Thursday, March 29, 2007

சூடு பிடிக்கும் சூப்பர் 8

சூப்பர் 8 போட்டிகள் ஒரு த்ரில்லோட தான் துவங்கியிருக்குன்னு சொல்லனும். நேற்று நடந்த தெ.ஆ - இலங்கை போட்டியில் 50+44 ஓவர்களுக்கு தெ.ஆ கை ஓங்கியிருந்தாலும் திடிர்னு போட்டி இலங்கை வெற்றி பெறும் சூழ்நிலைக்கு வந்திருச்சு. ஆமாங்க, தே.ஆ ஜெயிக்க 4 ரன் இருக்கு, 32 பந்துகள் மற்றும் 5 விக்கெட்டுகள் கையில இருக்கு. அப்பதாங்க நம்ம சடையாண்டி தம்பி மலிங்கா பொல்லாக் விக்கெட்டை எடுத்துட்டாரு. அடுத்த பந்துல ஹால் அவுட். இப்ப ஓவர் முடிஞ்சு போச்சு. அடுத்த ஓவர்ல தெ.ஆ ஒரு ரன் எடுக்குது. மீண்டும் நம்ம சடையாண்டி தம்பி முதல் பந்துல கல்லிஸ் விக்கெட்டை எடுத்து ஹாட்-ரிக் சாதனை பண்ணிட்டாரு. விட்டாரா அதோட, அடுத்த பந்திலேயே நிடினியும் அவுட். ஆக நாலு பந்துல நாலு விக்கெட். தெ.ஆவின் நிலமை படுமோசமா ஆயிருச்சு திடிர்னு. இப்போ தெ.ஆ ஜெயிக்க தேவை 3 ரன் கையில் ஒரு விக்கெட் 3 ஓவர் மீதமிருக்கு. தெ.ஆ நல்ல நேரம் பீட்டர்சன் ஒரு 4 அடிச்சு அணியை ஜெயிக்க வச்சிட்டாரு. தெ.ஆ 'சோக்கர்ஸ்' (Chokers) னு சொல்றது சரியாத்தான் இருக்கு. எளிதா ஜெயிக்க வேண்டிய மேட்ச், இப்படி த்ரில் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்துடானுங்க.

அது அப்படியிருக்கு. மற்றொரு சூப்பர் 8 போட்டியில காதுல புகை வரும் (யாருக்குன்னு வலையுலக மக்களுக்கு சொல்லத்தேவையில்லை) போட்டி முடிவு கிடைச்சிருக்கு. 322 அடிச்சா ஜெயிக்கலாம் என்று களம் கண்ட மே.இ சொல்ற மாதிரி ஒன்னும் ஆடல. லாரா மட்டும் பொறுப்போடு (இந்திய மூத்த வீரர்கள் கவனிக்க) ஆடி 77 ஓட்டங்கள் எடுத்தாரு. ராம்தின் 52 ஓட்டங்கள் எடுத்து 212 ஓட்டங்கள் வரை வந்திருக்காங்க. ஆஸ்திரேலியா 103 ஓட்டங்கள வித்தியாசத்தில் வென்றது. மத்த அணிகளெல்லாம் தட்டு தடுமாறி ஆடிக்கொண்டிருக்கும் போது 'நம்ம' (மீண்டும் காதில் புகை) ஆஸ்திரேலியா மட்டும் கலக்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஆறாவது முறையாக 300+ ஸ்கோர் எடுத்துள்ளது ஆஸி அணி. இனியும் தொடரும். இம்முறை ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வதை தடுக்க வேறெந்த அணியும் அருகில் கூட தென்படவில்லை.

இன்னொரு நெருடும் செய்தி. இன்னிக்கும் மே.இ அணிக்கு போட்டியுள்ளது. நியுசிலாந்து அணியுடன். தொடர்ந்து மூன்றாவது நாளாக களமிறங்கவுள்ளனர் மே.இ அணியினர். நேற்றைய முன் தினம் தொடங்கிய ஆஸி-மே.இ போட்டி மழை காரணமாக பகுதி ஆட்டம் நேற்று நடத்தப்பட்டு நிறைவடைந்தது. இன்று மற்றொரு போட்டி அட்டவனையில் உள்ளது மே.இ அணிக்கு. என்ன வகையான திட்டமிடலோ? நினைத்து பாருங்கள் எப்படி இருக்கும் மே.இ அணிக்கு.

நம்ம பசங்க தங்களின் மே.இ சுற்றுப்பயணம் (sun and sand visit) முடிந்து நேற்றிரவு தாயகம் திரும்பியுள்ளனர். இரவோடு இரவாக வந்து சேர்ந்ததால் எதிர்பார்த்திருந்த அர்ச்சனைகளிலிருந்து தப்பித்துள்ளனர். அட்லீஸ்ட், அதையாவது ஒழுங்கா திட்டமிட்டார்களே. பாராட்டுக்கள்!!

6 comments:

A Simple Man said...

///**லாரா மட்டும் பொறுப்போடு** ஆடி 77 ஓட்டங்கள் எடுத்தாரு///

சீரியஸாவே கேக்கறேன். இதனால நீங்க என்ன சொலல வர்ரீங்க..
77 ர‌ன் எடுத்தால் என்ன‌ 7 ர‌ன் எடுத்தால் என்ன‌?
க‌டைசியில் தோத்துத்தாட்டங்க‌ளே

மணிகண்டன் said...

//நம்ம பசங்க தங்களின் மே.இ சுற்றுப்பயணம் (sun and sand visit) முடிந்து நேற்றிரவு தாயகம் திரும்பியுள்ளனர். //

எல்லாரும் சேர்ந்து Pirates of the Carribean - IIIல நடிக்கறாங்கலாமே :)

Naufal MQ said...

//சீரியஸாவே கேக்கறேன். இதனால நீங்க என்ன சொலல வர்ரீங்க..
77 ர‌ன் எடுத்தால் என்ன‌ 7 ர‌ன் எடுத்தால் என்ன‌?
க‌டைசியில் தோத்துத்தாட்டங்க‌ளே
//

அதாவது அபுல், தோல்விக்கு காரணம் சீனியர் லார இல்லைன்னு சொல்றேன். நம்ம தடிப்பசங்க மாதிரி இல்லாம ஒரு சேசிங்ல பொறுப்பா ஆடியிருக்காரு பாத்தீங்களா? இவர் எங்கே இவருடன் ஒப்பிடம்படும் சச்சின் எங்கே? :(

Naufal MQ said...

//எல்லாரும் சேர்ந்து Pirates of the Carribean - IIIல நடிக்கறாங்கலாமே :)
//

வாங்க மணி,
நீங்கதான் டைரக்டரா??

A Simple Man said...

///அதாவது அபுல், தோல்விக்கு காரணம் சீனியர் லார இல்லைன்னு சொல்றேன். நம்ம தடிப்பசங்க மாதிரி இல்லாம ஒரு சேசிங்ல பொறுப்பா ஆடியிருக்காரு பாத்தீங்களா? இவர் எங்கே இவருடன் ஒப்பிடம்படும் சச்சின் எங்கே? :( ///

இல்லை ஃபாஸ்ட் பௌலர் ..
இந்த‌க் கருத்தோடு என‌க்கு உட‌ன்பாடு இல்லை.
கிரிக்கெட் என்ப‌து 11 பேர் ஆடும் குழு விளையாட்டு.டென்னிஸ், கோல்ஃப், செஸ் போன்ற‌ த‌னிந‌ப‌ர் ஆட்ட‌ம‌ல்ல‌.
எந்த‌வொரு மேட்சிலும் ஒரு அணி தோற்பதற்கு தோற்ற அணியில் ஒரு த‌னிப்ப‌ட்ட‌ வீர‌ரைக் கார‌ண‌ம் கூற‌ முடியாது (ஆனால் வெற்றிபெற்ற அணிக்கு அந்த அணியில் த‌னிந‌ப‌ர் கார‌ண‌மாக‌ இருக்க முடியும் என்ப‌துதான் இதில் சுவார‌ஸ்யம். நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை)

மற்றபடி சச்சின் லாரா பற்றிய உங்கள் ஒப்பீடும் (எனக்கு) சரியாகப் படவில்லை. இதுபற்றிய‌ மிகப் பெரிய வாதம் செய்யலாம். ஆனால் அதெற்கெல்லாம் உங்களுக்கோ எனக்கோ நேரமில்லை..தேவையுமில்லை.. கிரிக்கெட் பற்றி தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்.. புரிதலுக்கு ந‌ன்றி

Naufal MQ said...

//மற்றபடி சச்சின் லாரா பற்றிய உங்கள் ஒப்பீடும் (எனக்கு) சரியாகப் படவில்லை. இதுபற்றிய‌ மிகப் பெரிய வாதம் செய்யலாம். ஆனால் அதெற்கெல்லாம் உங்களுக்கோ எனக்கோ நேரமில்லை..தேவையுமில்லை..
//
மிகச்சரி. ஒவ்வொரு வாதத்திற்கும் எதிர்வாதம் செய்யலாம். நான் கூறியது என்னுடைய கருத்து. நீங்கள் கூறியது உங்களுடைய கருத்து. அதைக் குறித்து வாதிட்டால் முடிவிருக்காது. :)

//கிரிக்கெட் பற்றி தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்.. //

இன்ஷா அல்லாஹ்.