Wednesday, April 25, 2007

அரை இறுதி 1 - பலே ஜெயவர்தனே!

ஐந்தாவது முறையாக அரை-இறுதியிலேயே தோற்று வெளியேறியது நியூசிலாந்து அணி. ஜெயவர்த்தனேயின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணி இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு செல்கிறது.

இதில் ஜெயவர்த்தனேயின் பொறுமையான பொறுப்பான ஆட்டத்தை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். 'ஜெயசூர்யா அவுட்டானா இலங்கை அவ்ளோதான். பெரிய ஸ்கோர் ஒன்னும் வராது' அப்படின்னு நிறைய பேர் நினைச்சிருந்தாங்க. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை நேற்று. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஜெயவர்தனே இந்த ஆட்டத்தை [115* (109b 10x4 3x6)]வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தில் முதல் பவுண்டரி வந்தது 47 வது பந்தில் தான். அந்தளவிற்கு பொறுமையாக ஆடியவர் இறுதியில் கியர் மாற்றி ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்துவதில் கவனம் செலுத்தினார். அவரது ஆட்டமே இலங்கை வெல்வதற்கு காரணம் என்றால் மிகையாகாது.250+ எடுத்தாலே வெற்றிகரமாக எதிரணியை மடக்க கூடிய திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இலங்கையில் இருப்பதால் இலங்கை வெல்லும் என்பதில் இருவித கருத்து எனக்குள் எழவில்லை. அதுபோலவே அவர்கள் பந்து வீச்சும் இருந்தது. ஒரு கட்டத்தில் 104/2 (21 ஒவர்களில்) என்ற நிலையில் நியூசிலாந்து இருந்த போது 'சைக்கிள் ஸ்டாண்டில் ஒரு சைக்கிள் விழுந்தால் அனைத்தும் வரிசையாக சரிவது' போல நியூசிலாந்து விக்கெட்டுகள் சரிந்து இலங்கை வெற்றியை உறுதி செய்தன.

நியூசிலாந்து அணியின் ஆட்டம் ஒன்றும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது வருத்தமே. ஷான் பாண்ட் முதல் ஓவரை ஓரளவு கட்டுப்படுத்தி வீசியிருந்தால் அவரது அன்றைய நாளின் பந்து வீச்சு தன்மையே மாறியிருக்குமோ என்னவோ. முதல் ஓவரில் லெக்-சைடிலேயே பந்து வீசி ரன்களை வாரிக்கொடுத்தார். பின்வந்த ஓவர்கள் அவர் ரன்களை கட்டுப்படுத்தினாலும் நம்பிக்கை குறைந்தவராகவே காணப்பட்டார். ஒரு அட்டாக்கிங் இல்லை.இந்தப் போட்டி முடிந்ததும் ஃப்ளமிங், ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் பதவியிலிருந்து தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த வெள்ளைக்கார பய புள்ளைக ரோசக்காரய்ங்க. நம்ம ஆட்களுந்தான் போனய்ங்க வந்தாய்ங்க!! ஹூம்...

இலங்கை அணி இறுதிப் போட்டியில் விளையாட தகுதி வாய்ந்த ஒரு அணியே. அதில் சந்தேகமேயில்லை. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. Well Balanced. All the best for the Final.

1992-முதல் தொடர்ந்து 5 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளிலும் ஒரு துனைக்கண்ட அணி இடம் பிடிப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது.

6 comments:

Anonymous said...

Final SL Vs SA

Naufal MQ said...

//Anonymous said...
Final SL Vs SA
//

:)

நந்தா said...

நீங்க சொன்னது மிகச் சரி. இலங்கை அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல தகுதியான அணிதான். அதுவுமில்லாமல், என்னைப் பொறுத்த வரை ஆஸ்திரேலியாவை வெல்லும் தகுதி உள்ள அணியும் இதுதான். (இதை நான் ஏற்கன்வே சொல்லியுள்ளேன்)

ஆனா இந்த இலங்கை அணியில எனக்கு பிடிக்காத ஒரே ஆளு அர்னால்ட். நானும் ஒரு 40 மேட்ச் பார்த்துட்டேன். மனுஷன் கடைசி வரைக்கும் இருந்தாலும், அடிக்க மட்டும் மாட்டேங்குறாரு.

நேத்து கடைசி டைம்ல இறங்கிட்டு, 7 டாட் பால் வெச்சாரு.

மணிகண்டன் said...

கண்டிப்பா இலங்கை தாங்க கோப்பைய வெல்லப்போகுது!!

-L-L-D-a-s-u said...

இதுவரை எந்த அணியும் ஆஸ்திரேலியாவுக்கு மிக அருகில் கூட வரவில்லை.. இலங்கை இறுதியாட்டத்தில் கௌரமாகத்தோற்றாலே வெற்றிபோலத்தான்..


ஏதாவது நடந்து, இலங்கை வென்றால் நல்லதுதான். தமிழன், எங்க வீட்டு மாப்பிள்ளை கையில் இருக்கிறது..

முரளிதரன் நொபால் போடுகிறார் என இன்னும் ஆஸ்திரேலியர்கள் அழுகுணி ஆட்டத்தை ஆரம்பித்துவிடுவார்கள்.

A Simple Man said...

நந்தா அவர்களின் கோரிக்கையை செவிமடுத்து (ஒரு கா........ல‌த்தில் ந‌ல்ல‌ அதிர‌டி ஆட்ட‌க்கார‌ர்)
அர்னால்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்..