Thursday, March 31, 2011

நன்றி மிஸ்பா

 இந்தியா வெற்றி பெற்றதுக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு நன்றி சொல்லணும். அதுவும் குறிப்பா பெரிய அண்ணன் மிஸ்பாவுக்கு. அவர்தான் டெண்டுல்கர் குடுத்த முதல் கேட்சை மிஸ் பண்ணி கணக்கை துவங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து ஒரு மூணு கேட்ச் மிஸ் பண்ணாங்க. 

அப்புறம் பேட்டிங் பண்றப்ப ரொம்ப நேரம்  எதோ டெஸ்ட் மேட்ச்ல ஆடற மாதிரியே ஆடிக்கிட்டு இருந்தான். இவன் ரொம்ப ஸ்லோவா ஆடினதுல கூட விளையாடற வீரர்கள் அடித்து ஆட வேண்டிய கட்டாயம் ஆகிடுச்சி. அவர் விளையாடிய முதல் 42 பந்துகளில் வெறும் 17 ரன்கள் மட்டுமே அவர் அடித்தார். அப்புறம் பவர் ப்ளேல அத சரி பண்ற மாதிரி ஆடியதுக் கைக்குடுக்கலை. ரொம்ப லேட் பண்ணிட்டாங்க அடிச்சு ஆட. 


நேத்து அணியை அறிவிச்சப்ப பொதுவா மொஹாலி பிட்ச் ஸ்பின்னருக்கு உதவாது என்பதால் அச்வின்னை தேர்வு செய்யவில்லை. ஆனால் எல்லோரும் நினைச்சதுக்கு மாறா பிட்ச் ஸ்பின்னருக்கு உதவியது. கடைசியா தன் தப்பை ஒத்துகிட்டார் தோனி. இதுதான் அவர்கிட்ட பிடிச்ச விஷயம். எதோ நேத்து இந்தியாவுக்கு நல்ல நேரம். படேல், நெஹ்ரா ரெண்டு பேருமே ஒழுங்கா பந்து வீசினாங்க . 

சனிக்கிழமை இறுதிப்போட்டி மும்பையில், சச்சினின் ஊரில். தனது நூறாவது சதத்தை அங்கே அடிப்பாரா அவர் ?

அன்புடன் எல்கே 

2 comments:

Asiya Omar said...

நேற்று கொஞ்சம் ஆட்டம் சொதப்பினாலும்,வெற்றி வந்ததில் மகிழ்ச்சி.ஆனால் இந்திய அணியினரிடத்தில் டீம் எஃபெக்ட் நல்லாயிருந்துச்சு.முட்டி மோதி இறுதிக்கு வந்தாச்சு.மும்பையில் என்ன நடக்கும்னு பார்ப்போம்.

சி.பி.செந்தில்குமார் said...

நினைச்சேன்.. பெரியப்பா இன்னைக்கு இந்த பதிவு தான் போடுவார்னு.. ஏப்ரல் 2 அன்னைக்கு செம பிஸியா இருப்பீங்களோ?