உலகக் கோப்பைக்குப் பின் லாரா ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.
நடந்து வரும் உலகக் கோப்பையில் மே.இ தீவு அணி தோல்விக்கு மேல் தோல்விகளை சந்தித்து வருகிறது. இருந்தாலும் அரை-இறுதிக்கு தகுதி பெறாது என்று உறுதியாக கூற இயலாத நிலை. ஆனால், அதற்குள் மே.இ தீவு அணிக்கு பலமான நெருக்கடி தொடங்கி விட்டது. லாரா பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லாராவுக்கும் அணித்தேர்வாளர்களுக்கும் பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இருந்தாலும், தனக்கு வயதாகி விட்டதால் ஒருநாள் போட்டிகளிலிருந்து இந்த உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு பெற போவதாக திட்டமிட்டுள்ளார். இவர் ஆடும் ஐந்தாவது உலகக் கோப்பையாகும். இதுவரை 297 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த உலகக் கொப்பையில் சூப்பர் 8-ல் மே.இ அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகளே உள்ளன. மே.இ அணி அரை-இறுதிக்கு தகுதி பெறவில்லையெனில்லை லாராவின் ஒருநாள் போட்டிகள் வாழ்க்கை 299-ல் முடிய வேண்டியிருக்கும்.
நமது மூத்த வீரர்கள் கவனிக்கவும். :)
3 comments:
போனால் போகட்டும் போடா...
இந்த பூமியில் நிலையாய்...
லாரா 1993ல் ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய மேட்ச் 2நாட்களுக்கு முன்பு பார்த்தேன். 284ரன்களை சேஸ் செய்யவேண்டும். ஓபனிங் இறங்கி 156 ரன்கள் எடுத்தார்.. அடேங்கப்பா என்ன ஆட்டம்..
லாராவுக்கும் சச்சினுக்கும் ஒரே மாதிரியான துரதிருஷ்டம் சரியான அணி கிடைக்காததுதான்..
//நமது மூத்த வீரர்கள் கவனிக்கவும். :)//
ஹ்ம்ம்ம்..real sports man.. நம்ம ஆளுக கவணிக்காமயையா இருப்பாங்க.பார்க்கலாம் யாரு என்ன பண்றாங்கன்னு..
Post a Comment