Tuesday, April 3, 2007

புலம்ப விட்டுட்டாய்ங்களே!

நெனச்சு நெனச்சு ஆறமாட்டுதுங்க. அதான், அந்த மனக்குமுறலை கொட்டத்தான் இந்த பதிவு.

பின்ன என்னங்க, நம்ம கூட மோதி பங்காலிங்க ஜெயிச்சாலும் ஜெயிச்சானுங்க நம்ம எல்லாருக்கும் (பெ)பங்காலி(ளி)ங்க நல்லா ஆடுறாய்ங்க. நல்ல திறமையான டீம்னு நினைப்பு வந்துச்சு. அந்தப் பையன் தமீம் ஆடுன ஆட்டத்தை பார்த்தா நான் கூட 'வருங்கால ஜெய்சூர்யா இவன் தான்டான்னு' நினைச்சேன்.

ஆனால், அதுக்கப்புறம் நடக்குறதைப் பார்த்தத்தான் தெரியுது. நம்ம நாதாரி நாய்ங்கதான் அந்த பங்காலி டீமை 'பெரிய' டீமா நமக்கு zoom செஞ்சு காட்டியிருக்காய்ங்க. ஒரு சாதாரன டீம்தாங்க வங்கதேசம். இலங்கை, ஆஸி, நியூசிலாந்து எல்லாரும் கும்மி எடுக்குறாய்ங்க பங்காலிங்களை. கொஞ்சமாவது ஈடு கொடுத்து ஆடுற டீமா தெரியல. அந்தப் பையன் தமீம் கூட நமக்கெதிரா அடிச்சதுக்கப்புறம் சுத்தமா அடிக்கவே இல்லை.

நம்ம நாதாரிங்களுக்கே உள்ள ஸ்பெஷல் குணம் இது. ஒரு சிறுபுல்லைக் கூட மூங்கில் ரேஞ்சுக்கு zoom செஞ்சு காமிச்சுருவாய்ங்க. அப்பத் தானே நாமலும் நம்புவோம். அதாவது, 'அடடா! வங்கதேசம் நல்லா ஆடுனாய்ங்கப்பா, அதான் தோத்துட்டோம்' அப்படின்னு சொல்லி நம்ம நாதாரிங்களை மன்னிச்சுடுவோம்ல. இப்படித்தானே முன்னாடியிருந்தே ஜிம்பாப்வே போன்ற அணிகளை வளர்த்தோம்.

இந்த வங்கதேச அணிக்கு அயர்லாந்து பரவாயில்லையோன்னு தோனுது. நம்ம டீம் இருக்க வேண்டிய இடத்துல வங்கதேசம் இருப்பது இன்னும் நெருடலாத்தான் இருக்கு. நல்லா வேணும் நமக்கு. :(

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே???

6 comments:

Avanthika said...

//எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே??? //

as long as we are லுசூஸ்..:-))
நானும் அப்படித்தான் நினச்சேன்...:-(

பூனைக்குட்டி said...

அந்த தமீம் மெக்ராத்தின் பாலிற்கு இறங்கி, இறங்கி வந்து சுத்தோ சுத்தென்று சுத்தியும் ஒன்றும் பேட்டுக்கு பக்கத்தில் கூட போகாமல் நொந்ததை பார்த்து சிரித்தேன்.

நாங்க விளையாடும் பொழுது வேடிக்கையா சொல்லுவோம், காத்த அடிக்கிறான் பாரு. நல்லா காத்து வருது இப்படி. அதுதான் நினைவில் வந்தது.

எனக்குத் தெரிந்து அந்தாளை அடிக்க விட்டது இந்தியாவோட தப்பு.

Naufal MQ said...

//as long as we are லுசூஸ்..:-))//
அதுதான் உண்மையோ????

Naufal MQ said...

//எனக்குத் தெரிந்து அந்தாளை அடிக்க விட்டது இந்தியாவோட தப்பு.//
அன்னிக்கு அது மட்டுமா தப்பு. நிறைய இருக்கு.

மணிகண்டன் said...

நீங்க சொல்றது சரி நன்பரே, ஆஸ்திரேலியாவோட அவங்க ஆடனது ஏதோ ஸ்கூல் டீம் ஆடற மாதிரி இருந்துது. இப்படி கேவலமா ஆடறாங்களேனு கடுப்பானதை விட இவங்க கிட்டயாட நாம தோத்தோம்னு வயித்தெரிச்சலா இருந்துது.

Naufal MQ said...

மணிகண்டன்,

அதை ஏன் கேக்குறீங்க. இவனுங்களை நினைச்சா கடுப்பா வருது.