Wednesday, March 28, 2007

கிரேக் சாப்பல் முன் ஜாமின்

இந்திய கிரிக்கெட்டில் பழிசுமத்தும் படலம் நன்றாக துவங்கி வைக்கப்பட்டுள்ளது. யாரால்? வேறு யார் நம்ம பயிற்சியாளர் மூலம் தான். நேற்று இரவு அனேக செய்தி சேனல்களில் ப்ரேக்கிங் நியூஸ் என்று அவர் ஒர் பத்திரிக்கை நண்பருக்கு அனுப்பியதாக சில குறுஞ்செய்திகளை (SMS) காண்பித்தார்கள். மனிதன் ஏற்கனவே குழம்பி இருக்கும் குட்டையை Dozer-ஐ விட்டு குழப்புகிறார். அவரது சில குறுஞ்செய்திகள்:

# உலகக் கோப்பைக்கு தேர்வு செய்திருந்த அணியில் எனக்கு முழு திருப்தியில்லை. இளம்வீரர்களை கேட்ட என்னுடைய வேண்டுகோளை கேப்டனும், வெங்க்சர்க்காரும் நிராகரித்தனர்.

# வெங்சர்க்கார் சர்ச்சைக்களுக்கு பயந்து மூத்த வீரர்களையே தேர்வு செய்தார்.

# மூத்த வீரர்கள் தன்னலமாகவே ஆடினர்

# சுரேஷ் ராய்னா அணியில் இடம்பெறுவதை மூத்தவீரர்கள் விரும்பவில்லை.

# யுவராஜ்சிங் தன்னை பெரிய ஸ்டாராக நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், உண்மை அதுவல்ல. அவர் வளர்ந்து வரும் ஸ்டார் மட்டுமே.இவைகள் தான் சாப்பல் வீசியிருக்கும் பவுன்ஸர்கள். எல்லாம் சரி, ஒரு பொறுப்பான பதவியிலிருக்கும் ஒருவர் நாடு திரும்பும் முன் அவசரப்பட்டு பழியை அடுத்தவர்கள் மேல் போடுவதேன்? அனைத்து குறுஞ்செய்திகளையும் பார்த்தால், இந்தியர்கள் தமக்குள் அடித்துக்கொள்ளட்டும் என்று நன்றாக திட்டமிட்ட பழிகள். அனைத்து தரப்பினரையும் வளைத்து போட்டிருக்கிறார். இந்திய தோல்விக்கு பலரின் பங்கு இருந்தாலும் பொறுப்பற்ற தனமான பழிச்சாடல்கள் நல்லதல்ல. சாப்பல் தன்மீது விழப்போகும் பழிக்கு முன் ஜாமின் எடுத்தது போலிருக்கிறது. சாப்பல் இந்திய அணியின் ஒற்றுமையை மீண்டும் அதளபாதாளத்திற்கு தள்ளியிருக்கிறார். வெல்டன் கோச்!!

4 comments:

மணிகண்டன் said...

ஒவ்வொருத்தரும் யார்மேல பழியை தூக்கிப்போடலாம்னு பார்க்கறாங்க. சேப்பல் முதல் பாலை போட்டுட்டாரு. அடுத்தது யாருன்னு பார்ப்போம் :)

Naufal MQ said...

:)

Unknown said...

கோச் சொல்லியிருப்பதில் என்ன குற்றம் கண்டீர் பாஸ்ட் பவுலர் ?

தனி தனியா நிக்க வச்சா நம்ம ஆளுங்க எல்லாம் எம்பையர் ஸ்டேட் பில்டிங் தான்... ஆனாக் கூட்டமாப் போனா.. காத்து அடிச்சா பறக்குற பாலிதீ பை கூடாரம் தானே..

கோச் பாவம் அவர் மனத்தில் உள்ளதைச் சொல்லியிருக்கிறார்.. ஆமா அந்த எஸ்.எம்.எஸ் ஆதாரப்பூர்வமானது தானா?

Naufal MQ said...

இதை கோச் உலகக் கோப்பைக்கு புறப்புடும் முன் கூறியதாக தெரிகிறது. தனக்கு விருப்பமில்லாத அணியை அவர் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அக் கூட்டத்திலேயே சொல்லியிருக்கலாம். ஒருவகையில் இந்த எஸ்.எம்.எஸ் நன்மை செய்யலாம். நமது கிரிக்கெட் வாரியத்தின் தில்லு-முல்லுகள் வெளியே தெரியவரும் என வாரியம் இனி பயப்படும்.

தோல்விக்குப் பின் இந்த எஸ்.எம்.எஸ் வெளியாகியதுதான் எனக்கு வருத்தம். ஒருவேளை இந்தியா சூப்பர் 8-க்கு போயிருந்தால் இவையாவும் (உண்மையெனில்) வெளியே தெரியாமல் போயிருந்திருக்கும்.

//கோச் பாவம் அவர் மனத்தில் உள்ளதைச் சொல்லியிருக்கிறார்.. ஆமா அந்த எஸ்.எம்.எஸ் ஆதாரப்பூர்வமானது தானா? //

மேலும் விபரங்களுக்கு இதை பார்க்கவும். http://www.cricketnext.com/news/gregs-sms-divides-indian-cricket/24009-13-1.html