கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வரும் உலகக் கோப்பை போட்டி இன்றுடன் முடிய இருக்கிறது. இன்று நடக்கயிருக்கும் இறுதிப் போட்டியில் இலங்கையும் ஆஸ்திரேலியாவும் மோத இருக்கின்றன. இந்த உலகக் கோப்பை முழுதும் சிறப்பாக விளையாடிய இரு அணிகள் உண்டென்றால் அது இந்த இரண்டு அணிகள்தான். அந்த வகையில் மகிழ்ச்சியே.
இந்த உலகக் கோப்பை பல அதிர்ச்சிகளுடன் தொடங்கி ஒருவாறு இறுதி நிலையை எட்டியிருக்கிறது. பாக் & இந்திய வெளியேற்றம். அதைத் தொடர்ந்து பாப் உல்மரின் கொலை. இப்படி வரிசையாக அதிர்ச்சிகளுடன் தொடங்கியது. பாப் உல்மரின் கொலையாளி பற்றி அறிவிப்பதில் உலகக் கோப்பை நடந்து வருவதால் தாமதம் காட்டினார்கள் என்றே தொன்றுகிறது. நாளையே கூட கொலையாளி யார் என்பது அதிர்ச்சி முடிவுகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, அது பற்றி இப்போ நமக்கெதுக்கு. பிறகு பார்க்கலாம்.
கடந்த 25 போட்டிகளுக்கும் மேலாக தோல்வியே கண்டிராத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. அவர்களது அதிரடியான கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம் எதிரணியினரை வதம் செய்து வருகின்றனர். அவர்களது மனதிடமே இதற்கு முதன்மையான காரணம். எளிதில் அசராத தளராத மனதிடம்.
ஆஸ்திரேலியாவின் கில்க்ரிஸ்ட் இந்த உலகக் கோப்பையில் அந்தளவிற்கு அடித்து அசத்தவில்லை என்றாலும் அவரின் பங்காளி ஹேடன் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் 621 ஓட்டங்களை இதுவரை குவித்து முதலிடத்தில் உள்ளார். அதன்பின்பு வரும் பாண்டிங்கும் 502 ஓட்டங்கள் குவித்து மூன்றாமிடத்தில் உள்ளார். க்ளார்க்கும் 428 ஓட்டங்கள் குவித்து நல்ல ஃபார்மில் உள்ளார். பின்னர் வரும் ஸைமண்ட்ஸ், ஹஸ்ஸி & வாட்ஸனுக்கு இதுவரை நல்ல முறையில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்தால் வெளுத்து வாங்கும் திறமையுள்ளவர்கள் இவர்கள். இப்படிப்பட்ட பேட்டிங் வரிசை ஆஸ்திரேலிய அணிக்கு பலம்.
பந்துவீச்சை பொருத்தவரை மெக்ராத் 25 விக்கெட்டுகள் இந்த உலகக் கோப்பையில் முன்னனியில் உள்ளார். இவரைப் பற்றி அதிகம் குறிப்பிட தேவையில்லை. இதுவே அவரது இறுதி சர்வதேச போட்டியாக இருக்கும். அதனால் தன்னால் முடிந்தளவு வெற்றிகரமாக Log-out செய்வதில் குறி(வெறி?)யாக இருக்கிறார். இன்று இவருக்கு இரையாகப் போவது யார் யாரோ? பின்பு, ப்ரெட் லீயின் இடத்தை நிரப்ப வந்த ஷான் டைட் தொடக்க போட்டிகளில் சிறிதி தினறினாலும் பின்னர் அற்புதமாக வீசத் தொடங்கிவிட்டார். 23 விக்கெட்டுகளுடன் முரளியுடன் இரண்டாமிடத்தை பங்கு போட்டுள்ளார். இவரும் இலங்கைக்கு மிகுந்த சவாலாக இருக்கக் கூடும். பின்னர், ப்ராக்கன், ஹாக், வாட்ஸன் மற்றும் ஸைமண்ட்ஸ், க்ளார்க்கும் பந்து வீச்சிற்கு பக்க பலமாக இருப்பார்கள்.
ஆஸ்திரேலிய அணியின் இன்னொரு பலம் அவர்களது மின்னல் வேக களத்தடுப்பு. ஆக, ஆஸ்திரேலியா மனபலம், திறமை மற்றும் என்னைப் போன்றோரின் ஆதரவுடன் களமிறங்க இருக்கிறது. ஆஸ்திரேலியா வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகமிருப்பதாக நான் நினைக்கிறேன்.
இலங்கை அணியும் திறமையில் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. இது இந்த உலகக் கோப்பையில் நன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கு வரும் போது அத்தனை வெற்றிகரமான தொடர் வெற்றிகளுடன் அவர்கள் வரவில்லை. இருந்தாலும் உலகக் கோப்பைக்கேற்ப பொங்கியெழுந்து விளையாடி வருகிறார்கள். இலங்கையின் இந்த உலகக் கோப்பையின் ஆட்டம் எனக்கு 2003 உலகக் கோப்பையின் ஆட்டத்தை நினைவுபடுத்துகிறது. இறுதிப் போட்டிக்கு முன்பு வரை இந்தியா ஆஸ்திரெலியாவிடம் மட்டுமே தோற்றிருந்தது. இலங்கையும் அதுபோலவே ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே இதுவரை தோற்றுள்ளது. 2003 இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு நேர்ந்தது இன்று இலங்கைக்கும் நேருமா என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
இலங்கை அணி ஆஸ்திரேலியா போலவே ஒரு balanced அணி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஜெயசூர்யா போன்ற தொடக்க ஆட்டக்காரர், ஜெயவர்தனே (529 ஓட்டங்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்) போன்ற க்ளாசிக் மட்டையாளர், சங்கக்கரா மற்றும் தில்ஷான் போன்ற திறமையாளர்கள், சில்வா போன்ற இளம்புயல்கள் உள்ள பேட்டிங் இலங்கை அணிக்கு பலம். ஆனால், ஆஸ்திரேலியா போன்றதொரு consistant scoring இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இலங்கை அணிக்கு மிகுந்த பலம் அவர்களது பந்து வீச்சுதான். வாஸ் & முரளி போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சளார்களின் பந்து வீச்சை சமாளிப்பது ஆஸ்திரேலிய அணியினருக்கு அத்தனை சுலபமாக இருக்காது என்பது ஆஸ்திரேலிய அணியினருக்கே தெரியும். 250+ இலக்கை எளிதாக Defend செய்யக் கூடியவர்கள் இவர்கள். பின்னர் மலிங்கா. இவர் இந்த உலகக் கோப்பை சிறப்பாக பந்து வீசி வந்தாலும் ஆஸ்திரேலியாவிற்கெதிராக எப்படி வீசுவார் என்பது பொறுத்திருந்துதான் பார்க்கனும். எனக்கென்னமோ சந்தேகமாகத்தான் உள்ளது. அடுத்ததாக, மஹ்ரூஃப், தில்ஷான் & ஜெயசூர்யாவின் பந்து வீச்சும் கை கொடுக்கும்.
ஆஸ்திரேலியா போலவே இலங்கையும் ஒரு நல்ல களத்தடுப்பை கொண்டுள்ள அணி என்பதை மறுக்க இயலாது.
ஒரு அணி மற்ற அணிகளுடன் என்னதான் சிறப்பாக ஆடி வென்றாலும் ஆஸ்திரேலியாவுடன் ஆடும் போதுதான் ஒரு அணியின் உண்மையான திறமையை அறிய இயலும். நாம் ஒப்புக்கொண்டாலும் இல்லையென்றாலும் கிரிக்கெட்டின் தற்போதையா உரைகல் ஆஸ்திரேலியாதான். இது வேதனையான கசப்பான உண்மை. என்ன செய்வது அவர்களுக்கு சவால் விடும் ஒரு அணி இன்றில்லை. இலங்கை தங்கள் திறமையை இன்று ஆஸ்திரேலியாவுடன் உரசிப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
ஆஸ்திரேலியா நான்காவது முறையாக கோப்பையை வெல்லுமா? ஹாட்ரிக் சாதனை படைக்குமா? இலங்கை இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா? 1996 ஆஸ்திரேலியாவுடன் மோதி வென்றதை போல மீள்வெற்றி கொள்ளுமா? இன்று தெரியும்.
எனக்கென்னமோ 2003 உலகக் கோப்பை ஞாபகம் வந்து தொலைக்கிறது. :)
அமீரகக் குறிப்பு: இன்றும் சிலருக்கு காதில் புகை வரும் என்பதே எனது கணிப்பு.
19 comments:
//இறுதிப் போட்டி - அசத்தப் போவது யாரு?//
Sri Lanka
பார்க்கலாம் அனானி நண்பரே.முதலில் இலங்கை பேட் செய்து 250+ எடுத்தால் மட்டுமே போட்டி களை கட்டும். ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தால் கதை கந்தல் தான் இலங்கைக்கு என்பது எனது கணிப்பு பார்க்கலாம்.
"இறுதிப் போட்டி - அசத்தப் போவது போறது ஆஸ்ரேலியா....
ஆனால் ஜெயிக்க போறது என்னமோ இலங்கை தான்...::)
நல்ல டிரெய்லர் இப்பதிவு
//மின்னுது மின்னல் said...
"இறுதிப் போட்டி - அசத்தப் போவது போறது ஆஸ்ரேலியா....
ஆனால் ஜெயிக்க போறது என்னமோ இலங்கை தான்...::)
//
வாம்மா மின்னலு...
இது என்ன முன்னுக்குப் பின் முரனா இருக்குது?
//Anonymous said...
நல்ல டிரெய்லர் இப்பதிவு
//
நன்றிங்கண்ணா!
வேற யாரு நீங்க தான்...:-)))
the inevitable is goint to happen..
எல்லார்த்துக்கும் Sweet குடுத்தா, என்னோட Sweet உங்க வீட்ல பாப்பா இருந்த குடுத்துறுங்கண்ணா..
//
வாம்மா மின்னலு...
இது என்ன முன்னுக்குப் பின் முரனா இருக்குது?
//
ஒண்னும் சொல்லுறத்துக்கு இல்ல ஆனா சொல்லாமலும் போக முடியல ::)))
ஆட்டம் எப்படி வேண்டாலும் முடியலாம்..
அஸ்திரேலியா அசதுன வரைக்கும் போதும்னு நினைக்கிறேன்....
::)))
// அவந்திகா said...
வேற யாரு நீங்க தான்...:-)))
the inevitable is goint to happen..
எல்லார்த்துக்கும் Sweet குடுத்தா, என்னோட Sweet உங்க வீட்ல பாப்பா இருந்த குடுத்துறுங்கண்ணா..
//
சரி அவந்திகா கொடுத்துட்டா போச்சு. நாளைக்கு அப்போ எங்க வீட்ல ஒரே ஸ்வீட் மயம் தான். :)
//ஒண்னும் சொல்லுறத்துக்கு இல்ல ஆனா சொல்லாமலும் போக முடியல ::)))//
புரியுது மின்னல் புரியுது.
GO AUSSIEE>>>RUN ON LANKANS>>>MASH THEM FOR KANGAROO DELIGHT
YET ANOTHER TIME, OUR BOYS WILL DO IT FOR THE SWEET HEART McGRATH...
WE THE CHAMPS...
//Pot"tea" kadai said...
GO AUSSIEE>>>RUN ON LANKANS>>>MASH THEM FOR KANGAROO DELIGHT
YET ANOTHER TIME, OUR BOYS WILL DO IT FOR THE SWEET HEART McGRATH...
WE THE CHAMPS...
//
வந்தாச்சு நம்ம படை...
அசத்த போவது யாரு என்பதை இப்பவே சொல்ல முடியாது, அசத்த வேண்டும் என விரும்புவது - இலங்கை. ;-)
இலங்கை முதலில் பேட் செய்ய வேண்டும். 280 ரன்கள் போதும், மற்றவைகளை முரளி + வாஸ் பார்த்துக் கொள்வார்கள் என்பது என் எண்ணம்.
Read this
Communication gap or getting under Ponting's skin?
Fuel was added to the pre-match tension between the World Cup finalists sides when Australian captain Ricky Ponting was kept waiting for more than an hour by his Sri Lankan counterpart Mahela Jayawardene for a promotional photoshoot on the beach at St Lucia. Ponting had to delay his departure from St Lucia to Barbados to make the shoot possible, and was watched by the media, his displeasure quite obvious. The Sydney Morning Herald reported the subsequent meeting of the captains, and Ponting made his displeasure known when he asked Jayawardene, “ a bit late are you?”. Jayawardene blamed a communication gap for the delay. The rival captains were all smiles in the eventual photoshoot, holding the trophy together.
http://blogs.cricinfo.com/wc_monitor/archives/2007/04/communication_gap_or_getting_u.php
//நாகை சிவா said...
அசத்த போவது யாரு என்பதை இப்பவே சொல்ல முடியாது, அசத்த வேண்டும் என விரும்புவது - இலங்கை. ;-)
இலங்கை முதலில் பேட் செய்ய வேண்டும். 280 ரன்கள் போதும், மற்றவைகளை முரளி + வாஸ் பார்த்துக் கொள்வார்கள் என்பது என் எண்ணம்.
//
புலி சிங்கங்களுக்கு ஆதரவளிக்குது!!
எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்த முறை கப் இலங்கைக்குதான்.......
4-ம் முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரலியா அணிக்கு பாராட்டுக்கள். இறுதி போட்டி வரை சென்று சிறப்பாக ஆடிய இலங்கை அணிக்கும் பாராட்டுக்கள்.
//புலி சிங்கங்களுக்கு ஆதரவளிக்குது!!//
:)
Post a Comment