Thursday, March 1, 2007

அக்தர், ஆஸிஃப் நீக்கம்


நான் எதிர்பார்த்தது போலவே, பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சு வேதாளங்கள் அக்தர் மற்றும் ஆஸிஃப் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி பாகிஸ்தான் அணி மேற்கிந்தியாவிற்கு புறப்படுவதற்கு சற்று முன் அறிவிக்கப்பட்டது.


லண்டன் சென்றிருந்த அக்தர், ஆஸிஃப் இருவரும் 'இன்று வருவார்கள் நாளை வருவார்கள்' என எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால் இருவரும் இன்று வரை வந்தபாடில்லை. இருவரும் தமது உடலில் எஞ்சியிருக்கும் போதை பொருள் தடயங்களை அகற்றுவதற்காக லண்டன் சென்றிருக்கிறார்கள் என்று செய்தி வெளியானது எல்லாரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தும் இதுவரை அணியினருடன் வந்து சேராதது மர்மமாகவே உள்ளது. மீண்டும் ஒரு ஊக்கப் பொருள் சோதனைக்குட்பட அவர்கள் ஆயத்தமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.


அவ்விருவருக்கும் பதிலாக முஹம்மது சமி மற்றும் யாசிர் அராஃபத் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் அணியினருடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணித்தனர். இந்த இருவர் இல்லாத பாகிஸ்தான் மிகவும் பலவீனமாக எனக்கு காட்சியளிக்கிறது. பார்க்கலாம் எப்படி விளையாடுகிறது இந்த பாக் அணி என்று.

3 comments:

கார்மேகராஜா said...

பாகிஸ்தானுக்கு அணியே சரியாக அமையாமல், ஆஸ்திரேலியாவின் உலககோப்பை கனவை பாகிஸ்தானால் மட்டும்தான் தடுக்க முடியும் என முன்னாள் வீரர் அக்ரம் எப்படி கூறினார் என புரியவில்லை!

Naufal MQ said...

அது நாட்டுப்பற்றால் கூறியதாக இருக்கலாம். இல்லையேல் தனது அணிக்கு ஊக்கமூட்ட கூறியிருக்கலாம். அதைப் போய் நீங்கள் சீரியஸாக எடுத்தால்? :)

ஆனால், ஒன்றுங்க! பெர்முடாவிடம் தோற்ற மறுநாளே ஆஸ்திரேலியாவை வெல்லும் அளவிற்கு ஒரு கணிக்க இயலாத அணி ஒன்று உண்டென்றால் அது பாகிஸ்தான் தான். They are highly un-predictable.

கார்த்திக் பிரபு said...

paavam pakistan