு அள்ளலாம்.
//
அது மேட்ச் ஃபிக்ஸிங் ஆக இருக்க கூடாது என்றுதான் எனக்கும் விருப்பம். ஆனால், காசுக்காக சாமுவேல்ஸ் அவ்வாறு செய்திருந்தால் தண்டனைக்குரியவரே.

//எந்த விளையாட்டிலும் பந்தயத்தை (betting) தவிர்க்க முடியாது. இந்த மாதிரியான தகவல் பரிமாற்றங்கள் மறைந்தும் மறையாமலும் நடந்து கொண்டுதான் இருக்க்கும் பந்தங்களில்.
//
பெட்டிங் தரகர்களுக்கும் பெட் செய்பவர்களுக்கும் இடையில் மட்டுமே இருக்கவேண்டும். வீரர்கள் சம்பந்தபடவோ/சம்பந்தப்படுத்தப்படவோ இருக்கக் கூடாது.

//Self-Discipline-தான் இதற்கு ஒரே தீர்வு. //
மிகச் சரி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீதர் வெங்கட்.