Thursday, January 31, 2008

இந்தோ-ஆஸி தொடர்:- சில நினைவுகள்

நடந்து முடிந்த இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் சில மறக்க முடியாத நிகழ்ச்சிகளை தந்திருந்தாலும் இந்தியாவை மீண்டும் வெறுங்கையுடனே திரும்ப அனுப்பியுள்ளது. ஆனால், கடந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலியாவில் இந்தியா சிறப்பாக விளையாடியதை யாரும் மறுக்க முடியாது. கடந்த (2003-04) முறை இந்தியாவின் தொடர் வெற்றிக்கு குறுக்கே நின்றவர் தனது கடைசி போட்டியில் விளையாடிய 'ஸ்டீவ்' வாஹ். இந்த முறை இந்தியாவின் வெற்றியை தட்டிப்பறித்தவர் (தனது கடைசி போட்டியில் நடுவராக??) 'ஸ்டீவ்' பக்னர் என்றால் மிகையில்லை. அடுத்த முறையாவது இந்தியா ஆஸ்திரேலியாவை நோக்கி பயணிக்கும் போது எந்த 'ஸ்டீவ்'வும் இல்லாமல் பார்த்துக்கொள்ளட்டும்.

இந்த தொடரின் இறுதியில் எனக்கு தோன்றிய சிலவை:

* ஆஷஸ் & இந்தோ - பாக் பகைமை (Rivalry) எல்லாம் காலாவதியாகிவிட்டது. இந்தோ-ஆஸிதான் இப்போ பெஸ்ட்.

* சேவாக்கிடம் இன்னமும் சரக்கு உள்ளது. இவர் ஒருவரால் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய வெற்றிகள் இன்னும் பல உள்ளன.

* இந்திய அணி நிர்வாகம் 'பேட்டிங்' என்ற பெயரில் இர்ஃபான் பத்தானின் டெஸ்ட் வாழ்க்கையையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிகிறது.

* சச்சினின் பேட்டிங்கின் பார்க்கும் போது இது ஒன்றும் அவருக்கு இறுதி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் போல் தெரியவில்லை. :)

* கும்ப்ளே இன்னும் கொண்டாடப்படாத நாயகனாகவே உள்ளார்.

* கங்குலி, டிராவிட், லட்சுமன் & கும்ப்ளே (கவனிக்கவும் சச்சின் இந்த லிஸ்டில் இல்லை) போனதிற்குப் பின் இந்திய டெஸ்ட் அணியின் நிலை மிகப்பெரிய ?

* ஆஸ்திரேலிய அணியை வெல்ல திறமை மட்டும் போதாது.

* மிகச்சிறந்த பேட்ஸ்மென்கள் ஃபார்முக்கு திரும்புவதை ஒரு கலை போல் வெளிப்படுத்துவார்கள். (டிராவிட் & பாண்டிங் )

* வார்னேக்குப் பின் ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சு???? அக்டோபரில் ஆஸியின் இந்திய வருகைக்கு காத்திருக்கிறேன். ஒருவேளை மைக்கேல் க்ளார்க்கை ஆஸ்திரேலியா நம்புமோ? :)))

* வாயைக்கட்டினால் ஆஸ்திரேலிய அணியை யாராலும் காப்பாற்றமுடியாது.

* Perth is not Aussies Birth Right.

* ஐ.சி.சி மெதுவாக பி.சி.சி.ஐ-யின் பிடிக்குள்.

* ஆஸ்திரேலியர்கள் ஓய்வு பெறுவதில் மானமுள்ளவர்கள். கில்லியின் முடிவை மற்ற அணியின் பந்துவீச்சாளர்கள் திருவிழாவகாக்கூட கொண்டாடலாம். தவறில்லை. (என்ன பாடு படுத்துனாம்பா மனுஷன்! :) )

* ப்ரெட் லீ ஒன்றும் அத்தனை மோசமான பந்துவீச்சாளர் இல்லை. ஸ்டூவர்ட் க்ளார்க் ஒன்றும் அத்தனை அபாயகரமான பந்துவீச்சாளர் இல்லை.


இன்னும் பல... பின்னூட்டங்களில் நீங்களும் சிலவற்றை பகிர்ந்துகொள்ளும் போது நானும் விடுபட்டவைகளை பின்னூட்டுகிறேன்.

12 comments:

ஹாரி said...

*இந்தியா ஒன்னும் அவ்வளவு மோசமான டீம் இல்லை.

*ஆஸ்திரேலியா ஒன்னும் அவ்வளவு பயங்கரமான டீம் இல்லை.

*எல்லா டெஸ்ட் மேட்ச்சும் போர் அடிப்பதில்லை.

இன்னும் எத்தனையோ.........

சேது said...

* இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினார்கள். With experience they improve lot more.
* இந்திய வால் இந்த தொடரில் நன்றாக ஆடினார்கள்.

Naufal MQ said...

நண்பர் ஹாரி,

நீங்க சொன்ன மூன்றும் சரி. :)

Naufal MQ said...

* டெஸ்ட் மேட்ச் ஒன்னும் சின்னபுள்ளங்கை விளையாட்டு (20-20 & 50-50) இல்லை. உங்கள் மனதில் யுவராஜ் வந்தால் நான் பொறுப்பில்லை.

* ஜஹிர் கான் ஆஸ்திரேலிய தொடர்களில் ஒரு பொட்டிக்கு மட்டுந்தான் ஃபிட்டாக இருப்பார். (கடந்த முறையும் ஒரே போட்டியிலேயெ அவுட்).

நந்தா said...

எவ்வளவோ விஷயங்களைச் சொல்லலாம் ஃபாஸ்ட் பவுலர்.

குறிப்பாக ஸ்லெட்ஜிங் விஷயத்தில்.

ஆஸ்திரேலிய வீரர்கள் சிலரிடம் இருந்த சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் மெதுவாக ஆட்டம் கண்டுள்ளது. மற்றவர்கள் குறிப்பாக இந்திய வீரர்களுக்கெதிராக பேசும் போது கொஞசமேனும் யோசித்துப் பேச வேண்டும் என்று உணர ஆரம்பித்துள்ளார்கள்.

சைமண்ட்ஸ், ஹெய்டன் போன்றவர்களின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கேள்விக்குறியாக்கப்பட்டுளது.

இஷாந்த் ஷர்மா என்ற ஒரு இளம் வீரரை இந்த தொடர் நமக்கு அறிமுகப் படுத்தி இருக்கிறது.

R.P.சிங் நான் ஸ்ரீசாந்த் மாதிரி ரொம்ப பேச மாட்டேன். ஆனால் செயலில் காட்டுவேன் என்று காட்டியுள்ளார்.

பேட்டிங்கைக் கூட விடுங்கள். பவுலிங்கில் கும்ப்ளே இல்லாத ஒரு டெஸ்ட் மேட்சை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடிய வில்லை.

Naufal MQ said...

//குறிப்பாக ஸ்லெட்ஜிங் விஷயத்தில்.

ஆஸ்திரேலிய வீரர்கள் சிலரிடம் இருந்த சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் மெதுவாக ஆட்டம் கண்டுள்ளது. மற்றவர்கள் குறிப்பாக இந்திய வீரர்களுக்கெதிராக பேசும் போது கொஞசமேனும் யோசித்துப் பேச வேண்டும் என்று உணர ஆரம்பித்துள்ளார்கள்.

சைமண்ட்ஸ், ஹெய்டன் போன்றவர்களின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கேள்விக்குறியாக்கப்பட்டுளது. //

நண்பர் நந்தா,
mental disintegration (ஸ்டீவ் வாஹிற்கு பிறகு இதுதான் ஸ்லெட்ஜிங்கு பெயராம்) விஷயத்தில் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

இஷாந்த் விசயத்தில் இன்னும் பொறுத்திருந்து பார்க்க வேண்டுமோ??

நந்தா said...

//இஷாந்த் விசயத்தில் இன்னும் பொறுத்திருந்து பார்க்க வேண்டுமோ??//

கண்டிப்பாக. ஒரே ஒரு சீரிஸை மட்டுமே வைத்து ஒருவரை ரொம்ப தூக்கிக் கொண்டாடவும் கூடாது. முழுதாய் மதிப்பிட்டு விடவும் முடியாது.

விஜய் பரத்வாஜ், கனித்கர்,ரித்தீந்தர் சிங் சோதி, சஞ்சய் பாங்கர் போன்றவர்கள் எல்லாருமே ஒரே ஒரு சீரிஸில் (மேட்சில்) விளையாடியதை வைத்தே ரொம்ப ஓவராக தூக்கி வைக்கப் பட்டார்கள். இந்தப் பாடங்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விடக் கூடாது.

இவரைத் தட்டிக் கொடுக்கலாம். நன்றாக வர வாய்ப்பிருக்கிறது.

A Simple Man said...

///ஆஸ்திரேலிய அணியை வெல்ல திறமை மட்டும் போதாது.///
இது மட்டும் புரியல ஃபாஸ்ட் பௌலர்...

கிட்டத்தட்ட இந்த டெஸ்ட் சீரிஸ் நாம ஜெயித்த மாதிரிதான்..
அம்பயர் ஒழுங்கா *ஆடாம* இருந்திருந்தா முடிவு 1-2 க்குப் பதிலா 2-1 ஆ இருந்திருக்கும் ..

ச‌ரி அடுத்த‌ ஒன் டே சீரிஸ் ஆர‌ம்பிக்குதே... இதிலாவ‌து ந‌ம்ம‌ யுவ‌ராஜ் ஆடுவாரா?? ஏற்க‌ன‌வே காய‌ம்னு சொல்லி 20-20 யும் முத‌ல் ஒன் டே யும் ஆட‌மாட்டாருன்னு சேதி.

ஒரு வேளை ஊருக்குத் திரும்பிடலாமுன்னு ஏதும் ப்ளானா :-))

-அபுல்

தங்ஸ் said...

லக்ஷ்மண் என்றைக்கும் ஆஸிக்கு சிம்ம சொப்பனம்தான்:-)

ஆஸி தொடரில் டெண்டுல்கர்-க்கு எதிராக ஒருமுறையாவது தவறாக அவுட் கொடுக்கப்படும்.

Naufal MQ said...

//விஜய் பரத்வாஜ், கனித்கர்,ரித்தீந்தர் சிங் சோதி, சஞ்சய் பாங்கர் போன்றவர்கள் எல்லாருமே ஒரே ஒரு சீரிஸில் (மேட்சில்) விளையாடியதை வைத்தே ரொம்ப ஓவராக தூக்கி வைக்கப் பட்டார்கள். இந்தப் பாடங்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விடக் கூடாது.//

இதில் பங்கார் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மேலும் சில வாய்ப்புகள் தந்திருந்தால் அவர் ஒரு சிறந்த (டெஸ்ட்டில்) தொடக்கவீரராக வந்திருப்பார். மனோஜ் பிரபாகர் போலவாவது ஒரு utility all rounder-ஆக வந்திருக்ககூடும். :)

Naufal MQ said...

// அபுல் said...
>>ஆஸ்திரேலிய அணியை வெல்ல திறமை மட்டும் போதாது.<<
இது மட்டும் புரியல ஃபாஸ்ட் பௌலர்...
//

அதாவது அபுல்,
ஆஸ்திரேலியாவை வெல்ல நடுவர்களும் நடுவர்களாக இருக்க வேண்டும் என சொல்ல வந்தேன். :)

ஆமாம், இந்த தொடர் நமக்கு 2-1 என்று முடிந்திருக்க வேண்டிய தொடர். முடிவு வருத்தமே. இருந்தாலும் கிரிக்கெட் கூறும் நல்லுலகிற்கு தெரியும் முதல் போட்டி தவிர மற்ற போட்டிகளில் யார் கை ஓங்கி இருந்ததென்று.

முத்தரப்பு தொடரில் எனக்கு அத்தனை நம்பிக்கை இல்லை நாம் வெல்வோம் என்று. யுவராஜ் உடல் காயமுற்றிருந்தாலும், மனதளவில் அவர் (ஆஸ்திரேலிய ஆடுகளங்களில்) காயமுற்றிருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. பார்க்கலாம்.

//ஒரு வேளை ஊருக்குத் திரும்பிடலாமுன்னு ஏதும் ப்ளானா :-))//

யூ மீன் தீபிகா வெயிட்டிங்??

Naufal MQ said...

// தங்ஸ் said...
லக்ஷ்மண் என்றைக்கும் ஆஸிக்கு சிம்ம சொப்பனம்தான்:-)

ஆஸி தொடரில் டெண்டுல்கர்-க்கு எதிராக ஒருமுறையாவது தவறாக அவுட் கொடுக்கப்படும்.
//

தங்ஸ்,
ரெண்டாவது கலக்கல்.