Sunday, October 5, 2008

வந்துட்டோம்ல!

"வந்துட்டோம்ல!"... அப்படின்னு நம்ம 'தாதா' அணிக்கு திரும்பியதை பத்தி சொல்லலைங்க. அவர் எப்போ அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார் மீண்டும் திரும்பி வந்தார்னு சொல்றதுக்கு? ஏந்தான் இந்த ஊடகப்பசங்க அவரை போட்டு படுத்துறாங்களோ தெரியல. விட்டா கும்ப்ளே விக்கெட் எடுக்காவிட்டால் கூட தூக்குடா கங்குலியைன்னு சொல்லுவாங்களோ என்னமோ தெரியல. இதெல்லாம் ரொம்ப டூ மச்சா இல்லை? தாதா அணிக்கு மீள்வரவு (டிச - 2006-ன்னு நினைக்கிறேன்) ஆனதிலிருந்து இந்தியாவின் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் அவர்தான் என இங்குள்ள தினசரி புள்ளிவிபரம் கொடுத்திருந்தது. ஆனா அதே தினசரி அந்த செய்தியின் தலைப்பாக வைத்திருந்தது என்ன தெரியுமா? 'கங்குலிக்கு இறுதி வாய்ப்பு'. ஐயோ கொடுமை! இது போல தலைப்பையெல்லாம் கங்குலியும் சரி நாமும் சரி கடந்த கொஞ்ச காலாம பாத்துக்கிட்டுத்தான் வருகிறோம். நமக்கொன்றும் புதிதல்ல.

அதற்காக, கடந்த இரு தொடர்களைப் போலல்லாமல் தாதாவும் சரி அவரோட பங்காளிங்களும் (அதாங்க மூத்த வீரர்கள்) சரி 'வாம்மா மின்னல்!' மாதிரி பிட்சுக்கு வந்துட்டு போகாம, நிலைச்சு நின்னு ஆடனும். குறிப்பா நம்ம டிராவிட். அவரது ஆட்டத்தின் வீழ்ச்சியே நமது அணியின் அண்மைய மோசமான தோல்விகளுக்கும் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டைமைக்கும் காரணம் என்பது எனது எண்ணம். அவரது ஆட்டத்தை சுற்றியே நமது அணியின் பேட்டிங் உள்ளது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

தேர்வு கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் நம்மூர்காரர் வந்ததுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வோம். பத்ரிநாத்தின் தேர்வும் ஸ்ரீகாந்தின் தலைமைப்பதவியும் ஒரு கோ-இன்ஸிடண்ட். அவரது தேர்வில் அரசியல் இல்லையென்றாலும், கிரிக்கெட்டில் அரசியலில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. நாம் பத்து பேர் சேர்ந்து ஒரு அணியோ அல்லது அமைப்போ அமைக்கும் போது, அதில் அரசியல் இருக்கும் போது இவ்வளவு வருமானம் (பி.சி.சி.ஐ-யின் இந்தாண்டு வருமானம் 1000 கோடியாம்) வரும் அமைப்பினுள் அரசியலில்லாமல் இருக்குமா. இதெல்லாம் சகஜமப்பா!

இதற்கிடையில், ஒருவர் மீன் பிடிக்க சென்றதால் தனது அணியில் இடத்தை இழந்துள்ளார். அதனால் இலாபம் இந்தியாவிற்கே. சைமண்ட்ஸிற்கு இந்திய ரசிகர்கள் நன்றி சொல்லிக்கொள்ளும் விதமாக நிறைய தூண்டிலும் வலையும் அனுப்பி வைச்சு, இந்திய தொடருக்கு முன் மீன் பிடிக்க போகச்சொல்லலாம். நிச்சயம் ஆஸி-க்கு அவரது இழப்பின் வலி தெரியவரும். இருந்தாலும், இது போல கடுமையான தண்டனைகளை மற்ற அணி நிர்வாகங்களும் கடைபிடிக்கலாம் என்பது எனதெண்ணம்.

இம்முறை ஆஸி அணி சற்று வலு குறைந்ததாகவே காணப்படுகிறது. இந்தியாவிற்க்கு இம்முறை வெல்ல வாய்ப்பு கூடுதலே.

இன்னமும், 'வந்துட்டோம்ல' தலைப்புக் காரணம் சொல்லல இல்ல... அதாவாது நான் கடைசியாய் பதிவிட்டது கடந்த இந்தோ-ஆஸி தொடர் முடிவில். அதன் பிறகு இப்பத்தான் முதல் பதிவு. நம்ம மூத்த மிடில்-ஆர்டர் வீரர்களின் ஃபார்ம் மாதிரி கொஞ்ச நீண்ண்ண்ட ஓய்வெடுத்து விட்டேன். நான் திரும்பி வந்தது போல அவர்களது ஃபார்மும் மீண்டு(ம்) வரட்டும்.

இனியாவது அடிக்கடி இங்கு சந்திக்கலாம்.... :)

6 comments:

Anonymous said...

Why do u support Ganguly?

Naufal MQ said...

// Ravi said...
Why do u support Ganguly?
//

ஆதரிப்பதில் தவறென்ன?

A Simple Man said...

வாங்க ஃபாஸ்ட் பௌலர் , ரொம்ப நாளாச்சு... நல்லா இருக்கீங்களா??

நீங்க பதிவு போட்டவுடனே கங்குலி கெளம்பறேன்னு சொல்லிட்டார்.
எனக்கென்னமோ அவர் இன்னும் ஒரு 10 ஒன்டே மேட்ச் ஆடலாம்னு தோணுது.. டெஸ்டிலிருந்து என்னைக்கோ விலகி வேற யாரையாவது ஸ்ட்ராங்க் ரீப்ளேஸ்மெண்டா கொண்டு வந்திருக்கலாம்..

Naufal MQ said...

நல்லாயிருக்கேன் அபுல். நீங்க?

ஆமா, தாதா போறேன்னு சொல்லிட்டார். :( அதுக்கு பின்னாடி என்னென்ன காரணங்களோ? எதாயிருந்தாலும் இந்த நேரத்துல நல்ல முடிவு.

நீங்க சொல்றதும் சரிதான். அவர் டெஸ்ட்டை விட ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆட்டக்கரார் என்பதில் ஐயமில்லை.

குசும்பன் said...

//சைமண்ட்ஸிற்கு இந்திய ரசிகர்கள் நன்றி சொல்லிக்கொள்ளும் விதமாக நிறைய தூண்டிலும் வலையும் அனுப்பி வைச்சு, இந்திய தொடருக்கு முன் மீன் பிடிக்க போகச்சொல்லலாம். //

இதைவிட ஒரு சூப்பர் யோசனை ஆஸி அனியில் இருக்கும் அனைவருக்கு இதுபோல் ஒரு தூண்டிவாங்கி கொடுத்து மீன் பிடிக்க சொல்லி டீமை விட்டு தூக்கிட்டா நல்லா இருக்கும்:))


கங்குலி திரும்ப வந்தது போல் நீங்களும் திரும்ப வந்து இருக்கீங்க, எழுங்க!

A Simple Man said...

ம்.. நலமே ..
மேட்ச் அமர்க்களமா ஆரம்பிச்சாச்சு ..
நிறைய எழுதுங்க.. மோகன்தாஸ்கூட எழுதுவார்னு நினைக்கிறேன் :-)