உலகக் கோப்பையில் இன்று அஞ்சா நெஞ்சர்களாகிய மஞ்சள் படை இங்கிலாந்திற்கு எதிராக களமிறங்குகிறது. உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா இறுதியாக தோற்றது 1999 -ல் பாகிஸ்தானுடன் முதல் சுற்றுப் போட்டியில் தான். அதற்குப் பின் அவர்கள் இதுவரை தோற்றதில்லை.
இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு அரை-குறை அணியாக (காயங்கள் & ஓய்வுகள் காரணமாக) விளையாடிய ஆஸ்திரேலியாவை இங்கிலாந்தும் நியூசிலாந்தும் வென்றவுடன் ஆஸ்திரேலியாவின் சரிவு தொடங்கிவிட்டது போன்ற மாயை ஏற்படுத்திவிட்டனர். சிலர் பதிவிட்டு கொண்டாடினர். அப்போதே, நான் எச்சரித்தேன் 'தப்பு கணக்கு போட வேண்டாம்' என்று. கேட்டார்களா? சண்டைக்கு வந்தார்கள். ஆனால், இதுவரை நடந்த போட்டிகளை வைத்துப் பார்த்தால் ஆஸ்திரேலியா யாரிடமும் தினறியது போல கூட தெரியவில்லை. நம்பர் 1 அணி என்று தலையில் வைத்து கொண்டாடும் தெ.ஆ அணியை நாம் பெர்முடாவை துவைத்து காயப் போட்டது போல் போட்டார்கள். நமக்கு பெர்முடா என்றால் ஆஸ்திரேலியாவிற்கு தெ.ஆ. :)
என்னுடைய கணிப்பில் இந்த உலகக் கோப்பையும் ஆஸ்திரேலியாவிற்கே. இன்றைய போட்டி முத்தரப்பு தொடரை வென்று எக்காளமிட்ட இங்கிலாந்திற்கு பாடம் புகட்டும் ஒரு போட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதைப் பார்த்து துபையில் சிலருக்கு காதில் புகை வரும் என்பதிலும் துளியும் ஐயமில்லை.
அதனால், அறிவிப்பதென்னவென்றால் இன்றிரவு துபை வானம் முகில் கூட்டத்துடன் காணப்படும். மழை பெய்தால் நாம் செய்த புண்ணியம். அண்ணாச்சிக்கும் நண்பர் முத்துகுமரனுக்கும் நன்றி சொல்லிக்கொள்ளுங்கள்.
10 comments:
ஆடாதடா ஆடாதடா மனுசா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனுசா!!
சாத்தான்குளத்தான்
வாங்க அண்ணாச்சி,
நல்லா இருக்கியளா?
அப்புறம் இந்த போடுவது பற்றி சொல்ல ஒன்றுமில்லை. நாளைக்கு காலையில் என்பதிவில் சொல்கிறேன். :)
சபாஷ் சரியான போட்டி:-))
அண்ணாச்சி,முத்துகுமரன் அணிக்கும் பாஸ்ட் பவுலர் அணிக்கும், சபாஷ் சரியான போட்டி:-))
தோ பாருய்யா! வந்துட்டாரு அபிஅப்பா. வரும்போதே கொலைவெறிதானா? இப்படியே கையில வத்துக்குச்சி வச்சிக்கிட்டு அலையுறீங்களாக்கும்?
அண்ணா...ஆஸ்திரேலியாதான் வரும் போல இருக்கு...உண்மை பிடிக்கலைனாலும்..they deserve a win..நீக்க அன்னைக்கே சொன்னீங்க..ஹ்ம்ம்ம்..
அண்ணா என்னோட போஸ்டுக்கெல்லாம் நீங்க வர்ரதே இல்லை இப்பல்லாம்...மணிகண்டன் அண்ணாவும் வர்ரது இல்லை..
தப்பு தப்பா எழுதறனா...:-)
//அவந்திகா said...
அண்ணா...ஆஸ்திரேலியாதான் வரும் போல இருக்கு...உண்மை பிடிக்கலைனாலும்..they deserve a win..நீக்க அன்னைக்கே சொன்னீங்க..ஹ்ம்ம்ம்..
//
வாங்க அவந்திகா,
அதான் பெரியவங்க சொன்னா கேட்கனும் :)
//அண்ணா என்னோட போஸ்டுக்கெல்லாம் நீங்க வர்ரதே இல்லை இப்பல்லாம்...மணிகண்டன் அண்ணாவும் வர்ரது இல்லை..
தப்பு தப்பா எழுதறனா...:-)
//
அய்யய்ய.. அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. எனக்கு இந்த zen கதைகள் பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது. அதான் வந்து படிச்சாலும் ஒன்னும் சொல்ல தெரியாது. சரி சரி வந்தா இனிமேல் கண்டிப்பா ஒரு பின்னூட்டம் உண்டு. டோண்ட் வொர்ரி.
பொறுத்தவர் பூமி ஆள்வார்.....
//முத்துகுமரன் said...
பொறுத்தவர் பூமி ஆள்வார்.....
//
பொறுமைக்கும் எல்லை உண்டு (ஏப்ரல் 28).
நேத்து பங்களாதேஷ் தென்னாப்பிரிக்காவை துவைச்சுப் போட்டாங்களே பார்த்தீங்களா !
Post a Comment