Sunday, March 18, 2007

ஏன் இந்த ஒப்பாரி?

என்ன நடந்திருச்சுன்னு இப்படி எல்லாரும் ஒப்பாரி வச்சி அழுவுறீங்க? ஏன் இந்த கொலைவெறி பதிவுகளெல்லாம்? என் இனிய இந்திய மக்களே ரிலாக்ஸ் ப்ளீஸ்.

என்னமோ ஒரு மேட்சுல தோத்துட்டா உலகமே இருண்டு போயிடுமா என்ன? ஜஸ்ட் ஒரு மேட்சுல தானே தோத்திருக்கோம். இன்னும் ரெண்டு மேட்ச் இருக்கு. அதுல கலக்குனா போச்சு. அடுத்த சுற்றுக்கு போயிடப் போறோம். அட போங்கங்க இவனுங்க எங்க இலங்கையை ஜெயிக்கப் போறானுங்க-னு சொல்றீங்களா? இலங்கையை ஜெயிக்க முடியாதுன்னு நீங்க நினைச்சீங்கன்ன இந்தியாவோட அடுத்த ரவுண்டுக்கு போனால் என்ன போகாட்டி என்ன? யோசிச்சு பாருங்க. இப்படி நம்பிக்கையை தளர விடக்கூடாதுங்க. நம்ம டீம் இருக்கே ஆஸ்திரேலியாவுக்கே அல்வா கொடுக்கும் அளவிற்கு பலம் வாய்ந்தது. என்ன சனியன், நேத்து நம்ம பங்காளிங்க நல்லா ஆடி தொலைச்சிட்டாய்ங்க. மேட்ச் முழுதும் ஒரு இடத்துல கூட நமக்கு சான்ஸ் தரல அவனுங்க. சூப்பர் பெர்ஃபார்மன்ஸ். நம்ம பங்காளிங்க திறமையை மதிக்க கத்துக்குவோம். இங்க யாருக்காச்சும் பங்களாதேஷோட ஆட்டத்தை குறை சொல்ல வக்கு இருக்கா, சொல்லுங்க? பௌலிங், பேட்டிங், ஃபீல்டிங் எல்லாத்திலும் கலக்கிட்டானுங்க.

ஓவர் நைட் மழை, பிட்ச் ஈரப்பதம் இதையெல்லாம் கண் முன்னாடி பார்த்த ட்ராவிட் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது தவறென்றாலும். நம்ம அணி இதைவிட நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்கலாம். இதுக்கு மேல இந்த தொடர்ல ஷேவாக்கிற்கு வாய்ப்பு என்ற பேச்சிற்கே இடம் இருக்கக் கூடாது.

எனக்கு துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், பங்களாதேஷின் எழுச்சியை வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த இளம் சிங்கம் (புலி?) தமிம் என்ன அடி அடிக்கிறான். பயமில்லாத ஒரு ஆட்டம். ஜெயசூர்யா + கங்குலியின் ஷாட்ஸ் அவனிடம் இருக்கிறது. நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது அவனுக்கு. நேற்று பங்காலிங்க ஆடிய ஆட்டத்திற்கு அவர் ஜெயித்தே இருக்க வேண்டும். அதே நடந்தது. இது இந்தியாவிற்கு தூக்கத்தில் மூஞ்சியில ஆசிட் ஊத்துனது மாதிரி. கவலைப்படாதீங்க மக்களே! நம்ம புலிகளின் வாலை பிடித்து விட்டார்கள். இனி தெரியும் விளைவுகள். நிச்சயம் நன்றாக விளையாடுவார்கள். வீறு கொண்டு எழுவார்கள். நீங்கள் அழுவதை நிறுத்துங்கள். வைக்கப்பட்ட ஆப்பு நல்லதிற்கே. அது ஆரம்பத்திலேயே கிடைத்தது அதை விட நல்லதிற்கே.

இலங்கையை வெல்வது ஒன்றும் கடினமல்ல. சமீப காலங்களில் அவர்களை கதற கதற அடிச்சு விரட்டியிருக்கிறோம். இப்போது கூடுதல் வெறியுடன் களமிறங்குவர் நம் புலிகள் (வீட்டில் மட்டுமல்ல என்பது நிருபிக்கப்படும்). எனவே, இந்தியாவின் செமி-ஃபைனல் மேட்சுக்காக காத்திருப்போம்.

நம்ம பசங்களுக்கு எப்போவுமே ஒன்று தேவைப்படும். அது 'A kick in their Ass'. அது கிடைச்சிருச்சு. இனி எல்லாம் சுகமே.

இறுதியாக, Hats Off my Bengal Brothers. We Tamils always support good cricket.

17 comments:

Naufal MQ said...

நேற்று பங்களாதெஷின் ஆட்டம் எனக்கு 96-ன் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் திறமை ஆகியவற்றை நினைவூட்டியது.

முத்துகுமரன் said...

//அது 'A kick in their Ass'//

அதே! அதே! எப்பவுமே போட்டிகளின் விறுவிறூப்பை கூட்டுவது நமது அணிக்கு கைவந்த கலை. நிச்சயம் அடுத்த சுற்றூக்கு முன்னேறும். வருண பகவான் ஒருவர் மட்டுமே தற்சமயம் இந்தியாவிற்கு எதிரி. அவர் களத்தில் இறங்கிவிடக்கூடாது.

Avanthika said...

///பௌலிங், பேட்டிங், ஃபீல்டிங் எல்லாத்திலும் கலக்கிட்டானுங்க.///

அண்ணா..நான் இது எல்லாம் praise பண்ணிதான் போட்டு இருக்கேன்.. first இது போட்டுட்டு தான் நான் கொஞ்சமா புலம்பி இருக்கேன்... அவங்க performance ரொம்ப நல்லா இருந்துச்சு...in all ways... இருந்தாலும்.. நமக்கு dissapointment இருக்குது இல்லண்ணா...

Naufal MQ said...

வாங்க நண்பரே,

சப்பை மேட்சை கூட சுவராஷ்யமாக்கி ஜெயிப்பதும், சில நேரங்களில் தோற்பதும் நமக்கு கை வந்த கலை.

Avanthika said...

'A kick in their Ass'//

Kick இல்ல..எட்டி ஒரு உதை குடுத்த மாதிரி இருக்கு...:-))... ஆனா இப்படி உதை வாங்கின அப்புறம் நல்லா விளையாடி இருக்காங்க....

Naufal MQ said...

//அவந்திகா said...
அண்ணா..நான் இது எல்லாம் praise பண்ணிதான் போட்டு இருக்கேன்.. first இது போட்டுட்டு தான் நான் கொஞ்சமா புலம்பி இருக்கேன்... அவங்க performance ரொம்ப நல்லா இருந்துச்சு...in all ways... இருந்தாலும்.. நமக்கு dissapointment இருக்குது இல்லண்ணா...
//

மனம்தளர வேண்டாம் சகோதரி. :)

Naufal MQ said...

//அவந்திகா said...
Kick இல்ல..எட்டி ஒரு உதை குடுத்த மாதிரி இருக்கு...:-))... ஆனா இப்படி உதை வாங்கின அப்புறம் நல்லா விளையாடி இருக்காங்க....
//

நம்ம ப்சங்களுக்கு எப்போவுமே இது ஒரு நோய். அதுக்கு முடிவே இல்லை. என்ன செய்ய. :)

சீனு said...

//என்னமோ ஒரு மேட்சுல தோத்துட்டா உலகமே இருண்டு போயிடுமா என்ன? ஜஸ்ட் ஒரு மேட்சுல தானே தோத்திருக்கோம். இன்னும் ரெண்டு மேட்ச் இருக்கு. அதுல கலக்குனா போச்சு. அடுத்த சுற்றுக்கு போயிடப் போறோம். அட போங்கங்க இவனுங்க எங்க இலங்கையை ஜெயிக்கப் போறானுங்க-னு சொல்றீங்களா? இலங்கையை ஜெயிக்க முடியாதுன்னு நீங்க நினைச்சீங்கன்ன இந்தியாவோட அடுத்த ரவுண்டுக்கு போனால் என்ன போகாட்டி என்ன? யோசிச்சு பாருங்க. இப்படி நம்பிக்கையை தளர விடக்கூடாதுங்க.//

யோவ். ஏன்யா கடுப்பேத்துற. தோற்பது முக்கியமல்ல. சரண்டர் ஆகக் கூடாது. அது தான் முக்கியம்.

அபி அப்பா said...

அடப்பாவிகளா! நான் கொஞ்சம் இந்த பக்கம் எட்டிபாக்க லேட். அதுக்குல்ல சீரியசா பேசிக்க ஆரம்பிச்சுட்டீங்களே!! தோ வந்துட்டேன்:-)))

Avanthika said...

//அடப்பாவிகளா! நான் கொஞ்சம் இந்த பக்கம் எட்டிபாக்க லேட். அதுக்குல்ல சீரியசா பேசிக்க ஆரம்பிச்சுட்டீங்களே!! தோ வந்துட்டேன்:-)))///

அதானே...

Naufal MQ said...

//யோவ். ஏன்யா கடுப்பேத்துற. தோற்பது முக்கியமல்ல. சரண்டர் ஆகக் கூடாது. அது தான் முக்கியம்.
//
நண்பர் சீனு,
பொறுமையா இருங்கள். பொறுமை கடலினும் பெரிது. :)))

நீங்கள் சொல்வதுபோல் இருந்தது நேற்றைய ஆட்டம். அதை வேறு கோணத்தில், பங்களாதேஷினர் நன்றாக ஆடினார்கள் (அதுதான் உண்மை) என்று எடுத்துக்கொண்டால் என்ன?

Naufal MQ said...

// அபி அப்பா said...
அடப்பாவிகளா! நான் கொஞ்சம் இந்த பக்கம் எட்டிபாக்க லேட். அதுக்குல்ல சீரியசா பேசிக்க ஆரம்பிச்சுட்டீங்களே!! தோ வந்துட்டேன்:-)))
//

வாங்க அபிஅப்பா,
மக்கள்ஸ் ரொம்ப கொதிச்சு போயிருக்காங்க. நீங்க வேற வாயை கொடுத்து மாட்டிகிறாதீங்க. :)

Avanthika said...

அண்ணா

இப்ப நாம பேசரத எல்லாம் நம்ம boysக்கு forward பண்ணலாமா.. அப்பவாது எதோ மனசு வச்சு ஆடுவாங்காளான்னு பார்க்கலாம்...

Naufal MQ said...

//அவந்திகா said...
அண்ணா

இப்ப நாம பேசரத எல்லாம் நம்ம boysக்கு forward பண்ணலாமா.. அப்பவாது எதோ மனசு வச்சு ஆடுவாங்காளான்னு பார்க்கலாம்...
//

ஹி ஹி. அனுப்பலாம்தான். மொழிபெயர்க்க கூட நம்ம கார்த்திக் இருக்கான். :)

சீனு said...

//பங்களாதேஷினர் நன்றாக ஆடினார்கள் (அதுதான் உண்மை) என்று எடுத்துக்கொண்டால் என்ன?//

ஆமாங்க. ஆனா அதுக்காக நம்ம பசங்க சொதப்பினத சொல்ல கூடாதா என்ன? பங்களாதேஷினர் நன்றாக ஆடவில்லைன்னு சொல்லலை. நம்ம பசங்க நல்ல ஆடலைன்னு சொல்லுறேன்.

அடிச்சு பிடிச்சு போராடி தோத்தாக்கூட பரவாயில்லை. சொதப்ப கூடாது இல்ல.

Avanthika said...

///ஹி ஹி. அனுப்பலாம்தான். மொழிபெயர்க்க கூட நம்ம கார்த்திக் இருக்கான். :) /////

:-))))).....

அப்புறம், நான் translate பண்ணீட்டு இருந்தேன், அதான் நல்லா விளையாட முடியலைன்னு பிளேட்ட திருப்பீடும்..
:-)))

Naufal MQ said...

//அடிச்சு பிடிச்சு போராடி தோத்தாக்கூட பரவாயில்லை. சொதப்ப கூடாது இல்ல.
//

நண்பரே சீனு,
நீங்க விடுறதா இல்ல போலிருக்கு நம்ம பசங்கள. பாவம்யா. விட்ருங்க. அழுதுடுவாய்ங்க. அடுத்த மேட்சுல நல்ல ஆடுவாய்ங்க. மன்னிச்சுவுடுங்க. அதான் பெரிய மனுஷனுக்கு அழகு. :)