Sunday, April 1, 2007

சபாஷ் கும்ப்ளே!

அப்பாடா! ஒரு வழியா ஒரு பெருசு முன்னாடியே அறிவிச்சது மாதிரி ஒதுங்கிடுச்சு ஒருநாள் போட்டிகளிலிருந்து.



எனக்குத் தெரிந்து, கும்ப்ளே ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெற வச்சது (Match winning performance) ஒரே ஒரு போட்டிலதான். அது ஹீரோ கோப்பை 1993 இறுதிப் போட்டியில். மே.இ தீவு அணிக்கெதிராக 6 விக்கெட்டுகள் 12 ஓட்டங்களுக்கு. மத்தபடி, அவருடைய திறமை ஒருநாள் போட்டிகளில் ஜொலித்ததில்லை. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் தலைகீழ். அவரில்லாத ஒரு டெஸ்ட் அணியை இன்றும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கடந்த 17 வருடங்களாக இந்தியா டெஸ்ட் போட்டிகளையோ/தொடரையோ வென்றிருக்குமாயின் பந்துவீச்சில் கும்ப்ளேயும் பேட்டிங்கில் ட்ராவிடும் கலக்கியிருக்கவேண்டும். இவர்கள் இருவரும் தான் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இன்றுவரை மேட்ச் வின்னர்ஸ்.

அதனால், கும்ப்ளே ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகியது எனக்கு மகிழ்ச்சியே. சபாஷ் கும்ப்ளே! அவருடை தொண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இந்தியா இன்னொரு (ப்யுஸ் சாவ்லா?) நல்ல ஸ்பின்னரை கண்டுபிடுக்கும் வரை தேவை. அது இன்னும் இரண்டாண்டுகளுக்குள் இருக்க வேண்டும். கும்ப்ளேயின் இந்த பெருந்தன்மை மற்ற வீரர்களான ட்ராவிட், சச்சின் & கங்குலிக்கும் இருந்தால் நாட்டிற்கு நல்லது. தங்களை சுமையாக ஒரு நாடே நினைக்கும் முன்பு இம்மாதிரி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு விளையாட்டு வீரனுக்கும் தான் நேசிக்கும்/வாழும் ஒரு விளையாட்டினை விட்டு விலக அவ்வளவு விரைவில் மனம் வராது. ஆனால், ரியாலிட்டியை அவர்கள் கணக்கில் கொள்ளவேண்டும். இம்மூவரும் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகி, இனி ஒரிரு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி ஓய்வு பெற முடிவெடுக்க வேண்டும். முன்வருவார்களா மும்மூர்த்திகள்?

12 comments:

ஆவி அம்மணி said...

சேவாக் ஐ விட்டுட்டீங்களே!

கும்ப்ளே உலகக் கோப்பைக்கு முன்னாடியே இந்த முடிவை எடுத்திருக்கலாம்!

Naufal MQ said...

//ஆவி அம்மணி said...
சேவாக் ஐ விட்டுட்டீங்களே!

கும்ப்ளே உலகக் கோப்பைக்கு முன்னாடியே இந்த முடிவை எடுத்திருக்கலாம்!
//
வாங்க ஆவிஸ்,

சேவாக்கிற்கு உடனடித்தேவை நிரந்தர ஓய்வல்ல. தற்காலிக தன்டனை.

Naufal MQ said...

//கும்ப்ளே உலகக் கோப்பைக்கு முன்னாடியே இந்த முடிவை எடுத்திருக்கலாம்
//
அட்லீஸ்ட் இப்பவாச்சும் செய்தாரே. :)

ஆவி அம்மணி said...

//சேவாக்கிற்கு உடனடித்தேவை நிரந்தர ஓய்வல்ல. தற்காலிக தன்டனை. //

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!

ஹிஹி...!

மணிகண்டன் said...

//சேவாக்கிற்கு உடனடித்தேவை நிரந்தர ஓய்வல்ல. தற்காலிக தன்டனை//

ஆமாங்க பவுலர், ஒரு ஒருவருஷமாவது ரஞ்சி மாதிரி போட்டிகள்ல மட்டும் ஆடி கொஞ்சம் தேறுனதுக்கு அப்புறம் இந்திய அணிக்கு வரலாம்.
கங்கூலி,சச்சின் மற்றும் டிராவிட் தானா ரிடையர் ஆகற மாதிரி தெரியலை. துரத்தினாதான் உண்டு போலிருக்கு :(

Naufal MQ said...

//கங்கூலி,சச்சின் மற்றும் டிராவிட் தானா ரிடையர் ஆகற மாதிரி தெரியலை. துரத்தினாதான் உண்டு போலிருக்கு :(//

நம்ம வாரியம் அவங்கள துரத்தும்னு நினைக்கிறீங்க? சான்ஸே இல்லை:(

A Simple Man said...

டெஸ்ட் போட்டிகளில் இந்திய வெற்றிக்குப் பெரும்பங்கு ஆற்றியவர் கும்ப்ளே என்பது மறுக்க முடியாத உண்மை.
அதே நேரம் ஒரு நாள் போட்டிகளில் அவரை மட்டுமல்ல வேறு எந்த பவுலரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.. காரணம் நம் அணி (90களுக்குப் பின்) ஒரு நாள் போட்டிகளில் **மேட்ச் வின்னிங் பவுலர்கள்** யாரையும் உருவாக்கத தவறிவிட்டது. வெறும் ஃபிளாட் பேட்டிங் பிட்சுகளை மட்டும் வைத்துக்கொண்டு பேட்ஸ்மென்கள் ரன்களை விளாசி உள்ளூர் போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் எனற மந்த மனப்பான்மையை வளர்த்து வந்திருக்கிறது.(அதைத்தான் நாம் வாய்பிளந்து கைகொட்டி ர‌சித்து வந்திருக்கிறோம்) அந்த சோகம் இன்றுவரை தொடர்வதுதான் அநியாயம்.
இந்தக் குளறுபடிகளையெல்லாம் சரிசெய்யாமல் இன்று உலகக்கோப்பையில் சீக்கிரம் வெளியேறி விட்டது என்று குய்யோ முறையோ என்று புலம்புவதும் கும்மாளம் அடிப்பதும் தேவையில்லாத வேலை.

Naufal MQ said...

அபுல்,
முற்றிலும் உங்கள் கூற்றுடன் ஒத்துப் போகிறேன். வீரர்களிடம் மட்டுமில்லை தவறு. இந்திய கிரிக்கெட்டின் அடிப்படையிலேயே (வாரியம்) தவறு இருக்கிறது. அதை சரி செய்தாலொழிய நமக்கு(இந்திய கிரிக்கெட்டிற்கு) விடிவில்லை. :(

முத்துகுமரன் said...

பாஸ்ட் பவுலர். கும்ளே பற்றியான உங்கள் கருத்திலிருந்து மாறூபடுகிறேன். கடந்த சில ஆண்டுகளாக வீணடிக்கப்பட்ட ஒரு வீரர் என்றால் அவர் கும்ளேதான். எந்த கோஷ்டியிலும் சேராது தனித்து நின்றதே அதற்கு காரணம். கேப்டன்களின் விருப்ப வீரராக அவர் இல்லாது போனது சோகம்.கடந்த 4 ஆண்டுகளாக எத்தனை எத்தனை புறக்கணிப்புகள் ஒருநாள் ஆட்டத்தொடர்களில். அதையெல்லாம் பாராது மேட்ச் வின்னிங் பவுலர் இல்லை என்பது சரியானதாக இல்லை.
எனினும் இனியும் அணியில் இருந்து டிரிங்ஸ் பாயாகவும், கேமேராமேனாகவும் இருப்பதற்கு ஓய்வெடுத்து குடும்பத்தோடு செலவிடலாம். வாழ்த்துகள் கும்ளேவிற்கு

Naufal MQ said...

//எந்த கோஷ்டியிலும் சேராது தனித்து நின்றதே அதற்கு காரணம். கேப்டன்களின் விருப்ப வீரராக அவர் இல்லாது போனது சோகம்.
//

இது உண்மை. அவர் குழுசாராதவர். இருந்தாலும் ட்ராவிட்டிற்கு நல்ல நண்பர்.

//கடந்த 4 ஆண்டுகளாக எத்தனை எத்தனை புறக்கணிப்புகள் ஒருநாள் ஆட்டத்தொடர்களில்.
//

இந்த ஆண்டுகளில் அவர் புறக்கணிக்கப்பட்டது உண்மைதான். அவர் புறக்கணிக்கப்பட தொடங்கியது 2003-லிருந்து தான். அப்போது தான் ஹர்பஜன் வளர்ந்து வந்த நேரம். ஆஸிக்கு எதிரான டெஸ்டில் கலக்கினார் என்ற ஒரே காரணத்திற்காக ஹர்பஜனுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. கும்ப்ளேயை விட ஹர்பஜன் எந்த விதத்திலும் உயர்ந்தவர் அல்ல. ஏன் அருகில் கூட நிற்கமுடியாது. இருந்தாலும், இந்த 2003-இன்று வரை கும்ப்ளே வெறும் 35 போட்டிகள் மட்டுமே ஆடியிருக்கிறார். இதில் அவர் சாதித்திருக்கலாமே? ஆனால், இல்லை. இதோ பாருங்கள் அவருடைய ரெக்கார்டை: அந்த 35 போட்டிகளில் அவர் வெறும் 37 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறார். எக்கானமி ரேட் - 4.74, ஆவரேஜ் - 39.02 (அவருடைய மொத்த ஆவரேஜ் - 30.89) . வார்னே / முரளியுடன் ஒப்பிடப்படும் (டெஸ்டுகளில்) ஒரு வீரருக்கு அழகா இது?

அதை விடுங்கள் அவர் புறக்கணிக்கப்படும் முன்பு கூட ஒரு ப்ரேக்-த்ரூ கொடுக்கும் பந்துவீச்சாளராக மட்டுமே இருந்து வந்திருக்கிறார். அவருடைய திறமையில் டெஸ்டிற்கும் ஒருநாள் போட்டிகளுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் உள்ளது போன்றது.

அவரை ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் பவுலராக எனக்குப் பிடிக்கும். ஆனால், ஒருநாள் போட்டிகளில் இந்த 3 அல்லது 4 ஆண்டுகளில் இந்தியா கும்ப்ளே / ஹர்பஜன் தவிர்த்து வேறொரு ஸ்பின்னரை முயற்சி செய்திருக்க வேண்டும்.

//எனினும் இனியும் அணியில் இருந்து டிரிங்ஸ் பாயாகவும், கேமேராமேனாகவும் இருப்பதற்கு ஓய்வெடுத்து குடும்பத்தோடு செலவிடலாம். வாழ்த்துகள் கும்ளேவிற்கு
//
ஆம், அவரை 15-ல் எடுத்துவிட்டு 11-ல் கல்தா கொடுப்பது நல்லதல்ல. அதற்கவர் வீட்டில் பொழுதை கழிக்கலாம்.

Anonymous said...

Kumble the ODI bowler should be given his due

A hero in the shorter version too

http://content-ind.cricinfo.com/india/content/story/288085.html

Naufal MQ said...

நண்பர்கள் மோகன் & புலிக்குட்டி,

நீங்கள் கொடுத்த கட்டுரை தொடுப்பிற்கு நன்றி. அதுலுள்ளது போல் 2000-ம் ஆண்டு வரையிலும் அவர் அதிகமான விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆனால் அதன்பிறகு அவருடைய ஆவரேஜ் 41-க்கு தாவியதை கண்டீர்களா? அவருக்கு அந்த கால இடைவெளியில் (2001-க்குப் பிறகு) இடையிடையே வாய்ப்புகள் வழங்கப்பட்டது உண்மையென்றாலும், இந்த ஆவரேஜ்???? சரி, எதுவானாலும் இனிமேல் அவருடைய பந்துவீச்சு ஒருநாள் போட்டிகளில் எடுபடாது என்பது உண்மைதானே? அதற்காக, அவருடைய இடத்தில் ஹர்பஜனை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதை இந்திய கிரிக்கெட் நிறுத்த வேண்டும்.