Saturday, April 14, 2007

அரை-இறுதியில் தோல்வி!!!

இது சர்வதேச போட்டிக்கான பதிவல்ல. சொந்தக் கதை. :)

இந்த ஆண்டுக்கான எங்கள் நிறுவனத்தின் கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்து விட்டன. இதில் நான் இடம்பெற்றிருந்த கூல் மேட்ஸ் (Cool Mates) அரை-இறுதி வரை முன்னேறியது. அரை-இறுதியில் போராடி தோற்று வெளியேறினோம். இருந்தாலும் எங்கள் அணியினரின் டீம் ஸ்ப்ரிட், கடின உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு வீரர்களும் தங்களால் முடிந்தளவு அணியின் வெற்றிக்கு பாடுபட்டனர். நான் உட்பட. :) என்னுடைய பங்களிப்பு விபரம் பற்றி கேட்கிறீங்களா? மன்னிக்கவும் எனக்கு தன்னடக்கம் அதிகம். மேலும், ஆஸ்திரேலிய அணி போல் அணிக்கே முன்னுரிமை. இதோ எங்கள் படை. ஆஸ்திரேலிய அணியின் மஞ்சள் உடைதான் தேடி அலைந்தோம் கிடைக்கவில்லை. அதனால், இந்த பளிச் (மிரட்டும்) வண்ணத்தை தேர்ந்தெடுத்தோம். அருகில் ஆடு/மாடுகள் இருந்தால் ஸ்கீரினை ஆஃப் செய்து விடவும் இல்லை ஆடு மாடுகளை விரட்டி விட்டு படத்தை பார்க்கவும்.

19 comments:

ALIF AHAMED said...

men working ahaed go slow ...::)



உடைக்கு




தப்பா எடுக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

ஹாலந்து அணி அரை இறுதி வரை வந்ததே பெரிய விஷயம்தான்யா!! :)))

கதிர் said...

அந்த குருப்புல பாஸ்ட்பவுலர் யாருன்னு கண்டுபுடிச்சா என்ன பரிசு தருவிங்க பாஸ்ட்??

கதிர் said...

யோவ் மின்னல்!
எங்கய்யா போயிருந்திங்க இவ்ளோ நாளா?

என்னோட நம்பர் இருந்தா போன் பண்ணுங்க

பரஞ்சோதி said...

அய்யோ!

செமிபைனல் வரை வந்தீங்களா?

போட்டியின் விபரங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

எங்க கம்பெனியில் நடக்கும் போட்டியில் சென்ற ஆண்டை போலவே இப்போவும் இறுதி போட்டிக்கு நாங்க வந்திருக்கிறோம், எங்களுக்கு ஆஸ்திரேலியா போல் மஞ்சள் உடை தான்.

வரும் வியாழக்கிழமை இறுதிப்போட்டி, இரவு விளக்கொளியில் நடக்கிறது, கோப்பையோடு புகைப்படம் போட, வாழ்த்துங்கள்.

- பரஞ்சோதி

Naufal MQ said...

// மின்னுது மின்னல் said...
men working ahaed go slow ...::)
உடைக்கு
//
எதிர்பார்த்தது போலவே முதல் கமெண்ட். ஹி ஹி. நிறைய இப்படித்தான் கிண்டலடிச்சாங்க.

Naufal MQ said...

//இலவசக்கொத்தனார் said...
ஹாலந்து அணி அரை இறுதி வரை வந்ததே பெரிய விஷயம்தான்யா!! :)))
//
நன்றி கொத்தனாரே. நீங்களாவது ஹாலந்து அணி-ன்னு சொல்லி மானத்தை காப்பத்துனீங்க.

Naufal MQ said...

// தம்பி said...
அந்த குருப்புல பாஸ்ட்பவுலர் யாருன்னு கண்டுபுடிச்சா என்ன பரிசு தருவிங்க பாஸ்ட்??
//
என்னுடைய கையொப்பமிட்ட கிரிக்கெட் பந்து.

Naufal MQ said...

//பரஞ்சோதி said...
அய்யோ!

செமிபைனல் வரை வந்தீங்களா?
//

வாங்க பரஞ்சோதி,
ஆமாம் அரை-இறுதியில் வெளியேறிவிட்டோம். ஆமா, நீங்களும் துபைதானா?

//எங்க கம்பெனியில் நடக்கும் போட்டியில் சென்ற ஆண்டை போலவே இப்போவும் இறுதி போட்டிக்கு நாங்க வந்திருக்கிறோம்,//
வாழ்த்துக்கள். வென்று வருக! ஆமா, நீங்க எந்த நிறுவனம்? ரகசியமாகவும் தெரிவிக்கலாம்.

//எங்களுக்கு ஆஸ்திரேலியா போல் மஞ்சள் உடை தான்.
//
அதைத்தானய்யா நாங்க தேடி அலைஞ்சோம். :(

Naufal MQ said...

//போட்டியின் விபரங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.//
சரி பரஞ்சோதி, கொடுத்துட்டா போச்சு. :)

நான்கு குழுக்கள். ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள். மூன்று முதற் சுற்று போட்டிகள். ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு செல்லும். முதற் சுற்று போட்டிகள் 15 ஓவர்கள் கொண்டது.

முதல் போட்டி: எதிரணி 110 - எமதணி 59 (ஆல் அவுட்)

இரண்டாம் போட்டி: எமதனி 124 - எதிரணி 91 (ஆல் அவுட்)

மூன்றாம் போட்டி - எமதணி 143 - எதிரணி 77 (ஆல் அவுட்)

நாங்கள் குழுவில் ரன் ரேட் அடிப்படையில் இரண்டாமிடமே பிடிக்க முடிந்தது. பின்னர்,

காலிறுதி : எமதணி 110/9 (20 ஓவர்கள்) - எதிரணி 75 (ஆல் அவுட்)

அரை-இறுதி: எதிரணி 163 (20 ஓவர்கள்) - எமதணி 145/9 (20 ஓவர்களில்)

இப்ப ஓ.கே வா?

A Simple Man said...

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ...
உங்க ஆஸ்திரேலியாவுக்கும் இதே கதிதான் :))

அபி அப்பா said...

கேபிளை உள்ள விடகூடாதா பாஸ்ட்:-))

Naufal MQ said...

//அபி அப்பா said...
கேபிளை உள்ள விடகூடாதா பாஸ்ட்:-))
//
அபிஅப்பா,
மூனு நாளு பேரு கேபிளை வெளியே விட்டிருக்காங்க. நீங்க யாரைச் சொல்றீங்க?

அபி அப்பா said...

தல! இப்டி போட்டோவை மாத்துவீங்கன்னு தெரியும், அதனாலதான் மொதல்லயே சேமிச்சு வச்சாச்சு, பதிவு போட்டு கிழிக்கப்படும் என்பதி சிரம் தாழ்த்தி சொல்லிகிறேன்:-))

Naufal MQ said...

//அபி அப்பா said...
தல! இப்டி போட்டோவை மாத்துவீங்கன்னு தெரியும், அதனாலதான் மொதல்லயே சேமிச்சு வச்சாச்சு, பதிவு போட்டு கிழிக்கப்படும் என்பதி சிரம் தாழ்த்தி சொல்லிகிறேன்:-))
//
ஒரு வழிபண்ணாம விடமாட்டீங்க போலிருக்கே!!

மணிகண்டன் said...

ஐயா இதுல நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லக்கூடாதா?

Naufal MQ said...

//மணிகண்டன் said...
ஐயா இதுல நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லக்கூடாதா?
//
அதைச் சொன்னா என் தலைக்கு பெரிய ஆபத்து இருக்குன்னு பேசிக்கிறாங்க நண்பா.

பரஞ்சோதி said...

நன்றி, முழுவிபரமும் கொடுத்திருக்கீங்க. அடுத்த ஆண்டு கட்டாயம் வெல்வீர்கள்.

நான் விளையாடுவது குவைத்தில். குவைத்திலேயே பெரிய கம்பெனி எ(ந)ம்ம கம்பெனி தான் (என்ன திருவிளையாடல் நினைவுக்கு வருதா :))

நாளை இறுதிப் போட்டி, விளக்கொளியில் நடக்குது. சென்ற ஆண்டு நாங்க வென்ற போட்டிகள் விபரம்

http://paransothi.blogspot.com/2006/05/blog-post.html

http://paransothi.blogspot.com/2006/03/2006.html

இம்முறை வெற்றிக் கோப்பையோடு, போட்டியின் முழு விபரமும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன், இங்கே பதிந்து விடுங்கள்.

- அன்புடன்
பரஞ்சோதி

Naufal MQ said...

//இம்முறை வெற்றிக் கோப்பையோடு, போட்டியின் முழு விபரமும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன், இங்கே பதிந்து விடுங்கள்.

- அன்புடன்
பரஞ்சோதி //
உங்கள் தகவலுக்கும் பதிவு தொடுப்பிற்கும் நன்றி. நான் வாசித்து விட்டேன் நீங்கள் தந்திருந்த தொடுப்பை.

மேலும், வரும் வியாழன் அன்று வெற்றிக்கோப்பைய வெல்ல வாழ்த்துக்கள்!! குவைத் மிரண்டு போகனும் உங்கள் வெற்றிக்களிப்பை கண்டு!!!