Saturday, April 21, 2007

திருந்தவே மாட்டானுங்களா?

இந்திய அணி பழிவாங்கும்(?) நிமித்தமாக வங்கதேசம் சுற்றுப்பயணம் (வழக்கம் போல ஊர் சுத்த மட்டும் தான்) மேற்கொள்ள இருக்கிறது. மூன்று ஒரு நாள் போட்டிகளும் (மே 10, 12, 15) இரண்டு டெஸ்ட் போட்டிகளும் விளையாட இருக்கிறார்கள் (மே 18-22 & 25-29). இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரி நானும் அணியின் நன்மையை கருத்திற்கொண்டு இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்.

ODI squad: Gautam Gambhir, Robin Uthappa, Virender Sehwag, Rahul Dravid (capt), Yuvraj Singh, Mahendra Singh Dhoni (wk), Dinesh Karthik, Manoj Tiwary, Dinesh Mongia, Piyush Chawla, Sreesanth, Munaf Patel, Zaheer Khan, RP Singh.


முதலில் மேலுள்ள ஒருநாள் அணியை பார்க்கலாம். அதாவது சச்சினும் கங்குலியும் நீக்கப்படவில்லையாம். மாறாக 'ஓய்வு' கொடுக்கப்பட்டுள்ளதாம். அவர்களை நீக்க அல்லது நீக்கியதாக அறிவிக்க வக்கில்லாத ஒரு வாரியம் நமது வாரியம். இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் Cricinfo-வில் ஒரு கட்டுரையில் 'கங்குலியை நீக்குவதற்காகவே சச்சினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது' என்று ஒருவர் எழுதியிருக்கிறார். என்னமோ கங்குலி மட்டுந்தான் உலகக் கோப்பை வெளியேற்றத்திற்கு காரணம் என்பது போல். சச்சின் என்னமோ இன்னமும் வெளுத்துக் கட்டுவாருன்னு நம்பிக்கிட்டாரு இவரு. கேடு கெட்டவனுங்க. ஒரு சார்பு நிலை தொடரும் வரை இந்திய அணி உருப்படாது. இதில் கூத்து என்னவென்றால் 'ஓய்வு' அளிக்கப்பட்டுள்ளதால் இருவரும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாம்-இப்படி சொன்னது நம்ம வெங்சர்க்கார். யப்பா! உங்களை திருத்தவே முடியாதுடா சாமிங்களா!

அணி அறிவிப்பை பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட முதல் அதிர்ச்சி இதிலும் கைஃப் மிஸ்ஸிங். சச்சின், கங்குலி இல்லாத அணியில் கூட 15 பேரில் ஒருவராக இடம்பெறக்கூட அருகதையற்றவரா கைஃப்? சரி அவரை ஒதுக்கியதை பற்றி யாராச்சும் கருத்து சொல்லியிருக்காங்களான்னு பார்த்தா Cricinfo-ல கூட இல்லை. அப்புறம் கூகிளில் தேடினப்போ ஹர்ஷா போக்லே மட்டும் எழுதியிருக்கார். நம்மில் சிலர் அவருக்குத்தான் அடுத்த அணித்தலைவர் பதவி என நினைத்திருக்கும் போது தேர்வாளர்கள் அவரை அணியில் கூட சேர்க்க மறுக்கின்றனர். நிச்சயமாக இதில் ஏதோ அரசியல் உள்ளது என்று அடித்து கூற முடியும். சேவாக் இன்னும் ஒட்டுகிட்டு இருக்காரு. என்னத்த சொல்ல இவனுங்க தேர்வு கொள்கையை! ஏண்டா டன் கணக்குல ரன் குவிக்குற பத்ரிநாத் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?

தினேஷ் மோங்கியாவுக்கு இன்னொரு வாய்ப்பு. இந்த மாதிரி இத்தனை முறை வாய்ப்பு எனக்கு கிடைச்சிருந்தா கூட இந்நேரம் ரிக்கி பாண்டிங் மாதிரி ஆயிருப்பேன் நான். மனோஜ் திவாரி நல்ல தெரிவு ஆனால், கங்குலி இல்லாத வங்காள இடத்தை அவரை கொண்டு நிரப்பியிருப்பதாக உணர்கிறேன். Bloody Zonal System!!

நீக்கப்பட்ட மூன்று பந்து வீச்சாளர்கள்: அகார்கர், இர்ஃபான் & ஹர்பஜன். இதில் முன்னவர் நீக்கம் எப்பவோ நடந்திருக்க வேண்டியது. சரி இப்பவாச்சும் செஞ்சாய்ங்களே. அப்புறம் மே.இ தீவுகளை சுத்திப்பார்க்க மட்டும் சென்ற இர்ஃபான். இவரை நாசப்படுத்திய பெருமை முந்தய இணையான டிராவிட்/ சாப்பலையே சாரும். மற்றபடி உலகக் கோப்பையில் இவர் செய்த தவறு 0. அதாவது ஆடவேயில்லை. அப்புறம் இந்த ஹர்பஜன். இவரது நீக்கமும் சரியே. இவர் பழைய நிலைக்கு திரும்பி வந்ததுக்கப்புறம் அணிக்கு திரும்பலாம்.அதற்கு இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம்.

ஆக மொத்தம் சூப்பர் கண்துடைப்பு. வங்கதேசத்திடம் சீரியஸ் தோற்றால் கூட இவனுங்க (தேர்வாளர்கள்) திருந்த மாட்டானுங்க.


சரி, இப்ப டெஸ்ட் அணியை பார்க்கலாம்.

Test squad: Wasim Jaffer, Dinesh Karthik, Rahul Dravid (capt), VVS Laxman, Sachin Tendulkar, Sourav Ganguly, Yuvraj Singh, Mahendra Singh Dhoni (wk), Anil Kumble, Sreesanth, Zaheer Khan, VRV Singh, Ramesh Powar, Rajesh Pawar, Munaf Patel.


இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இந்த அரசியல்வாத பெரிசுகளை அணியில் வச்சிருப்பாய்ங்கன்னு பார்க்கலாம். ரமேஷ் போவாருக்கும், ராஜேஷ் பவாருக்கும் ஆட வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல. யுவராஜுக்கே ஆடும் 11-ல் இடம் கிடைப்பது கடினம் என பேச்சு.

ஒட்டு மொத்தமாக அணியை மாற்றம் செய்யவும் முடியாது தான். அதற்காக, அணியை பிளக்கும் தீய சக்திகளை(பெரிசுகளை) இன்னும் அணியில் வைத்திருக்கவேண்டுமா? இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 'அரசியல்/பணம் அல்ல முக்கியம் கிரிக்கெட் தான் என்றால்' இவர்கள் திருந்தப் போவது எப்போ?

8 comments:

ALIF AHAMED said...

அரசியல்ல இதேல்லாம் சகஜமப்பா...:::)

Naufal MQ said...

//மின்னுது மின்னல் said...
அரசியல்ல இதேல்லாம் சகஜமப்பா...:::)
//

வாம்மா(ய்யா) மின்னலு..

ALIF AHAMED said...

புதுச கூட்டி போறவங்கல ஆட்டையில சேப்பாங்கனு நினைக்கிரீங்களா...


அப்படியே புதுசு எல்லாம் புதுசா வரும்

பழசு ஆப்போட வரும்

நாம ஆப்பையெல்லாம் புடிங்கி விட்டு ஆழாதப்பு அங்க பாரு எவ்வளவுதான் வாங்குனாலும் கைப்பு எப்படி இருக்காருனு சொல்லி அடுத்த ஆப்ப்புக்கு தயார் படுத்தனும்..::)

Naufal MQ said...

//புதுச கூட்டி போறவங்கல ஆட்டையில சேப்பாங்கனு நினைக்கிரீங்களா...


அப்படியே புதுசு எல்லாம் புதுசா வரும்

பழசு ஆப்போட வரும்
//

கரெக்டுங்க :(

மணிகண்டன் said...

இந்திய அணி பற்றிய செய்திகளை படிக்கறதையே நிறுத்திடுங்க நண்பரே. சுத்த டைம் வேஸ்ட். நிஜமாவே இவனுங்க திருந்த மாட்டானுங்க.

Avanthika said...

நானும் கைஃப் இருப்பார்னு நினச்சேன்.. ச்சே..

Naufal MQ said...

//மணிகண்டன் said...
இந்திய அணி பற்றிய செய்திகளை படிக்கறதையே நிறுத்திடுங்க நண்பரே. சுத்த டைம் வேஸ்ட். நிஜமாவே இவனுங்க திருந்த மாட்டானுங்க.
//

:(

Anonymous said...

good analysis. Yes, Kaif should have been included. I think people/Board as well feel that Sachin should retire on his own and not be forced to do so. By "resting" him the message has been sent, but is he listening?
I would say Ganguly was rested to drop Sachin but media and its hypes :)