Sunday, April 29, 2007

ஹாட்ரிக்!!!

நான் எதிர்பார்த்தது போலவே ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன். எதிர்பார்த்தது போலவே சமிந்தா வாஸுக்கும் முரளிக்கும் சுளுக்கெடுப்பு. எதிர்பார்த்தது போலவே இலங்கையிடமிருந்து ஒரு சிறிய போராட்டம். ஆக, ஆஸ்திரேலியா கடந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் தோற்கடிக்கப்படாத ஒரு அணியாக 2011-ல் களமிறங்கும்.

இலங்கை ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டுமெனில் அது 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருக்கக் கூடாது. ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாக இருந்தாலொழிய ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது என நேற்று என்னுடைய நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதுபோலவே மழை குறுக்கிட்டு 38 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் மேலும் மழை குறுக்கிட்டால் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உருவான நிலையில், டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது எனக்கு சிறிது ஆச்சர்யம் தான். காரணம், மழை குறுக்கிடும் (ஏற்கனவே குறுக்கிட்டு) போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமான சூழல் உருவாகும். அப்படியிருக்க துணிந்து பாண்டிங் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.அவ்வளவுதான், கில்கிறிஸ்ட் வெறி பிடித்தது போல் ஒரு ஆட்டம் ஆடினார். அவருடன் பேட் செய்து கொண்டிருந்த ஹேடன் இந்த உலகக் கோப்பையின் அதிகமான ஓட்டங்களை குவித்திருப்பவர். ஆனால், கில்கிறிஸ்ட் ஆடிய ஆட்டத்தின் முன்பு ஹேடன் ஒரு கொசு போல தோற்றமளித்தார். இலங்கை இரண்டாவது பேட் செய்வதால், எந்த சூழ்நிலையிலும் மழை குறுக்கிடலாம், அதனால் டக்வர்த்-லூயிஸ் முறையில் இலங்கை எந்த நிலையிலும் முன்னிலை பெற இயலாதவாறு ஓட்ட விகித்ததை அதிகரித்து கொண்டே சென்றனர். ஒரு கட்டத்தில் எளிதாக 300 ஐ தொடும் என நினைத்தேன். ஆனால் இறுதி சில ஓவர்களை இலங்கை அணியினர் சிறப்பாக வீசினர். 38 ஓவர்களில் 281 என்பது கடினமான இலக்கை கொடுத்தனர். துருப்புச் சீட்டுகளை சூப்பர்-8 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கெதிராக ஒளித்து வைத்த இலங்கையின் தந்திரம் பலிக்கவில்லை. வாஸுக்கும் முரளிக்கும் ஈவு இரக்கமில்லாமல் அடி விழுந்தது.

இதனை சேஸ் செய்வது என்பது கடினம். ஆனால், ஒரு வேளை மழை குறுக்கிட்டு டார்கெட் மாற்றப்பட்டால்? அது மட்டுமே போட்டியை சுவராசியமாக்கியது. மற்றபடி ஜெயசூர்யாவும், சங்கக்கராவும் இலக்கை விரட்டிய போதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை இலங்கை வெல்லும் என்று. இலக்கு அப்படி. இலங்கைக்கு வாய்ப்பு உள்ளதெனில் அது மழை மூலமே மட்டுமே இருந்திருக்க முடியும். இறுதியில் நினைத்தது போலவே ஆஸ்திரேலியா வென்றது. இடையிடையே மழை குறுக்கிட்டது இலங்கைக்கு எரிச்சலை தந்திருக்கும்.


இத்தனை பெரிய போட்டியின் இறுதியான முத்தாய்ப்பான கட்டத்தில் வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கியது மைதானம். ஆஸ்திரேலியாவின் கொண்டாட்டம் இருளில்தான் நடந்தது.

எது எப்படியோ ஆஸ்திரேலியா மட்டுமே இந்த கோப்பையை வெல்ல தகுதியுள்ள அணி. ஆஸ்திரேலியாவுக்கும் உலகின் மற்ற அணிகளுக்குமிடையேயான தூரம் அதிகரித்துள்ளது. இந்திய அணிக்கான சீருடை தைக்க கொடுத்து நான்காண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யச் சொல்லியிருக்கும் வாண்டுகள் கூட்டம் அடுத்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடுமா?

Player of the Final - Gilchrist
Player of the World cup - McGrath

Well deserved. Aussies are real champions. பாராட்டுக்கள்!

இடையிடையே போட்டியை பற்றி தொலைபேசியில் அலசிய (குழப்பிய) அபிஅப்பா மற்றும் சோகத்துடன் உரையாடிய தம்பிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

8 comments:

Anonymous said...

மக்கா ஃபாஸ்ட்டு,

நல்லாத்தாண்டே இருக்கேன் :-) என் பதிவுல் பாருங்க

சாத்தான்குளத்தான்

Pot"tea" kadai said...

ஹலோ, மறைத்துவைக்கப்பட்டிருந்த மலிங்கா துவைக்கப்பட்டது பற்றி உங்கள் கருத்து?

முதல் ஸ்பெல்:
4 ஓவர்கள், 1 மெய்டன், ஆறு ரன்கள்

இரண்டாம் ஸ்பெல்:
4 ஓவர்கள்,2 விக்கெட்டுகள், 43 ரன்கள்..

சின்னப்பசங்கடா...யாருகிட்ட...

கில்லி அப்டிதான் சொன்னாராம் எல்லா லங்கன்ஸ் கிட்டேயும்...

அவுஸ்திரேலியாவை ஜெயிக்கனும்னா மற்ற நாடுகள் எல்லாம் இன்னொரு ஜெனரேசன் முன்னாடியே பிறக்கனும்...

ஆஸீ ரூல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

அபி அப்பா said...

பாஸ்ட், குழப்பத்துக்கு காரணம் என் நண்பர் தான். உணர்ச்சி வசப்பட்டு அவர் ஒரு ஸ்கோர் சொல்ல அதை நான் உங்க கிட்ட கன்பார்ம் செய்துக்க கேட்டேன். பின்ன தான் தெரிஞ்சுது நண்பர் நல்ல ஃபார்ம்ல இருந்தார்ன்னு:-)(அய்யோ காந்தி செத்துட்டாரான்னு அவர் ராத்திரி முழுக்கும் கேட்டுகிட்டு இருந்தார்):-))

Naufal MQ said...

அண்ணாச்சி பதிவு பார்த்தேன். ரகளை பண்ணியிருக்கீங்க. :)

Naufal MQ said...

//Pot"tea" kadai said...
ஹலோ, மறைத்துவைக்கப்பட்டிருந்த மலிங்கா துவைக்கப்பட்டது பற்றி உங்கள் கருத்து?
//

மலிங்காவையெல்லாம் நான் ஒரு பொருட்டாக எடுத்ததில்லை. முரளி & வாஸ் துவைக்கப்பட்டதில் உள்ள மகிழ்ச்சி மலிங்காவை துவைக்கும் போது வரவில்லை. ;)

Naufal MQ said...

அபிஅப்பா,
நண்பர்கிட்ட கவனமா இருங்க. நாளைக்கு நீங்க யாருன்னு கேட்டாலும் கேட்பார்.

Avanthika said...

hmmmmmmmmmmmmmmmmmmmmm

ok..ok..

A Simple Man said...

தொடர்ந்து 3ஆவது முறையாக உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு எனது பாராட்டுக்கள்..