Sunday, March 18, 2007

அடுத்த வீட்டிலும் எழவு

சரி, நம்ம வீட்டுலதான் இன்னிக்கு ஒப்பாரியும் ஓலமும் இருக்குன்னு பாத்தா, பக்கத்து வீட்டுலயும் எழவு விழுந்துருக்கு. ஆமாங்க, பாவம் பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் முதல் முதலில் வெளியேறிய அணி என்ற அவப்பெயருக்கு ஆளாகி நிற்கின்றது.

நமக்குத்தான் ஆப்புன்னு பாத்தா பாகிஸ்தானுக்கு டபுள் ஆப்பு. பங்களாதெஷாவது டெஸ்ட் விளையாடும் அந்தஸ்துள்ள / வெற்றிகளை சிறிது சிறிதாக சுவைக்கத் தொடங்கிய அணி. ஆனால், பாகிஸ்தான் தோற்றதோ முதன் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் அயர்லாந்திடம். எங்கே போயி முட்டிக்கிறது?

பாகிஸ்தானின் அணித் தேர்வின்போதெ பலவித சலசலப்புகள். பின்பு அக்தர் & ஆஸிஃப் காயம் (!?!?!?!?) காரணமாக வெளியேற்றம். இம்ரான் அப்போவே சொன்னார். உலகக் கோப்பையில் பங்குபெற்றுள்ள பாகிஸ்தான் அணிகளில் இந்த அணிதான் சொத்தையான அணியென்றார். அது எந்தளவு உண்மை. பாகிஸ்தான் அணிக்குள் என்னென்னமோ பிரச்சனைகள் உள்ளன. அது பலரால் ஊகிக்கப்பட்டாலும் இதுவரை கசியவில்லை. இனி கசியத்தொடங்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் கலவர பூமியாகும். இரத்தக்காடாகும் என்பது மட்டும் உறுதி.

பாகிஸ்தான் அணியினர் பாகிஸ்தான் திரும்பிச் செல்ல இயலாத நிலை ஏற்படும். இண்ஜமாம் பதவி விலகுவார். உல்மர் இங்கிலாந்துக்கு பெட்டி கட்டி ரெடியாக இருப்பார். பாகிஸ்தான் அணியில் மிகப்பெரிய ஆப்பரேஷன் செய்யப்படும். தேவையான ஒன்றாகவே இருக்கும். நானும், இது போன்ற சொங்கியான ஒரு பாகிஸ்தான் அணியை பார்த்ததே இல்லை.

அடுத்த வீட்டு துக்கத்தில் பங்குகொண்டு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். :(

7 comments:

சீனு said...

//அடுத்த வீட்டிலும் எளவு//

"எழவு"...

Anonymous said...

// சீனு said...
//அடுத்த வீட்டிலும் எளவு//

"எழவு"...
//
நன்றி.

மணிகண்டன் said...

எனக்கும் வருத்தமாதான் இருக்கு நண்பரே, பாகிஸ்தான் போயிடுச்சு. இந்தியாவ்வும் வெளியே போயிடுச்ச்சுன்னா, உலகக்கோப்பைல ஒரு சுவாரசியமே இருக்காது :(

Anonymous said...

யோவ் பவுலர்,

எந்த நேரத்திலய்யா எழவுன்னு எழுதுனே?

பாவம் பாப் உல்மர் போய்ச் சேர்ந்துட்டாராம். நல்ல இரும்...

Anonymous said...

"ezavu".. "oppari.."

Bob woolmer death...

What's happening..???

Anonymous said...

//நிஜமான வருத்தத்துடன் said...
யோவ் பவுலர்,

எந்த நேரத்திலய்யா எழவுன்னு எழுதுனே?

பாவம் பாப் உல்மர் போய்ச் சேர்ந்துட்டாராம். நல்ல இரும்...
//
உண்மையில் இரவு தூங்கப்போகும் செய்திகேட்டதும் ரொம்ப வருத்தமா போச்சுங்க. நான் வேற இந்த மாதிரி தலைப்பு வச்சது ரொம்ப உறுத்துச்சுங்க. எல்லாரும் என்னை மன்னிக்கனும். :(

Anonymous said...

//Anonymous said...
"ezavu".. "oppari.."

Bob woolmer death...

What's happening..???
//
Im so sorry my freind. :(