'சொதப்புவது எப்படி?'-ன்னு யாருக்காவது சந்தேகம் வந்தால் உடனே தெ.ஆப்பிரிக்கா அணியினரிடம் செல்லுங்கள். செய்முறை விளக்கத்தோடு சொல்லித் தருவார்கள்.
இந்தியாவும் தெ.ஆப்பிரிக்காவும் கிரிக்கெட் உலகின் முடிசூடா 'சொதப்பிகள்' (Chokers) என கிரிக்கெட் உலகம் நன்கறியும். இந்தியாவையாவது ஒருமுறையில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த தெ.ஆப்பிரிக்கர்கள் படு கேவலம். பெரிய போட்டிகள் என்றால் போட்டி தொடங்கும் முன்பே எதிரியின் காலில் விழுந்து சரணடைந்து விடுவார்கள் போல. கை கூடி வந்த வாய்ப்பை 4 பந்துகள் மீதமிருக்க 1999-ல் கோட்டை விட்டவர்கள்தானே.
நேற்றும் அப்படித்தான் இருந்தது இவர்களின் ஆட்டம். நம்ம ஆஸ்திரேலியாவின் திட்டம் சூப்பர். இந்த உலகக் கோப்பையில் இதுவரை புதிய பந்தை வீசி வந்த ஷான் டைட்டிற்கு பதிலாக 'ஃபெர்பெஃக்ட்' மெக்ராத் கையில் புதிய பந்து கொடுக்கப்பட்டது. அதுவே தெ.ஆப்பிரிக்க அணியினருக்கு தமது திட்டத்தில் மண் விழுந்தது போலிருந்திருக்கும். அவர்கள் 'ஷான் டைட்டுதான் புதிய பந்து வீசுவான். அவனுக்கு தொடக்கத்துலேயே ரெண்டு காட்டு காட்டுனா மேட்ச் நம்ம கண்ட்ரோலுக்கு வந்துடும்' என்பது போல் திட்டங்கள் இருந்திருக்கும். ஷான் டைட் இளைஞர். பதட்டம் காரணமாக சொதப்பிவிடக் கூடும் என அறிந்த ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பை தொடக்கம் முதலே 'புதிய பந்தை எனக்குத் தா' என அழுது அடம் பிடித்த மெக்ராத்திடம் ஒப்படைத்தது. அதுவே வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.
தெ. ஆப்பிரிக்க அணியினர் ஆடிய விதம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. விக்கெட்டுகள் விழுந்தாலும் தடுத்து ஆடுவதை விட்டு விட்டு வருபவர்கள் எல்லாம் மட்டையை வீசினார்கள். மோசமான ஷாட் செலக்க்ஷன் மூலம் அவர்கள் விக்கெட்டை வீசியெறிந்தார்கள். இன்றாவது ஒரு நல்ல போட்டியை ஆஸ்திரேலியாவிற்கெதிராக தருவார்கள் என்ற நம்பிக்கையில் டி.வி முன்னமர்ந்தவர்கள் மீது சேறடித்து சென்றார்கள்.
ஆஸ்திரேலியாவின் இந்த ஃபார்ம் இறுதிப் போட்டியிலும் தொடரும் என்பதில் ஐயமில்லை. மற்ற அணிகளுக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்தே வருவது சிறிது வேதனையே. இலங்கை அணியினர் குறைந்த பட்சம் போராடவாவது செய்வார்களா?
6 comments:
அண்ணாச்சி எனக்குத் தெரிந்து ஆஸ்திரேலியா பர்ஸ்ட் பவுலிங் செய்த பொழுதெல்லாம் மெக்ராத் தான் முதல் பந்துவீசியதாக ஞாபகம். (தவறாக இருக்கலாம்.)
ஆனால் நாங்கள் கம்பெனியில் சொல்லிக் கொண்டிருந்தது இதைத்தான், They are perfect chokers.
//மோகன்தாஸ் said...
அண்ணாச்சி எனக்குத் தெரிந்து ஆஸ்திரேலியா பர்ஸ்ட் பவுலிங் செய்த பொழுதெல்லாம் மெக்ராத் தான் முதல் பந்துவீசியதாக ஞாபகம்.
//
மன்னிக்கவும் நண்பரே. பர்ஸ்ட் பவுலிங் செய்த போதெல்லாம் இல்லை வங்கதேசம் & அயர்லாந்துடன் மட்டும் அவர் வீசியிருக்கிறார். பெரிய அணிகளுடன்(?) அவர் வீசவில்லை முதலில் ஆஸ்திரேலியா பந்துவீசிய போதும் கூட. சிறிய தவறு பதிவில். மன்னிக்கனும்.
ஆமாம் ஆஸ்திரேலியா முதலாவது பௌலிங் செய்த ஆறு ஆட்டங்களில் இரண்டில் தான் மெக்ராத் முதலில் பந்தைப் போட்டிருக்கிறார்.
ஒரு மாதிரி டவுட் இருந்ததால் தான் தவறாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன்.
;)
சாரி அதாவது மேலும் ஒரு தவறு ஐந்தில் மூன்றில் மெக்ராத் முதலில் வீசியுள்ளார். அரையிறுதியையும் சேர்த்து.
;)
SA are chokers, it was not a surprise they choked on big stage.
The question is can Murali/Malinga do something to stop the Aussies?
There seems to be no flaw in the Aussie team only thing I can think is their lower middle order has not been tested, I doubt if they will be tested in the final.
//The question is can Murali/Malinga do something to stop the Aussies?
There seems to be no flaw in the Aussie team only thing I can think is their lower middle order has not been tested, I doubt if they will be tested in the final. //
ஒரு வேளை இலங்கை முதலில் பேட் செய்து 250+ ஓட்டங்கள் எடுத்தால் மட்டுமே ஒரு நல்ல போட்டியை காண இயலும் என்பது எனது கணிப்பு. அந்த மாதிரி ஒரு சூழல் ஏற்பட்டால் ஆஸ்திரேலியாவின் Lower-middle-order பேட் செய்ய வேண்டி வரலாம்.
Post a Comment