Thursday, March 31, 2011

தோனி ஒரு மந்திரவாதி...

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது தான் ஃபைனல். இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் டென்ஷன், டென்ஷன், டென்ஷன்......மிலிட்டரி, போலீஸ் என்று மொகாலியே ஆடிப்போகிறது...மேட்ச் பிக்ஸிங் ஆகுமா...? இந்தியா வெற்றி பெறுமா..? கனவு பிட்ச் மும்பைக்குள் பாதுகாப்பு வளையத்துடன் பாகிஸ்தான் காலடி எடுத்து வைத்து விடுமா? எண்ணிலடங்கா கேள்விகள்..


அணி அறிவிக்கப்படுகிறது...இந்தியர் ரசிகர்கள் மத்தியில் ஒரே சலசலப்பு...அட ஏன் அஸ்வின் இல்லை? என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலிக்கிறது...ஆனால் பிட்ச் சுழல் பந்திற்கு சாதகமில்லை என்று காரணம் கூறப்படுகிறது.மேட்ச் ஆரம்பிக்கிறது..இந்தியா முதல் பேட்டிங், சுழல்பந்து வீச்சாளர் அஜ்மல் வருகிறார்...அதுவரை ஆடிவந்த நமது பேட்ஸ்மேன்கள் திணற ஆரம்பிக்கிறார்கள்...ரசிகர்கள் கொதித்துப் போகிறார்கள்...அடப்பாவமே..இப்படி ஒரு பிட்சில் விளையாட அஸ்வினை எடுக்காமல், சென்ற ஆட்டத்தில் ரன்களை அள்ளிக் கொடுத்த நெஹ்ராவை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்களே...? என்று டென்சன் ஆகிறார்கள்....முதல் பேட்டிங் முடிகிறது...இந்தியா 260 ரன்கள்...பாகிஸ்தானை ஜெயிக்க, இதெல்லாம் பத்தாதடா..? என்று ரசிகர்கள் வடிவேலு பாணியில் கூறுகிறார்கள்...


நண்பர் பாஸ்ட் பவுலர் நவ்பல், தொலைபேசியில் அழைக்கிறார்...கிரிக்கெட் பற்றிய விசயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அஸ்வினை எடுத்திருக்க வேண்டும், என்ன செய்வது...பிட்ச் மாறிவிட்ட்து...என்றாளும் தோனி ஒரு மெஜிசியன்...எதாவது ஒரு கணக்குப் போட்டு கடைசியில் நமது மூஞ்சில் கரியை பூசி விடுவான்...:-) என்றார்...


இரண்டாவது இன்னிங்ஸ் தொடர்கிறது...நண்பர்கள் ஒன்று சேர்ந்து, அல்நாதாவில் ஒரு நண்பர் வீட்டில், நோன்புக் கஞ்சி, வடை, சமோசா என்று ஒரு வித்தியாசமான சிற்றுண்டியுடன்.. மேட்ச் பார்க்கிறோம்...இந்தியா பந்து வீச்சில் சாதிக்கிறது...அனைத்து பவுலர்களும் சொல்லி வைத்தாற்ப் போல் தலா 2 விக்கெட்களை வீழ்த்துகிறார்கள்...தோனி மீது குறை சொல்லி வந்த அனைவரும் வாயடைத்துப் போகிறார்கள்.....


பாஸ்ட் பவுலர் சொன்னது போல தோனி ஒரு மந்திரவாதி தான்...:-) சில நேரங்களில் அவர் என்ன செயதாலும் அது அணிக்கு சாதகமாகி விடுகிறது...அது ஃபைனலிலும் தொடருமா...?

நேற்றைய ஆட்டத்தில் என்னைக் கவர்ந்தவை...


  • எந்த பிட்ச் ஆனாலும் தன் சொந்த பிட்ச் போல் விளையாடும் சேவாக்கின் அதிரடி ஆட்டம்.

  • யார் என்ன சொன்னாலும், அனைத்து இளம் வீர்ர்களையும் தண்ணி வாங்கச் செய்யும் டெண்டுல்கரின் ஆட்டம்.

  • தன் பொறுப்புணர்ந்து நிதானமாக ஆடிய ரைனா.

  • 5 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தானின் ரியாஸ்.

  • இந்திய பவுலர்களின் ஆட்டம்..

  • நெஹ்ராவின் நேர்மை... ( அப்ரிடி கேட்ச் விவகாரத்தில்)

  • ரிஸ்க் எடுப்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று ஆடிய மிஸ்பாவின் ஆட்டம்.

  • பிரசண்டேஷன் செருமனியில்...அஃப்ரிடியின் உருக்கமானப் பேச்சு...

எப்படியோ இந்தியா ஃபைனலுக்கு வந்து விட்டது...இந்தியா....மும்பை...சச்சின்...


இந்தியாவிற்கு அனைத்துமே சாதகம் தான்...இந்தியா சாதிக்குமா..?

4 comments:

Asiya Omar said...

விமர்சனம் அருமை.இந்தியா சாதிக்கும் என்று நம்புவோம்.தோனியின் ஆராய்ச்சி 90 சதவீதம் பொய்த்ததில்லை.ஆசிஷ் நெஹ்ரா முன்பு பாக்கிஸ்தானுக்கு பவுல் செய்த அனுபவம் கைகொடுத்திருக்கிறது,அஸ்வின் புதுசு,இனி அவர் கையும் ஓங்கலாம்.ஹர்பஜனுக்கு இரண்டு விக்கெட் கிடைத்தது தான் எனக்கு சந்தோஷம்,இந்த உலக கோப்பையில் அவர் அதிகம் விக்கெட் எடுக்கலை,குருநானக் உட்பட எல்லார் பெயரையும் சொல்லி அனைவருக்கும் நன்றி சொல்லி அவர் பேட்டி கொடுத்த விதம் பஜ்ஜுவின் உணர்ச்சியை வெளீப்படுத்தியது.
அஃப்ரிடி மிஸ்பாஹ் மிஸ்பாஹ் என்று அழைத்து அழைத்து ஓட வைத்தது ரசிக்கும் படியிருந்தது.யுவராஜ் சிங்கிற்கு கண்பட்டுவிட்டது போலும்,நான்கு மேன் ஆஃப் த மேட்ச் எடுத்து இந்த தடவை டக்காஹினாலும் 2 விக்கட் மகிழ்ச்சியை தந்தது.
நோன்பு கஞ்சி,வடை,சமோசான்னு மேட்ச் களைகட்டியிருக்கு அல்நாதாவில்.சனிக்கிழமை நாங்க கஞ்சி போட்டுடுவோம்ல,அப்ப நிச்சயம் ஜெயிக்கும்..

Unknown said...

எனக்கு அவ்வளவவக கிரிக்கெட் மீது மோகமில்லை... இருந்தாலும் இந்த மேட்சை பார்க்கனும் என்று ஆவலில் இருக்கேன்... இந்தியா வெற்றி பெற வாழ்த்துகள்,,,,,, உங்களின் விமர்சனம் மிகவும் அருமை.. படிக்கவே சுவரசியமாக இருக்கு

கீழை ராஸா said...

@asiya omar, அட, பின்னூட்டத்திலேயே மேட்சைப் பற்றி அருமையா எழுதிருக்கீங்களே..பேசாம நீங்களும் ஆடுகளத்தில் எழுதலாமே..?

//நாங்க கஞ்சி போட்டுடுவோம்ல,அப்ப நிச்சயம் ஜெயிக்கும்..//

அடப்பாவமே என்ன தான் நம்ம பசங்க உசுரைக் கொடுத்து விளையாடினாலும், நாங்க குடிச்ச கஞ்சியினாலே தான் ஜெய்ச்சாங்கன்னு சொல்லிட்டீங்களே...:-)

கீழை ராஸா said...

சிநேகிதி said... //எனக்கு அவ்வளவவக கிரிக்கெட் மீது மோகமில்லை... இருந்தாலும் இந்த மேட்சை பார்க்கனும் என்று ஆவலில் இருக்கேன்... இந்தியா வெற்றி பெற வாழ்த்துகள்,,,,,, உங்களின் விமர்சனம் மிகவும் அருமை.. படிக்கவே சுவரசியமாக இருக்கு //

நன்றிங்க..உங்களை மாதிரி ஆட்கள் பார்த்ததற்காகவே இந்தியா வெற்றி பெற்று விட்டது...:-)