Sunday, March 20, 2011

இந்தியா - மேற்கிந்திய தீவுகள்

இந்த ஆட்டத்தைப் பற்றி எல்லோருக்கும் சில அபிப்ராயங்கள் பேதங்கள் இருக்கக் கூடும். ஆனால் இன்றைய ஆட்டம் இந்திய அணியின் அடுத்த ஆட்டங்களின் ஸ்ட்ராடஜியை முடிவு செய்யும் என்பதில் யாருக்கும் வேறு சந்தேகங்கள் இருக்காது.

இன்றைய போட்டியில் தோற்றால் இந்தியா ஸ்ரீலங்காவை காலிறுதியில் சந்திக்கும். இன்றைய போட்டியில் வென்றால் ஆஸ்திரேலியாவை சந்திக்கும்.

அப்படியானால், இந்தியாவின் இந்த போட்டி நமது அரையிறுதி வாய்ப்பினை அசைத்துப் பார்க்கவே போகிறது.

உளவியல் ரீதியாக இந்தப் போட்டியில் தோற்றால் இந்தியாவிற்கு வென்றாக வேண்டுமென்ற உத்வேகம் இல்லாமல் போய்விடும் (killer instinct).

இந்தியா எல்லாப் போட்டிகளும் வெல்லும் என்றே எண்ணிக்கொண்டிருக்கிறோம். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது எல்லா நேரத்திலும் நடக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லலாம்.

தென்னாப்பிரிக்காவுடன் நாம் தோற்றவுடன் எனக்கு முதலில் தோன்றியது 2003 உலகக் கோப்பை தான். அப்போது லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றோம். ஆனால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டோம். இப்போது சவுத் ஆப்ரிக்காவுடன் தோற்றிருக்கிறோம். இறுதியில் அவர்களை எதிர்கொள்ளலாம். அப்போது பான்டிங் போல் இப்போது ஸ்மித். எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் எப்போதும் உள்ளது.

நம்பிக்கை தானே சார் வாழ்க்கை....

2 comments:

Asiya Omar said...

கிரிக்கெட் கிளி இந்தியா ஜெயிக்கும் என்று சொல்லியிருக்கு,ஆனால் ஒரு சிலர் இன்று இந்தியா தோற்றால் நல்லதுன்னு சொல்றாங்க,ஏன் இந்தியா இன்றும் ஜெயித்து ஆஸ்த்ரேலியாவுடனும் ஜெயிக்க கூடாதா?என்ன?நேற்று பாகிஸ்தானிடம் ஆஸ்த்ரேலியா தோற்கலையா?அது போல் நம்மிடமும் காலிறுதியில் தோற்கட்டுமே!எல்லாம் ஒரு நப்பாசை தான்,என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

Pranavam Ravikumar said...

Hope to see a good match.!