Monday, April 9, 2007

'ட்'ரிக்கி பாண்டிங்

அரை-இறுதிக்கான மூன்று இடங்களை ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்துக்காக கடுமையான போட்டி உருவாகியுள்ளது. தெ.ஆ அணிக்கெதிரான வங்கதேசத்தின் வெற்றி நான்காவது இடத்தை திறந்து வைத்துள்ளது என கூறலாம். தெ.ஆ, மே.இ, இங்கிலாந்து & வ.தேசம் அணிகள் இவற்றில் எந்த அணியும் நுழையலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

சூழல் இவ்வாறிருக்க நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் களமிறங்கின. இங்கிலாந்தை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றுவோம் என்ற சபதத்துடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. அது போலவே ஆஸ்திரேலியா வெற்றியும் பெற்றது.

அதற்காக, இந்த போட்டியின் முடிவை வைத்து இங்கிலாந்து வெளியேறிவிட்டதாக கருதமுடியாது. ஆனால், கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்றே கூறலாம். இங்கிலாந்திற்கு மூன்று போட்டிகள் மீதமுள்ளன. இதில் இங்கிலாந்து குறைந்தது இரண்டிலாவது வெல்ல வேண்டும். வ.தே, தெ.ஆ & மே.இ அணிகளுடன் மோத வேண்டும். இந்த மூன்று அணிகளுக்கும் அதே அளவிலான வாய்ப்புகள் உள்ளதால் ஆட்டம் இனி சூடு பிடிக்கும். இந்த நான்கு அணிகள் பங்கு பெறும் போட்டிகளில் அனல் பறக்கும்.சரி, நேற்றைய போட்டிக்கு வருவோம். கடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக துவங்கிய ருத்ர-தாண்டவத்தை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக செய்து வருகிறார் ரிக்கி பாண்டிங். எனக்கு விபரம் தெரிய இந்த நான்கு ஆண்டுகளாக ஓட்டங்கள் குவித்து வருபவர் அவர் ஒருவர் மட்டுமே. அவருக்கு அவுட் ஆஃப் ஃபார்ம் என்பதே இல்லையா? உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் லாராவாம் சிலருக்கு சச்சினாம் சிலருக்கு. சிரிப்புத்தான் வருகிறது. எனக்கெதுக்கு வம்பு? நான் சிரிச்சா சிலருக்கு காதில் புகை வரும். :)

ஆஸ்திரேலியாவின் நேற்றைய ஸ்கோர் போர்டை பாருங்கள். டாப்-ஆர்டர் ஆட்டத்தை பாருங்கள். 27, 41,86,55,28. யார் ஃபார்மில் இல்லை என்பதை பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டும். இந்நிலை தொடருமாயின் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா கோப்பையை கொண்டு போவதை யாராலும் தடுக்க முடியாது.

19 comments:

பூனைக்குட்டி said...

ரிப்பீட்டே...

ரிக்கி பாண்டிங் நிச்சயமாய் ஒரு மிகச்சிறந்த பாட்ஸ்மேன். ஆனால் அவரால் லாராவாகவோ, சச்சினாகவோ ஆகவேமுடியாது.

ஏனென்றால் அந்த அணியில் அவர் விளையாடி ஜெயிக்க வேண்டும் என்று கிடையாது. தனிநபரை நம்பி ஆடும் அணியும் அல்ல ஆஸ்திரேலியா.

அதனால் லாரா, சச்சின் போல் ஜம்பப் புகழ் கிடைக்காது. ஆனால் கிளைவ் லாய்ட் போல், விவியன் ரிச்சர்ட்ஸ் போல் உலக கிரிக்கெட் வரலாற்றில் பான் டிங்கின் பெயர் பொன்னெழுத்துக்களால் ஏற்கனவே பொறிக்கப்பட்டாகிவிட்டது.

---------------

ஷேன் வார்ன்க்கும் இதே பிரச்சனை தான் முத்தையா முரளீதரனுடன் ஒப்பிடும் பொழுது...

Naufal MQ said...

வாங்க நண்பா,
சரியாச் சொன்னீங்க. ஆஸ்திரேலியா ஒருபோதும் தனிமனித சாதனையை ஒரு பொருட்டாக மதிக்காததும் அவர்களின் வெற்றிக்கு காரணம்.

//ஷேன் வார்ன்க்கும் இதே பிரச்சனை தான் முத்தையா முரளீதரனுடன் ஒப்பிடும் பொழுது...
//

மிகவும் சரி. முரளி பெரும்பாலும் சுழல்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆடி இந்தளவு விக்கெட்டுகளை பெற்றிருக்கிறார். ஆனால், வார்னே அதிகமான விக்கெட்டுகள் எடுத்திருப்பது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆடுகளங்களில். இங்கெல்லாம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான் ஆடுகளங்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Anonymous said...

ஜல்லிகளே! அட நீயும், மோகன் தாசும்தானப்பா :-)

பாண்டிங் அற்புதமான ஆட்டக்காரர் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. டெண்டுல்கர் இந்தியராக இருப்பதால் மட்டுமே அவருக்கு இத்தனை புகழும்.
ஜம்பப் புகழ் என்பதோடு ஒத்து போகிறேன்.

ஆனால் ஷேன் வார்னே - முரளீதரன் அப்படி அல்ல. வார்னே விக்கெட் குவித்த் பெரும்பான்மையான விக்கெட்டுகள் ஆஃப் ஸ்பின்னுக்கும்,லெக் ஸ்பின்னுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆடிய இங்கிலாந்து, நியூசிலாந்து, தெ ஆப்பிரிக்கா நாடுகளுக்கு எதிராக. துணைக்கண்ட அணிகளுக்கு எதிராக அவரது பந்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் வர்ணிக்குமளவுக்கு சுழன்றதாக சரித்திரம் இல்லை.

முரளியின் பந்து சுழல ஆரம்பிதத்தும் 'ஐயோ வீசுறான்' என்று அழது தொழுது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தடுத்து நிறுத்த முனைந்தும் முரளி இன்னமும் பிரகாசிக்கிறார். வார்னேவை விட முரளி நிச்சயமாக பல மடங்கு நல்ல சுழல் பந்து வீச்சாளர்தான்.

'போத்தின்(எருமை) காதில் வேதம் ஓதிப் புண்ணியமில்லை என்று தெரியும்தான் :-) இருந்தாலும்....

வெள்ளைத்தோலை விட்டு வெளிய வாங்கய்யா :-)

Naufal MQ said...

வாங்க அண்ணாச்சி,
கூலா என்ன குடிக்கிறீங்க? ஜிகிர் தண்டா?

//ஜல்லிகளே! அட நீயும், மோகன் தாசும்தானப்பா :-)

பாண்டிங் அற்புதமான ஆட்டக்காரர் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. டெண்டுல்கர் இந்தியராக இருப்பதால் மட்டுமே அவருக்கு இத்தனை புகழும்.
ஜம்பப் புகழ் என்பதோடு ஒத்து போகிறேன்.

//
அது வரைக்கும் மகிழ்ச்சி.

//ஆனால் ஷேன் வார்னே - முரளீதரன் அப்படி அல்ல. வார்னே விக்கெட் குவித்த் பெரும்பான்மையான விக்கெட்டுகள் ஆஃப் ஸ்பின்னுக்கும்,லெக் ஸ்பின்னுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆடிய இங்கிலாந்து, நியூசிலாந்து, தெ ஆப்பிரிக்கா நாடுகளுக்கு எதிராக. துணைக்கண்ட அணிகளுக்கு எதிராக அவரது பந்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் வர்ணிக்குமளவுக்கு சுழன்றதாக சரித்திரம் இல்லை.
//

இல்லை இதில் உடன்பாடில்லை. துனைக்கண்ட அணிகளுக்கெதிரான வார்னேயின் இந்த ரெக்கார்டை பாருங்கள்.
பாகிஸ்தானுக்கெதிராக 15 டெஸ்டுகளில் ஆடி 90 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 20.17 ஆவரேஜ் (அவருடைய மொத்த ஆவரேஜ் 25.41) மிக அருமை.
தொடுப்பு இங்கே.


சரி, இலங்கைக்கெதிராக 13 டெஸ்டுகளில் 59 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆவரேஜ்- 25.54 (அவருடைய மொத்த ஆவரேஜ் 25.41) ஒன்றும் மோசமில்லை.
தொடுப்பு இங்கே.


ஆனால், இந்தியாவிற்கெதிராக மட்டும் கொஞ்சம் சொதப்பல். 14 போட்டிகளில் 43 விக்கெட்டுகள். ஆவரேஜ்-47.18.

தொடுப்பு இங்கே.


அப்படியெனில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியினர் ஆஃப் ஸ்பின்னிற்கும் லெக் ஸ்பின்னிற்கும் வித்தியாசம் தெரியாதவர்களாகின்றனர். :)

நான் முரளியின் பந்து வீச்சு திறமையை குறை சொல்லவில்லை. அவரும் நல்ல பந்து வீச்சாளர் தான். அதற்காக, தோல் வெளுத்திருப்பதால் வார்னே குறைந்து போய்விட மாட்டார். உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். முரளி, அக்தர் மற்றும் மலிங்கா பந்து வீச்சு action-ஐ பார்த்து உங்களுக்கு 'அவர்கள் எறிகிறார்களா' என்ற சந்தேகம் வரவில்லை? பிறவியிலேயே கை ஒடிந்துள்ளது என்று சொல்லுவதெல்லாம் சும்மா பம்மாத்து. :)

//'போத்தின்(எருமை) காதில் வேதம் ஓதிப் புண்ணியமில்லை என்று தெரியும்தான் :-) இருந்தாலும்....

வெள்ளைத்தோலை விட்டு வெளிய வாங்கய்யா :-)
//
விளையாட்டிற்கில்லை பேதம்.

பூனைக்குட்டி said...

//வெள்ளைத்தோலை விட்டு வெளிய வாங்கய்யா :-) //

அண்ணாச்சி, என்னை பலநாட்களாக உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி இது.

உண்மையில் வெள்ளைத் தோலுக்காகத்தான் ஆஸ்திரேலியாவை சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறேனா என்பது.

ஆனால் என்னுடைய சுய பரிசோதனைகள் இல்லை என்று தான் சொல்கின்றன.

--------------------

எமினமின் 8 Miles படத்தில் அவருடைய முதல் ராப் பேட்டில்ன் பொழுது அவர் வெள்ளையர் என்பதனாலேயே அளவுக்கதிகமாய் நிராகரிக்கப்படுவார்.

எனக்கு அதுதான் நினைவில் வந்தது, வார்னேவைப் பற்றி நீங்கள் சொன்னதும்.

கிரிக்கெட்டில் ரேஸிஸம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இதற்காகயெல்லாம் ஷேன் வார்னின் புகழ் ஒன்றும் குறைந்துவிடாது என்றுதான் சொல்கிறேன்.

-----------------

அதுமட்டுமல்லாமல் ஷேன் வார்னே பந்து வீச வரும் சமயத்தில் நிச்சயமாக இரண்டு மூன்று விக்கெட்கள் விழுந்துவிடும். அதே போலவே பெரும்பாலான சமயங்களில் வார்னே மெக்கியுடன் தான் டெஸ்ட் பந்தயங்களில் பந்துவீசுவார்.

இரண்டு விக்கெட் டேக்கிங் பவுலர்கள் என்றில்லாமல் ஆஸ்திரேலியா அணி எப்பொழுதும் இன்னும் ஒருவரை நிச்சயமாக வைத்திருந்திருக்கிறது.

அவருடைய பர்சண்ட்டேஜ் ஆப் சான்ஸஸ் ரொம்ப கம்மி; முரளீதரனுடன் ஒப்பிடும் பொழுது நான் அதைத்தான் சொல்லவந்தேன்.

-------------------

வேறு வழியே கிடையாது ஸ்ரீலங்காவிற்கு முரளிக்கான பீல்ட் செட்டிங் செய்து விக்கெட் எடுப்பதைத் தவிர. ஆனால் ஆஸ்திரேலியா வார்ன் ஒழுங்காக பந்து வீசவில்லையென்றால் ஸ்பெல் சீக்கிரம் முடிக்கப்படும்.

இருவரும் வீசிய ஓவர்களை கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.

-------------------------

வார்னேவை நீங்கள் இந்த ஒப்பீட்டில் எல்லாம் சொல்லவே முடியாது. அதாவது உங்க ஆப் ஸ்பின், லெக் ஸ்பின் ஒப்பீடு.

பாஸ்ட் பௌளர் சொல்வது போல், சப் காண்டினட்டிலும் வார்னேவின் ரெக்கார்ட் நன்றாகத்தான் உள்ளது.

------------------------

சச்சின் எவ்வளவு ப்ராக்டிஸ் எடுத்து வார்னேவை அடித்தார் என்பது எனக்குத் தெரியும்.

Anonymous said...

முரளி எறிகிறார் என்றால் மேற்கொண்டு பேச ஏதுமில்லை.

இங்கே ஒரு விசயத்தை மிக மிக நன்றாக நினைவில் கொள்ளுங்கள். வார்னேவுக்குக் கிடைத்த மீடியா ஹைப் என்பது முரளிக்குக் கிடையாது.

மைக் கேட்டிங்கை வார்னே அவுட்டாக்கியது ஒரு மந்திரப் பந்து என்று இன்னமும் சிலாகித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அது மாதிரிதான் வார்னேயின் பல சாதனைகளும்.

நீங்கள் ஆயிரம் சொல்லுங்கள். முரளிதான் என் நாயகன்

தாஸ்,

வெள்ளைத்தோலை விட்டு வெளிய வாங்கப்பா என்று சொன்னது சும்மா விளையாடத்தான் :-)

எனக்கு எப்போதும் உகந்த கிரிக்கெட்டர் என்றால் மைக்கேல் ஹோல்டிங் தான் அடுத்தபடியாக விவியன் ரிச்சர்ட்ஸ், இயான் போதம், இம்ரான் கான் மூவரும்தான். பந்து வீச்சில் ரிச்சர்ட் ஹாட்லியையும் பிடிக்கும். இந்தப்பட்டியலில் ஒரு இந்தியரும் இல்லை என்பதால் நான் என்ன தேசத் துரோகியா? :-) இதுதான் சமயம்னு ஆமாம் போட்டுடாதீங்கய்யா :-)

ஆஸ்திரேலியா சூப்பர் எட்டுல எல்லா மேட்சும் ஜெயிக்கணும். அதுதான் என் ஆசையும். அப்பதான் செமியில் அது கோவிந்தா ஆகுறதை பார்த்து சந்தோசப்பட முடியும். அதுவரைக்கும் ஆடுங்க!

சாத்தான்குளத்தான்

சாத்தான்குளத்தான்

Naufal MQ said...

//நீங்கள் ஆயிரம் சொல்லுங்கள். முரளிதான் என் நாயகன்
//

அப்போ நான் தந்த புள்ளி விபரம் எல்லாம் வேஸ்டா?

//வெள்ளைத்தோலை விட்டு வெளிய வாங்கப்பா என்று சொன்னது சும்மா விளையாடத்தான் :-)
//
அதானே பார்த்தேன்.

//ஆஸ்திரேலியா சூப்பர் எட்டுல எல்லா மேட்சும் ஜெயிக்கணும். அதுதான் என் ஆசையும். அப்பதான் செமியில் அது கோவிந்தா ஆகுறதை பார்த்து சந்தோசப்பட முடியும். அதுவரைக்கும் ஆடுங்க!
//
கனவு காணும் வாழ்க்கையாவும்.....

Naufal MQ said...

ஆஸ்திரேலியா மீண்டும் நம்பர் 1 ஆனது.

http://www.icc-cricket.com/odi/

முத்துகுமரன் said...

//ஆஸ்திரேலியா சூப்பர் எட்டுல எல்லா மேட்சும் ஜெயிக்கணும். அதுதான் என் ஆசையும். அப்பதான் செமியில் அது கோவிந்தா ஆகுறதை பார்த்து சந்தோசப்பட முடியும். அதுவரைக்கும் ஆடுங்க!
//

குருவே சரணம்! சிஷ்யனின் மனமறிந்து சபையில் உரைத்த உங்கள் அருளுக்கு நன்றி

Naufal MQ said...

//முத்துகுமரன் said...
குருவே சரணம்! சிஷ்யனின் மனமறிந்து சபையில் உரைத்த உங்கள் அருளுக்கு நன்றி
//

வாங்க! வாங்க!! துபையிலதான் இருக்கீங்களா?

பூனைக்குட்டி said...

//ஆஸ்திரேலியா சூப்பர் எட்டுல எல்லா மேட்சும் ஜெயிக்கணும். அதுதான் என் ஆசையும். அப்பதான் செமியில் அது கோவிந்தா ஆகுறதை பார்த்து சந்தோசப்பட முடியும். அதுவரைக்கும் ஆடுங்க!//

இது முழுக்க முழுக்க இந்திய கிரிக்கெட் மெண்ட்டாலிட்டி, ஏன்னா இங்க இந்தியா ஒரு மேட்ச் ஜெயித்தால் அது லக்கில் ஜெயித்தார்களா இல்லை திறமையில் ஜெயித்தார்களா என்ற சந்தேகம் வராமல் இருக்காது.

அப்படியில்லாமல் ஒவ்வொரு மேட்சையும் திறமையால் ஜெயிப்பவர்களுக்கு, லீக் ஆட்டமும் ஒன்று தான் செமி பைனல்ஸும் ஒன்றுதான்.

சரி சரி சீக்கிரம் மழை நீர் சேகரிப்புத் தொட்டி கட்டுங்க துபாயில். இன்னும் ஐந்து நாள் மழை நிச்சயமாகயிருக்கு என்று வானிலை அறிக்கை சொல்கிறது.

Naufal MQ said...

//இது முழுக்க முழுக்க இந்திய கிரிக்கெட் மெண்ட்டாலிட்டி, ஏன்னா இங்க இந்தியா ஒரு மேட்ச் ஜெயித்தால் அது லக்கில் ஜெயித்தார்களா இல்லை திறமையில் ஜெயித்தார்களா என்ற சந்தேகம் வராமல் இருக்காது.
//
மேட்ச் ஃபிக்ஸிங்-கை மறந்துட்டீங்க. :)

//அப்படியில்லாமல் ஒவ்வொரு மேட்சையும் திறமையால் ஜெயிப்பவர்களுக்கு, லீக் ஆட்டமும் ஒன்று தான் செமி பைனல்ஸும் ஒன்றுதான்.//

ரிப்பீட்டே.

//சரி சரி சீக்கிரம் மழை நீர் சேகரிப்புத் தொட்டி கட்டுங்க துபாயில். இன்னும் ஐந்து நாள் மழை நிச்சயமாகயிருக்கு என்று வானிலை அறிக்கை சொல்கிறது. //

ஹா ஹா. கட்ட வேண்டியிருக்கும். பாலை சோலையானால் நல்லது தானே!

A Simple Man said...

ட்ரிக்கி பாண்டிங்கும் அவரது அணியினரும் செமி பைனலில் டரியலாகப் போகிறார்கள் பார்த்துக் கொண்டே இருங்கள் :))

Naufal MQ said...

//Abul said...
ட்ரிக்கி பாண்டிங்கும் அவரது அணியினரும் செமி பைனலில் டரியலாகப் போகிறார்கள் பார்த்துக் கொண்டே இருங்கள் :))
//
டரியலாவது பொரியலாவது. பொறுத்திருந்து பாருங்கள் நண்பரே.

Anonymous said...

ரிக்கி பாண்டிங் கிராபைட் மட்டையைப் பயன்படுத்தி ஒட்டங்களை குவிக்க வில்லையா???

2003-உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வார்னே ஏன் நாட்டிற்கு அனுப்பப்பட்டார்???

Anonymous said...

ஏதோ என்னால் முடிந்தது:

muraLi:
----------------------------
Bowling Mat Wkts 4 5 10
----------------------------
Tests 110 674 40 57 19
ODIs 293 444 11 8 0
----------------------------

vaarnee:
----------------------------
Bowling Mat Wkts 4 5 10
----------------------------
Tests 145 708 48 37 10
ODIs 194 293 12 1 0
----------------------------

muraLi 35 teSt poottikaL kuRaivaaka viLaiyaadi 34 vikkettukaLthaan kuRaivaaka eduththuLLaar.

Naufal MQ said...

//Anonymous said...
ரிக்கி பாண்டிங் கிராபைட் மட்டையைப் பயன்படுத்தி ஒட்டங்களை குவிக்க வில்லையா???

2003-உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வார்னே ஏன் நாட்டிற்கு அனுப்பப்பட்டார்???
//
நீங்கள் சொல்ல வருவது என்னவென்று புரியவில்லை அனானி நண்பரே.

Naufal MQ said...

//muraLi 35 teSt poottikaL kuRaivaaka viLaiyaadi 34 vikkettukaLthaan kuRaivaaka eduththuLLaar. //

வார்னே பெரும்பாலான விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எடுத்துள்ளார் என்பது தான் இங்கு நடக்கும் விவாதம். அதற்காக, முரளி நல்ல பந்து வீச்சாளர் இல்லை என்றாகிவிடாது. மோகன்தாஸ் கூறியது போல வார்னே பெரும்பாலும் விக்கெட்டுகளை இன்னொரு விக்கெட் விழுங்கி மெக்ராத்துடன் பங்கிட நெர்ந்தது. முரளிக்கு (வாஸிடமிருந்து) அத்தனை பெரிய சவால்கள் இருக்கவில்லை.

Anonymous said...

2003-உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வார்னே ஏன் நாட்டிற்கு அனுப்பப்பட்டார்???
//
நீங்கள் சொல்ல வருவது என்னவென்று புரியவில்லை அனானி நண்பரே.

Shane Warne is one of the greatest bowlers of all time. We cann't deny that. But, he has his own flaws.

This link may explain that:

http://en.wikipedia.org/wiki/2003_Cricket_World_Cup#Shane_Warne.27s_drug_test