உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக சவுரவ் கங்குலி
களமிறக்கப்படுவார் என இந்திய அணியின் தேர்வாளர் திலிப் வெங்சர்க்கார்
கூறியுள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கங்குலி சிறப்பாக விளையாடியதாகவும்,
உலகக் கோப்பை போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என தான் நம்புவதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
கடந்த 15 மாதங்களுக்கு பின்னர் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்ற கங்குலி
நாக்பூரில் 98 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதிரடியாக விளையாடக்கூடிய
கங்குலி உலகக் கோப்பை போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று
வெங்சர்க்கார் திட்டவட்டமாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக டெண்டுல்கர் திகழ்வதாக கூறிய
வெங்சர்க்கார் அவரை அணியில் இருந்து நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும்
கூறினார்.
அதற்குத்தான் முதலிலேயே மாற்றம் ஒன்றே நிலையானது என நான் சொன்னேன். :)
5 comments:
சோதனைப் பின்னூட்டம்.
போங்க
ஃபயர் பாக்ஸில் மேட்டர் எல்லாம் ???
இப்படி தெரிகிறத.ு
மன்னிக்கவும் குமார். சரி செய்ய முயற்சிக்கிறேன். வருகைக்கு நன்றி.
இந்திய அணியை உருப்பட விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல!
//தேர்ட் அம்பயர் said...
இந்திய அணியை உருப்பட விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல!
//
யோவ் நீ உன்னோட சோலியைப் பாரு. அவர் வந்ததுக்கப்புறந்தான் நம்ம அணி ஜெயிக்க ஆரம்பிச்சுருக்கு. உனக்கு ஏன் வயிறு எரியுது?
Post a Comment