இன்றைய ஆட்டங்கள் க்ரூப் பியின் முக்கியமான ஆட்டங்கள் ஆகும். இந்தியாவுடன் டையும், அயர்லாந்துடன் தோல்வியும் கண்ட இங்கிலாந்து அணி வலிமையான தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து மோதவிருக்கிறது. இந்த உலகக் கோப்பையின் சிறந்த வேகப் பந்துவீச்சு இணையை கொண்டுள்ள அணி இது. ஸ்டெயின் ஒருபுறம் அதி வேக அவுட்ச்விங்கர்களில் பயமுறுத்தினால் உடம்புக்கு குறிவைத்து பவுன்சர்களை போடுவதில் மார்க்கல் வல்லவர்.
இவர்களை அடுத்து புதிய வரவான தாகிர் . இவரது பந்துவீச்சை எப்படி இங்கிலாந்து எதிர் கொள்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏற்கனவே கவுண்டி மேட்ச்களில் இவரை அவர்கள் விளையாடி இருக்கலாம். அடுத்து தென்னாப்ரிக்காவின் பேட்டிங். இப்போதைக்கு வலுவாகத் தெரிகிறது. இதுவரை நடந்த இரண்டு ஆட்டங்களிலும் நன்றாகத் தான் விளையாடி உள்ளனர். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஒழுங்காக பந்து வீசாவிட்டால் எப்படியும் முன்னூறு ரன்களுக்கு மேல் குவித்து விடுவார்கள். எனவே இங்கிலாந்து ஜெயிப்பதும் தோற்பதும் அவர்களுடைய பந்து வீச்சாளர்களின் கையில்தான் உள்ளது.
அதேபோல் பேட்டிங்கில் பீட்டர்சன் சொதப்பாமல் ஆட வேண்டும். முப்பது நாற்ப்பது ரன்கள வேகமா அடிப்பது பின் அவுட் ஆவது என்பதை மாற்றி களத்தில் நிலைத்து நின்று ஆட முயற்சிக்கவேண்டும். அணியிங் மிடில் ஆர்டர் ரொம்ப பலவீனமா இருக்கு , கடைசி நேரத்தில் இந்தியாவை விட மோசமா சரியாறாங்க. எனவே ட்ராட் கடைசி வரை நின்று ஆட முயற்சி செய்தால் நல்லது. அதேபோல் கொளிங்க்வுத் அணிக்கு தேவையா என்று யோசிக்க வேண்டும். பந்துவீசும் சரியில்லை, பேட்டிங்கும் இல்லை அவருக்கு பதில் ரவி பொப்பாராவை சேர்க்கலாம் என்பது என் கருத்து.
பீல்டிங்கில் தென்னப்ரிகா சிறந்த என்பதால் அவர்கள் 330 அடித்தால் அது 350 க்கு சமம். ஆனால் இங்கிலாந்தின் பீல்டிங் இந்தியாவைப் போன்றுதான் இருக்கிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோற்றால் ,அவர்களது நிலை இன்னும் மோசம் ஆகும். அதே சமயம் ,பங்களாதேஷ்,அயர்லாந்து அணிகளுக்கு காலிறுதியில் நுழைய வாய்ப்புகள் இருக்கும்.
என்னை பொறுத்தவரை இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோற்க விரும்புகிறேன். புதுசா ஒரு அணி காலிறுதிக்கு வரட்டுமே. என்ன நான் சொல்றது சரியா ??
அன்புடன் எல்கே
7 comments:
முதல் மழை என்னை நனைத்ததே
>>>என்னை பொறுத்தவரை இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோற்க விரும்புகிறேன். புதுசா ஒரு அணி காலிறுதிக்கு வரட்டுமே. என்ன நான் சொல்றது சரியா ??
அதெல்லாம் சரிதான்... இன்னைக்கு ஹாட் மேட்டர் அரசியல் தான்.. அதை டச் பண்னாம ஸ்போர்ட்ஸ் டச் பண்ணி இருக்கீங்களே.. விளையாட்டுப்பிள்ளை...
சித்தப்பு இந்த வலைபூ வெறும் கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் . என்னோட ரெகுலர் வலையில் வழக்கம்போல் வரும் . கொஞ்சம் பொருது பார்க்கணும் செந்தில். எப்படி காத்து மாறும்னு அப்புறம் எழுதிகலாம்
enna oru kanippu.... relly great... really i proud to read this...
இங்கிலாந்து டப்பா டான்ஸ் ஆடிடுச்சு போல??
யாரு டப்பாங்கண்ணா டான்ஸ் ஆடுச்சு???
என்ன்மோ இந்த தடவை எதையும் கணிக்க முடியலை சகோ.நானும் இண்ட்ரெஸ்டாக பார்க்க ஆரம்பித்து விட்டேன்.
Post a Comment