Thursday, January 3, 2008

மூவருமா இப்படி?

நடந்து வரும் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மீள்வரவு நன்றாகவே அமைந்தது ஆர்.பி. சிங்கின் அற்புதமான பந்து வீச்சு மூலம். ஆனாலும் அதற்கு உலை வைக்கும் விதமாக அமைந்தது நேற்று (முதல் நாள்) நடுவர்கள் தந்த தீர்ப்புகள்.

ஸ்டீவ் பக்னர், சில காலமாகவே இந்தியர்களின் கொலை வெறியை தூண்டி வருபவர். இவரைப் பற்றி பலமுறை இந்திய அணி புகார் கொடுத்ததும் நினைவிருக்கலாம். இவர், அதுபற்றியெல்லாம் கவலையில்லாமல் மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி வருகிறார். நேற்று அவர் சைமண்ட்ஸிற்கு கொடுத்த வாழ்க்கையால், சைமண்ட்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

அவர் மட்டுமல்ல, ஆஸி அணித்தலைவர் பாண்டிங் 17 ஓட்டங்கள் எடுத்திரிந்த நிலையில் 'தல' கங்குலியின் பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்தார். இதை இல்லையென்று சொன்னவர் மற்றொரு நடுவர் மார்க் பென்ஸன். ஆனால், இவர் தனது தவற்றை இன்னொரு தவறின் மூலம் இந்தியாவிற்கு உதவினார். அதாவது இன்ஸைட்-எட்ஜ் ஒன்றிற்கு பாண்டிங்கை (55 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில்) lbw முறையில் அவுட் வழங்கினார். இருந்தாலும் இந்தியாவிற்கு 38 ஓட்டங்கள் நட்டமே. இந்தியாவிற்கு சாதகமானலும் இதுவும் தவறான தீர்ப்பே என்பதில் இருவேறு கருத்தில்லை.

சரி, இந்த இரண்டு நடுவர்களுக்கும் தீர்ப்பளிப்பது அத்தனை சுலபமல்ல, பலவகையான சிக்கல்கள் நடுவர்களுக்குள்ளது, ரசிகர்களின் கூச்சல்களால் இவர்களுக்கு மட்டையில் பந்து படும் சத்தம் கேட்பதில் சிக்கலுள்ளது என்று சல்லியடித்தால், மூன்றாவது நடுவருக்கு என்ன சிக்கலுள்ளது? இந்த போட்டியின் மூன்றாவது நடுவர் ஆஸியின் ப்ரூஸ் ஆக்ஸன்ஃபோர்ட். இவரும் சைமண்ட்ஸுக்கு புத்தாண்டு பரிசை வழங்கினார். ஒரு ஸ்டம்பிங் அவுட்டை இல்லையென்று சொன்னார். இத்தனைக்கும் இவர் அமர்ந்திருப்பது பலவகையான முன்னேற்றமடைந்த தொழில்நுட்பங்களுக்கு முன்.

எனக்கென்னவோ மூன்றாவது நடுவரின் தீர்ப்பு மிகுந்த ஒருதலையாகவே படுகிறது. மற்ற இருவரையாவது மன்னித்து விடலாம். எத்தனையோ முறை கிரிக்கெட்டில் தொழில்நுட்பத்தின் தேவை குறித்து இடையிடையே பேசி ஓய்ந்தாலும், மூன்றாவது நடுவரின் இத்தகைய பாதாள சறுக்கல்களின் மூலம், இதில் தொழில்நுட்பந்தான் உண்மையான காரணியா என்ற நெருடலை ஏற்படுத்துகிறது. இதற்கு முடிவுதான் என்ன என்பது ஐ.சி.சி-யின் ஒருதலை சாரா முடிவுகளைப் பொறுத்தே இருக்கும்.

இதுபோலவே இந்தியாவிற்கெதிராக செயல்பட்ட மற்றொரு நடுவர் தற்போது காணாமல் போன அசோக்-டி-சில்வா. இவரும் ஸ்டீவ் பக்னருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல.

இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தியா வெல்ல வேண்டும்? அதுவும் ஆஸ்திரேலியாவிற்கெதிராக?

11 comments:

Naufal MQ said...

மேற்சொன்ன பிரச்சனைக்குரிய வீடியோக்களை வலையேற்ற முயற்சித்து பலனளிக்கவில்லை. மன்னிக்கவும். மீண்டும் முயன்று பார்க்கிறேன்.

குசும்பன் said...

///இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தியா வெல்ல வேண்டும்? அதுவும் ஆஸ்திரேலியாவிற்கெதிராக?//

ரொம்பதான் ஆசை படுகிறோமோ!!!

ஆனா நம்ம பேட் செய்யும் பொழுது மட்டும் அவுட் இல்லாததுக்கு எல்லாம் அவுட் கொடுத்துவிடுவாங்க!!!

ஆமா இங்க நீங்க நடுவர் நடுவர் என்று சொல்லி இருப்பது கிரிக்கெட் நடுவரைதானே!!! :)))))))))

நடுவர்கள் சரி இல்லை என்று பாஸ்ட் பவுலர் புகார் என்று பட்டையை கிளப்பிடலாமா?:))))

Naufal MQ said...

//ரொம்பதான் ஆசை படுகிறோமோ!!!//

இந்தியா அளவிற்கு ஆஸ்திரேலியா அணியை சமீப காலங்களில் சோதனைக்குள்ளாக்கிய அணி (டெஸ்ட் போட்டிகளில்) வேறேதும் இல்லை.

எத்தனை அணிகள் ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்க்ஸில் இது போல் திணறடித்துள்ளது(ஆல்-அவுட் ஆக்கியுள்ளது)??

//ஆமா இங்க நீங்க நடுவர் நடுவர் என்று சொல்லி இருப்பது கிரிக்கெட் நடுவரைதானே!!! :)))))))))

நடுவர்கள் சரி இல்லை என்று பாஸ்ட் பவுலர் புகார் என்று பட்டையை கிளப்பிடலாமா?:))))//

நான் வேண்டாம் என்று சொன்னாலும் உங்க குசும்பு அடங்கவா போகிறது? :)

Ayyanar Viswanath said...

ஒருதலைப்பட்சமான நடுவர்கள்

இப்படித் தலைப்பு வச்சிருந்திங்கன்னா இப்ப இருக்க நடுவர் சுரத்தில ஆசிப் அண்ணாச்சி பதிவ மீறி உங்களோடது சூடாயிருக்கும்..ஜஸ்ட் மிஸ் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

normally umpiring decision errors will be evened out என்பார்கள். நமக்குச் சாதகமாக ஏதாவது வருகிறதா எனப் பார்ப்போம்.

Naufal MQ said...

இன்றும் தொடர்கிறது நடுவர்களின் கூத்து... இது கங்குலியின் விக்கெட் பற்றி..

Thanks Jenny, the zoom in replays have showed that the ball may have bounced before Clarke took it. Close call but there was doubt. The umpire Benson asked Ponting and he said it was out.

Naufal MQ said...

33.1 Symonds to Dravid, OUT, oh dear, looks like there's been another questionable decision there, Dravid given out caught behind when he padded up to it outside off, the bat behind his pad and nowhere near the ball
R Dravid c Gilchrist b Symonds 38 (103b 6x4 0x6) SR: 36.89

Dear oh dear. I was just about to say that India were building up a good partnership there, when that happened. Boos ring out as the replay is shown on the big screen.

Naufal MQ said...

40.2 Lee to Ganguly, OUT, huge appeals as Clarke is adamant he caught the ball low in front of him at second slip
SC Ganguly c Clarke b Lee 51 (56b 9x4 0x6) SR: 91.07

Ganguly stands his ground, disgusted, and finally walks off. Replays suggest there is some doubt about whether it carried or not.

Replays aren't conclusive I'm afraid.

Thanks Jenny, the zoom in replays have showed that the ball may have bounced before Clarke took it. Close call but there was doubt. Benson seemed to ask someone and then gave it out, replays show Ponting indicating that the catch was taken.

Replays showing that Clarke may have grounded the ball as he rolled over after taking the catch.

நடுவர் பாண்டிங்கிடம் கேட்டு அவுட் கொடுக்கிறார். :(

Avanthika said...

அண்ணா இப்பவும் Ponting நல்லா பால க்ரவுண்ட்ல வச்சு தான் எழுந்தார்...
எத்தன decisions against India.hmmm
Dravid's bal was outside the offstump and lots of Pad in it..

worst umpiring anna

Anonymous said...

From Expressindia live commentary:

Well this is flaring up actually and I'll be surprised if some serious action is not taken following this match. Clarke had in fact grounded the ball twice when he attempted to take the catch of Ganguly. Sunil Gavaskar is absolutely livid with what has happened. His question is that how can you take the word of a person who didn't walk after edging a delivery down the leg side and a person who waited for the umpire's decision even after smashing one to the 1st slip. He is talking about Ponting in the first innings and Clarke in the second innings respectively.

Naufal MQ said...

ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றி நடுவர்களுக்கு சமர்ப்பனம் என்று பாண்டிங் கூறினாலும் வியப்பதற்கில்லை. :(