Thursday, April 12, 2007

ஏன்டா அம்புட்டு நல்லவனாடா நீயி?

இந்த உலகக் கோப்பையில் வங்கதேசம் நம் தேசத்தை விரட்டியடித்த அன்று போட்டி முடிந்த பிறகு நடந்த நிகழ்ச்சி இது.

இந்தியாவின் அந்த அவமான தோல்வியால் நாடே கொந்தளிச்சு போயிருந்த நேரம். நம் வீரர்கள் போட்டி முடிந்த பிறகு தங்கள் ஹோட்டலுக்கு திரும்பினர். வங்கதேச வீரர்களும். தமீம் இக்பால் அறையின் இண்டர்காம் ஒலித்தது. எதிர்முனையில் ரணகளப்பட்டு போன எதிர் அணியின் கேப்டன். டிராவிட் தமீம் இக்பாலிடம் சிறிது நேரத்திற்கு தனது அறைக்கு வந்து போகுமாறு கேட்டுள்ளார்.

தமீம் இக்பாலுக்கு பயம் கலந்த ஒரு அதிர்ச்சி. 'என்னடா இது? இன்னிக்கு நாம அடிச்சு ஜெயிக்க வச்சதுக்கு திட்டப்போறானா? இந்தியாவுல வேற எரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு திட்டி பழி வாங்கப்போறானா?' என்ற கலக்கத்துடன் டிராவிட்டின் அறைக் கதவை தட்டினார்.

டிராவிட் சிரித்த முகத்துடன் தமீம் இக்பாலை வரவேற்று இருக்கையில் அமரச்செய்து அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். மிக நேர்த்தியாகவும் துனிச்சலுடன் ஆடியதாக பாராட்டியதோடு எதிர்காலத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தமீமிற்கு நம்ப முடியவில்லை. மேலும் அதிர்ச்சியாக டிராவிட் தன் கையொப்பமிட்ட பேட் ஒன்றை தமீமிற்கு பரிசாக அளித்துள்ளார். இந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீளும்முன்பு மீண்டும் ஒரு பேட்டை கொடுத்து அதை விக்கட் கீப்பர் முஷ்ஃபிக்குர் ரஹீமிற்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாராம்.

இதை தன் வாழ் நாளில் மறக்க முடியாத பாராட்டாக தமீம் இக்பால் கூறுகிறார். தமது அணியினருக்கு டிராவிட்டின் மீது அளவு கடந்த மரியாதை இருப்பதாக தெரிவித்துள்ளார். 2004-ல் இந்தியா வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்த போது அங்குள்ள இளம் வீரர்களுக்கு டிராவிட் பல ஆலோசனைகள் வழங்கினாராம். டிராவிட்டிற்கு கிரிக்கெட் மீது மிகுந்த பற்றுள்ளதை இந்நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன என தமீம் தெரிவித்துள்ளார்.

அடடா! இது டிராவிட்டின் Sportsmanship பன்பை அழகாக எடுத்துக்காட்டுகிறது. உயர்ந்து நிற்கிறார் டிராவிட். இதை நான் ஒரு நாளிதழில் வாசித்தபோது நெகிழ்ந்துதான் போனேன்.

பருத்திவீரனின் சித்தப்பு (டிராவிடை பார்த்து): ஏன்டா அம்புட்டு நல்லவனாடா நீயி?

11 comments:

நந்தா said...

ஏன்பா டிராவிட் அந்த மேட்சுல நீ ஏன் அடிக்கவே இல்லை?

அடிக்காலாம்னுதான் நினைச்சேன். ஆனா அவங்க டீம்ல ஒருத்தன் சொன்னான், எத்தனை பால் போட்டாலும், இவன் டொக்குதான் வெக்குறான். இவன் ரொம்ம்ம்ப நல்லவன்னு சொல்லிட்டான்பா......

ஒண்ணுமில்லை அடுத்த டூர் எப்படியும் இவனுங்க கூடத்தான். நம்ம கையெழுத்து போட்ட பேட்டை கொடுத்தாவாவது இவனுங்க மட்டை போட மாட்டாங்களாங்கற ஒரு ஆதங்கம் தான்.

Naufal MQ said...

நந்தா,
பாவம் விட்ருங்க!!

நந்தா said...

நானும் விளையாட்டுக்குத்தாங்க சொன்னேன். மத்த படி இது பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான்.

Anonymous said...

எப்படியும் இலங்கை கூட ஜெயிச்சிடுவொம்ங்கற நினைபுல அப்படிபண்ணிட்டாரு .. விட்டுடுங்க

Naufal MQ said...

இதைப்படித்தவுடன் எனக்கு வாஸிம் அக்ரம் நம்ம ரமேஷுக்கு பேட் கொடுத்தது ஞாபகம் வந்தது. :)

செத்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே!!

Naufal MQ said...

//Anonymous said...
எப்படியும் இலங்கை கூட ஜெயிச்சிடுவொம்ங்கற நினைபுல அப்படிபண்ணிட்டாரு .. விட்டுடுங்க
//

ஹி ஹி!! :)

Anonymous said...

//செத்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே!! //?????

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே..!

பாவம் உயிரோடிருப்பவர்களை சாகடிக்காதீர்கள்.

Naufal MQ said...

//Anonymous said...
//செத்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே!! //?????

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே..!

பாவம் உயிரோடிருப்பவர்களை சாகடிக்காதீர்கள்.
//
அனானி நண்பரே,
அதை 'மேட்சில் தோற்றாலும்' என்று படிக்கவும். அதனால்தான் 'செத்தாலும்' என.....

நாகை சிவா said...

:-))))))))

ரொம்ப நல்லவன்ங்க அவன்

பழூர் கார்த்தி said...

// ஒண்ணுமில்லை அடுத்த டூர் எப்படியும் இவனுங்க கூடத்தான். நம்ம கையெழுத்து போட்ட பேட்டை கொடுத்தாவாவது இவனுங்க மட்டை போட மாட்டாங்களாங்கற ஒரு ஆதங்கம் தான். //

இந்த கமெண்ட் சூப்பரப்பூ :-)))

<<>>

//எப்படியும் இலங்கை கூட ஜெயிச்சிடுவொம்ங்கற நினைபுல அப்படிபண்ணிட்டாரு .. விட்டுடுங்க //

இது இன்னும் கலக்கல் :-))

<<>>

////செத்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே!! //?????
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே..!
பாவம் உயிரோடிருப்பவர்களை சாகடிக்காதீர்கள். ///

:-)))))))) பாஸ்ட் பவுலர், உங்களுக்கே யோர்க்கர் பால் வந்துருக்கு பாருங்க !!!

Naufal MQ said...

//பழூர் கார்த்தி said...
:-)))))))) பாஸ்ட் பவுலர், உங்களுக்கே யோர்க்கர் பால் வந்துருக்கு பாருங்க !!!
//

அந்த யார்க்கரை என்னுடைய முந்தைய கமெண்டில் 'நோ-பால்' என அறிவித்து விட்டேன். :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பழூர் கார்த்தி.