அவன் ஜெயிச்சா இவன் உள்ளே போவான். இவன் ஜெயிச்சா அவன் வெளியே என்ற Ifs and Buts கணிப்புக்கெல்லாம் வேலையில்லாம போயிடுச்சு. அவன் (தெ.ஆ) ஜெயிச்சு அவனே (தெ.ஆ) உள்ளே போயிட்டான்.
தெ.ஆ நேற்று இங்கிலாந்தை தகர்த்தெரிந்து விட்டு அரை-இறுதியில் நுழைந்தது. ஆக, அரை-இறுதிக்கு தகுதி பெற்ற நான்காவது அணி தெ.ஆ. ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் தகுதி பெற்றிருந்தது எல்லாரும் அறிந்ததே.
இலங்கை இன்று அயர்லாந்துடன் தோற்காத பட்சத்தில் அரை-இறுதி இவ்வாறு அமையும்.
முதல் அரை-இறுதி: நியூசிலாந்து Vs இலங்கை
இரண்டாம் அரை-இறுதி: ஆஸ்திரேலியா Vs தெ.ஆ
இதில் தெ.ஆ மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத அணிகளாதலால் அவர்கள் வென்றால் நன்றாக இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியா அதற்கெல்லாம் இரக்கப்படுவதாக இல்லை. இலங்கையும் நியூசிலாந்திற்கு பெறும் முட்டுக்கட்டையாக இருக்கும். எனவே தெ.ஆ Vs நியூசிலாந்து இறுதிப்போட்டி என்பது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இனி நடக்க இருக்கும் நான்கு சூப்பர் 8 போட்டிகளும் உப்புக்கு சப்பாணி போட்டிகளே. ஆனால், இதில் ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்து போட்டிக்கு சில தனிப்பட்ட காரணங்களால் எதிர்பார்க்கப்படும். பழைய பாக்கி ஒன்று இருக்கிறது. அது தீர்ந்தாத்தான் நிம்மதி.
8 comments:
Final - Lanka Vs S.Africa
//
Anonymous said...
Final - Lanka Vs S.Africa
//
பார்க்கலாம் நண்பா. :)
ஆஸ்திரேலியா அசைக்க முடியாத அணியா இதுவரைக்கும் ஆடிட்டு இருக்கு. அதுபடி அவங்க கோப்பைய வெல்ல வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும் நீங்க சொல்ற மாதிரி தெ.ஆவோ நியூஸிலாந்தோ ஜெயிச்சா நல்லா இருக்கும். பார்க்காலாம் கங்காருவுக்கு யாராவது மணி கட்டறாங்களான்னு :)
ஃபாஸ்ட் பௌளர் ஒரு சந்தேகம்..
வெஸ்ட் இண்டீஸ் மீதமுள்ள 2 போட்டிகளும் ஜெயித்து தெ.ஆ வைவிட அதிக ரன் ரேட் எடுத்தால் செமி ஃபைனலுக்குப் போக முடியாதா??
எனக்கென்னமோ ஃபைனல் தெ.ஆ Vs நியூசிலாந்து எனத் தோன்றுகிறது !!
//சொல்ற மாதிரி தெ.ஆவோ நியூஸிலாந்தோ ஜெயிச்சா நல்லா இருக்கும். பார்க்காலாம் கங்காருவுக்கு யாராவது மணி கட்டறாங்களான்னு :) //
ஆமா மணிகண்டன், அப்பதான் நல்லா இருக்கும் இல்ல. :)
//Abul said...
ஃபாஸ்ட் பௌளர் ஒரு சந்தேகம்..
வெஸ்ட் இண்டீஸ் மீதமுள்ள 2 போட்டிகளும் ஜெயித்து தெ.ஆ வைவிட அதிக ரன் ரேட் எடுத்தால் செமி ஃபைனலுக்குப் போக முடியாதா??
//
அபுல்,
வரும் ரெண்டு மேட்சை மே.இ அணி ஜெயிச்சாலும் 6 புள்ளிகள் தான் கிடைக்கும். தெ.ஆ 8 புள்ளிகள் வச்சிருக்கு. :) சோ, நோ வே. :)
Sorry bowler, I thought WI had 4 points before the last 2 matches..
Thanks,
Abul
Post a Comment