அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகக் கோப்பை வரும் 13-ந்தேதி தொடங்க இருக்கிறது. அதற்கு முன் போட்டிகளில் கலந்து கொள்ளும் நாடுகளுக்கு உலகக் கோப்பையை காட்சிக்காக கொண்டு செல்வது வழக்கம்.
இதனடிப்படையில், கடந்த வியாழனன்று கோப்பை கல்கத்தா கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அப்போது, நிகழ்ச்சி நிர்வாகிகளில் ஒருவர் கோப்பையை கையில் எடுத்தபோது கோப்பையின் கீழ்பகுதியிலிருந்த தங்க வளையம் ஒன்று வெளியே பெயர்ந்துவிட்டது. இதனால், உடனே உலகக் கோப்பை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு சரி செய்யப்பட்டதாக தெரிகிறது.
கல்கத்தவிற்கு அடுத்து, மும்பை மற்றும் சென்னை நகரங்களுக்கு உலகக் கோப்பை எடுத்து செல்லப்படும். பின்பு இங்கிலாந்து கொண்டு செல்லப்படுகிறது.
11 கிலோ எடை கொண்ட இந்த உலகக் கோப்பை தங்க முலாம் பூசப்பட்டதாகும். இது இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இதன் மதிப்பு 80,000 அமெரிக்க டாலராகும்.
கல்கத்தாகாரர்களுக்கு எல்லாத்திலும் கொஞ்சம் Sprit கூடுதல்தான் போல. :)
4 comments:
ha ha ha..ஆமாம்..
கோப்பை இப்போ நலம் தானே..உடைஞ்சு போன கோப்பைய இந்தியா கிட்ட குடுத்துடபோறாங்க :)
இக்கோப்பையை பற்றிய மேலும் சில விவரங்களுக்கு
http://wcup2007.blogspot.com/2007/02/1.html
//Avanthi said...
ha ha ha..ஆமாம்..
//
ஆஹா! ப்ரொஃபல் படமே உலகக் கோப்பை படத்தை போட்டு அசத்துரீங்க. புதுசா வந்துருக்கீங்க. கலக்குங்க. :)
மணிகண்டன்,
//கோப்பை இப்போ நலம் தானே..//
நலம் நலம்.
//உடைஞ்சு போன கோப்பைய இந்தியா கிட்ட குடுத்துடபோறாங்க :)
//
கெளம்பிட்டாய்ங்கய்யா.. கெளம்பிட்டாய்ங்க..
Post a Comment