Monday, April 16, 2007

இது எப்படி இருக்கு?

இரண்டு யானைகளை அடி சறுக்க வைத்த வங்கதேசத்திற்கு ஒரு பெரிய யானையை வீழ்த்தியிருந்த அயர்லாந்து ஆப்பு வைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் அயர்லாந்து அணி வங்கதேச அணியை 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் வங்கதேசத்தின் அரை-இறுதி ஆசை தகர்ந்ததுள்ளது.




வங்கதேச அணி சூப்பர் 8-ல் தெ.ஆ அணியை வீழ்த்தியதால் அரை-இறுதிக்கு தகுதி பெறும் நான்காவது (ஆஸி, நியூ & இலங்கை - உறுதி செய்ப்பட்ட அந்த மூன்று அணிகள்) அணிக்கான இடத்தை திறந்து வைத்தது. அதற்கு தெ.ஆ, இங்கிலாந்து, வங்கதேசம் & மே.இ அணிகள் பலமாக போட்டியிட்டன. ஆனால் வங்கதேசத்தின் பயணத்திற்கு அயர்லாந்து முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் அரை-இறுதிக்கு இடம்பெறும் நான்காவது அணிக்கான போட்டியில் இப்போது தெ.ஆ-வும் இங்கிலாந்தும் & மே.இவும் மட்டுமே மிஞ்சியுள்ளன.(பதிவு முதல் பின்னூட்டத்திற்கு பிறகு திருத்தப்பட்டுள்ளது).

அதாவது, இங்கிலாந்திற்கு இரண்டு போட்டிகளும் தெ.ஆ-விற்கு ஒரு போட்டியும் மிஞ்சியுள்ளன.இங்கிலாந்து 4 புள்ளிகளுடனும் தே.ஆ 6 புள்ளிகளுடனும் உள்ளன. இதில் இங்கிலாந்து - தெ.ஆ போட்டியில் தெ.ஆ வென்றால் தெ.ஆ 8 புள்ளிகள் பெறும். அதனால் எளிதாக தெ.ஆ அரை-இறுதியில் நுழைந்து விடும். இங்கிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் இங்கிலாந்தும் 6 புள்ளிகள் பெற்று தெ.ஆ அணியுடன் சமநிலை பெற்றுவிடும். ஆனால், இங்கிலாந்திற்கு மே.இ-வுடன் போட்டி ஒன்று மீதமுள்ளது. அதனால், இங்கிலாந்து அதை வென்றால் 8 புள்ளிகள் பெற்று அரை-இறுதிக்கு நுழையும். இங்கிலாந்து ஒருவேளை தெ.ஆ அணியுடனான போட்டியில் தோற்று மே.இ அணியை வென்றால் ரன் ரேட் அடிப்படையில் அரை-இறுதிக்கு செல்லும் அணி தேர்ந்தெடுக்கப்படும். மே.இ-அணியுடனான இங்கிலாந்து போட்டிதான் சூப்பர் 8-ல் இறுதி போட்டி என்பதால் இங்கிலாந்து அணிக்கு தெளிவான வாய்ப்புள்ளது (தெ.ஆ-வுடனான போட்டியை வென்றிருந்தால்).

(நான் குறிப்பிட மறந்த மற்றொரு நிலை முதல் பின்னூட்டத்தில் அனானி குறிப்பிட்டுள்ளார். அதை படிக்கவும். நன்றி அனானி.)

ஆஸ்திரேலியாவிற்கு சவால் விடப்போகும் அணியாக ஜம்பம் விடப்பட்ட தெ.ஆ-வின் இன்றைய நிலை அரை-இறுதிக்கு நுழைவதற்கே தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

8 comments:

Anonymous said...

தெ. ஆ. இங்லாந்திடம் தோற்று, மே. இ. பங்ளாதேசிடமும், இங்லாந்திடமும் அதிக நெட் ரன்ரேட்டுடன் வென்றால், மே. இ. க்கு இன்னும் வாய்ப்புள்ளது.

சரியா?

Naufal MQ said...

ஒரு சின்னப்புள்ளத்தனமான கணக்கு. இந்த உலகக் கோப்பையில் அணிகளை வரிசைப்படுத்துகையில் இந்தியாவையும் தெ.ஆ-வையும் வென்றதால் வங்கதேசம் இந்த இரண்டு அணிகளையும் பெரிய அணி. அப்புறம், பாகிஸ்தனையும் வங்கதேசத்தையும் வென்றதால் அயர்லாந்து மேற்கூறிய நான்கு அணிகளையும் வென்றதற்கு சமம். ஹி ஹி. ஆக, தர வரிசை முறையே 6. அயர்லாந்து, 7. வங்கதேசம், 8. தெ.ஆ, 9. இந்தியா, 10. பாகிஸ்தான் என வர வேண்டும்.

அட அட! என்ன ஒரு கணக்கு இல்லை? சும்மா கிண்டலுக்குத்தாங்க. அடிக்க வந்துடாதீங்க.

Naufal MQ said...

//மேற்கு இந்திய தீவுகள் said...
தெ. ஆ. இங்லாந்திடம் தோற்று, மே. இ. பங்ளாதேசிடமும், இங்லாந்திடமும் அதிக நெட் ரன்ரேட்டுடன் வென்றால், மே. இ. க்கு இன்னும் வாய்ப்புள்ளது.

சரியா?
//
ஆஹா! ஆட்டையில உங்களை மறந்தாச்சோ... Sorry Sir. ஒருவேளை நீங்க சொன்னதுதான் நடக்குமோ??

ஆவி அண்ணாச்சி said...

எது எப்படியோ,

இப்படியே கடுப்பேற்றிக் கொண்டிருக்கும் ஃபாஸ்ட் பவுலர் உலகக் கோப்பை முடியும் முன் எங்க ஆளுகளுக்கு பிரேக் ஃபாஸ்டா ஆவது உறுதி.

Naufal MQ said...

//ஆன்லைன் ஆவிகள் said...
எது எப்படியோ,

இப்படியே கடுப்பேற்றிக் கொண்டிருக்கும் ஃபாஸ்ட் பவுலர் உலகக் கோப்பை முடியும் முன் எங்க ஆளுகளுக்கு பிரேக் ஃபாஸ்டா ஆவது உறுதி.
//
ஆஹா! வந்துட்டாய்ங்கய்யா!வந்துட்டாய்ங்க!!

ஆவிகளுக்கு பரிசாக அளிக்கப்பட்ட கிழிந்த பெர்முடா போதாதா? இன்னும் என்ன வேண்டும்? ஏன் இந்த கடுப்பு?

மணிகண்டன் said...

//இங்கிலாந்து ஒருவேளை தெ.ஆ அணியுடனான போட்டியில் தோற்று மே.இ அணியை வென்றால் ரன் ரேட் அடிப்படையில் அரை-இறுதிக்கு செல்லும் அணி தேர்ந்தெடுக்கப்படும்//

இங்கிலாந்து தெ.ஆ அணியிடம் தோற்றால், தெ.ஆ அரை-இறுதிக்கு போயிடுங்க. ரன் ரேட் எல்லாம் கணக்கில வராது.

Naufal MQ said...

//இங்கிலாந்து தெ.ஆ அணியிடம் தோற்றால், தெ.ஆ அரை-இறுதிக்கு போயிடுங்க. ரன் ரேட் எல்லாம் கணக்கில வராது.//

வாங்க மணிகண்டன்,
சுற்றுலா எல்லாம் எப்படி இருந்தது.
அதையும் நான் சொல்லியிருக்கேன். :)
//இதில் இங்கிலாந்து - தெ.ஆ போட்டியில் தெ.ஆ வென்றால் தெ.ஆ 8 புள்ளிகள் பெறும். அதனால் எளிதாக தெ.ஆ அரை-இறுதியில் நுழைந்து விடும். //

மணிகண்டன் said...

//சுற்றுலா எல்லாம் எப்படி இருந்தது//

ரொம்ப நல்லா இருந்த்தது நண்பரே இந்தியா-பெர்முடா மாதிரி :)