Saturday, March 3, 2007

தே.ஆ அணி கோப்பையை வெல்லாது

அப்படின்னு நான் சொல்லலங்க. சொன்னவர்கள் விபரம் கீழே. :)

நடக்க இருக்கின்ற உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு தெ.ஆ அணிக்கு இல்லை என்று இரண்டு முன்னால் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். யார் யார் தெரியுமா? ஒன்று ஷேன் வார்னே. மற்றொன்று ரனதுங்க.

நேற்று ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஷேன் வார்னே கூறியதாவது:

ஆஸ்திரேலியா இம்முறை உலகக் கோப்பையை வெல்வதற்கு தெ.ஆ விட நியுசிலாந்து மற்றும் இலங்கை அணிகளே தடையாக இருக்கும்.

என்னதான் உலகில் முதல் நிலை அணியாக தெ.ஆ இருந்தாலும் கோப்பையை வெல்லும் அளவிற்கு மிகச் சிறந்த அணியாக இல்லை.


என பேட்டியின் போது தெரிவித்துள்ளார். இது தெ.ஆ மனச்சோர்வடையச் செய்யும் ஒருவகை பயமுறுத்தல் என நான் எண்ணியிருந்த போது ரனதுங்கவும் இது போல தெரிவித்த செய்தியை வாசிக்க நேரிட்டது. ரனதுங்க அறிவித்ததாவது:

இந்த முறை உலகக் கோப்பைக்கான டாப் நான்கு அணிகளாக ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மற்றும் நியுசிலாந்து தேர்வு பெறும்.

இதில் இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு மிகவும் கூடுதல். அவர்களின் பேட்டிங் மிகவும் பலமானதாக இருக்கிறது. தற்போதய இந்திய அணி கோப்பையை வென்ற எனது அணி (1996) போலவே எனக்கு தோற்றமளிக்கிறது.

இதில் தெ.ஆ-வை நான் ஒதுக்க காரணம், அவர்கள் பெரிய போட்டிகளில் தடுமாறும் மனநிலை உள்ளவர்கள். அதற்கு பல உலகக் கோப்பை போட்டிகளே சான்று.


என ரனதுங்காவும் தெ.ஆ அணிக்கு கோப்பை கிடைக்காது என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார். அவர்கள் பெரும்பாலும் சாடுவது பெரிய போட்டிகள் என்றாலே தொடை நடுங்கும் தெ.ஆ வின் குணத்தைத்தான்.

தெ.ஆ அணியினருக்கு இது இந்நேரம் காதில் விழுந்திருக்கும். இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இருக்கிறது ஆப்பு. :)

15 comments:

மணிகண்டன் said...

ஆகா, ரனதுங்க சொன்ன மாதிரி இந்தியா ஜெயிக்கட்டுங்க..

Naufal MQ said...

ஆமாங்க ஆமாம்.

கார்த்திக் பிரபு said...

இதில் இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு மிகவும் கூடுதல். அவர்களின் பேட்டிங் மிகவும் பலமானதாக இருக்கிறது. தற்போதய இந்திய அணி கோப்பையை வென்ற எனது அணி (1996) போலவே எனக்கு தோற்றமளிக்கிறது.
//

nalla comedy , srilank 1996 team eppadi patta oru team , jeya surya ,ranatunga madiri aatkal kitta irukira andha porumaiyum , veriyum namma algal kitta kandiappa illai ..

idheella summa peelaaaassssss

Naufal MQ said...

இல்லை கார்த்திக் பிரபு,

வலிமையில் அவர் கூறிய அந்த இலங்கை அணியை இரண்டு மடங்கு உயர்ந்தது தற்போதைய இந்திய அணி. அப்போதைய இலங்கை அணியில் பேட்டிங் என்று பார்த்தால் ஜெயசூர்யா, டி சில்வா மற்றும் ரனதுங்கா மட்டுமே. பந்து வீச்சில் முரளிதரன் மட்டுமே தரம் வாய்ந்தவராக இருந்தார். ஆனால் தற்போதுள்ள இந்திய அணியில் உள்ள பந்து வீச்சாளர்கள்/ பேட்டிங் பற்றி சொல்லித் தெரிய வேண்டாம் உங்களுக்கு.

இருந்தும் அவர்கள் 96 உலகக் கோப்பையை வென்றதற்கு மூன்று காரணிகளை நான் கூறுவேன்:
1. இரு அணிகள் (ஆஸி & வெ.இ என்று நினைக்கிறேன்) இலங்கையுடனான முதற் சுற்று போட்டிகளை புறக்கணித்தது. அதன மூலம் இலங்கை எளிதாக காலிறுதிக்கு முன்னேறியது.

2. அவர்களுடைய ஆட்ட இயல்பிற்கு ஏற்றதாக அமைந்த ஆடுகளங்கள். (இந்தியா மட்டுமே அவர்களுக்கு சரியான போட்டி இது போன்ற ஆடுகளங்களில். ஆனால், இதுவரை எனக்கு விடை தெரியாத அந்த அரை-இறுதியில் இந்தியா தடுமாறி தோற்றது(?) இலங்கைக்கு சாதகமாக அமைந்தது.)

3. வெற்றி வேட்கையுடன் அணி கூட்டாக செயல்பட்டது.

இவை தான். இப்போதுள்ள இந்திய அணி ஒற்றுமையுடன் ஆடினால் தெரியும் உங்களுக்கு அந்த இலங்கை எங்கே நமது அணி எங்கே என்று.

கார்த்திக் பிரபு said...

இருந்தும் அவர்கள் 96 உலகக் கோப்பையை வென்றதற்கு மூன்று காரணிகளை நான் கூறுவேன்:
1. இரு அணிகள் (ஆஸி & வெ.இ என்று நினைக்கிறேன்) இலங்கையுடனான முதற் சுற்று போட்டிகளை புறக்கணித்தது. அதன மூலம் இலங்கை எளிதாக காலிறுதிக்கு முன்னேறியது./

இது எப்போ நடந்தது கொஞ்சம் விளக்கவும்

Naufal MQ said...

//கார்த்திக் பிரபு said...
இருந்தும் அவர்கள் 96 உலகக் கோப்பையை வென்றதற்கு மூன்று காரணிகளை நான் கூறுவேன்:
1. இரு அணிகள் (ஆஸி & வெ.இ என்று நினைக்கிறேன்) இலங்கையுடனான முதற் சுற்று போட்டிகளை புறக்கணித்தது. அதன மூலம் இலங்கை எளிதாக காலிறுதிக்கு முன்னேறியது./

இது எப்போ நடந்தது கொஞ்சம் விளக்கவும்
//

அதாவது இலங்கை, இந்தியா, ஆஸி, வெ.இ, கென்யா மற்றும் இன்னொரு அணி (ஜிம் (?)ஞாபகம் வரவில்லை) யாவரும் ஒரு குழுவில். இதில் இலங்கை - இந்தியா போட்டிகள் தவிர இலங்கையுடனான மற்ற போட்டிகள் யாவும் இலங்கையிலேயே விளையாடுவதாக திட்டம். உலகக் கோப்பை துவங்குவதற்கு 3 வாரங்களுக்கு முன்பு இலங்கையில் பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் 1000+ உயிரிழந்தனர். அதனால், ஆஸி & வெ.இ அணிகள் இலங்கை சென்று ஆட முடியாது எனவும் போட்டிக்கான இடம் மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மாற்றப்படவில்லை. இரு அணியினரும் தத்தமது போட்டிகளை(இலங்கையுடனான) புறக்கணித்தனர். அதன் மூலம் இலங்கைக்கு வெற்றிப் புள்ளிகள் வழங்கப்பட்டது. அதனால், இலங்கைக்கு கடினமானதாக கருதப்பட்ட போட்டிகளில் எளிதான வெற்றி/புள்ளிகள். குழுவில் முதலிடம் வேறு. இப்போட்டிகள் நடந்திருந்தால் முடிவுகள் எவ்வாறேனும் இருந்திருக்கலாம் என்பது எனது எண்ணம். :)

Naufal MQ said...

கார்த்திக்,
மற்றொரு செய்தி. 1996 அரை இறுதியில் விளையாடிய 4 அணிகளுமே ஒரே குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள். இந்தியா - இலங்கை, வெ.இ - ஆஸி
இது எப்படி இருக்கு?

முத்துகுமரன் said...

96ல நாம தோத்ததுக்கு காரணம் கேட்டீங்களே. உங்க பதிவிலிஏயே அதற்கான விடை இருக்கு
//இதில் தெ.ஆ-வை நான் ஒதுக்க காரணம், அவர்கள் பெரிய போட்டிகளில் தடுமாறும் மனநிலை உள்ளவர்கள். அதற்கு பல உலகக் கோப்பை போட்டிகளே சான்று- ரணதுங்கா//
தெ.ஆ க்கு பதில இந்தியானு போட்டுப்பாருங்க 110% பொருத்தமா இருக்கும்.

ஆனா இன்றைய இந்திய அணி வலுவான அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அன்றைய தினத்தில் சிறப்பாக விளையாடும் அணி கோப்பையை பெறூம் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் வாழ்த்துகள் எப்போதும் உண்டு.

கார்த்திக் பிரபு said...

thanks for the information frend

Naufal MQ said...

//முத்துகுமரன் said...
96ல நாம தோத்ததுக்கு காரணம் கேட்டீங்களே. உங்க பதிவிலிஏயே அதற்கான விடை இருக்கு.

தெ.ஆ க்கு பதில இந்தியானு போட்டுப்பாருங்க 110% பொருத்தமா இருக்கும்.

ஆனா இன்றைய இந்திய அணி வலுவான அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அன்றைய தினத்தில் சிறப்பாக விளையாடும் அணி கோப்பையை பெறூம் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் வாழ்த்துகள் எப்போதும் உண்டு.
//

நண்பரே உங்களுடன் முழுமையாக ஒத்துப் போகிறேன். எந்த அணி கோப்பையை வெல்லும் என கணிப்பது கடினமாயினும் அரை-இறுதிக்கு தகுதி பெறப் போகும் அணிகளை கணிக்க அவர்களின் தற்போதய திறமைகளை அலசினாலே போதும் என நினைக்கிறேன். உங்கள் கருத்து?

அவ்வாறு கணிக்கையில் என்னோட தெரிவாக - ஆஸி, தெ.ஆ, நியூ மற்றும் இந்தியா. உங்கள் கருத்து ப்ளீஸ்?

Naufal MQ said...

//கார்த்திக் பிரபு said...
thanks for the information frend
//

I am at your service my frend :)

முத்துகுமரன் said...

என் கணிப்பின் படி,
வெஸ்ட் இண்டீஸ், நியூஸிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா. ( என்ன கேக்கவே கொஞ்சம் டரியலா இருக்கா :-) )

Naufal MQ said...

//என்ன கேக்கவே கொஞ்சம் டரியலா இருக்கா :-)
//

ஹி ஹி. வாசித்தவுடனே சிரித்தே விட்டேன். நான் எதிர்பார்த்தது போலவே ஆஸி மிஸ்ஸிங். என் எதிர்பார்ப்பு நிறைவானதில் மகிழ்ச்சியே. :)

முத்துகுமரன் said...

சூப்பர் 8 பிரிவு போட்டிகளை மனதில் கொண்டே ஆஸியை கழித்து விட்டேன். ஏறக்குறை 3 ஆப்பு அங்கு ஆஸிக்கு கிடைக்கும் என்பதென் கணிப்பு :-)

Naufal MQ said...

உங்கள் கணிப்பு தவறினால் நான் பொறுப்பல்ல. :)