Saturday, March 24, 2007

GO AUSSIE GO!!!

இந்திய அணி அடித்து விரட்டப்பட்ட நிலையில் மக்கள் புலம்பித் திரிகின்றனர். தம்பிக்கு தொலைபேசினால் 'நாதாரிங்க நம்ம ஆசையில மண்ணை அள்ளிப் போட்டுட்டானுங்களேன்னு' புலம்புறார். அங்கிட்டு நம்ம அபிஅப்பா, 'நம்ம அபிபாப்பாகிட்ட பேட்டை கொடுத்திருந்தா கூட 10 ரன்னாவது அடிச்சிருக்குமே'னு அலுத்துக்கொள்கிறார். என்ன செய்ய? பேசுமிடமெல்லாம் புலம்பல். திரும்புமிடமெல்லாம் சோர்வான முகங்கள்.

சரி! ரியாலிட்டிக்கு வருவோம். மக்களே ஒன்றும் குறைந்து விடவில்லை. நடக்கவிருக்கும் போட்டிகளில் நாம் கேவலப்படாம இருக்குற மாதிரி ஒரு அணிக்கு ஆதரவளிக்கனுமா? இருக்கவே இருக்கு நம்ம ஆஸ்திரேலியா. ஆமாங்க, தாய்நாட்டுப் பற்றை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால் எனக்கு பிடித்த அணி ஆஸ்திரேலியா. ரியல் ஃபைட்டர்ஸ் (ஆசிப் அண்ணாச்சி, நண்பர் முத்துகுமரன் காதில் புகை வருவது தெரிகிறது). இவனுங்கள நம்பி நாம கை தட்டலாம். அதனால், சகலமானவர்களுக்கு தெரிவிப்பதென்னவென்றால் ஆஸ்திரேலிய ஆதரளாவர்கள் அணியில் சேரவேண்டுமென்றால் இந்த ஃபாஸ்ட் பவுலருடன் கை கோருங்கள். எதிரணியினரை சம்மு சம்மு சம்மு சம்மு சம்ஹாரம் பண்ணிடலாம். :)

இன்று தெ.ஆ உடனான போட்டியை காணத் தவறாதீர்கள். அனல் பறக்கும் போட்டியாக இருக்கும். ஆளில்லாமல் (முக்கிய வீரர்கள் இல்லாமல்) விளையாடிய வென்ற மப்புடன் சில அணிகள் வலம் வருவதாக தெரிகிறது. இன்று தெரியும் அதற்கு விடை. ஆஸ்திரேலியா போடும் வெற்றி நடை.

GO AUSSIE GO!!!!

28 comments:

நாமக்கல் சிபி said...

//இன்று தெரியும் அதற்கு விடை. ஆஸ்திரேலியா போடும் வெற்றி நடை.
//

ம்ம்.வீராச்சாமியின் பாதிப்பு கொஞ்சம் தெரிகிறது!

Naufal MQ said...

சிபி,
சத்தியமா நான் இன்னும் வீராச்சாமி பாக்கலைங்க. நம்புங்க ப்ளீஸ்....

முத்துகுமரன் said...

பர்முடா மாயாஜாலத்திற்கு பின் யார் காதில் புகை வருதின்னுதான் பார்த்திடுவோம் :-)

Naufal MQ said...

//முத்துகுமரன் said...
பர்முடா மாயாஜாலத்திற்கு பின் யார் காதில் புகை வருதின்னுதான் பார்த்திடுவோம் :-)
//
(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)
இன்னமுமா நம்பிக்கிட்டு இருக்கீய??

அபி அப்பா said...

// Fast Bowler said...
சிபி,
சத்தியமா நான் இன்னும் வீராச்சாமி பாக்கலைங்க. நம்புங்க ப்ளீஸ்.... //

நான் சி.டி அனுப்பவா?

அபி அப்பா said...

//பர்முடா மாயாஜாலத்திற்கு பின் யார் காதில் புகை வருதின்னுதான் பார்த்திடுவோம் :-) //
சபாஷ், முத்துகுமாரா! நான் உங்க கட்சி:-))

அபி அப்பா said...

//(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)
இன்னமுமா நம்பிக்கிட்டு இருக்கீய?? //

ஆமா! இப்பவும் தான்:-)

Naufal MQ said...

//நான் சி.டி அனுப்பவா? //

அடுத்த தற்கொலையை கிரிக்கெட் உலகம் தாங்காதய்யா.

Naufal MQ said...

//அபி அப்பா said...
சபாஷ், முத்துகுமாரா! நான் உங்க கட்சி:-))
//
அபிஅப்பா, நல்லா யோசிச்சுக்கிருங்க..
இப்போவெ ஆஸ்திரேலியா ஆதரளவாளர் அணியில் சேர்ந்தா டிஸ்கவுண்ட் உண்டு.

நாகை சிவா said...

ஆஸ்சியா........... சான்ஸ்யே கிடையாது....

நம்ம புல்சப்போர்ட் இலங்கைக்கு தான்!!!

Naufal MQ said...

//நாகை சிவா said...
ஆஸ்சியா........... சான்ஸ்யே கிடையாது....
//
சிவா, அப்படியெல்லாம் சொல்லிடாதீங்க. கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க.

கதிர் said...

மனுசன் லீவ போட்டு டீ.வி முன்னாடி உக்காந்தா ஏண்டா வெண்ணெ எங்கள நம்பின? அப்படின்ற மாதிரி பண்ணிட்டானுங்க.

மணிகண்டன் said...

நான் சேர்ந்துக்கிறேன்.இவ்வளவு நாளா ஆஸ்திரேலியா பிடிக்க்லைன்னாலும், கிரிக்கெட்ல நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை

Geetha Sambasivam said...

இது என்னங்க, இந்தியா விளையாடறதை விட மோசமா இருக்கு உங்க பதிவைப் படிக்கிறதும், அதிலே வந்திருக்கிற கமெண்டைப் பார்க்கிறதும். :P

பாரதிய நவீன இளவரசன் said...

India will win.....!
(PaNaththa niraya yerakkirukkaangaiyaa!)

Anonymous said...

I am anit-Aussie, they are a very very good side but their arrogance makes me not like them. I will support any team other than Aussie.
During 75-85 period, WestIndies were a great team and everyone like them because they played like gentlemen. But Aussies they do a lot of talking, admitted they play best cricket but to support a country other than your own you need more than just cricket :)

So my vote is anti-aussie. But its going to be tough after just seeing SA go down fighting. Maybe Srilanka can do it.

Naufal MQ said...

// தம்பி said...
மனுசன் லீவ போட்டு டீ.வி முன்னாடி உக்காந்தா ஏண்டா வெண்ணெ எங்கள நம்பின? அப்படின்ற மாதிரி பண்ணிட்டானுங்க.
//
பரவாயில்லை விடுங்க தம்பி. அடுத்த கப்புல பாத்துக்கலாம்.

Naufal MQ said...

//மணிகண்டன் said...
நான் சேர்ந்துக்கிறேன்.இவ்வளவு நாளா ஆஸ்திரேலியா பிடிக்க்லைன்னாலும், கிரிக்கெட்ல நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை
//
வாங்க மணிகண்டன், நீங்க சேர்ந்தா என் கூட ஒரு பெரும்படையே இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்.

Naufal MQ said...

//கீதா சாம்பசிவம் said...
இது என்னங்க, இந்தியா விளையாடறதை விட மோசமா இருக்கு உங்க பதிவைப் படிக்கிறதும், அதிலே வந்திருக்கிற கமெண்டைப் பார்க்கிறதும். :P
//
தயவுசெய்து என்னுடைய பதிவை அந்த வீணாப்போனவன்களுடன் ஒப்பிடாதீர்கள். :)

Naufal MQ said...

//Bharateeyamodernprince said...
India will win.....!
(PaNaththa niraya yerakkirukkaangaiyaa!)
//

ஆகா. அப்போ என்னவோ நடக்கப் போவுதுன்னு சொல்றீங்க... :)

Naufal MQ said...

//So my vote is anti-aussie. But its going to be tough after just seeing SA go down fighting. Maybe Srilanka can do it.
//

அனானி,
என்னதான் சொல்லுங்க இந்த ஆஸ்திரேலிய அணியிடம் இருக்கும் ஒரு இது எந்த அணியிலும் இல்லை. உங்கள் கொள்கையை மாற்ற வேண்டாம். ஆனால், கப் ஆஸிக்குத் தான். :)

Anonymous said...

ஏன்யா பவுன்சரு

இப்படித்தான் 'கமான் இந்தியா கமான் இந்தியா'ன்னு கூப்பிட்டு இந்தியாவை அங்கேயிருந்து ஊருக்கு வரச்சொன்னானுங்க. நீரு ஆஸிக்கு ஆதரவுன்னு சொல்லிட்டு 'போ! டோர்ணமெண்டை விட்டே போ'ன்னு துரத்துதீரே? நல்லாவா இருக்கு? பாவம். அவனுவளும் நாலு பேரு கிட்ட நாலு அடி வாங்கட்டும். சூப்பர் - எட்டுல. ஆனா ஒரு வகையில திருப்திய்யா. நம்ம பயலுவ சூப்பர் எட்டுக்கு போவலை. போயிருந்தா அவனவன் நர வேட்டையாடியிருப்பான் போல :-)

சாத்தான்குளத்தான்

Naufal MQ said...

//ஆசிப் மீரான் said...

வாங்க அண்ணாச்சி,
ஆளையே காணோம். இந்தியா தோத்ததுல வெளியே தலை காட்டலயோன்னு நினைச்சேன். :)

கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலன்னு சொல்றதுல நம்மல அடிக்க முடியாது :)

Naufal MQ said...

அப்புறம், நேத்து பாத்தீங்களா நம்ம ஆஸி அடிய... இப்படி ஆடனும் கேம்... :)

Pot"tea" kadai said...

Bangladesh Tigers deserves lot better than Indian possé.

and always Aussie Rules!!!

Naufal MQ said...

//Pot"tea" kadai said...

and always Aussie Rules!!!
//

அது...

A Simple Man said...

ஆஸ்திரேலியாவின் குள்ளநரித்தனம் அம்பலம்.
இந்தியஅணி மீது கொண்ட பயத்தின் காரணமாக 3ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்திரேலியா செய்த சதியே சேப்பல் இந்தியாவுக்குப் பயிற்சியாளராக வந்து உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேற்றினார்..

Naufal MQ said...

//Abul said...
ஆஸ்திரேலியாவின் குள்ளநரித்தனம் அம்பலம்.
இந்தியஅணி மீது கொண்ட பயத்தின் காரணமாக 3ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்திரேலியா செய்த சதியே சேப்பல் இந்தியாவுக்குப் பயிற்சியாளராக வந்து உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேற்றினார்..
//
அபுல்,
நீங்க ரொம்ப லேட். இதைத்தான் எல்லாரும் அப்போவே கூவுனாங்க. :) ஹி ஹி. அவரை மட்டும் குறை சொல்லக் கூடாது. ஆனால், அவருக்குத்தான் அணியை சிதைத்ததில் முதல் பங்கு.