Monday, March 26, 2007

அடுத்த கட்டத்திற்கு போகலாம் வாங்க

ம்ம்ம்!! ஒருவழியாக இந்த உலகக் கோப்பையின் முதல் சுற்று பரபரப்புடனும், ஒரு பில்லியன் ஏமாற்றத்துடனும், கொலைவெறியுடனும், கொலையுடனும் முடிந்து விட்டது. இனிமேல் தான் இருக்கிறது விறுவிறுப்பான போட்டிகள். சூதாட்ட பரதேசிகளுக்கு மிகவும் பிடித்த அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் விரட்டி அடிக்கப்பட்டதில் எனக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியே.

பிறகென்ன, இவர்கள் வென்றாலும் தோற்றாலும் அதில் மேட்ச் ஃபிக்ஸிங் நடைபெற்றுள்ளது என செய்திகள் வரும். இந்த மேட்ச் ஃபிக்ஸிங் பிரச்சனைகளுக்கு எல்லாருக்கும் மறைமுகமான பங்குண்டு. வீரர்களை கடவுள்களாக வழிபடும் இந்த முட்டாள் ரசிகர்கள், தன்னுடைய வருமானமே பெரிதென வரிந்து கட்டிக்கொண்டு வீரர்களின் அன்றாட நிகழ்வுகளைக்காட்டி கூட பணம் சம்பாதித்த ஊடகங்கள், மாஃபியா கும்பல்கள், மற்றும் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை கூட ஆட மறுத்த இந்த வீரர்கள். அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதைப் பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம். அதனால் இதை விடுங்கள்.

அடுத்த கட்ட போட்டிகளுக்கு இலங்கை, நம்ம ஆஸ்திரேலியா, மே.இ, நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, தெ.ஆ மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்று அதற்காக ஆயத்தமாகி வருகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை அணி 2 புள்ளிகளையும் நல்ல ஓட்ட விகிதத்தினையும் பெற்று முதலிடத்திலுள்ளது. அடுத்ததாக, ஆஸ்திரேலியா அணியுள்ளது. என்னுடைய அரை-இறுதி தெரிவாக இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தெ.ஆ அணிகள் தகுதிபெறும் என்று நினைக்கிறேன். யாருக்குத் தெரியும் முதல் சுற்றில் நடந்தது போல இதிலும் அதிர்ச்சி வைத்தியங்கள் நடந்தால் நாம் பொறுப்பேற்க முடியுமா? :)

புள்ளிகள் அட்டவணை:

சூப்பர்-8 போட்டிகளின் கால அட்டவணை:
அயர்லாந்துடனான போட்டிகள் தவிர்த்து மற்ற போட்டிகள் யாவும் கலக்கலாக இருக்கும். Don't Miss.

8 comments:

podakkudian said...

வேதனையுடன் எழதி உள்ளீர்கள்,உங்களின் கருத்துக்கள மிக நியாயமானது.

கிரிக்கட் ரசிகர்கலான நாம் இனி விளையாட்டை ரசிப்போம்

Fast Bowler said...

வாங்க பொதக்குடியான்,
பிறகென்ன இந்தியா வெளியேறிவிட்டால் கிரிக்கெட்டே தோற்றதாக ஆகிவிடுமா என்ன. விடுங்கள்! நாம் நல்ல போட்டிகளை கண்டுகளிக்கலாம். :)

நாகை சிவா said...

பாஸ்ட், நீங்க சொல்லுறது எல்லாம் சரி தான். நமக்கு இது பாடமாக அமைந்தால் சரி தான்.

ஆனா பாருங்க நீங்க சொன்னதில் ஒரு சின்ன வேறுபாடு எனக்கு.

//இனிமேல் தான் இருக்கிறது விறுவிறுப்பான போட்டிகள்//

இருக்கும் நினைக்குறீங்க, மொத்தம் உள்ள 24 போட்டியில் 11 மேட்ச் குப்பையாக இருக்கும் என்பது என் கணிப்பு.நேற்று பங்களாதேஷ் மாட்ச் பார்த்தேன். ஸ்மீம் மூவ்மெண்ட் கொஞ்சம் இருந்தாலே அநியாயத்துக்கு திணறுறாங்க... இவங்க எப்படி மற்றவர்களிடம் எல்லாம்....

அட நாறப்ப பயல்களா, இவங்கிட்ட தோற்று எங்கள நாற அடிச்சுட்டிங்களேடா....

மற்றவர்களை விடுங்க, இவங்க ஆஸ்ஸி, நியுஸி, தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடும் மேட்ச் எப்படி இருக்கும் யோசித்து பாருங்க, பாக்கவே ஒரு ஆர்வம் இருக்காது.

ஆனது ஆச்சு ஒரு 10 மாட்ச்வாது பாக்குற மாதிரி இருந்தா சரி தான்....

Fast Bowler said...

நாகை சிவா,

அதாவது அயர்லாந்து Vs பிற அணிகள் போட்டி, வங்கதேசம் Vs ஆஸ், தெ.ஆ & நியூ போட்டிகள் தவிர மற்றவை யாவும் நன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

//அட நாறப்ப பயல்களா, இவங்கிட்ட தோற்று எங்கள நாற அடிச்சுட்டிங்களேடா....//

இன்னும் என்னால் அதை மறக்க இயலவில்லை. :(

Life must go on. Leave it.

மணிகண்டன் said...

அந்த எக்ஸெல் ஷீட் தப்புங்க நண்பரே. ஐசிசி முதல் மற்றும் இரண்டாம் எண்ணை புள்ளிகள் மற்றும் ஏப்ரல் 1,2005 தரவரிசைப்படி கணக்கிடுகிறார்கள். எக்ஸெல் ஷீட் புள்ளிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறது. உதாரணத்திற்கு க்ரூப் Dல் புள்ளிகள் படி மேற்கிந்தியத்தீவுகள் முதலிடமும், அயர்லாந்து இரண்டாமிடமும். ஆனால் ஐசிசி விதிகளின் படி அயர்லாந்து முதலிடமும்(பாகிஸ்தானின் இடம்), மேற்கிந்தியத்திவுகள் இரண்டாமிடமும் பெறுகின்றன.

//நம்ம ஆஸ்திரேலியா//
ஹ்ம் நடக்கட்டும் நடக்கட்டும் :)

Anonymous said...

fast bowler, I think the NRR should be that of all matches played. cricinfo says to qualify for semi-final NRR of *all* matches played will be taken in to consideration.

http://content-usa.cricinfo.com/wc2007/content/current/story/287305.html

Fast Bowler said...

ஆம் மணிகண்டன். ஐ.சி.சி தரப்பு அட்டவணைதான் சரி. இன்று மே.இ - ஆஸி போட்டி. :) மே.இந்திய அணிக்கு இன்னிக்கு இருக்குது ஆப்பு.

////நம்ம ஆஸ்திரேலியா//
ஹ்ம் நடக்கட்டும் நடக்கட்டும் :) //

:)

Fast Bowler said...

//Anonymous said...
fast bowler, I think the NRR should be that of all matches played. cricinfo says to qualify for semi-final NRR of *all* matches played will be taken in to consideration.
//
thanx for info and the link Anony.