Tuesday, April 10, 2007

கேப்டன் பதவி வேண்டாம்

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும்புயல் வீசி அடங்கியிருக்கிறது. பயிற்சியாளர் மறைவு, அணித்தலைவரின் பதவி விலகலால் இந்த இரண்டு இடங்களும் தற்போது வெற்றிடமாக உள்ளது. இதனால், பயிற்சியாளரையும் அணித்தலைவரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுக்கும் பணியில் மும்முரமாக உள்ளது.

இதில், தற்போது அணியில் ஆடி வரும் மூத்த வீரரான யூனிஸ் கான் அணித்தலைவராக்கப் படுவார் என்று செய்திகள் கசிந்தன. யூனிஸ் கானுக்கு முன்னாள் வீரர்களான பல 'கான்'களிடமிருந்து பலத்த ஆதரவு உள்ளது. இம்ரான் கான் இதை வெளிப்படையாவகே பலமுறை தெரிவித்துள்ளார்.

இச்சூழ்நிலையில், யூனிஸ் கானுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கும் நெருங்கிய வட்டாரங்களிலிருந்து 'யூனிஸ் கான் அப்பதவியை தற்போதய சூழலில் விரும்பவில்லை' என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அணி தற்போதிருக்கும் சூழ்நிலையில் தலைமை பொறுப்ப ஏற்க அவருக்கு தயக்கம் இருப்பதாக தெரிகிறது. மேலும், அவருக்கு அணியிலுள்ள பல வீரர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காது என்றும் அவர் பயப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால், பாகிஸ்தான் அணி புதிய கேப்டனை தேர்ந்தெடுப்பதில் திணறி வருகிறது. யாரை நியமிக்கப்பட்டாலும் ஒரு ஆண்டிற்காவது அணியை சீர் செய்ய படாத பாடு பட வேண்டியிருக்கும்.

2 comments:

இப்னு ஹம்துன் said...

சமீப கிரிக்கெட்டைப் பற்றி, அனைவரும் சிரிக்கட்டுமென்று ஒரு வெண்பா எழுதினேன்:

அயல்நாட்டில் உண்டெமக் காறுதல் என்பேன்
புயற்போன்ற பாக்கிஸ்தான் புல்லில் பணிய
அயர்லாந்தும் வென்ற அதிசய மானபின்
உயர்வு நமக்காம் உணர்!

Naufal MQ said...

வாங்க இப்னு ஹம்துன்,
'நமக்கொரு கண் போனால், எதிரிக்கு ரெண்டு கண்ணு போகனும்' அப்படிங்கிற நம்ம தத்துவத்தை அழகா சொல்லியிருகீங்க. :)