Monday, April 16, 2007

ஆஸி - இலங்கை மோதல்

இன்று ஆஸ்திரேலியா இலங்கையுடன் மோதவிருக்கிறது. இது ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருக்குமென பலரும் எதிர்பார்க்கின்றனர். உலகக் கோப்பை இறுதி போட்டியின் dress rehearsal என்றும் ஊடகங்கள் கூவி வருகின்றன.

இதுவரை ஆஸ்திரேலியா விளையாடிய எல்லா போட்டிகளும் ஒருதரப்பு போட்டிகளாகவே அமைந்திருந்தன. தெ.ஆ-வுடனான போட்டி பலமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் அதுவும் ஒருதரப்பாகவே முடிந்தது. ரிக்கி பாண்டிங் சொன்னது போல் இங்கிலாந்துடனான போட்டி மட்டுமே சிறிதேனும் போட்டி என்று கூறும்படி இருந்தது. அதனால், இன்றாவது போட்டி ஒரு சவலான போட்டியாக இருக்கும் என பாண்டிங் எதிர்பார்க்கிறார்.

அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆடுகளத்தன்மை இலங்கைக்கு சாதகாமாக சுழல்பந்து வீச்சுக்கு ஏற்றது. அதனால், இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ் மென்களை சோதிப்பார்கள் என்று கருதுகின்றனர். ஆனால், எனக்கென்னவோ இதுவும் ஒரு Hype ஆகவே தோன்றுகிறது. இதுவும் ஒரு ஒருதரப்பு போட்டியாகவே ஆஸ்திரேலியாவுக்கு அமையும்.இந்த உலகக் கோப்பையில் இலங்கைக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள மலிங்கா (அதாங்க, மாங்கா அடிப்பாரே அவரேதான்) காயம் காரணமாக ஆடமாட்டார் என்றே கிசுகிசுக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அவர் ஆடினாலும் ஆடாவிட்டாலும் ஒன்றுதான் என்பது எனது தனிப்பட்ட கருத்து. பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாது. :)

ஜெயசூர்யாவும் ஆஸ்திரேலியாவிற்கெதிராக தடுமாறி வந்துள்ளதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனக்கு இது போன்ற புள்ளிவிபரங்களின் மீது நம்பிக்கை இல்லை. இந்தியாவுக்கு கூட வங்கதேசத்திற்கான புள்ளிவிபரமாக 18-ல் இந்தியாவும் 1-ல் வங்கதேசமும் வென்றுள்ளதாக கூறி அதனால் இந்தியா வெற்றி பெறும் என்றார்கள். ஆனால், நடந்தது என்னவென்று அனைவருக்கும் தெரியும். அதுபோல ஜெயசூர்யா இன்று அடித்துவிட்டால்?? ஆகையால், புள்ளிவிபரங்களால் நடந்தவற்றை மட்டும் தான் கூற முடியும். அவற்றால் வருபவற்றை கணிக்க இயலாது (அடடா! என்ன தத்துவம்!).

என்னுடைய தனிப்பட்ட கருத்தாக, ஆஸ்திரேலியா எளிதில் இந்த போட்டியையும் வெல்லும். வழக்கம்போல, இன்று ஆஸ்திரேலியா மோதுவதால் துபை வானிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

16 comments:

ஜெஸிலா said...

ஆஸ்திரேலியா தான் வெற்றி பெறும் என்று ரொம்ப உறுதியா இருக்கீங்க. எனக்கு இலங்கை ஜெயிக்கனும்னு இருக்கு. காரணம் ஆஸ்திரேலியாவே தோற்ற இலங்கையிடம்தான் இந்தியா தோற்றதுன்னு ஒரு அல்ப சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் பாருங்க ;-))

//இன்று ஆஸ்திரேலியா மோதுவதால் துபை வானிலையில் மாற்றங்கள் ஏற்படும்// ஏன் அப்படி?

Fast Bowler said...

// ஜெஸிலா said...
ஆஸ்திரேலியா தான் வெற்றி பெறும் என்று ரொம்ப உறுதியா இருக்கீங்க. எனக்கு இலங்கை ஜெயிக்கனும்னு இருக்கு. காரணம் ஆஸ்திரேலியாவே தோற்ற இலங்கையிடம்தான் இந்தியா தோற்றதுன்னு ஒரு அல்ப சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் பாருங்க ;-))
//

வாங்க வாங்க! வரும்போதே அல்ப ஆசையோடுதான் வந்துருக்கீங்க. மனசை திடமாக்கிக்கிட்டு மேட்சை பாருங்க. ஏன்னா, உங்களோட இந்த அல்ப ஆசையும் நிறைவேறாதுல்ல அதான். :)

////இன்று ஆஸ்திரேலியா மோதுவதால் துபை வானிலையில் மாற்றங்கள் ஏற்படும்// ஏன் அப்படி? //
அதுவா!! அது தெரியாதா? அதாவது ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க ஆசிஃப் அண்ணாச்சியும் நண்பர் முத்துக்குமரனும் வரிஞ்சு கட்டிகிட்டு நிக்குறாங்க. எப்பவெல்லாம் ஆஸ்திரேலியா ஜெயிக்குதோ அப்போவெல்லாம் அவுங்க காதுல இருந்து புகை வரும். அம்புட்டு கோவம். அதனால, புகையெல்லாம் மேகமா மாறி மழைபெய்யும். சமீபத்துல (1976-ல் இல்லை) கூட ரெண்டு தடவை உண்மையில துபையில ஆஸி மேட்ச் அடுத்த நாள் மழை பெய்ததுன்னா பார்த்துக்குங்களேன். :)

மோகன்தாஸ் said...

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் அண்ணாச்சி, இது One Sided Match ஆத்தான் இருக்கும்.

செம அடி அடிக்கப் போறாங்க ஆஸ்திரேலியா.

Go Aussie Go!!!

Fast Bowler said...

//மோகன்தாஸ் said...
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் அண்ணாச்சி, இது One Sided Match ஆத்தான் இருக்கும்.

செம அடி அடிக்கப் போறாங்க ஆஸ்திரேலியா.
//

வாங்க தல வாங்க! எல்லாரும் ரொம்பத்தான் சும்ம பம்மாத்து காட்டுறாங்க. :)

Pot"tea" kadai said...

COME ON AUSSIE COME ON...

Anonymous said...

இலங்கையை அந்தளவுக்கு மட்டமா நினைக்காதிங்க இந்தியா மாதிரி. இலங்கை தோற்றாலும் போராடியே தொற்கும் நன்பர் பட்டாலமே. இலங்கை பேர்முடாவும் இல்லை. அவுஸ்ரேலியா இந்தியாவுமில்லை. :)

Fast Bowler said...

//Anonymous said...
இலங்கையை அந்தளவுக்கு மட்டமா நினைக்காதிங்க இந்தியா மாதிரி. இலங்கை தோற்றாலும் போராடியே தொற்கும் நன்பர் பட்டாலமே. இலங்கை பேர்முடாவும் இல்லை. அவுஸ்ரேலியா இந்தியாவுமில்லை. :)
//
இந்தியாவைப் பற்றி நாம் இங்கு பேசவே இல்லையே. சரி சரி புரியுது.

எப்படியோ ஆஸிதான் ஜெயிப்பாங்கன்னு ஒத்துக்கொண்டீர்கள்.

Nandha said...

என்னங்க எல்லோருமே ஆஸ்திரேலியா பக்கமே இருக்கீங்க. நான் இன்னிக்கு இலங்கை பக்கம் தான். முரளிதரன் around stick ல இருந்து போட ஆரம்பிச்சதுல இருந்து படம் காமிச்சுட்டிருக்காரு. யப்பா காப்பாத்திருப்பா! இன்னிக்கு இலங்கை முதல்ல பேட்டிங் பண்றது பரவா இல்லைன்னு நினைக்கிறேன். ஏன்னா அவங்க பலமே பௌலிங்தான். பார்க்கலாம்.......

Fast Bowler said...

//Nandha said...
முரளிதரன் around stick ல இருந்து போட ஆரம்பிச்சதுல இருந்து படம் காமிச்சுட்டிருக்காரு.//
இன்னிக்கு அவருக்கு இருக்கு வேட்டு.

// யப்பா காப்பாத்திருப்பா! இன்னிக்கு இலங்கை முதல்ல பேட்டிங் பண்றது பரவா இல்லைன்னு நினைக்கிறேன். ஏன்னா அவங்க பலமே பௌலிங்தான். பார்க்கலாம்.......
//

பார்க்கலாம்...

மின்னுது மின்னல் said...

ஆஸ்திரேலியா தான் வெற்றி பெறும் என்று

ரொம்ப உறுதியா
ரொம்ப உறுதியா
ரொம்ப உறுதியா..????

ஆனைக்கும் அடி சருக்கும்

அம்புட்டுதான் சொல்லுவேன்

Nandha said...

நான் ஆசைப்பட்ட மாதிரியே இலங்கை தான் ஃபர்ஸ்ட் பேட்டிங். 1.3 ஓவருக்கு 13 ரன். டேய் பசங்களா ஒழுங்கா விளையாண்டு ஆசியா கண்டத்திற்கு பெருமை சேத்திருங்கடா....

கருமம் கருமம். நம்ம ஆளுங்க ஒழுங்கா விளையாடதாதால இப்ப பாருங்க வர்றவங்க போறவங்க கிட்ட எல்லாம் கெஞ்ச வேண்டியதா இருக்கு.....

அவந்திகா said...

அண்ணா நான் நாளைக்கு சொல்றேன் யார் பக்கம்னு?..சரியா?

Fast Bowler said...

//மின்னுது மின்னல் said...

ஆனைக்கும் அடி சருக்கும்

அம்புட்டுதான் சொல்லுவேன்
//

வாம்மா மின்னல்! வந்து இப்ப சொல்லு பார்க்கலாம்.

Fast Bowler said...

//கருமம் கருமம். நம்ம ஆளுங்க ஒழுங்கா விளையாடதாதால இப்ப பாருங்க வர்றவங்க போறவங்க கிட்ட எல்லாம் கெஞ்ச வேண்டியதா இருக்கு..... //

சண்டைக்காரன் காலில் விழுவதற்கு பதில் சாட்சிக்காரன் காழில் விழுறீங்களா!! :)

Fast Bowler said...

//அவந்திகா said...
அண்ணா நான் நாளைக்கு சொல்றேன் யார் பக்கம்னு?..சரியா?
//
வாங்கக்கா!
இப்ப வந்து 'நான் ஆஸ்திரேலியா பக்கம்'னு சொல்லப் போறீங்களாக்கும்!!

மின்னுது மின்னல் said...

//
வாம்மா மின்னல்! வந்து இப்ப சொல்லு பார்க்கலாம்.
//


ஆனைக்கும் அடி சருக்கும்

அம்புட்டுதான் சொல்லுவேன்

இப்ப சருக்குனது இலங்கைக்கு...::::)))