அருமையாகப் படித்து விட்டுத் தேர்வெழுதச் சென்றானாம் ஒருவன், கேள்வித்தாளைப் பார்த்தால் அனைத்தும் மிக மிக சுலபமான கேள்வியாம், அட இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் எழுத எனக்கு சில நிமிடங்களே போதுமே எனக்கெதற்கு மணிக்கணக்கான நேரமென்று, எழுத ஆரம்பித்தவன்...நேரம் முடியும் போது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டியவன், தேர்வில் தோல்வியைத் தழுவினால் எப்படியிருக்குமோ...அப்படி இருந்தது..இன்றைய இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேலான போட்டியில் இந்தியாவின்
நிலை...:-(
ஆட்டம் ஆரம்பித்ததும் டெண்டுல்கர், சேவாக் அதிரடியில் ஆட்டம் கண்டது, நாக்பூர் அரங்கம். ஒவ்வொரு இந்திய ரசிகனும் அனுபவித்து பார்க்க வேண்டிய அந்த ஆரம்ப கட்ட, ஆட்டம் உண்மையில் வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய ஒன்று..!டெண்டுல்கரும், சேவாக்கும் சேர்ந்தாடும் போது, வழக்கமாக டெண்டுல்கர், பொறுமையை கடைபிடிப்பார்...அந்தப் பொறுமை இன்று மிஸ்ஸிங்க். பத்து ஓவர்களில் 87 ரன்கள், 33 பந்துகளில் டெண்டுல்கரின் அரைசதம் என அதிரடியாக ஆரம்பித்த ஆட்டம், சேவாக்கின் விக்கெட்டிற்குப் பிறகு சற்று நிதானமானது..
38 வது ஓவரில் இந்தியா தேர்ந்தெடுத்த பவர் ப்ளேவில் அருமையான ஸ்கோரை பெற்றிருக்க வேண்டிய இந்தியா, அதில் சட சட வென விக்கெட்களை பறி கொடுத்தது, ரசிகர்களை ஏமாற்றியது மட்டுமில்லாமல் இந்த பேட்டிங் மற்றும் பௌலிங்கை வைத்தா நம்ம அணி, ஆஸ்திரேலியா,
பாகிஸ்தான், மற்றும் இலங்கை போன்ற ஜாம்பவான்களை எதிர் கொள்ளப் போகிறது..? என்ற கேள்விகளையும் எதிர் கொண்டுள்ளது...( இதை ஆரம்பத்திலேயே நம்ம ஆடுகள குருப் கேட்க ஆரம்பிச்சது வேறு விசயம்)
ஒரு கட்டத்தில் 267 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களை, பேட்டிங்கில் இந்தியாவை அடிச்சிக்க யாராலும் முடியாது என்று மார் தட்ட வைத்த இந்திய அணி, சில நிமிடங்களிலேயே வெறும் 30 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து பரிதாப நிலையைக் கண்டு ரசிகர்கள்..இந்திய அணி மீதான நம்பகத்தன்மையை இழந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அடுத்து விளையாட வந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு 297 என்பது ஒரு பெரிய இலக்கு இல்லை...இந்திய பவுலர்களும் அவர்களால் ஆன முயற்சியை
செய்தும், ( பாவம் அவர்களால் என்ன செய்ய இயலும்..?) கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிகச்சாதாரணமாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியது இந்தியா...(இதில் தோற்றால் என்ன? நாம தான் நெதர்லாந்து, அயர்லாந்து போன்ற பலம் வாய்ந்த அணிகளுடன் போராடி வெற்றி பெற்றிருக்கிறோமே? :-) கென்யா, கனடா அணிகளையும் நம்ம குரூப்பிலே சேர்த்திருந்தா அவங்களை ட்ரா பண்ணியாவது எப்படியாவது காலிறுதிக்குள் சுலபமாக நுழைந்திருக்கலாம் .. சே வடை போச்சே..:-)
சரி இந்த தோல்விக்கு என்ன காரணம்...? நிபுணத்துவமாக உள்ளோடி யார் யாரையோ காரணம் சொன்னாலும், கடைசியில் இந்தப் பழியைத் தாங்க போவது டெண்டுல்கர் தான்...! ஆமாங்க அவர் என்ன தான் அடிச்சி, எவ்வளவு தான் ஸ்கோர் பண்ணினாலும் கடைசியில் அவர் செஞ்சுரி அடிச்சா, டீம் ஜெயிக்காது என்ற ஆருடம் தானே ஜெயிக்கிறது..! இப்போதும் வழக்கம் போல டெண்டுல்கர் மேலே பழியை போட்டு விட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்...! ( எத்தனை பெரியார் வந்தாலும் இதை நிறுத்த முடியாது ராசா...)...:-)
3 comments:
ஈசியாக ஜெயிக்க வேண்டிய மேட்ச்,எப்பவும் போல கடைசி நிமிடத்திலாவது ஒரு ரன் வித்தியாசத்தில் ஜெயிப்பாங்கன்னு நினைச்சதிலும் மண் விழுந்தது...பதான்,கோய்லி எல்லாம் இப்படி அடி வாங்குவாங்கன்னு யாருக்கு தெரியும்..இதுவும் விதியின் விளையாட்டோ!( எத்தனை பெரியார் வந்தாலும் இதை நிறுத்த முடியாது:)
//கென்யா, கனடா அணிகளையும் நம்ம குரூப்பிலே சேர்த்திருந்தா அவங்களை ட்ரா பண்ணியாவது எப்படியாவது காலிறுதிக்குள் சுலபமாக நுழைந்திருக்கலாம் .. சே வடை போச்சே..:-)
//
இதெல்லாம் ஐ.சி.சி-யோட சதி. :))
//asiya omar said...
இதுவும் விதியின் விளையாட்டோ!( எத்தனை பெரியார் வந்தாலும் இதை நிறுத்த முடியாது:)//
ஹா...ஹா...ஹா
Post a Comment