சென்ற ஐ.சி.சி ஆண்டுக்கான (ஐ.சி.சி ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை) தரவரிசைப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் சாம்பியனாக தெ.ஆ அணியும், டெஸ்ட் சாம்பியனாக ஆஸ்திரேலியா அணியும் இடம் பெற்றுள்ளன.
சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஐந்து தோல்விகள் தெ.ஆ அணிக்கு முதலிடம் பிடிக்க உதவியது. ஆனாலும், 31 மார்ச் அன்றைய நிலவரப்படி இருவரும் ஒரே புள்ளிகள் பெற்றிருந்தாலும் குறைந்த போட்டிகளில் ஆடியதற்காக தெ.ஆ அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. இதனால் தெ.ஆ அணி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை வென்றுள்ளது.
இதற்காக, தெ.ஆ அணிக்கு $175,000 ஐ.சி.சி வழங்கும். இரண்டாவது அணியான ஆஸ்திரேலியாவிற்கு $75,000 கிடைக்கும். அக்-2002 தொடங்கிய இந்த தரவரிசை பட்டியலில் முதன்முறையாக ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆனால், டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வார்னே, மெக்ராத் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், ஆஸ்திரேலியா இந்த முதலிடத்தையும் தக்க வைக்க போராட வேண்டியிருக்கும்.
2 comments:
மொத வரிசையப்பத்தி சொன்னீங்க. பின் வரிசையிலிருந்தாவது இந்தியா மொத வரிசையில இருக்கா இல்லையா?
இந்தியாவா? ஓகோ!! அப்படி ஒரு நாடு கிரிக்கெட் விளையாடுதுல்ல!! மறந்தே போச்சு. இருங்க தேடிப்பார்த்து சொல்றேன்.
Post a Comment