Monday, March 19, 2012

இந்தியா - பாகிஸ்தான் ஆசியக் கோப்பை

ரொம்ப நாள் கழிச்சி, டாஸ் போடுறதுல இருந்து மேட்ச் பார்த்துரலாம்னு நேத்து காலங்காத்தால மூணு மணிக்கு எழுந்து டிவி போட்டுட்டு உக்காந்தேன்.

நியோ கிரிக்கெட் இப்ப இங்கயும் தெரியுது. எக்ஸ்ட்ரா கவர்னு ஒரு அலசல் நிகழ்ச்சி, மஞ்சரேக்கரும், வக்கார் யூனுஸும் உக்காந்து கதையடிச்சிட்டு இருந்தானுவ. ஒரு வழியா சுனில் கவாஸ்கர் ட்ராமட்டிக்கா பிட்ச் ரிப்போர்ட் குடுத்துட்டுப் போனாரு.

அப்புறமா டாஸ். தோனி காசைச் சுண்ட, மிஸ்பா என்னவோ கேட்டாரு. அவரு கேட்டதே விழுந்ததும், மைக்கோட நின்னுட்டு இருந்த ரமீஸ் ராஜா அவரை அலேக்கா தூக்கிக்கிட்டு அந்தாண்ட போயிட்டாரு. மிஸ்பாவும் பொறுப்பா ரமீஸ் ராஜாகிட்ட பேட்டிங்க் பண்ணப் போறோம்னு சொன்னாரு. அவர்கிட்ட நலம் விசாரிச்சிட்டு, இந்தப்பக்கம் தேமேன்னு நின்னுட்டு இருந்த தோனிக்கிட்ட, “சரி ஃபீல்டிங் பண்ணப் போறிங்க...” அப்பிடின்னு ஆரம்பிக்கவும், “நாங்க என்ன செய்யப் போறோம்னே தெரியலை” அப்பிடின்னு தோனி சொல்ல நம்ம தோனி ஹேட்டர்ஸ் எல்லாம் டிவிட்டர், ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ்னு ஸ்டேட்டஸ் போட்டு சிரிப்பா சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

ஒரு வழியா முதல் ஓவரை ப்ரவீண் போட ஆரம்பிச்சான். நாலாவது பந்து ஃபோர் போனதுதான் தெரியும், மடியில லேப்டாப்போட உக்காந்த நிலையிலயே தூங்கிப் போயிட்டேன். முழிச்சிப் பார்த்தா ஸ்கோர் 220/0. அடப்பாவிங்களா, இப்பிடியாடா அள்ளிக் குடுப்பீங்கன்னு நினைச்சி ஃபீலாயிட்டேன். அடுத்த பந்தே ஃபோர் வேற. சரிதான் மறுபடி தூங்கப் போகலாம்னு நினைக்கும் போதே டாப் எட்ஜ் வாங்கி கேட்ச். அடுத்த ஓவர்லயே இன்னொரு விக்கெட்டும் விழுந்துட ஆர்வமாகி பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.

சும்மா சொல்லக் கூடாது. போன மேட்ச்ல டெத் ஓவர்ல ஓட்டைய விட்ட இந்திய பவுலர்கள் இந்த மேட்ச்ல அந்த ஓட்டைய அடைச்சிட்டாங்க. (ஆனாலும் முதல் நாப்பது ஓவர்ல குடுத்த ரன்னை சரி கட்ட முடியாதே). 36வது ஓவர்ல 224/0ன்னு வேற ஏதாவது ஒரு டீம் இருந்திருந்தா 50 ஓவர்ல 400 ரன்னைத் தொட்டுருப்பாங்க. பாகிஸ்தானா இருந்ததால 329 ரன் மட்டுமே எடுத்தாங்க. 

நம்ம ரெய்னா பறந்து புடிச்ச கேட்சும், கோலி பாஞ்சி பிடிச்ச கேட்சும் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருந்தது. (கோலி கேட்ச் பார்த்ததும் லேசா பயந்துட்டேன். 2010 சேம்பியன்ஸ் லீக் செமிஃபைனல் லேசா கண்ணுக்கு முன்னாடி வந்துட்டுப் போச்சி). 

வழக்கமா இந்த மாதிரி சூப்பர் சேஸ் செய்யணும்னு இறங்கும் போது திருஷ்டிப் பொட்டு வைக்கிற மாதிரி முதல் விக்கெட் சொற்ப ரன்னுக்குப் போகும். இன்னைக்கு அக்கவுண்ட் ஆரம்பிக்க முன்னாடியே கம்பீர் நடையக் கட்டிட்டான். கோலியும் சச்சினும் பெரிய ஸ்கோரை கஷ்டமான பவுலிங்குக்கு எதிரா அடிக்க பேஸ்மெண்ட் போட ஆரம்பிச்சாங்க.

சச்சின் 100வது நூறு அடிச்சி தோள்ல கிடந்த தொல்லையை தூக்கி வீசிட்ட ரீலீஃப் ஆட்டத்துல நல்லா தெரிஞ்சது. கோலி செட்டில் ஆகக் கொஞ்சம் நேரம் எடுத்துட்டு இருந்தான்.அந்த சமயத்துல பந்தை வேஸ்ட் பண்ணாம ஸ்கோர் போர்ட் டிக் ஆகிட்டே இருக்க வச்சாரு. ரெண்டு மூணு ரன்னவுட் ஆகியிருக்கும். பாகிஸ்தானா இருந்ததால தப்பிச்சாங்க. பழைய சச்சினைப் பார்க்க முடிஞ்சது என்னைப் போல அவரோட ரசிகர்களுக்கு எல்லாம் மகிழ்ச்சி. அதிலையும் அஞ்சாவது ஓவர் கடைசி பால்ல சீமா வீசின பவுன்சரை அப்பிடியே கீப்பர் தலைக்கு மேல தூக்கி சிக்ஸடிச்சாரு பாருங்க, என் விசில் சத்தத்துல வீடே அலறிடுச்சி. ஒரு வழியா கோலி செட்டில் ஆனதும் அடிக்க ஆரம்பிச்சான். சச்சின் நிதானமா ஸ்ட்ரைக் ரொட்டேட்டிங் மட்டும் செய்ய ஆரம்பிச்சாரு. 

சயீத் அஜ்மல் நீ பெரிய பவுலர் தாம்லே. பின்ன, சச்சினையே தூஸ்ரா போட்டு டிசீவ் பண்ணிட்டீயே. செம பால். ஆஃப் ஸ்பின் ஆவும்னு சச்சின் லெக் சைட்ல அடிக்க பேட்டை திருப்ப, பால் ஸ்பின் ஆவாம நேராப் போய் பேட்டோட எட்ஜ்ல பட்டு அதுக்காகவே நிறுத்தியிருந்த யூனிஸ் கான் கையில சேர்ந்திருச்சி. இப்ப ஜிலீர்னு வயத்துல ஒரு பயப்பூச்சி வந்து உக்காந்திச்சி. (இந்தப் பூச்சி எப்ப சாவும்னு தெரியலையே).

அடுத்து வந்தான் ரோகித் சர்மா. இது மாதிரி, தன்னை ப்ரூவ் பண்ண இன்னொரு சந்தர்ப்பம் இவனுக்கு சிக்காது. அதுக்கேத்த மாதிரியே பயபுள்ள பந்தைத் திங்க ஆரம்பிச்சான். பவுலிங்கும் டைட் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க. கோலியும் நிதானமாகிட்டான். 91 ரன்ல இருந்து 100 ரன் போக ஏழு ஓவர் எடுத்துக்கிட்டான். (அடுத்த சச்சின் நீதாம்லே. ரொம்ப நாள் இல்லை இன்னொரு அஞ்சு வருசத்துல உன்னை எப்பிடி எப்பிடியெல்லாம் விமர்சிக்கப் போறாய்ங்கன்னு பார்த்துட்டே இரு).

அவன் நூறு போட்டதும் கியரை மாத்திட்டான். அதுக்குப் பிறகு அதிரடிதான். 200 ரன் அடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனா பயன்படுத்திக்கலை பயபுள்ளை. 183 ரன்ல அவுட்டாகிட்டான். ஆனா அவன் அவுட்டாகும்போது 12 ரன் மட்டுமே தேவைப்பட்டது. ரொம்ப நேரம் லேட் பண்ணாம அதே ஓவர்லயே ரெய்னாவும், தோனியும் முடிச்சி வச்சிட்டாங்க. 

மேட்ச் முடிஞ்சதும் ஒரு ட்விட் கண்ணைக் கவர்ந்தது: 
1999 - கங்குலி 183, 2000 - கேப்டன்
2005 - தோனி 183, 2007 - கேப்டன்
2012 - கோலி 183, விரைவில் கேப்டன்?

அதி விரைவுல 2015லயே இது நடந்துரும்னு ஒரு ஆஸ்திரேலிய பட்சி சொல்லுது. 

ரொம்ப நாள் கழிச்சி இந்தியா பாகிஸ்தான் மேட்ச். சேஸிங்க்ல முதல் ஓவர் தவிர ரொம்ப நேரத்துக்கு இந்தியா கைதான் ஓங்கியிருந்ததால ஹைப்புக்கு ஏத்த விறுவிறுப்பு மிஸ்ஸிங். ஆனா ரொம்ப அருமையான ஆட்டம். 

No comments: