நம்ம அபிஅப்பாவும், மணிகண்டனும் எனக்கு ஆளுக்கொரு பவுன்ஸர் வீசிட்டு போயிட்டாங்க. ஃபாஸ்ட் பவுலருக்கே பவுன்ஸர். புரியலயா? அதாங்க என்னோட வித்தியாசமான் ஐந்து குணங்களை/செயல்களை சொல்லனுமாம். இது என்னடா வம்பா போச்சுன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.
முதலில், இதுக்கு போயி ஒரு பதிவு போடவா அப்படின்னு ஒரு சோம்பல் மூளையில் ஒரு மணி அடிச்சுது. உலகக் கோப்பை நேரம் வேற. நம்ம பசங்க வேற கொலைவெறியை தூண்டிவிட்டுட்டு போயிட்டாய்ங்க. இந்த மூட்ல இந்த வியர்டு பதிவை எங்கே போடுறதுண்ணு தள்ளிப் போட்டுகிட்டே வந்துட்டேன். இந்தியா தோற்றுப்போன அன்னிக்கு 99.99 % மக்கள்ஸ் ஒருவிதமான வியர்டு மூட்ல தான் இருந்திருப்பாங்க.
சரி, நடந்ததை நினைச்சு என்ன நடக்கப்போகுதுன்னு மனசை தேத்திகிட்டு யோசிச்சப்ப, என்னையே நான் அலச முடிஞ்சது. அதுக்காகவாச்சும் இந்த ரெண்டு பேருக்கும் நன்றி. எனக்குள்ள சில வித்தியாசமன குணங்களை (இதே குணங்கள் உங்களில் பலருக்கு கூட இருக்கலாம்) இங்கே அறியத்தருகிறேன்.
# முன்னாடியெல்லாம் (இப்ப உண்டான்னு தெரியல) ஞாயிற்றுக்கிழமை மதியம் டி.டி-யில் பிறமொழி படம் போடுவாங்க தெரியும்ல. அப்போ கீழே பாத்தீங்கன்னா சப்-டைட்டில் ஆங்கிலத்துல போடுவாய்ங்க. அப்போ ஆரம்பிச்சுது இந்த பழக்கம். அதாவது சப்-டைட்டிலை படிச்சு வசனத்தை புரிந்து கொள்கிறேன் பேர்வழின்னு வீடியோவை பார்க்க மாட்டேன். என்னதான் படத்தை பார்க்க நான் முயற்சி செய்தாலும், கண்ணு தானாக சப்-டைட்டில்லதான் போயி நிக்கும். இப்ப வரைக்கும் இந்த பழக்கம் இருக்கு. பிறமொழி படங்கள் இப்ப பார்த்தாலும் சப்-டைட்டில் ஆஃப் செஞ்சுட்டுதான் பார்க்கிறேன். ஆஃப் செய்ய வழியில்லையேல், வெறென்ன செய்ய சப்-டைட்டிலை படிச்சதோடு திருப்திபட்டுக்க வேண்டியதுதான்.
# நான் ஒரு சரியான மறதி பேர்வழிங்க. கடைக்கு ஒரு பொருள் வாங்கப்போனா கடைக்கு போய் சேர்ந்ததும் என்ன வாங்க வந்தோம்னு மறந்துடுவேன். அந்த அளவுக்கு மறதி. ஊர்ல இருக்கும் போது மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டே போவேன். இப்போ ஒன்னும் கவலையில்லை, கடைக்குப் போய் மறந்தாலும் செல்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம். என்ன இலவசாமா ரெண்டு திட்டு வாங்கிகொள்ளவேண்டும். :)
# அப்புறம், நடக்கும் போது என்னமோ உலகப்போரையே நான் தான் போயி நிறுத்தனும். அதான் அவசரமா போறென்னு சொல்ற மாதிரி வேகமாக நடப்பது. சில நேரம் வேகமா நடக்கிறமோன்னு தோணும். உடனே வேகம் குறைத்து நடக்க ஆரம்பிப்பேன். ஆனால், சில நிமிடங்களில் எனக்கே தெரியாது எப்போ வேகம் கூட்டினேன் என்று அந்தளவிற்கு மாறியிருக்கும் நடை வேகம்.
# நம்ம ஊர்ல தெருவில் நடக்கும் போது, கடைகளில் மாட்டப்பட்டிருக்கும் போர்டுகளில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களின் ஃபாண்ட்ஸ் (Fonts) பார்த்து ரசித்தவாறு நடப்பது. அதே போர்டுகளின் மூலையில் Art by அப்படிங்கிற இடத்துல யாரு வரைஞ்சிருக்கான்னு கையொப்பம் இருக்கும். அதையும் பார்த்தவாறு நடப்பது வழக்கம். இத்தனைக்கும் நடையில் அதே வேகம் இருக்கும். :)
இவ்ளோதாங்க எனக்குத் தெரிஞ்சு என்கிட்ட இருக்கும் வியர்டு பழக்கங்கள். மற்றபடி, என்னுடன் இருக்கும் என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இன்னும் சிலவை தெரிந்திருக்கலாம். என்னடா இவன் கிரிக்கெட்டை பற்றி ஒன்னு கூட வியர்டா சொல்லலைன்னு பார்க்கிறீங்களா? கிரிக்கெட் பார்க்க போனாலோ, விளையாட போனாலோ சீரியஸாகிடுவேன். இதெயெல்லாம் கவனிக்க நேரமிருப்பதில்லை. :)
ஆகா, யாராவது அஞ்சு பேரை கோர்த்து விடனுமாமே. எனக்கு அவ்வளவா பதிவர்களை பழக்கமில்லை. சிலரைத்தவிர. பின்னூடமிட்டதோடு சரி. அதனால், இவர்கள் ஏற்கனவே வியர்டு சொல்லிட்டாங்களா இல்லையான்னு தெரியல. இருந்தாலும் கூப்பிட்டு பார்க்கலாம்.
1. ஆசிப் அண்ணாச்சி
2. முத்துகுமரன்
3. பினாத்தல் சுரேஷ்
மற்றபடி எனக்குத் தெரிந்த பதிவர்களான அபிஅப்பா, தம்பி இருவரும் தங்கள் வியர்டு குணங்களை சொல்லிட்டாங்க. அதனால், அவர்களுக்கு ப்ராக்ஸியாக:
4. கிரேக் சாப்பல்
5. டிராவிட்
23 comments:
//மற்றபடி எனக்குத் தெரிந்த பதிவர்களான அபிஅப்பா, தம்பி இருவரும் தங்கள் வியர்டு குணங்களை சொல்லிட்டாங்க. அதனால், அவர்களுக்கு ப்ராக்ஸியாக:
4. கிரேக் சாப்பல்
5. டிராவிட்//
பாஸ்ட்பவுலரே! இதுதான் டச். அப்ப நீங்களும் வியர்டுதானா:-))
வேகமா நடந்தாதான் பாஸ்ட்பவுலர், மெதுவா நடந்தா ஸ்பின் பவுலர்..அப்டிதான:-))
மத்தபடி நான் tag செஞ்சதுக்கு மதித்து வந்து பதிவு போட்டதுக்கு நன்னி நன்னி நன்னி:-))))
பிறமொழி படத்துக்குத்தானே.. தமிழ் படத்துக்கு சப்-டைட்டில் பார்க்கிறதில்லைதானே.. அப்ப இன்னும் முத்திப்போகலை
//நான் tag செஞ்சதுக்கு மதித்து வந்து பதிவு போட்டதுக்கு நன்னி நன்னி நன்னி:-))))//ரிப்பீட்டே
பேருக்கேத்த மாதிரி ஸ்பீடா தான் இருக்கீங்க.
//அப்புறம், நடக்கும் போது என்னமோ உலகப்போரையே நான் தான் போயி நிறுத்தனும். அதான் அவசரமா போறென்னு சொல்ற மாதிரி வேகமாக நடப்பது//
நானும் உங்க கேஸ் தாங்க. நண்பர்கள் என்னடா நடந்தே பஸ்ஸை ஓவர்டேக் பண்ணப்போறியானு கிண்டல் பண்ணுவாங்க :)
இன்னும் மூணு பிராக்சி ரெடி பண்ணுங்க, நீங்க கூப்பிட்ட அந்த மூணு பேரையும் நான் ஏற்கனவே கூப்பிட்டாச்சு.
:))
பாஸ்ட்பவுலரே வணக்கங்க ;-)
\\ஆஃப் செய்ய வழியில்லையேல், வெறென்ன செய்ய சப்-டைட்டிலை படிச்சதோடு திருப்திபட்டுக்க வேண்டியதுதான்.\\
உண்மையிலே இது வியர்டு தாங்க ;-)))
\\அபி அப்பா said...
வேகமா நடந்தாதான் பாஸ்ட்பவுலர், மெதுவா நடந்தா ஸ்பின் பவுலர்..அப்டிதான:-)\\
அய்யே....அபி அப்பா எப்படி இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறிங்க ;-)))))
//4. கிரேக் சாப்பல்
5. டிராவிட்//
பாஸ்ட்பவுலரே! இதுதான் டச். அப்ப நீங்களும் வியர்டுதானா:-)) //
அபிஅப்பா, வெறென்ன செய்ய அவனுங்களும் கிறுக்கனாத்தான் இருப்பாய்ங்க. வந்து சொல்லட்டுமே. :)
// அபி அப்பா said...
வேகமா நடந்தாதான் பாஸ்ட்பவுலர், மெதுவா நடந்தா ஸ்பின் பவுலர்..அப்டிதான:-))
//
ஆங்.............. அபிஅப்பா கடிக்குறதுல உங்கள அடிக்க ஆளில்லை.
//அபி அப்பா said...
மத்தபடி நான் tag செஞ்சதுக்கு மதித்து வந்து பதிவு போட்டதுக்கு நன்னி நன்னி நன்னி:-))))
//
சிக்கலாத்தான் இருந்துச்சு. பராவாயில்லை மதிச்சு கூப்டீங்களே அதுவே பெரிய விசயம்.
//-L-L-D-a-s-u said...
பிறமொழி படத்துக்குத்தானே.. தமிழ் படத்துக்கு சப்-டைட்டில் பார்க்கிறதில்லைதானே.. அப்ப இன்னும் முத்திப்போகலை
//
அய்யய்யோ. நீங்க வேற தாசு. தமிழ் படத்துக்கு சப்-டைட்டில் போட்டா கூட சப்-டைட்டில் தான் படிப்பேன். படம் பார்க்க மாட்டேன். :)
//மணிகண்டன் said...
பேருக்கேத்த மாதிரி ஸ்பீடா தான் இருக்கீங்க.
//
இருக்காத பின்ன. :)
//நானும் உங்க கேஸ் தாங்க. நண்பர்கள் என்னடா நடந்தே பஸ்ஸை ஓவர்டேக் பண்ணப்போறியானு கிண்டல் பண்ணுவாங்க :) //
ஹி ஹி. :)
// தம்பி said...
இன்னும் மூணு பிராக்சி ரெடி பண்ணுங்க, நீங்க கூப்பிட்ட அந்த மூணு பேரையும் நான் ஏற்கனவே கூப்பிட்டாச்சு.
:))
//
அதெப்படி தம்பி உங்களால மட்டும் முடியுது. ஹும். பரவாயில்லை அவுங்க இந்த ரெண்டு அழைப்பையும் ஏற்றுக்கொள்ளட்டும்.
//கோபிநாத் said...
பாஸ்ட்பவுலரே வணக்கங்க ;-)
\\ஆஃப் செய்ய வழியில்லையேல், வெறென்ன செய்ய சப்-டைட்டிலை படிச்சதோடு திருப்திபட்டுக்க வேண்டியதுதான்.\\
உண்மையிலே இது வியர்டு தாங்க ;-)))
//
ஆமாங்க. என்ன செய்ய?
பாஸ்ட் நானும் பதிவு போட்டுட்டேன். பப்ளிஷ் கொடுக்குறதுக்கு முன்னாடி உங்க அழைப்பும் பார்த்ததால் உங்க பேரையும் சேர்த்துபோட்டு நன்றியும் சொல்லிட்டேன்
//முத்துகுமரன் said...
பாஸ்ட் நானும் பதிவு போட்டுட்டேன். பப்ளிஷ் கொடுக்குறதுக்கு முன்னாடி உங்க அழைப்பும் பார்த்ததால் உங்க பேரையும் சேர்த்துபோட்டு நன்றியும் சொல்லிட்டேன்
//
நன்றி நண்பரே. இன்னிக்கு ஆயத்தமா இருங்க. இருக்கு வேட்டு மே. இந்தியாவுக்கு. (இந்தியாவுக்கு இன்ஷியல் போட்டாலும் உதையிலிருந்து தப்பிக்க முடியாது)
நான் என்னைக்கு பேச்சை மாத்துவதில்லை. ஆஸி அரையிறுதிக்கு போகும்( வங்க தேசம் + அயர்லாந்து உள்ளே இருப்பதால் ). ஆனால் ரிவிட் உண்டு அவர்களுக்கு
//ஆஸி அரையிறுதிக்கு போகும்( வங்க தேசம் + அயர்லாந்து உள்ளே இருப்பதால் )
//
நக்கலு???
//ஆனால் ரிவிட் உண்டு அவர்களுக்கு//
ஹும். பாக்கலாம்.
//அபிஅப்பா, வெறென்ன செய்ய அவனுங்களும் கிறுக்கனாத்தான் இருப்பாய்ங்க. வந்து சொல்லட்டுமே. :)///
நானும் இவங்கள தான் கூப்பிடலாம்னு இருந்தேன்...நீங்க கூப்டதே போதும்னு விட்டுடேன்,,:-)).. அப்புறம் புள்ளிராஜா
//அவந்திகா said...
நானும் இவங்கள தான் கூப்பிடலாம்னு இருந்தேன்...நீங்க கூப்டதே போதும்னு விட்டுடேன்,,:-)).. அப்புறம் புள்ளிராஜா
//
நீங்க நான் மட்டுமில்லை. நம்ம நாடே அவுங்க ரெண்டு பேரைத்தான் கூப்டுக்கிட்டு இருக்கு. நாட்டுக்கு போகட்டும். அப்புறம் இருக்கு அவனுங்களுக்கு இருக்குற வேட்டு.
அந்த புள்ளிராஜா பயம் இன்னும் போகலயா உங்களுக்கு? அவரு ரொம்ப நல்லவரு. ஹி ஹி
//அந்த புள்ளிராஜா பயம் இன்னும் போகலயா உங்களுக்கு? அவரு ரொம்ப நல்லவரு. ஹி ஹி///
நல்லவரா?..என்னண்ணா conduct certificate குடுக்கரீங்க..அப்படீன்னா அது யாரு?.. ஒரு வேளை....
அப்படியாண்ணா?
இல்ல என்ன லூசு சொன்னதுனால உங்களுக்கு சந்தோஷமா?...
//நல்லவரா?..என்னண்ணா conduct certificate குடுக்கரீங்க..அப்படீன்னா அது யாரு?.. ஒரு வேளை....
அப்படியாண்ணா?
இல்ல என்ன லூசு சொன்னதுனால உங்களுக்கு சந்தோஷமா?...
//
அய்யய்யோ!!! சத்தியமா அது நானில்லை :). அவரு கெட்டவருன்னு சொன்னா மீண்டும் வருவாருல்ல. அதான் அவர் நல்லவருன்னு சொன்னேன். அவர் கிரிக்கெட்டை பற்றி சொன்னது அவர் கருத்து. கிட்டத்தட்ட இப்போதய (இந்திய ஆடிய விதத்தைப் பார்த்தா) நம் மக்களின் அனேகரின் மனநிலை அவர் கூறியதைப் போன்றுதான்.
ஆனால், சிறுமியாகிய உன்னை லூசு என்று சொன்னது தவறுதான். :) அதுக்காக நீங்க கவலைப்படலாமா.
இந்தியா அடுத்த தொடரில் ஆட வங்கதேசம் போகுதாம். ரெடியா?
Post a Comment