மேற்கிந்திய தீவுகளில் நடக்க இருக்கும் 9வது உலகக் கோப்பைகளில் கலந்து கொள்ள இந்திய அணி மும்பையிலிருந்து புறப்பட்டு சென்றது.
100 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் தங்களுடைய தோள்களில் சுமந்து சென்றது இந்திய அணி. கிரிக்கெட்டை உயிர் மூச்சாக நினைக்கும் ஒரு நாட்டின் பிரதிநிதியாக விளையாடச் செல்லும் வீரர்களிடம் கேட்டால் தெரியும் இந்த சுமை எத்தனை கனமானது என்று. நம் வீரர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு/ஆதரவுதான் ப்ளஸ் & மைனஸ். பிரேஸில் மக்களுக்கு கால்பந்து போல நமக்கு கிரிக்கெட்.
'வெற்றி பெறுவதற்காக மட்டுமே விளையாட வந்துள்ளோம்' என்ற எண்ணத்துடன் இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் வெறியுடன் போராடுமானல் வெற்றி நமதே. இந்திய அணியில் திறமைக்கு ஒரு பொழுதும் பஞ்சம் ஏற்பட்டதில்லை. நாம் பெரும்பாலும் தோற்பதெல்லாம் மனவலிமையை இழக்கும் சூழ்நிலைகளில் மட்டுமே. அதற்கு சான்றாக கடந்த உலகக் கோப்பை இறுதி போட்டியினை கூறலாம். சில நாட்களுக்கு முன் மெக்ராத் அப்போட்டியினை குறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில் : 'இறுதி போட்டிக்கு முந்தைய நாள், எமது அணி(ஆஸி) மிகுந்த உற்சாகத்திலும், பதற்றமின்றியும் காணப்பட்டோம். நாங்கள் ஒருவருக்கொருவர் நகைச்சுவைகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், இந்திய அணியினர் மாறாக பயிற்சிகளில் மூழ்கியிருந்ததோடு, பதற்றத்துடனும் இறுகிய முகத்துடனும் காணப்பட்டனர். அப்போது நாளை போட்டியில் வெற்றி எமதே என்று எனக்கு தெரிந்துவிட்டது' என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், பதற்றமடையாமல் மனவலிமையுடன் இந்திய அணி இந்த உலகக் கோப்பையை எதிர் கொள்ள வேண்டும். அதுவே நமக்கு பாதி வெற்றியை பெற்று தந்துவிடும்.
ஊடகங்களின் அட்டகாசம்:
இந்திய அணியை வழியனுப்புவதை ஒரு மெகா-தொடர் அளவில் நிகழ்ச்சியாக சில ஆங்கில/இந்தி ஊடகங்கள் இரண்டு நாட்களாகவே நடத்தி வருகின்றன. ஒவ்வொரு நகரத்திலிருந்தும் பாட்டு பாடி ஆட்டம் ஆடி வழியனுப்பி வைப்பதாக காட்டுகிறார்கள். கோமா நிலையிலிருந்து ஒருவர் மயக்கம் தெளிந்து இந்நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டால் 'இந்தியா உலகக் கோப்பை வென்று விட்டதா?' என கேட்க தோன்றும். அளவுக்கு மிஞ்சிய ஆர்ப்பாட்டம் இந்த ஊடகங்கள் செய்பவை.
ஒரு செய்தி ஊடகம், மும்பை விமான நிலையத்தில் வைத்து, தோனியின் கைப்பையை காண்பித்து அது எத்தனை கிலோ எடை இருக்கும் என ஆராய்கிறது. தேவையா இது? இது போல பல கூத்துக்கள். எல்லாம் வியாபார நோக்கம். இவர்களே மக்களுக்கு கிரிக்கெட் மீது வெருப்பை உண்டாக்கிவிடுவார்கள் போல் இருக்கிறது. அத்தனைக்கு சலிப்படைய வைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வரம்பே இல்லை போலிருக்கிறது.
பலி கொடுக்க இருக்கும் ஒரு கடாவின் முகத்தில் இருக்கும் ஒரு வித பயத்தை போலவே இந்திய வீரர்களின் முகத்திலும் இவர்களே வரவைத்து விடுகிறார்கள். பாவம் நம் வீரர்கள். அளவிற்கதிகமான எதிர்பார்ப்புகள்.
சென்று வென்று வருக என நாமும் வாழ்த்தி அனுப்புவோம்.

12 comments:
Hello
indha murai koppai namakku than. namathan jeyippom.(ennam pathvai kanome endru ninaithen)
என் சார்பாவும் ஒரு வாழ்த்து,
சென்று வென்று வருக!
//Nakkeeran said...
Hello
indha murai koppai namakku than. namathan jeyippom.(ennam pathvai kanome endru ninaithen)
//
நன்றி நக்கீரன்!
உங்கள் கனவு நனவானால் சரிதான்.
//மணிகண்டன் said...
என் சார்பாவும் ஒரு வாழ்த்து,
சென்று வென்று வருக!
//
:)
hi frend neenga sonnnadhu unmai than ..padharram and bayam than zaheer khanin andha mosamana first overu ku karanama ..ivvlothukum last world cup appo nama nalla strong ana team..
chasing la nammalai asaichuku mudiyadhu ..ana indha tie appdilam illai...ennaya ketta pona time vida indha time konjam kammi than
orey nambikai uththapa,ganguly..sachi valakam pola man of the sries vangiduvaaru ..
bowling romba matam..srinath ,prasad combination ku appuram vera nalla combination varala ..parklam...updates potututey irunga makka
கடந்த முறை நமது அணியின் பலம்: திடிரென்று முளைத்த நம்பிக்கை, வேட்கை மற்றும் ஒற்றுமை.
கடந்த முறை நமது அணி இறுதிப் போட்டியில் தோற்றது பதற்றம் அதன் காரணமாக விளைந்த அந்த முதல் ஓவர்.
இம்முறை அணியும் அத்தனை மோசமானதல்ல. நீங்கள் கூறுவது போல் பவுலிங் கூட அத்தனை மோசமில்லை என்றே தோன்றுகிறது. ஜாகிர்/முனாஃப் ஜோடி கலக்கும் என்றே தோன்றுகிறது. பொருத்திருந்து பார்க்கலாம். தேவையெல்லாம் பதட்டமில்லா ஆட்டம்.
ஜாகிர்/முனாஃப் ஜோடி கலக்கும் என்றே தோன்றுகிறது//
zaheer romba nal kalichu team ku vandu ippo than kojam form la irukaaru ..munaf wickets eduthalaum ..avar kitta andha akroshamao aravamao irukira madhir theriyala ..konjamadhu veri venumya ..lee lam eppadi wickets edukuraan ..andha veri than ..avan summara than bowling poduraana ..anna ellathaiyu bayankaati vachurukaan ..andha madhri nan soll varradhu puriyduhaalaa!!:)
கார்த்திக் பிரபு,
முனாஃப் அமைதியானவர்தான் நான் ஒத்துக் கொள்கிறேன். அதாவது, ஜாஹிர் நிடினி ரகம் என்றால் முனாஃப் பொல்லாக் ரகம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். :)

March 1, 2007 11:34 AM
//
pavam pollockum nitinum
சென்றுவிட்டது; வென்று வரும்...
//bowling romba matam..srinath ,prasad combination ku appuram vera nalla combination varala ..parklam...updates potututey irunga makka
//
உண்மைதான் கார்த்திக். இந்தியாவோட பெரிய பலவீனம் ஒரு நல்ல 5th பவுலர் இல்லாத குறை. சச்சின், சேவாக், யுவராஜ் எல்லருமே பகுதிநேர பவுலர்கள் தான். அவங்களை நம்ப முடியாது. இந்த நிலமைல ஸ்ரீசாந்தோ, அகர்கரோ இல்ல முக்கிய பவுலர்கள்ல் வேற யாராவதோ சொதப்ப ஆரம்பிச்சாங்கன்னா அவ்ளோதான்.
தங்களின் இந்தப்பதிவுக்கான தொடுப்பை தங்கள் அனுமதியின்றி எனது பதிவில் பயன்படுத்தியுள்ளேன்.
மன்னிக்கவும்.
Post a Comment