Tuesday, January 30, 2007

உலகக் கோப்பைக்கான இந்திய அணி

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ளன. மார்ச் மாதம் 13-ந் தேதி வெ.இ மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் துவங்குகிறது 2007 உலகக் கோப்பை. இதற்கான இறுதி அணி பட்டியலை பங்கேற்கும் அணிகளை வரும் பிப்ரவரி 13ந்தேதிக்குள் சமர்பிக்குமாறு ஐ.சி.சி கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு பிப்ரவரி 11 அல்லது 12ந்தேதியில் நடைபெறும் என இந்திய தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

எல்லா அணிகளும் வரும் உலகக் கோப்பைக்காக ஆயத்தம் செய்து வருகின்றன. ஆஸ்திரேலியா, இலங்கை, தெ.ஆ, நியூசிலாந்து, பாக்கிஸ்தான் ஆகிய அணிகள் வெற்றிக்கான ஃபார்முலாவை (சரியான காம்பினேஷன்) ஓரளவு கண்டுபிடித்து தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்க ஆயத்தமாகிவிட்டன. இதில் ஆஸ்திரேலியா பற்றி சொல்லவே வேண்டாம். நான்காவது முறையாக கோப்பையை வென்றாலும் நான் வியப்படையப் போவதில்லை. வெ.இ அணி கூட இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்பு வரை நல்ல முறையிலேயே ஆடி வந்துள்ளது. ஆனால், இந்திய அணிதான் (இங்கிலாந்து அணியை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை) 11 பேர் பொறுக்கி எடுப்பதற்கே படாத பாடு பட்டு வருகிறது இல்லாத சோதனைகள் எல்லாம் செய்து வருகிறது. காவஸ்கர் வேறு இந்திய அணியே கோப்பையை வெல்லும் என கணித்துள்ளார்.

இதுவரை உள்ள சூழ்நிலையை வைத்தும் எனக்கிருக்கும் கொஞ்சம் நஞ்சம் கிரிக்கெட் அறிவை வைத்தும் உலக் கோப்பைக்கான அணியில் யார் யார் இடம்பெற வேண்டும் என அலசலாம் என்றெண்ணியதால் விளைந்ததே இப்பதிவு. இந்திய தேர்வுக்குழு என்ன செய்யப் போகிறதோ அது நமக்கு தேவையில்லை. இது போல அமைந்தால் அணிக்கு நலம் என என்னுடைய கண்ணோட்டத்தில்.

துவக்க ஆட்டக்காரர்கள்:
1. கங்குலி:- பல புருவங்களை உயர்த்த செய்து, அணிக்கும் மீண்டு(ம்) வந்திருக்கும் வங்கப்புலியின் தற்போதைய ஆட்டம் ஐயங்களுக்கிடமின்றி அவருடைய பழைய ஃபேவரிட் இடத்தை (Favourite Position) பெற்றுத்தந்திருக்கிறது. அணித் தேர்வில் கேப்டனுக்கு அடுத்தபடியாக உறுதி செய்யப்பட்டவர் இவராகத் தான் இருக்கும். வெல்கம் பேக் ப்ரின்ஸ்.

2.உத்தப்பா:- வெ.இ எதிராக நடைபெற்ற சென்னை ஆட்டத்தில் இவருடைய ஆட்டத்தை தொ.கா.யில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பயமறியா இளங்காளை. பின்னி பெடலெடுக்கிறார். இவரை இந்தியா கடந்த ஒராண்டு காலமாக கண்டுகொள்ளாமல் தவறு செய்து விட்டதோ என தோன்றியது. நல்ல எதிர்காலம் உண்டு இவருக்கு.

மிடில் ஆர்டர்:
3.சச்சின்:- சமீப காலமாக ஓட்டங்கள் எடுக்க தினறினாலும் இவருக்கெதிராய் நாக்கு மேல் பல் போட்டு பேச ஆளில்லை. யார் பேச முடியும் இவருடைய சாதனைகளைப் பார்த்தால்? இவர் நினைத்தால் கண்டிப்பாக சிறப்பாக ஆட முடியும். மனதில் அவரைப்பற்றி அவருக்குள்ள ஐயங்களை அவரே களைந்து களமிறங்கும் பட்சத்தில். இவருடைய அனுபவம் கை கொடுக்கும்.

4.ட்ராவிட்:- அணித்தலைவர் என்பதை விட இவருடைய ஆட்டம் அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். முன்பு போல் அலுப்படையச் செய்வதில்லை இவருடைய ஒருநாள் போட்டி ஆட்டங்கள். விரைவாக ஓட்டங்கள் எடுப்பதில் நல்ல முன்னேற்றமுள்ளது. 5 வது பந்து வீச்சாளரை கையாலுவதில் திறமையை வளர்த்தால் நல்லது.

5.யுவ்ராஜ்:-இவர் முழு தகுதி பெற்றிருந்தால் மட்டுமே இவரை அனுப்ப வேண்டும். இல்லையேல் கைஃபிற்க்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சென்னை போட்டியில் இவருடைய உடல் தகுதியில் எனக்கு முழு நம்பிக்கையில்லை.

6.சேவாக்:- என்னடா இது சேவாக்கிற்கு இடமுண்டா என எண்ணாதீர்கள். இவர் 50 ஓட்டங்கள் எடுத்தாலே போதும் இந்தியா பகுதி வென்றது போல். ஆம், துவக்க ஆட்டக்காரராக இல்லாவிடிலும் இவரால் சாதிக்க முடியும். கொஞ்சம் பொறுப்புணர்வு வேண்டும். இவர் இல்லாவிடில் நமது கார்த்திக் விளையாட வேண்டும்.

7. தோனி:- இவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இவருடைய ஆட்டம் பற்றி யாருக்கும் சொல்லத் தேவையில்லை. :)

பந்து வீச்சாளர்கள்:
8. இர்ஃபான்:- நிச்சயமாக உலகக் கோப்பை போட்டியில் நன்றாக பந்து வீசுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மனதிலிருந்து 'தான் ஒரு பேட்ஸ்மேன்' என்பதை நீக்கினாலே அவருடைய ப்ராப்ளம் தீர்ந்தது.

9. கும்ப்ளே:- இந்தியாவின் நீண்ட கால மேட்ச் வின்னர் டெஸ்டில். உலகக் கோப்பை போட்டியில் ஆடப்போகும் பலநாட்டு புது வீரர்கள் இவருடைய பந்து வீச்சில் தடுமாறுவார்கள்.

10. ஜாஹிர்:- அற்புதமாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார் தற்போது.

11.ஸ்ரிசாந்த்:- இவருக்கு ஆடும் 11 பேரில் நிச்சயமாக வாய்ப்பளிக்க வேண்டும். இவரின் sprit எனக்கு பிடிக்கும்.

மேலே கைஃப் மற்றும் கார்த்திக்குடன் சேர்த்து 13 வீரர்களின் பெயரை நான் கூறிவிட்டேன். மேலும் 2 வீரர்களாக ஹர்பஜன் மற்றும் முனாஃப் (உடல் தகுதியில்லையெனில் அகார்கர்) சேர்க்கப்பட வேண்டும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்னுடைய தேர்வைப் பற்றி. உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

9 comments:

ரவி said...

நல்லா சொன்னீங்க...ஆனா அது ஊத்தப்பா சோத்தப்பா இல்ல...உத்தப்பா...

பொறவு நம்ம சச்சின் 100 அடிச்சு விளாசிட்டாருல்லா இன்னைக்கு...

கங்குலி காலைவாறாம ஒரு 68 எடுத்திருக்கார்...

ட்ராவிட் பரவால்லை அம்பது போட்டுட்டார்...

டோனி 20 பந்துக்கு 40 ரன்னு...

உத்தப்பாவை ஒரு முனையிலும், கங்குலியை ஒரு முனையிலும் இறக்கனும்...

உத்தப்பா அவுட்டானா சேவக்கை எறக்கி விடனும்...

கங்குலி அவுட்டானா சச்சினை இறங்கி உடனும்...

பொறவு ட்ராவிட்...

மிடில் ஆர்டர்ல தோனியும், யுவராசும்...

இது எப்படி இருக்கு....

Naufal MQ said...

2006 நாயகப் பதிவரின் வருகைக்கு நன்றி.

உத்தப்பா பெயர் திருத்தம் செய்து விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி.

என்னுடைய தேர்வு சரியென்றதற்கும் நன்றி. ஆனால், ஷேவாக்கின் ஒன் டவுன் ஆலோசனை மீது தான் நான் சிறிது முரன்படுகிறேன். அவருடைய அதிரடி ஆட்டம் பின் வரிசையில் பயன்படும் என நினைக்கிறேன்.

கருத்துக்கு நன்றி செ.ரவி :)

ரவி said...

சேவாக்கை ஆரம்பத்தில இறக்கலைன்னா பாவம் பயபுள்ள மனசு நொந்துடும்...

ஒரு வருஷமா பூரணகும்ப மரியாதை கொடுத்த மவராசனுக்கு கோயிலுக்குள்ள வராதன்னு சட்டம் போட்டமாதிரி...

கடைசியில பந்து மற்றும் பிச்சு கொஞ்சம் அதிரடி ஆட்டத்துக்கு சரிவராதுப்போய்...

அடிச்சு நொறுக்கினா ஆரம்பத்துல, இல்லைன்னா ஆட்டையை முடிக்கும்போது...சேவக் இறங்கும் ஆர்டர் மிடில் ஆர்டரா இருந்தா பட்டுனு அவுட்டாகிரும் புள்ள...

நீங்க என்னா நெனைக்கிறீங்க...!!!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

என்னுடைய அணி வேறு மாதிரியாக இருக்கிறது.

1. கங்கூலி.
2. சேவாக்
3. டிராவிட்
4. டெண்டுல்கர்
5. யூவராஜ் சிங்
6. டோனி
7. பதான்
8. கும்ளே
9. ஹர்பஜன்
10. ஜாஹிர்
11. அகர்கர் / ஸீரிசாந்த்

ஓரிரு இந்திய மைதானங்களில் விளையாடியதை வைத்து ஊத்தப்பாவை எடுத்துக் கொள்வது சரியல்ல என்று நினைக்கிறேன். ஆகவே சேவாக் ஓபனிங் செய்ய வேண்டும்.

7 பேட்ஸ்மேன் வைத்து விளையாடுவது எனக்கு சரியாகப் படவில்லை. 6 பேட்ஸ்மேன் 5 பவுலர் என்பதே சரி என்பது என் கருத்து. கடைசி உலகக் கோப்பையில் அந்த ஏழாவது பேட்ஸ்மேன் இருந்தாலும் அவர் ஆடவே இல்லை இல்லை தேவைப் பட்ட சமயம் சோபிக்கவில்லை.

கடைசிப் போட்டியில் இன்னொரு பந்து வீச்சாளர் தான் அதிகமாக தேவைப்பட்டார்.

ஒரு அணியில் எப்போதும் சிறந்த 11 வீரர்கள் தான் விளையாட வேண்டும் நம் சிறந்த 11ல் இரண்டு ஸ்பின்னர்கள் இருந்தால் கண்டிப்பாக அவர்கள் தான் விளையாட வேண்டும்.

மேலும் கார்த்திக், பவார், கைப் ஆகியோர் 15ல் இடம் பெற வேண்டும்.

Naufal MQ said...

பழைய செல்வாக்கை மதிக்க சொல்றீங்க. இது உங்களுக்கே டூ மச்சா இல்லை? :)

அப்புறம், கடைசில வந்தாலும் அடிச்சு ஆடலாம்னு இன்னிக்கு தோனி நிரூபிச்சு இருக்காரு. அதனால், சேவாக் ஆறாவதாக வந்தாலும் அடிச்சி ஆடலாம். பிட்சு ஒன்னும் அந்தளவுக்கு மோசமாகாது. :)

முதல்ல நாம் நினைக்கிற மாதிரி செலக்ட் ஆகட்டும் சேவாக். :)

Naufal MQ said...

வாருங்கள் செந்தில் குமரன்.

உத்தப்பாவைத் தவிர்த்து உங்கள் அணியும் எனது அணியை ஒத்துப் போகிறது.

உத்தப்பாவின் ஆட்டத்தை ஓரிரு போட்டிகளை வைத்து சொல்லவில்லை. கடந்த இரு ஆண்டுகளாகவே வெகு சிறப்பாக ஆடி வருகிறார். மேலும், அவரது பயமில்லாத ஸ்ட்ரோக் மேக்கிங் நல்ல பயனைத் தரும். பொறுத்திருந்து பாருங்கள் அவர் ஒரு சிறந்த ஓபனராக வருவார். :)

பின்னர், 7 பேட்ஸ்மென் தியரி. என்னைப் பொறுத்தவரை ஒரு நாள் இப்பொழுதெல்லாம் முழுக்க முழுக்க பேட்ஸ்மென் கேம் தான். இதில் ஒரு 10 ஓவர் வீச மட்டும் ஒரு ஸ்பெஷல் பவுலர் வேண்டுமென்பதில்லை. ஷேவாக், சச்சின், கங்குலி மற்றும் யுவ்ராஜ் இருக்கும் அணியில். ஒரு நாள் போட்டிகளை பொருத்தவரை எல்லா பவுலர்களுக்கும் அடி கிடைப்பது உறுதி. இதில், யாருக்கு குறைவு என்பது மட்டும் இப்பொழுதுள்ள நிலைமை.

2 ஸ்பின்னர் தியரி. அது ஆடுகளத்தை பொருத்தமையும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்.

கப்பி | Kappi said...

நல்ல தேர்வு பவுலர்!

முனாஃப் இல்லையெனில் அகர்கரா? அகர்கர் 15-இல் இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

சேவாக் மிடில் ஆர்டரில் எந்தளவு உபயோகமாக இருப்பார் என்பதும் சந்தேகமே...

மே.இ. தீவுகளில் 7 பேட்ஸ்மென் 4 பவுலரே சரியாக இருக்கும்..அந்த பிட்சுகளில் இரண்டு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்க்ளின் தேவையிருக்காது என்றே தோன்றுகிறது.

Naufal MQ said...

//கப்பி பய said...
நல்ல தேர்வு பவுலர்!
//
நன்றி கப்பி பய அவர்களே!

//முனாஃப் இல்லையெனில் அகர்கரா? அகர்கர் 15-இல் இருக்க வேண்டும் என்பது என் கருத்து. //
சற்று முடிவடைந்த தொடரில் அகார்கர் சிறப்பாக பந்து வீசியதையும், முனாஃப் முழு உடல் தகுதியில் இல்லை என்பதையும் கணக்கில் கொண்டால் நீங்கள் சொல்வது சரியே.

//சேவாக் மிடில் ஆர்டரில் எந்தளவு உபயோகமாக இருப்பார் என்பதும் சந்தேகமே...//
நான் அவரை ஆஸியின் மைக் ஹஸ்ஸி ரேஞ்சுக்கு கம்பேர் செய்கிறேன். :)

//மே.இ. தீவுகளில் 7 பேட்ஸ்மென் 4 பவுலரே சரியாக இருக்கும்..அந்த பிட்சுகளில் இரண்டு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்க்ளின் தேவையிருக்காது என்றே தோன்றுகிறது.
//

மிகச் சரி. :)

Naufal MQ said...

வாங்க லொடுக்கு,
நம்ம டீம்ல ராய்னாவுக்கு கல்தா தான். :)